நாட்டமுடன் தமிழ்பரப்பும் வானமுதே வாழ்த்துகிறேன் !

மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா


மேனாள் தமிழ்மொழிக் கல்வி இயக்குநர்
மெல்பேண் ..... அவுஸ்திரேலியாவானலைகள் ஊடாக வண்ணத் தமிழ்பரப்பும் 
தேனான வானமுதே தித்திக்க ஒலிக்கின்றாய்

ஈரெட்டைக் கடந்து காலெடுத்துவைக்கும் பதினேழில்
எல்லாமே சிறப்புப்பெற இதயத்தால் வாழ்த்துகிறேன் !

தரமுடைய குரலுடையோர் உனையுயர்த்தி நிற்கின்றார்
தமிழுணர்வால் அவரெழுந்து தருகின்றார் பலநிகழ்ச்சி 
கேட்டுவிடத் தவமிருப்பார் பெருகியே வருகின்றார் 
நாட்டமுடன் தமிழ்பரப்பும் வானமுதே வாழ்த்துகிறேன் !

உள்நாடு வெளிநாடு அத்தனையும் உள்ளடங்கும் 
நல்லவல்ல செய்திகளை நாளுமே வழங்குகிறாய்
முதியவரைக் கவருகிறாய் இளையவரை இணைக்கின்றாய்
அனைவருக்கும் நல்லிசையை  வழங்குமுன்னை வாழ்த்துகிறேன் !

ஆங்கிலேய மண்ணிலே அன்னைத் தமிழொலிக்க
அமைக்கின்ற நிகழ்ச்சியினால்  ஆளுமையைக் காட்டுகிறாய் 
அடியடியாய் வைத்து ஆண்டு பதினாறைத்தாண்டி
பதினேழில் கால்பதிக்கும் பக்குவத்தை வாழ்த்துகிறேன் ! 

இன்னும்நீ உயரவேண்டும் ஏற்றம்பல காணவேண்டும்
இன்தமிழை ஏந்தியே இவ்வுலகைவரவேண்டும் 
எங்களது மண்ணை எங்களது  விழுமியத்தை 
எடுத்துச்செல்லும்இன்குரலாய் ஒலித்துவிட வாழ்த்துகிறேன் !No comments: