நாமார்க்கும் குடியல்லோம் எனவுரைத்த தமிழடியார் !


மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா

மேனாள் தமிழ்மொழிக் கல்வி இயக்குநர்

மெல்பேண் ....... அவுஸ்திரேலியா

   

தமிழ்மொழி மற்றைய மொழிகளிலும் சிறப்பான மொழியாக


விள ங்குவதற்குக் காரணம் மற்றைய மொழிகளில் இல்லாத ஒரு சிறப்பு தமிழ் மொழியில் இருப்பதேயாகும் என்பது அறிஞர்கள் கருத்தாக      இருக்கிறது. அந்தத் தனிச்சிறப்பு எது தெரியுமா அதுதான் " பக்தி இல க்கியம் " ஆகும். உலகின் எந்த மொழியிலும் பக்தி என்பது இலக்கியமாகக் கொள்ளப்படவே இல்லை. ஆனால் தமிழ் மட்டும் தனக்கெனப் பக்தியை இலக்கியம் ஆக் கியே இருக்கிறது. இதனால் தமிழ் பக்தியை அரவணைத்தபடியே பயணப்படு கிறது என்பதை கருத்திருத்தல் அவசியமாகும்.பக்தியை இலக்கியம் ஆக்கும் வகையில் தமிழுக்கு வந்து வாய்த்தவர்கள்தான் ஆண்டவனது அடியார்கள் ஆவர். அந்த அடியார்களில் முன்னுக்கு வந்து நிற்பவர் களில் மூத்தவர் காரைக்கால் அம்மையார். அவரின் பின்  பக்திப் பெருவெளியில் பயணப்பட இம்மாநில த்தில் வந்தவர்களாய் அப்பரும் சம்பந்தரும் விளங்குகிறார் எனலாம். இவர்கள் இருவரும் ஒரே காலத் தவராக இருக்கின்ற பொழுதும் - அப்பர் மூத்தவராகவும் சம்பந்தர் இவரின் இளையவராகவும் ஆகி நிற்கி றார்கள்.

   அப்பரும் சம்பந்தரும் கி.பி ஏழாம் நூற்றைண்டைச் சேர்ந்தவர்களாய்


இருந்தாலும் இருவர் வாழ்வும்அவர்களுக்குக் கிடைத்த அனுபவங்களும் வேறு பட்டனவாகவே அமைந்திருந்தன என்பதும் நோக்கத் தக்கது,அப்பர் குடும்பச் சூழல் வேறாயும் சம்பந்தர் குடும்பச் சூழல் வேறாயும் அமைந்தே காணப்பட்டது. ஆனால் பக்தி என்னும் நிலையில் இருவரும் ஒருமித்தே பயணப்பட்டார்கள். அப்படிப் பயணப்பட்ட நிலை யிலும் அப்பரின் சிந்தனைசெயற்பாடுகள்சம்பந்தரிலும் வேறுபட்டதாகவே அமைகின்ற ஒரு நிலை தோற் றம் பெற்றது. அதற்கு உரிய காரணம் தான் என்ன என்பதை அறிவது மிகவும் முக்கியமாகும்.

  மருள் நீக்கியார் சைவத்தில் பிறந்து சைவத்தைத்துறந்து சமணம் என்னும் சமயத்தைத் தழுவுகின் றார்.மருள் நீக்கியாரின் இளம் மனத்தில் சமணத்தின் கொள்கைகள் சிறந்தனவாகப் பதிகின்றன. சமணரும் இவரை அணைக்கின் றனர்.சமண மடத்தின் தலைவராய் ஆகும் அளவுக்கு மருள் நீக்கியார் ஆளுமை வளர்கிறது. மருள் நீக்கியார் என்னும் பெயர் மறைந்து சமண மடத்தி ன் தலைவராய் " தருமசேனர் " என்னும் புதுப் பெயர் வாய்க்கிறது.நாட்டில் சமணமே அரசபீடத்தாலும் அங்கீகரிக்கப்பட்டிருக்கிறது.மருள் நீக்கியாரின் மனம் மாறுகிறது. சமணத்தின் தலைமயைத் தூக்கி எறிந்துவிட்டு தான் பிறந்த சைவத்தில் அவர் சங்கமம் ஆகிறார். சங்கமம் ஆகும் நிலையில் அவர் நெஞ்சம் தமிழைக் கொட்டுகிறது. அதுவும் கவியாய்பக்தியாய் ,இசையாய் கொட்டுகிறது. எம்பெருமான் சிவனே வியந்து " நாவுக்கரசு " என்று விளிக் கும் அளவுக்கு தமிழ் ஆக்கி நிற்கிறது. மருள் நீங்கியதால் அருள் கிடைக்கிடைக்கிறது. தருமசேனர் சைவம் தளைக்க தொண்டுகள் சிறக்கநாவுக்கக்கரசாய் வலம் வருகிறார்.வலம் வருகின்ற நாவுக்கரசரை இளையவரான சம்பந்தப் பெருமான் கண்டவுடன் " அப்பரே " என்று அழை க்கின்றார். இறைவன் அழைத்த நாவுக்கரசர் என்னும் பெயரும் சம்பந்தப் பெருமான் அழைத்த அப்பரே என்னும் பெயரும் - சைவத் தமிழ் உலகில் நிலையான உறுதியான பெயராக நிலைத்தே விட்டது என்பது மனங்கொள்ளத்தக்கது.

    அப்பர் பெருமான் வரலாற்றை நோக்கும் பொழுது - அவர் சமயத்தின் வழியிலும் பயணப்பட்டிருக்கிறார். சமூகநீதியின் வழியிலும்  பயணப்பட்டி ருக்கிறார் என்றுதான் மனங்கொள்ள வைக்கிறது. சம்பந்தப் பெரு மானின் சமகாலத்தவராக இருந்த பொழுதும் அப்பரின் வாழ்வியல் அனுபங்களும் அவரின் வயதின் முதிர்ச்சியும் அவருக்கென்று தனியான ஒரு இடத்தி னையே வழங்கி இருக்கிறது எனலாம்.

  சமணமதத் தலைவராய் இருந்த காரணத்தால் அவரின் புலமை நலம் ஆளுமை உடையதாகவே அமைந்தது,வடமொழியிலும் தமிழ் மொழியிலும் புலமை உடையவராகவும் இருந்திருக்கிறார். சமண மதத்தாரால் மதிக்கப்படும் நிலையில் அவர் இருந்திருக்கிறார் என்பதும் நோக்கத்தக்கது. அப்படி மதிக்கப் பட்டவர் அந்த மதத்தை விட்டு வெளியில் வருவதும் , சைவத்தில் இணைவதும் சம்பந்தருக்குக் கிடைக் காத நிலை எனலாம். மதம் விட்டு விடு மதம்மாறியவர் என்று எடுக்துக் கொண்டால் அதில் அப்பர்தான் முன்னிற்கிறார்.அப்படி அவர் மனம் மாறியமையமையால் சைவம் மிகச்சிறந்த ஒரு அடியவரை, பேராளு மையை, சிந்தனையாள ரைப் பெற்றுக்கொள்ளும் நிலை வாய்த்தது என்பதை கருத்திருத்தல் அவசியமா னதாகும்.ஏழாம் நூற்றாண்டின் சமய சமூக சூழலில் சம்பந்தருடன் அப்பரின் இணைப்பு அளப்பரும் இணை ப்பாகவே அமைந்தது. அப்பரும் சம்பந்தரும் அப்பாவும், பிள்ளையும் போல இணைந்து ஆலயங்கள் தோறும் சென்று அடியார்கள் மனத்தில் பக்தியென்னும் விதையினை ஆழமாக விதைத்திட்டார்கள் என்ப தும் நோக்கத்தக்கதாகும்.இளமையும் முதுமையும் இணைந்த நிலை சைவ பக்தியுலகுக்கு பெரும் உந்து சக்தி யாக அமைந்தது என்பதைக் கருத்திருத்தல் வேண்டும்.

   அப்பர் மதம்மாறிய நிலையில் அவரின் கூட இருந்த சமணர்கள் ஆத்திரம் கொண்டு வெகுண்டெழுந் தார்கள். ஏழாம் நூற்றாண்டில் அரசுகட்டிலில் பாண்டியனும் பல்லவனும் இருந்தார்கள். அவர்களும் சமணத்தைத் தழுவி அதற்கே ஆதரவும் காட்டி நின்றார்கள். சமணம் என்பது அரசமதமாகவே காணப்ப ட்டது எனலாம். வெகுண்ட சமணர்கள் அரசனை நாடி  மதம்மாறிய துரோகத்துக்கு உரிய தண்டனை யினை அப்பருக்கு வழங்கிட வழி வகுத்தனர். அரசனுடைய அழைப்பாணை அப்பரிடம் போனது. அப்பர் மனம் முழுவதும் எம் பெருமான் சிவனின் நினைப்பே நிறைந்திருந்த காரணத்தால் அரசாணையினை அவர் ஒரு பொருட்டாக எடுக்கவேயில்லை. அரனுக்கு அடியவராய் ஆகி விட்ட காரணத்தால் அரசினையே எதிர்த்து 

நாமார்க்குங் குடியல்லோம் நமனை யஞ்சோம்
    நரகத்தி லிடர்ப்படோம் நடலை யில்லோம்
ஏமாப்போம் பிணியறியோம் பணிவோ மல்லோம்
    இன்பமே யெந்நாளுந் துன்ப மில்லை
தாமார்க்குங் குடியல்லாத் தன்மை யான
    சங்கரன்நற் சங்கவெண் குழையோர் காதிற்
கோமாற்கே நாமென்றும் மீளா ஆளாய்க்
    கொய்ம்மலர்ச்சே வடிஇணையே குறுகி னோமே

என்று அஞ்சாமல் ஏழாம் நூற்றாண்டில் எடுத்துரைத்த தமிழ் அடியவராய் அப்பர் பிரகாசித்து நிற்கிறார். அரசனையே எதிர்த்து தனது அஞ்சாமையை உரைத்த அப்பரின் துணிச்சல் ஒரு சமய சமூகப் புரட்சியாய் அமைகிற தல்லவா ! பிற்காலத்தில் பாரதி " அச்சமில்லை அச்சமில்லை " என்று கர்ஜிப்பதற்கும்  வழி வகுத்தவர் அப்பர் என்றும் எடுத்துக் கொள்ளலாம் அல்லவா ! 

  சம்பந்தருக்கு இவ்வாறான சந்தர்பம் வாழ்க்கையில் வாய்க்கவில்லை. அது மட்டு மல்ல அப்பரின் பின் வந்த எந்த அடியவர்களுக்கும் இப்ப டி யான சந்தர்ப்பம் வரவேயில்லை. இதனால் அப்பரினால் மட்டுமே " நாமா ர்க்கும் குடியல்லோம் " என்று சொல்லும் நிலை வாய்த்துவிட்டது. சமய த்தை மாற்றி வந்த நிலை யிலும் அப்பர் உயர்நிலையிலே யாவராலும் பார் க்கப்பட்டார். இதுவும் அப்பரை மற்றவர்களிருந்தும் வேறுபடுத்தியே காட்டி நிற்கிறது. 

  தமங்குத் தீங்கு வந்தால் யாவருமே நொந்து போவார்கள். வந்த தீங்கினை வைதே நிற்பார்கள். ஆனால் அப்பர் வித்தியாசமானவராக விளங்குகிறார். அவருக்கு சூலை நோய் வந்தது. பெருந்துன்பப் பட்டார். அப் படிப் பெருந் துன்பத்தை தந்த சூலைநோயினை வையாமல் அதற்கு நன்றியினைச் சொல்லுகிறாரென்றால் அப்பரின் சிந்தனை வித்தியாசாமானதுதானே ! 

  பொய்வாய்மை பெருக்கிய புன்சமயப் பொறிஇல் சமண்நீசர் புறத்துறையும்

  அவ் ஆழ்குழியின் கண்விழுந்து எழும் ஆறு அறியாது மயங்கி அவம்புரிவேன்
  மைவாச நறுக்குழல் மாலையாள் மணவாளன் மலர்க்கழல் வந்தடையும்
  இவ்வாழ்வு பெறத்தரு சூலையினுக்கு எதிர்செய் குறை என்கொல் 

இப்படிச் சொல்லுவதற்கு யாரால் முடியும் அப்பர் ஒருவரால்த்தான் முடியும். அதனால் அவர் உயர்ந்தே நிற்கிறார். சூலை வந்த படியால்த்தான்  புன்சமயத்தை விட்டு வெளிவரவும்.  அறிவானது தெளிவுற்று நற்பாதை வழி காணவும்உயர்பொருளான அந்தப் பரம்பொருளின் பாதங்களைப் பற்றவும் முடிந்தது என்னும் மனத்தெளிவும் ஏற்பட்டது என்று சொல்லும் அளவுக்கு அப்பர் இருந்திருக்கிறார் என்பது அடியவர்கள் அனைவருக்கும் ஏன் சமூகத்துக்குமே காட்டப்படும் புதுக் கருத்தாய் மலர்கிறதல்லவா ! 

   சமயத்தில் புரட்சி சமூகத்தில் புரட்சி என்று அப்பரின் புரட்சிகள் வளர்ந்து கொண்டே போவதைக் காணமுடிகிறது. அரசை எதிர்த்தார். பெரிய அமைப் பாய் அக்காலத்தில் இருந்த சமணத்தையே எதிர்த்து துணிவுடன் உண்ணா நோன்பினைக் கைக்கொண்டு உறுதியுடன் தனது எண்ணத்தை நிலை நாட் டுகிறார். பிற்காலத்தில் அண்ணல் காந்தி உண்ணா நோன்பினைக் கைக் கொள்ளவும் அவரைத் தொடர்ந்து பலரும் பல சந்தர்ப்பங்களில் உண்ணா நோன்பினைக் கைக்கொள்ளவும் முன்னோடியாக அப்பர் விளங்குகிறார் என்பதும் மனங் கொள்ளத்தக்கது.

  துணிவான எணண்ணங்களை மனத்திலே நிறைத்து வைத்தவராய் அப்பர் பெருமான் இருந்திருக்கிறார் என்பதைக் கட்டாயம் சொல்லியே ஆக வேண் டும். அந்தவகையில் அவரின் எண்ணமாய் மலரும் இக்கருத்து யாவரை யும் சற்று திகைப்புடன் திரும்பிப் பார்க்க வைத்திடும் கருத்தாகவே அமை கிறது எனலாம். ஆண்டவன் அடியார்களுக்கு அவர் கொடுக்கும் உயரிய நிலை இங்கே காட்டப்படுகிறது. 

  

 சங்கநிதி பதுமநிதி யிரண்டுந் தந்து
     தரணியொடு வானாளத் தருவ ரேனும்
மங்குவார் அவர்செல்வம் மதிப்போ மல்லோம்
  மாதேவர்க் கேகாந்த ரல்லா ராகில்
அங்கமெலாங் குறைந்தழுகு தொழுநோ யராய்
  ஆவுரித்துத் தின்றுழலும் புலைய ரேனும்
கங்கைவார் சடைக்கரந்தார்க் கன்ப ராகில்
  அவர்கண்டீர் நாம்வணங்கும் கடவு ளாரே 


என்னதான் செல்வமும் ,செல்வாக்கும் உயர்நிலையும் வாய்த்தாலும் ஆண்டவன் அடியவராய் இல்லார் எதுவுமே இல்லார்தான்.என்று கூறி - எந்த ஒரு நிலையில் இருந்தாலும் அவர்கள் ஆண்டவனின் அன்புக்கு உரிய வரானால் அவர்களே வணங்கத் தக்கவர்கள் என்று சொல்லும் அப்பரின் சிந்தனை சமயத்தில் தோற்றுவிக்கப்பட்ட புதிய சமூகச் சிந்த னையாக எழுகிறதல்லவா ! 

  சமணத்தில் பல தத்துவங்கள் இருக்கின்றன. அறநூல்கள் பலவற்றின் ஆசிரியர்களாக சமண ஆளுமை கள் பலர் இருக்கின்றார்கள் என்பதை எவரும் மறுத்துரைத்துவிடல் முடியாது. ஆனால் உலகியல் வாழ்வில் இசையினையும் இல்லறத்தினையும், பெண்களையும் கலைகளையும் அழகினையும்சமணம் ஒதுக்கியது மட்டுமல்ல வெறுப்புடனுமே பார்த்தது. இந்த நிலை அப்பருக்கு உடன்பாடாக அமைவதாக இல்லை. இவை அனைத்தையும் சைவம் அணைத்தே நின்றது. அப்பரும் அவற்றை அகமிருத்தி தன்னு டைய சிந்தனைகளை மலர்ந்திடச் செய்து நின்றார். அதன் ஒரு நிலைதான் இசையோடு உகந்த திருமுறை ப்பாடல்களாகும்.ஏழாம் நூற்றாண்டில் தமிழ் இசையினைக் காத்திட வந்த பேராளுமையாகவே அப்பர் எழுகின்றார். அவரினால் பக்தி இலக்கியப் பரப்பில் " திருத்தாண் டகம் " என்பது புதுவரவாய் வருகிறது. தமிழ் இலக்கியப் பரப்பில் தாண் டகத்தை அறிமுகப்படுத்தியவராய் அப்பர் பெருமானே முன்னிற்கிறார். இவரின் இந்த புதிய அறிமுகத்தால் அமைந்த தமிழ் பக்திப் பாடல்கள் இசையுடன் பாடுவதற்கு இயைந்த தாகவே அமைகிறது. அடியவர்கள் இறைவனை ஆராக்காதலுடன் பாடிப் பரவிட இந்த இசையுடன் அமை ந்த தாண்டகப் பாடல்கள் கைகொடித்தே நிற்கின்றன. இது அப்பரினால் ஏற்பட்ட மிகப்பெரிய மாற்றம் எனலாம். அப்பரின் இப்புது முயற்சியால் அவர் " தாண்டக வேந்தர் " என்று யாவராலும் அழைக்கும் நிலைக்கு ஆளாகியும் விட்டார்.அப்பரினால் தமிழ் இசை வெள்ளம் தமிழ்ச் சமூ கத்தில் பெருக்கெடுக்கத் தொடங்கியது எனலாம். இந்தத் தொடக்கமே பின்னாளில் அண்ணாமலைச் செட்டியாருக்கு தமிழிசையில் ஊக்கத்தையும் ஆக்கத்தையும் ஊட்டியிருக்கிறது என்பதும் நோக்கத்தக்கது.
   கையிலே ஆயுதம் ஏந்தி சமயவழி நின்றவரும் அப்பர்தான். அவரின் கையில் உழவாரம் என்னும் ஆயுதம் இருந்தது. இது கொல்லும் ஆயுதம் அல்ல. அருள் தன்னைக் கொள்ளும் ஆயுதமாகவே அமைந்திருந்தது. தொண்டின் மகிமையினை உணர்த்தும் ஆயுதமாக இருந்தது. உழைப்பின் மகிமையினை உணர்த்தும் அடையாளமாகவும் இருந்தது எனலாம். அடியார்கள் வாழ்வில் அப்பரின் உழவாரம் அசையாத ஆன்மீகச் சொத்தாக அமைந்தது எனலாம். என்கடன் பணி செய்து கிடப்பதே என்பதை உணர்த்தி நின்றது என்றும் எடுத்துக் கொள்ளலாம்.
ஆலயம் தொழுவது சாலவும் நன்று " என்பதை மிகவும் சிறப்பாக அப்பர் காட்டி அங்கு சென்று என்னவெல்லாம் செய்ய வேண்டும் என்று யாவருக்கும் நல்ல பாடத்தைப் போதிக்கும் நல்லாசி ரியனாகவும் விளங்கி நிற்கிறார்.

"நிலைபெறுமாறு எண்ணுதியேல் நெஞ்சே நீவா
நித்தலும் எம்பிரானுடைய கோயில் புக்குப்
புலர்வதன்முன் அலகிட்டு மெழுக்கு மிட்டுப்
பூமாலை புனைந்து ஏத்திப் புகழ்ந்து பாடித்
தலையாரக் கும்பிட்டுக் கூத்தும் ஆடிச்
சங்கரா சயபோற்றி போற்றி யென்றும்
அலைபுனல்சேர் செஞ்சடையெம் ஆதீயென்றும்
ஆரூரா என்றென்றே அலறா நில்லே. "

நிலை பெறுவதற்கு அப்பர் காட்டும் இந்த வழி ஆன்மீகத்தில் மிகவும் முக்கிய வழியாகும் என்பதைக் கருத்திருத்தல் வேண்டும். 

  திருவங்கமாலை என்னும் ஒரு புதிய சிந்தனையை அப்பர் எமக்கெல்லாம் தருகிறார். கோவில் வழிபாட்டின் எங்கள் உடலின் முக்கியத்துவத்தை இங்கே அட்டவணைப்படுத்தி கிளிப்பிள்ளைக்குப் பாடம் கற்பிப்பதுபோல் பக்குவமாய் அருமையான பாடல்களாய் தந்து அடியார்களில் முன்னிற் பவராய் அப்பர் ஆகி நிற்கிறார்.மற்றைய அடியார்கள் காட்டாத புது முயற்சி இது எனலாம்.

 

தலையே நீ வணங்காய்

கண்காள் காண்மின்களே
செவிகாள் கேண்மிங்களோ
மூக்கே நீ முரலாய்
வாயே வாழ்த்துகண்டாய்
நெஞ்சே நீ நினையாய்
கைகாள் கூப்பித்தொழீர்
ஆக்கை யாற்பயனென்
கால் களாற்பயனென்

உற்றார் ராருளரோ

உற்றார் ராருளரோ
உற்றார் ராருளரோ
உயிர் கொண்டு போம்பொழுது
குற்றாலத்துறை கூத்தனல்லால்
நமக்குற்றார் ஆருளரோ

 

இவ்வாறு வழிபட வழிகாட்டுவது அப்பருக்குரித்தான புதுக்கருத்தாக பார்க்க வேண்டி இருக்கிறது.

  இனிப்பிறவியே வேண்டாம் என்றுதான் அடியார்கள் பலரின் நிலையாக இருந் தது. ஆனால் அப்பர்மட்டும்  தனக்கு மனிதப் பிறவி வேண்டும் என்று ஆண்டவனிடம் வேண்டும் வித்தியாசமான சிந்தனையுடைய அடியவராய் விளங்குகின்றார்.

 

              குனித்த புருவமும்கொவ்வைச் செவ்வாயில் குமிண் சிரிப்பும்,

              பனித்த சடையும்பவளம் போல் மேனியில் பால் வெண் நீறும்,
          இனித்தம் உடைய எடுத்த பொன்பாதமும் காணப் பெற்றால்
மனி(த்)தப் பிறவியும் வேண்டுவதேஇந்த மா நிலத்தே!

 

ஆண்டவனின் அழகான தோற்றப் பொலிவினைக் காட்டி அதனைக் காண் பதற்காகவே இந்த மாநிலத்தில் மனிதப் பிறவி வேண்டும் என்னும் சிந்த னை புதுமையாய் மலர்கிறதல்லவா ! 

  நமச்சிவாய வாழ்க என்று பிற்காலத்தில் மணிவாசகர் மொழிவதற்கும் அப்பர் வழிகாட்டி இருப்பாரோ என்றும் எண்ணக்கிடக்கிறது.

         சொற்றுணை வேதியன் சோதி வானவன் 

         பொற்றுணைத் திருந்தடி பொருந்தக் கைதொழக்
         கற்றுணைப் பூட்டியோர் கடலிற் பாய்ச்சினும்
         நற்றுணை யாவது நமச்சி வாயவே 

        இல்லக விளக்கது விருள்கெ டுப்பது

        சொல்லக விளக்கது சோதி யுள்ளது
        பல்லக விளக்கது பலரும் காண்பது
       நல்லக விளக்கது நமச்சி வாயவே 

நமச்சிவாய என்று சொல்லும் பொழுது என்னதான் இடைஞ்சல்கள் வந் தாலும் அத்தனையும் வந்த இடந்தெரியாமல் மறைந்தே விடும் என்னும் நம்பிக்கையை அப்பர் அகமிருந்து காட்டி நிற்பதும் நல்ல சிந்தனையாக அமைகிறது அல்லவா ! 

 அடியார்கள் பலர் தமக்கு அதுவேண்டும் இது வேண்டும் என்ற கேட்ட இட த்தில் எந்தப் பொருளுமே கேட்கா நின்றவர் அப்பர் பெருமான் மட்டுமே. அவர் கேட்டது மனிதப் பிறவி ஒன்றை மட்டுமே. அதுவும் அந்தப் பெருமா னைக் கண்களால் காண்பதற்காகவே. ஓடும் செம்பொன்னும் ஓக்க நோக்கு பவராய் அப்பர் இருந்தார். அடியார்கள் பலர் அனுபவிக்காத பல தண்டனை களுக்கு ஆளானவரும் அப்பரே. சமணர்களால் தூண்டப்பட்ட அரசனின் பல தண்டனைகளைக் கண்ட அடியவராகவும் அப்பரே இருக்கிறார். வாழ்க்கைத் தத்துவங்களை அதாவது நிலையாமை பற்றிய பல கருத்துக்களை எடுத்து மொழிந்த நிலையிலும் அப்பர் முன்னிற்கிறார் எனலாம். அதற்குக் காரணம் அவருக்கு கிடைத்த வாழ்வியல் அனுபவங்களே ஆகும். இன்று அல்ல ல்பட்டு ஆற்றா நிற்கும் பலருக்கும் உகந்த ஆறுதலைதேறுதலை அளி க்கும் அர்த்தநிறை சிந்தனைகளை அப்பர் தன்னுடைய பாடல்களில் காட் டுகிறார் என்பதை மறுத்துரைத்திடல் இயலாது. அப்பர் என்றால் அனுபவம் என்றுதான் சொல்ல வேண்டும். பற்றற்ற அடியார். ஆனால் பரமனைப் பற்றி நின்ற அடியார். புரட்சியை விதைத்த அடியார்.புதுமையைப் புகுத்திய அடியார்." எல்லா உலகமும் ஆனாய்  நீயே " என்று விழித்துரைத்த அடி யார்.அப்பர் என்பவர் தமிழராய் விளங்கி தமிழையே அகமிருத்தி தமிழி னால் இறை புகழைப் பரப்பி தமிழ்ப் பக்தி இயக்கத்தில் தலைநிமிர்ந்து நிற்கிறார் என்பதை யாவரும் மனமிருத்துவது அவசியமாகும்.

               விண்ணுளார் தொழுதேத்தும் விளக்கினை

               மண்ணுளார் வினை தீர்க்கும் மருந்தினைப்
               பண்ணுளார் பயிலுந் திருக்கோளிலி
               அண்ணலாரடி தொழுதுய்மினே 

சலம்பூவொடு தூபம் மறந்தறியேன் தமிழோடிசை பாடல் மறந்தறியேன்
நலந்தீங்கிலும் உன்னை மறந்தறியேன் உன்னாமம்என் னாவில் மறந்தறியேன்
உலந்தார்தலை யிற்பலி கொண்டுழல்வாய் உடலுள்ளுறு சூலை தவிர்த்தருளாய்
அலந்தேன்அடி யேன்அதி கைக்கெடில வீரட்டா னத்துறை அம்மானே  .


No comments: