மாநிலத்தார் மனமெண்ண வாழ்ந்துமே காட்டிடுவோம் !

 


மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா   மெல்பேண் ...... அவுஸ்திரேலியா 




வம்புதனை விலத்திடுவோம் 

மனந்திறந்து பேசிடுவோம்
குறைகண்டு பார்க்காமல்
குணமெண்ணி மகிழ்ந்திடுவோம் 

உளமுடைய வைப்பதனை
உளமிருந்து அகற்றிடுவோம்
உணர்வுடனே செயற்பட்டு
உளமகிழச் செய்திடுவோம் 

பணமதனை தேடிடினும்
பகிர்ந்தளித்து உதவிடுவோம்
தனியுடமை தனையுடைத்து
தார்மீகம் காட்டிடுவோம் 

பசிவயிறு கண்டுவிடின்

பரிவுடன் உதவிடுவோம் 
பிடியளவு  கிடைத்தாலும்
கொடுத்துதவி மகிழ்திடுவோம் 

வறுமையெனும் நிலையகல
இயலும்வரை முயன்றிடுவோம்
மாநிலத்தார் மனமெண்ண
வாழ்ந்துமே காட்டிடுவோம் 

ஓடியோடி உழைத்தாலும்
ஒருபொருளும் கூடவரா
உண்மையுடன் அறப்பொருளே

ஒட்டிவரும் எனவுணர்வோம் 

காலமெனும் சக்கரத்தில்
கதிகலங்கிப் போய்விடுவோம்
நாலுபோரும் நமையெண்ண

நானிலத்தில் வாழ்ந்திடுவோம்  

















No comments: