இணையவழி மூலமாக "பதினொராந் திருமுறை " வாசித்து பொருள் கூற கேட்கும் வாய்ப்பு

 

சிவமயம்

 

மதிமலி புரிசை மாடக் கூடற்

பதிமிசை நிலவு பால்நிற வரிச்சிற

கன்னம் பயில்பொழில் ஆல வாயின்

மன்னிய சிவன்யான் மொழிதரு மாற்றம்

பருவக் கொண்மூப் படியெனப் பாவலர்க்

 

கொருமையின் உரிமையின் உதவி ஒளிதிகழ்

குருமா மதிபுரை குலவிய குடைக்கீழ்ச்

செருமா உகைக்கும் சேரலன் காண்க

பண்பால் யாழ்பயில் பாண பத்திரன்

தன்போல் என்பால் அன்பன் தன்பாற்

 

காண்பது கருதிப் போந்தனன்

மாண்பொருள் கொடுத்து வரவிடுப் பதுவே.

 

 

இறைவனருளால் நமக்கு பதினொராந் திருமுறை முழுவதும் (1385 பாடல்கள்) இணையவழி மூலமாக வாசித்து பொருள் கூற கேட்கும் வாய்ப்பு கிட்டியுள்ளது.

 

இந்நிகழ்வு நவராத்திரி விரத ஆரம்ப நாளான 26 - 09- 2022 அன்று தொடக்கம் ஏறத்தாழ ஒன்றரை மாத காலம்  நாள்தோறும்  சிட்னி / மெல்பர்ன்   நேரம் காலை 06:00 மணி முதல் 07:00 மணி வரை நடைபெற திருவருள் கூடியுள்ளது.

திரு செசத்தியமூர்த்தி  அவர்கள் (சிட்னி) வாசித்து பொருள் கூறுவார்கள்.

 

இந்த படிப்பு தொடர் நிகழ்வில் பங்கு கொள்ள விரும்பும் சிவனடியார்கள் தங்களது:-

 

(1) முழுப்பெயர்,  (2) கைபேசி இலக்கம், (3) மின்னஞ்சல் முகவரி என்பவற்றை 23/09/2022 க்கு முன்னர் அனுப்புங்கள்.

 

(2) மேற்கண்ட விபரங்களை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் விலாசங்கள்:- suthansivarajah@hotmail.com and sirugudi1892@gmail.com

 

(3) விபரங்களை அனுப்பும் சிவனடியார்கட்கு இணையவழித் தொடர் கூட்ட இணைப்புநுழைவு எண்கள் (ZOOM MEETING ID and PASSWORD) என்பன அனுப்பி வைக்கப்படும்.

 

பதினொராந்  திருமுறை குறித்த விளக்கங்கட்கு  "கற்பகம் பல்கலைக்கழகம் - பன்னிரு திருமுறை ஆய்வு மையம்வெளியிட்டுள்ள  நூல் உதவும்.  

இந்நூல் கிடைக்கும் இணையத்தல முகவரிhttp://panniruthirumurai.org/books/11thirumurai.pdf

 

இந்த நூலின் பதிப்பாசிரியர் கலாநிதி இராச. வசந்தகுமார் அவர்கள் எழுதிய பதிப்புரையிலிருந்து சிந்தனைக்கு சில பின்வருமாறு:-

 

பக்கம் 12

........இத்திருமுறையிற் சேர்க்கப்பெற்ற பிரபந்தங்களை பாடிய அருளாசிரியர்கள் திருவாலவாயுடையார்காரைக்காலம்மையார்ஐயடிகள் காடவர்கோன் நாயனார்சேரமான் பெருமாள் நாயனார்நக்கீரதேவர்,கல்லாட தேவர்கபிலதேவர்பரணதேவர்இளம்பெருமானடிகள்அதிராவடிகள்பட்டினத்துப் பிள்ளையார்நம்பியாண்டார் நம்பி எனப் பன்னிருவராவார்இவர்களுள் திருவாலவாயுடையாரென்பவர்சிவநெறிச் செல்வர்களாகிய திருவருட் பெரியோர்களால் வழிபடப் பெறும் முழுமுதற்பொருளாய்மதுரைத் திருவாலவாய்த்  திருக்கோயிலில் எழுந்தருளியிருக்கும் சோமசுந்தரக் கடவுளாவர்ஏனைய ஆசிரியர்கள் அனைவரும் அப்பெருமானது திருவருள் பெற்ற மெய்யடியார்களாவர்எனவே வினையின் நீங்கி விளங்கிய அறிவின் முனைவனாகிய சிவபெருமானாலும்  அம்முழுமுதற் பொருளது திருவருளை நிரம்பப் பெற்ற மெய்யடியார் பதினொருவருவராலும் அருளிச் செய்யப் பெற்ற செழும்பாடல்களைத் தன்னகத்துக் கொண்டு திகழ்வது இப்பதினொராந்திருமுறையென்பது பெறப்படும்.......

 

பக்கம் 13

...........இத்திருமுறையிலமைந்த நாற்பது பிரபந்தங்களில் முழுமுதற்பொருளாகிய சிவபெருமானைப் போற்றிய பிரபந்தங்கள் இருபத்தைந்தாகும்சிவபெருமான் அருளிய இளைய பிள்ளையாராகிய முருகப்பெருமானைப் போற்றுவது திருமுருகாற்றுப்படையென்ற பாடல்தன்னை வழிபடும் அடியார்களின் இடர் தீர்த்தல் கருதிச் சிவபெருமான் தோற்றுவித்தருளிய மூத்த பிள்ளையாராகிய யானைமுகக் கடவுளை போற்றுவன மூத்தநாயனார் திருவிரட்டை மணிமாலைமூத்த பிள்ளையார் திருமும்மணிக்கோவைவிநாயகர் திருவிரட்டை மணிமாலை என்ற மூன்று பிரபந்தங்களும்ஏனைப்  பதினொரு  பிரபந்தங்களும் இறைவனது திருவருள் பெற்ற திருத்தொண்டர்களாகிய சிவனடியார்களின் சிறப்பினை விரித்துரைப்பனவாகும்இறைவனுக்கு ஆட்பட்டதன் பயன் அவனடியார்களுக்குத் தொண்டப்பட்டுய்தலேயென்பது நம்பியாரூரர் முதலிய திருவருட்செல்வர்களின் துணிபாகும்இத்துணிபினை விளக்குதற் பொருட்டே சிவனடியார் பெருமையினை விரித்துரைக்கும் இப்பதினொறு பிரபந்தங்களும் இத்திருமுறையிற் சேர்க்கபெற்றுள்ளன.......................அடியார் பெருமையினை விளக்கும் இப்பிரபந்தங்களைப் பன்னிரண்டாந் திருமுறையாகிய திருத்தொண்டர் புராணத்திற்கு முன் பதினொராந் திருமுறையின்கண் தொகுத்துதவிய சான்றோரது உளக்குறிப்பு உணர்ந்து இன்புறத்தக்கதாகும். ……………..

 

இறைவனருளால் இதனைப் போன்று கீழ்க்காணும் நிகழ்வுகளும் இணையவழி மூலமாக நடைபெற்று இனிதே நிறைவேறின.

 

1) திருவிளையாடல் புராணம் முழுவதும் (3363 பாடல்கள்) 26/08/2021 ஆடி அவிட்டம் அன்று முதல் 28/10/2021 புரட்டாதி மஹாநவமி சரஸ்வதி பூசை வரையிலும் நடைபெற்றது.

 

2) பெரியபுராணம் என வழங்கும் திருத்தொண்டர் புராணம் முழுவதும் (4286 பாடல்கள்) 06/01/2022 மார்கழி சதுர்த்தி தினம் முதல் 08/05/2022 வரையிலும் நடைபெற்றது.

 

3)  கந்தபுராணம் முழுவதும் (10345 பாடல்கள்) 16/05/2022 வைகாசி விசாகம் முதல் 12/08/2022 ஆடி திருவோணம் வரை நடைபெற்றது.

 

"மேன்மை கொள் சைவ நீதி விளங்குக உலகமெல்லாம்"

No comments: