கற்பகதருவினைக் கருத்தினில் இருத்துவோம் ! [ சுவை நாற்பது ]


மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா
மேனாள் தமிழ்மொழிக் கல்வி இயக்குநர்
மெல்பேண் ... அவுஸ்திரேலியா 
 

 

 

 

  "  கரும்பு தின்னக் கூலியா " என்று கேட்பதை நாமனைவரும்


அறி ந்திருப்போம்.கரும்பில் காணப்படும் இனிப்பு ச்சுவைதான் இப்படிக் கேட்டிட வைத்திருக்கிறது என்பதுதான் உண்மையெனலாம். இனி ப்பினை உண்டிட யாரா வது கூலியைக் கேட்பார்களா என்னும் அடி ப்படையில்த்தான் இவ்வாறு சொல்லுவது என்பது சமூகத்தில் இன் றுவரை ஓட்டிக் கொண்டிருக்கிறது.இனிப்புச் சுவையென்றால் கரும் பைத்தான் கைகாட்டி நிற்போம். அந்தக் கரும்புதான் இனிப்பாய் மலர்ந்த சீனியின் பிறப்பிடமாகும். ஆரம்ப காலத்தில் சீனியானது எங்கு செய்யபட்டது அதற்குச் சீனி என்ற பெயர் எப்படி அமைந்தது என் றெல்லாம் பார்க்கின்ற வேளையிலே சீனதேசம் வந்து நிற்கிறது. சீனாவில் செய்யப்பட்ட படியால்த்தான் சீனி என்னும் பெயர் வந்திருக்கிறது  என்று அறிய முடி கிறது. இதற்கு சரியான ஆதாரங்கள் உண்டா என்பது ஐயந்தான். ஆனாலும் சீனி என்ற பெயருக்கும் சீனா என்ற பெயருக்கும் இடையே உள்ள பொருத்த மொன்றே பெயருக் கான காரணம் என்று எடுத்துக் கொண்டால் சிக்கலுக்கு இடமே இல்லாமல் ஆகிவிடுகிறதல்லவா.

  இலங்கையில் சீனி என்போம். இந்தியாவில் குறிப்பாகத் தமிழ் நா


ட்டில் சர்க்கரை என்றுதான் சொல்லுவா ர்கள். சர்க்கரை என்றால் இலங்கையில் கொள்ளும் அர்த்தம் வேறாகும். இனிப்பு என்ற  வகையில் இச்சொற் களால் ஏற்படும் வித்தியாசத்தை ஒருபக்கம் வைத்து விட்டு விஷயத்துக்கு வருவோம். ஆயுள் வேத நூல்கள்   " சர்க்கரை " என்றே குறிப்பிடுகின்றன.சீனி என்பது ஆரம்பத்தில் தனியாக எடுக்காமல் மருந்துகளுடன் சேர்த்தே எடுக்கப்பட்டு வந்திருப்பதாக அறிகிறோம்.மருந்துடன் சேர்த்து எடுக்கப்பட்ட சீனி நாளடைவில் எல்லா விதமான உணவுகளுடன் இரண்டறக் கலந்து பிரிக்க முடியாத ஒன்றாகவே ஆகிவிட்டது.

  இனிப்பு என்பது உடலின் இயக்கத்துக்கு இன்றியமையாததுதான். உடலின் உழைப்புக்கு ஏற்ப உணவும் அமை தல் மிகவும் முக்கிய மானதாகும்.உழைக்கும் பொழுது உடலின் சக்தியில் இழப்பு ஏற்ப டுகிறது. அந்த இழப் பினை ஈடுகட்ட உணவுதான் கைகொடுத்து நிற்கும். உணவினை எடுக்கும்பொழுது அங்கு சீனியும் தேவைப் படுகிறது. சீனியும் உணவுடன் இணைவதால் உடம்புக்கு நல்ல சக்தியும்ஊக்கமும் ஏற்படுகிறது. இதனால்த் தான் ஓடியாடும் சிறுவர்கள்விளையாட்டு வீரர்கள்உடலைவருத்தி உழைக்கும் தொழிலாளர்கள்போர் முனை யில் நிற்கும் வீரர்கள்யாவருக்கும் சீனி கலந்த பானங்கள் தின்பண்டங்கள் கொடுக்கப்படுகின்றன என்பதைக் கருத்திருத்தல் வேண்டும். சீனி என்பது மனித வாழ்வில் முக்கியத்துவம் மிக்கதாகவே இருக்கிறது.சீனி என் னும் பொழுதுதான் சிக்கலே வந்து நிற்கிறது. கருப்பஞ் சீனியாபனஞ்சீனியா என்று ! எது மிகவும் இன்றி யமையாதது என்று பார்க்கும் வேளையில் " பனஞ் சீனி" முன்வந்து நிற்கிறது. தற்கால மருத்துவ ஆய்வு களின்படி பனஞ்சீனியே சிறப்புடையது என்னும் கருத்து வெளியாகியிருக்கிறது. உடலின் ஆரோக்கியத்துக்கும் பனஞ்சீனிதான் உகந்தது என்றும் சொ ல்லப்படுகிறது.கருப்பஞ்சீனியைப்பயன்படுத்தும் அத்தனை வழிகளி லும் பனஞ்சீனியைப் பயன்படுத்தலாம் என்று இத்துறையில் ஆற்ற லுள்ள வல்லுனநர்களை தெரிவிக்கிறார்கள்.

  சீனியை அனைத்துக் குடிபானங்களிலும் பயன்படுத்துகிறோம்.


கொண்டாண்டங்களின் பொழுது செய்யப்படும் விதம்விதமான பலகாரங்கள்அத்தனைக்குமே சீனியையே முக்கியமாக்கி செய்து சுவைத்தும் மகிழ்கிறோம். லட்டுமைசூர்  பாகுஜிலேபிபூந்திகேசரிபால்க்கோவாபாயாசாசம்என்று பலகார வகைகள் நீண்டு கொண்டே போகும். அதுமட்டுமல்ல மேல்நாட்டு முறையில் தயாராகும் பட்சணங்களையும் இதில் அடக்கலாம். அத்த னையிலும் சீனி பயன்படுத்தப்படுகிறது. அதற்குப் பதிலாகப் பனஞ்சீனியையும் பயன்படுத்தலாம் என்பதை கவனத்தில் கொள்ளுதல் வேண்டும்.இனிப்புச் சுவையினைத் தருவதோடு உடல் ஆரோக்கியத்துக்கும் பனஞ்சீனி கைகொடுத்து நிற்கும் என்பதை அனைவருமே கவனத்தில் கொண்டிடுதல் மிகவும் முக்கியமாகும்.

  பதனீரைப் பயன்படுத்தி பனங்கட்டி வந்தது.இப்பொழுது பனஞ்சீனியும் வந்திருக்கிறது. பனஞ்சீனி இலங்கை யிலும் உற்பத்தி செய்யப் பட்டது. இந்தியாவிலும் உற்பத்தி செய்யப்பட்டது. பனங்கட்டியினைச் செய்யும் முறையிலிருந்து சற்று வேறுபட்டு பனஞ்சீனி செய்யும் முறை அமைகிறது. பனம்பாணியினைக் காய்ச்சும் விதத்திலும் பின் அதனை இறுகச் செய்து பதப்படுத்தும் முறையிலும் சில வேறுபாடுகள் இருப்பதுதான் முக்கியம் எனலாம். மூலம் என்பது பதனீரே ஆகும்

  யாழ்ப்பாணத்தில் பிரித்தானியர் காலத்திலே பனஞ்சீனிக் கென்று ஒரு தொழிற்சாலையானது பொலிகண்டிப் பகுதியில் அமைக்கப் பட்டிருந்ததாம்.இங்கு பனஞ்சீனி செய்வதற்கான பதனீரினை -  உடுப்பிட்டிகொற்றாவ த்தை,  பருத்தித்துறைசிங்கைநகர்போன்ற இடங்களில் பெற்று குழாய் மூலமாக பொலிகண்டியில் அமைந் திருந்த பனஞ்சீனித் தொழிற்சாலைக்கு கொண்டு வந்திருப்பதாகச் செய்திகள் வாயிலாக அறிய முடிகிறது. இப்படியாகப் பெறப்பட்ட பதனீரின் மூலம் பனஞ்சீனி உற்பத்தி செய்யப்பட்டிருக்கிறது என்னும் செய்தி மிகவும் காத்திரமான செய்தியாகவே இருக்கிறதல்லவா ! அந்தத் தொழிற்சாலை அங்கு இருந்திருக்கிறது என்பதற்கான எச்சங்கள் இன் றும்  இருப்பதாக வடமராட்சி மக்கள் தெரிவிக்கிறார்கள் என்பது மனங்கொள்ளத்தக்கது.

  பிரித்தானியர் காலத்தின் தொடர்ச்சியோ தெரியவில்லை. மீண்டும் பொலிகண்டியில் பனஞ்சீனித்தொழில் ஆரம்பிக்கப்பட்டிருக்கிறது. பொலிகண்டியில் தொடங்கப்பட்ட பனஞ்சீனிச் செய்கை பெரும் வெற் றியைக் கண்டிருக்கிறது. அத்துடன் சண்டிருப்பாயிலும் பனஞ் சீனி செய்யப்பட்டிருக்கிறது.பொலிகண்டியில் ஆரம்பி க்கப்பட்ட பனஞ்சீ னிச் செய்கையினைக் கண்ணுற்றதால் ஆர்வமேற்பட்டு திருவடி நிலைமந்துவில்கரகம் பானை ஆகிய இடங்களில் முயற்சி எடுக்கப்ப ட்டபோதும் அது பொருந்தி வராமலே ஆகிவிட்டது,முயற்சி என்பது விடாமல் நடந்தபடி இருந்தது. இந்த நிலையில் 1971 ஆம் ஆண்டில் கீரிமலையில் ஆரம்பிக்கப்பட்ட பனம் பொருள் உற்பத்தி நிலையத் தில் சாத்தியமாகியது எனலாம்.இலங்கையின் விஞ்ஞான சபையினரும்இலங்கையின் கைத்தொழில் அபிவிருத்திச் சபையினரும் இணைந்து எடுத்த முயற்சியினால் பனஞ்சீனி உற்பத்தி என்பது புத்து யிர்ப்பினைப் பெற்றது என்று அறியக்கூடியதாக இருக்கிறது.

   இதன் தொடர்ச்சியாக யாழ்ப்பாணத்தில் பனஞ்சீனித் தொழிலானது முன் நோக்கிச் செல்லத் தொடங்கிய தெனலாம்.1972 - 1973 ஆண்டு களில் சிங்கைநகர் பனம்பொருள் உற்பத்தி நிலையத்தால் பனஞ் சீனியின் உற்பத் தியானாது நல்ல வெளிச்சத்தைக் காட்டும் நிலைக்கு வந்தது.மக்களின் ஆதரவும் பெருகியது. 1974 - 1975 ஆம் ஆண்டு கால ப்பகுதியில் யாழ் மாவட்டத்தில் பனை தென்னைவள அபிவிருத்திக் கூட்டுறவுச் சங்கங்களின் சமாசத்தால் தொழிற்சாலைகள் எழுச்சி பெற்று  பனஞ்சீனி உற்பத்தி சிறப்பான ஒரு நிலையினை அடைந்தது என்பது நோக்கத்தக்கதாகும்.இந்த வகையில் சரசாலைஅச்சுவேலி,    பருத்தித்துறை சண்டிருப்பாய்மந்துவில்ஆகிய இடங்களில் பனஞ்சீனியை உற்பத்தி செய்வதற்காக பாரிய தொழிற்சாலைகள் அமைக்கப்பட்டன என்பதுதான் முக்கிய செய்தியாகும். சிறப்பாகச் செயற்பட்டு நல்ல உற்பத்தியினையும் கொடுத்து மக்களின் மனதி லும் இடம் பிடித்து நின்ற பனஞ்சீனித் தொழில் - ஆட்சியிலிருந்த அரசின் கொள்கைகளாலும்நாட்டில் ஏற்பட்ட உள்நாட்டு யுத்தச் சூழ் நிலை காரணமாகவும்,  தொடரமுடியாத நிலைக்கு ஆளாகிவிட்டது என்பதும் நோக்கத்தக்கது.

  இலங்கையில் பனஞ்சீனி உற்பத்தி என்று நோக்கும் பொழுது  , இந்தி யாவின் சீனித் தொழில் நிபுணரான பேராசிரியர் றாவ் பற்றிக் குறிப் பிட்டே ஆக வேண்டும்.இலங்கையின் சீனித் தேவைபற்றி அவர் ஆராய் ந்தார்.அதன் படி அவர் பனஞ்சீனியைச் செய்வதையே பெரிதும் விரும்பினார் என்றுதான் அறியக் கூடியதாக இருக்கிறது."சீனியை இறக்குமதி செய்வதால் ஏற்படும் சிக்கலிருந்து விடுபட  வேண்டு மானால் இயற்கை மூலவளங்களைப் பார்க்கவேண்டும்.பனையிலி ருந்து தரமான பனங்கட்டிபனஞ்சீனி செய்யலாம் " என்று அவர் தன் மனக்கருத்தை வெளியிட்டிருக்கிறார்.அத்துடன் அமையாது " யாழ்ப் பாண மாவட்ட த்தில் இருக்கின்ற பனை வளத்தைக் கொண்டு நல் லதொரு பனஞ்சீனி ஆலையை ஆரம்பிக்கலாம் " என்னும் அவரின் கூற்றும் மிகவும் முக்கியமானது என்பதைக் கருத்திருத்தல் வேண் டும். இந்திய நிபுணர் கூறியதோடு அதற்கு வலுசே ர்க்கும் வகையில் ஜேர்மனியின் பொருளாதார நிபுணர்களும் யாழ்ப்பாணத்தில் " பாரிய சீனித் தொழிற்சா லையினை அமைக்கலாம் " என்று அறிவுறுத்திய மையும் மனங்கொள்ளல் வேண்டும்.

    தமிழ்நாட்டில் பனஞ்சீனியைத்  தயாரிப்பதில் நிபுணத்துவம் மிக் கவர்கள் பலர் மாநிலம் தோறுமே இருக்கிறா ர்கள்.பனஞ்சீனியின்  பயன்பாடும் அங்கு இருக்கிறது.சித்த வைத்தியத்தை பெரிதாக என் ணுகின்றவர்கள் பலர் இருக்கின்ற காரணத்தால்  பனஞ்சீனி பற்றிய  புரிதல் அங்கு இருக்கிறது. “ நேச்சுரல் ஃபுட்ஸ் அண்ட் ஹெர்ப்ஸ் “ என்னும் பெயரில் ஒரு நிறுவனத்தைத் தமிழ்நாட்டைச்சேர்ந்த சரவணன் என்பவர் தொடங்கி இருக்கிறார். திருச்செங் கோட்டை யைச் சேர்ந்த இவர் கணணித்துறையில் பட்டம் பெற்ற ஒரு பொறியியலாளராவார். இவரின் தாத்தா பனங்கட்டித் தொழிலில் ஈடு பட்டி ருக்கிறார். இவரின் அப்பாவே ஒரு துணைக் கலெட்ட ராவார். தாத்தாவின் உணர்வு பேரனான சரவணனுக்குள் ஏற்பட்ட காராணத்தால் படித்த படிப்பினை ஒரு பக்கம் வைத்து விட்டு பனையின் பக்கம் வந்துவிடார்.இவரும் மனைவியுமாக இணைந்து பனங்கட்டிபனனஞ்சீனி செய்வதில் ஈடுபட்டு  நிற்கிறார்கள் என்பது நோக் கத்தக்கது. இவர்களின் விடா முயற்சியினால் பலரும் பயன் அடைகிறார்கள்.பனஞ்சீனியும் விற்பனைக்கு உகந்த விதத்தில் உற்பத்தி செய்ய்யப்பட்டும். வருகிறது.

   தமிழ்நாடு பனை பொருள் வளர்ச்சி வாரியம் சென்னையைத் தலைமை இடமாகக் கொண்டு செயற்பட்டு வருகிறது.இந்த அமை ப்பின் கீழ் பனைவெல்ல உற்பத்தியாளர் கூட்டுறவுச் சங்கங்கள்இயங்குகின்றன. இந்தச் சங்கங்கள் வாயிலாக பனஞ்சீனி உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது.

  பனங்கட்டியைப் போலவே பனஞ்சீனியையும் பானங்களுக்கும்இனிப்பான பொருட்கள் செய்வதற்கும் பயன்ப டுத்தலாம். பனஞ்சீனி யில் செய்ய்யப்படுகின்ற அத்தனையும் நல்ல சுவையினைத் தருவதோடு உடலின் ஆரோக்கியத்துக்கும் உறுதுணையாகவும் இருக்கும் என்பதுதான் முக்கியமாகும்.

  பதனீரின் அவதாரங்களில் பனங்கற்கண்டு அதாவது கல்லாக் காரமும் ஒரு நிலை எனலாம். யாழ்ப்பாண த்தில் பெரும்பாலும் எல்லா வீடுகளிலும் பனங்கல்லாக்காரம் நிச்சயம் இருக்கும். அதற் குக் காரணம் அதன் பயன்மிக்க மருத்துவக் குணமேயாகும்.ஆயுள் வேதம்சித்த மருத்துவம் இரண்டுமே பனங்கற்கண்டை விதந்தே கூறுகின்றன. ஊட்டச்சத்துகள் நிறைந்திருப்பதாக இவை தெரிவிக் கின்றன.தொண்டையில் கரகரப்பு ஏற்பட்ட வுடன் யாவரும் நாடுவது பனங்கற்கண்டையேயாகும். சங்கீதம் பாடுகிறவர்கள் பனங்கற் க ண்டை மிகவும் பத்திரமாகவே வைத்திருப்பார்கள். குரலில் கர கர ப்பு வந்ததும் வாயில். போட்டு உமிழ்வார்கள். அடைப்பும் போய் குரலும் தெளிவாகிவிடும்.இருமலுக்கு மிகவும் உகந்ததாக கல்லாக்கரம் விளங்குகிறது.

   கண்ணில் வெப்பம் காரணமாக சிவப்பாக மாறும் நிலை ஏற்படும் பொழுது கல்லாக்கரத்தை நீரில் கரைத்து கண்ணில் விட்டு விட்டால் அந்த நிலை மாறியே விடுகிறதாம் என்றும் கூறுவார்கள். கல்லாக்காரத்தில் மிளகி னைக் கலந்து பயன்படுத்தி வந்தால் எமக்கு வரு கின்ற இருமல்சலக்கடுப்புதொண்டையில் வரும் கரகர ப்பு,உள்நாக்கு வளருதல் ஆகியன சுகமாகும் என்று அறியக்கூடியதாக இருக்கிற து.நோய்களைக் குணமாகும் . உடலைக் குளிர்மையாக வைத்திருப்பதற்கு பனங்கற்கண்டு உதவி நிற்கிறது.இதனால் சின்னமுத்து வந்தால் பனங்கற்கண்டையே கைலெடுத்தார்கள் என்பதும் நோக்கத் தக்தக்கது. தமிழ் நாட்டிலே குழந்தைகளுக்குப் பெயர் சூட்டும் விழாக்களிலும்சுபமுகூர்த்த வேளைகளிலும் வந்திருக்கும் உறவினர்களுக்கும் பனங்கற் கண்டைக் கொடுத்தும் மகிழுகிறார்கள் என்பதும் நோக்கத்தக்கதாகும்.

  பனங்கற்கண்டானது யாழ்ப்பாணத்தில் முன்னர் உற்பத்தியாகி இரு ந்த பொழுதும் பனம் பொருள்களை நவீன முறையில் உற்பத்தி செய்யும் வாகையில் கீரிமலையில் தொடங்கப்பட்ட உற்பத்தி நிலையத்தில்த்தான் பின்னர் செய்யப்பட்டது என்று அறிகின்றோம். எனி னும் பனங்கற்கண்டு உற்பத்தியானது சீராக இருக்கவி ல்லை என்பதைத்தான் கருத்திருத்த வேண்டி இருக்கிறது.இலங்கைக்கு பனங் கற்கண்டின் தேவை மிகவும் வேண்டியே காணப்பட்டது. குறிப்பாக இலங்கையின் ஆயுள்வேதக் கூட்டுத்தாபனம் விரும்பியே நின்றது. இதனால் அதன் தேவையினைப் பூர்த்தி செய்ய இங்கு உற்பத்தி செய்யப்பட்ட பனங்கற்கண்டு போதாதிரு ந்தததால் இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யும் அவசியம் ஏற்படலாயிற்று.

   தமிழ்நாட்டில் திருநெல்வேலி மாவட்டத்தின் உடன்குடிகொட்டங் காடு, சிறுநாடார் குடியிருப்புசாத்தான் குளம்அடைக்கல நாதபுரமும் இந்தியாவின் வங்காளமும் பனங்கற்கண்டு உற்பத்தியில் முன்னணி வகித் திருந்தன என்பதும் நோக்கத்தக்கது. யாழ்பாணத்தில் பனைவள மிருந்தும் பனங்கற்கண்டை இறக்குமதி செய் யும் நிலை ஏற்பட்டது என்பதை யாவரும் மனமிருத்தல் வேண்டும். பனங்கற்கண்டு மருத்துவப் பயன்பாடு மிக்கதாக அமைந்திருப்பதால் அதன் உற்பத்தியிலும் கவனம் செல்லுத்துவதில் அக்கறை கொள்ளுவது அவசி யமேயாகும்.

   பதனீரின் நிறைவாகக் கழிவுப் பாகு அமைகிறது. பெயர் என்னவோ கழிவுப் பாகு என்று இருந்தாலும் அதுவும் பயனையே அளித்து நிற் கிறது என்பதுதான் முக்கியமாகும்.இந்தக் கழிவுப் பாகில் ஊட்டச் சத்து இருக்கிற தாம்.பதனீரில் காணப்படுகின்ற சத்து கழிவுப் பாகில் வந்து சேருகிறதாம்.இதனுடை கறுப்பு நிறத்தால் இது மக்களால் ஒதுக்கப்படுகிறது.இப்பாகில் கந்தகம் கலந்து காணப்படுகின்ற காரணத்தால் அதனைப் பயன்படு த்தாமல் மக்கள் ஒதுக்கியே வைத்திருக்கி றார்கள்.இதனை உரிய முறையில் சுத்தீகரித்து எடுத்தால் சுவை மிக் கதான பாகினைப் பெறக்கூடியதாகவே இருக்கும். இப்படியான பாகினை பானங்களுக்கும் இனிப்புப் பதார்த் தங்கள் செய்வதற்கும் பயன்படுத்தலாம் என்பதைக் கருத்திருத்தல் வேண்டும். மருத்துவத் துக்கும் கழிவுப் பாகு உதவி நிற்கிறது என்பதும் முக்கியமாகும்.

  புகையிலை பதப்படுத்தலிலும் கழிவுப்பாகினைப் பயனாக்குகின்ற னர்.பால் கறக்கும் மாடுகளுக்குக் கொடுக் கப்படும் புண்ணாக்குபுல்லுதவிட்டுடன் கழிவுப் பாகினைக் கலந்து கொடுத்தால் பால் நன்றாகவே சுரக்குமாம். மற்றைய கால்நடைகளுக்கும் கொடுக்கும் பொழுது அவையும் சிறப்பாக உழைக்குமாம் என்பதும் நோக்கத்தக் கது.இவற்றை விடக் கட்டிடப் பயன்பாடு,எரி பொருள்,வினாகிரி உற் பத்தி என்ற வகையிலும் கழிவுப்பாகு பயனாகி நிற்கிறது என்பதும் நோக்கத்தக்கதாகும்.

 

                   மேகவனலு மிகவீசும் சூரிகையா

              லாகமுறு கனலு மாறுங்காண் - மோகனத்திற்

              றங்கிவரு நீர்ச்சுருக்குந் தாதவெப்ப முந்தணியு

              மிங்குபனங் கற்கண்டுக் கே 

No comments: