தேயும்மதிசூடி (ஆறு எழுத்தடி கட்டளை வஞ்சித்துறை) - -- மெல்போர்ன் அறவேந்தன்


 

தேயும் மதிசூடி 

பாயும் நதிதாங்கி 

சாயும் கரம்வாழ்த்தி 

மேயும் மானைத்தூக்கி 

 

கறையுடை கண்டம் 

உறைந்தாடும் நாகம் 

குறைதீர்க்கும் பாதம் 

இறையுமை பாகம் 

 

நுதல் விழிமூடி 

இதழ் சிரிப்பூட்டி 

பதம் தூக்கியாட்டி 

நித்தம் நடமாடி 

 

மின்னார் விரிசடை 

பொன்னார் திருமேனி 

தன்னால் தமிழானான் 

என்னா ருயிரானான்          

        


No comments: