கற்பகதருவாம் பனையினைக் கருத்தினில் இருத்துவோம் ! [ சுவை பதினான்கு ]


மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா
மேனாள் தமிழ்மொழிக் கல்வி இயக்குநர்
மெல்பேண் .... அவுஸ்திரேலியா

 

    பனை ஓலையுடன் சமமாக நிற்கமுடியாது என்பதைக்


தெரிந்ததும் தென்னை ஓலை ஒதுங்கிக் கொண்டு விட்டது.பனை ஓலையின் பயன் பாடு பல நிலையில் இருப்பதுதான் முக்கியம் என்பதைக் கருத்திருத்த வேண்டும்.மழைக்குக் குடையாகப் பனை ஓலை வந்தது.அத்துடன் நின் றுவிடாமல் வெயிலினின்றும் காத் துவிட தொப்பியாய் வடிவம் எடுத்து வந்திருக்கிறது. தொப்பி என்றவுடன் - இன்று பலவித வடிவங்களில்
பலவித வண்ணங்களில் தொப்பிகள் வந்திருப்பதைக் காணுகிறோம். அந்தத் தொப்பிகளை வாங்கிப் பயன்படுத்துவதையும்  காணுகிறோம் இப்படி வருகின்ற தொப்பிகளுக்கு மத்தியில் - எங்கள் பனை ஓலை யினால் ஆகிய தொப்பிகளும் வந்திருக்கின்றன என்பதும் நோக் கத்த க்கது. 

   பனை ஓலையுடன் சமமாக நிற்கமுடியாது என்பதைக் தெரிந்ததும் தென்னை ஓலை ஒதுங்கிக் கொண்டு விட்டது.பனை ஓலையின் பயன் பாடு பல நிலையில் இருப்பதுதான் முக்கியம் என்பதைக் கருத்திருத்த வேண்டும்.மழைக்குக் குடையாகப் பனை ஓலை வந்தது.அத்துடன் நின் றுவிடாமல் வெயிலினின்றும் காத் துவிட தொப்பியாய் வடிவம் எடுத்து வந்திருக்கிறது. தொப்பி என்றவுடன் - இன்று பலவித வடிவங்களில்  காணுகிறோம் இப்படி வருகின்ற தொப்பிகளுக்கு மத்தியில் - எங்கள் பனை ஓலை யினால் ஆகிய தொப்பிகளும் வந்திருக்கின்றன என்பதும் நோக் கத்த க்கது.    

   

   பனை ஓலையினாலாகிய தொப்பிகள் பல வடிவங்களில்


விற்பனை க்கு வந்திருக்கிறது.குழந்தைகள் போடுவதற்கான தொப்பிகள்
கிரிக்கட் தொப்பிகள்வட்டத் தொப்பிகள் என்று வகை வகையாய் தொப்பிகள் வருகின்றன. இந்தியாவில் இராமநாதபுரத்தில் பனை ஓலைத் தொப்பி கள் முக்கிய தொழிலாகவும் வருமானத்தை வழங்கும் தொழிலாகவும்  நடை பெறுகிறது என்பதும் கருத்திருத்த வேண்டியதேயாகும். இப்பகு தியில் இந்தந் தொழிலானது ஏறத்தாள நாற்பது வருடங்களாக இடம் பெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

  பனை ஓலைத் தொப்பிகள் செய்யும் வேலையில் பெரும்பாலும்


பெண்
 களே ஈடுப்பட்டிருக்கிறார்கள் என்பது நோக்கத்தக்கது.இங்கு செய்யப் படுகின்ற தொப்பிகளைப் பலரும் விரும்புவதால் - இந்தியாவின் பல மாநிலங்களுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. குறிப்பாக ஹைதராபாத்டெல்லி மாநிலங்கள் விரும்பி வாங்குகின்றன. வெளிநாட்டிலிருந்து சுற்றுலா வருகின்றவர்கள் மிகவும் விருப்பதுடன் இந்தந் தொப்பிகளை வாங்குகின்றார்கள்.இராமேஸ்வரம் பகுயில் இத்தொப்பிகளுக்கு நல்ல விற்பனை வாய்ப்புகள் இருப்பதாக - தொப்பி உற்பத்தியில் ஈடு படுகின் றவர்கள் சொல்லுகிறார்கள். காரணம் அதிகமான வெளிநாட்டுச் சுற்று லாப் பயணிகள் இங்கு வருகை தருவதேயாகும்.

  


சாதாரண தொப்பிகளுக்கும் பனை ஓலைத் தொப்பிகளுக்கும் வித் தியாசம் இருக்கிறது.சாதாரண தொப்பிகள் அழகாய் பல வண்ணங்க ளில் வடிவங்களில் இருந்தாலும் அணிந்து கொள்ளும் பொழுது - தலையில் வியர்வை வந்துவிடும். பனை ஓலைத் தொப்பிகளை அணி யும் பொழுது காற்றோட்டமாக இருக்கும். வெய்யிலும் தாக்காது. வியர்வையையும் ஏற்படுத்தாது.பனை ஓலையின் பக்குவம் அப்படியா னது.

  யாழ்ப்பாணத்தின் நகரத்தில் இருக்கும் பிரதான சந்தையில் - பனை ஓலையினாலாகிய பொருட்களை விற்பனை செய்வதற்கென்றே ஒரு பகுதி அமைந்திருப்பதைக் காணலாம். அங்கு பனை ஓலைத் தொப்பி கள் நிறையவே இருக்கும். குருத்தோலையினைப் பயன்படுத்தி சாயங் கள் ஊட்டப்பட்ட பின்னலுடன் பல அளவுகளில் பனை ஓலைத் தொப் பிகள் இருப்பதைக்காணலாம். தென்னிலங்கையிலிருந்து வருகின்ற மக் கள் மிகவும் விருப்பத்துடன் வாங்கிச் செல்லும் பொருட்களுள் - பனை ஓலைத் தொப்பிகளும் இருக்கின்றன  என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.

  தொப்பியைத் தந்த பனை ஓலை ஓய்ந்துவிடாமல் பலவற்றைத்


தந்த
 படியே இருக்கிறது. பனை ஓலை என்று சாதாரணமாக எண்ணி விடா மால்  - எம்,எ பட்டம் பெற்ற ஒரு இளைஞர் பனை ஓலையினைத் தேர் ந்தெடுத்து மிகவும் துணிச்சலாக ஒரு புதுமுயற்சியில் ஈடுபட்டு வருகி றார் என்றால் நம்பு வீர்களா ?

   திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த இளைஞர் படித்துப் பட்டம் பெற்று விட்டு வங்கியொன்றில் வேலை பார்த்திருக்கிறார்.இயற்கை வழியில் வேளாண்மை பற்றிய நம்மாழ்வாரின் கருத்துக்கள் இவர் உள்ளத்தில் பதிந்தது. நம்வாழ்வாரின் பல காணொளிக் காட்சிகளையும் பார்த்தார். விவசாயத்தை நாடாதவர் மனம் விவசாயத்தின் பக்கம்


திரும்பியது. நல்ல சம்பளத்தில் பார்த்த வங்கி வேலையை விட்டு விட்டார். தன்னு டைய நண்பனுக்குச் சொந்தமான விவசாய நிலத்தில் இயற்கை விவ சாயம் செய்யும் முயற்சியை மேற்கொண்டார். இவரின் முயற்சிக்கு நிலம் வாய்த்த இடம் இராமநாதபுரமாகும்.விவசாய முயற்சியில் ஈடுப டும் வேளை - அங்கு நிறைந்து காணப்பட்ட கற்பகதருவாம் பனைக் கூட்டங்கள் அவரின் கருத்தில் பதிந்துவிட்டன.பதிந்துவிட்ட நிலையில் அவரின் மனதில் ஒரு புது எண்ணம் உருவானது.பனை ஓலையினை ப்பயன்படுத்தி திருமண அழைப்பிதழ்கள்
விசிட்டிங் கார்டுகள்திருமண த்துக்கான மாலைகள்,என்று புதிய முறையில் செய்தார். சவர்க்காரம் வைப்பதற்கான கவர்கள்பூஞ்செடிகளை வைத்து வளர்ப்பதற்கான அள வான பெட்டிகள் என்று இவரின் புதிய

சிந்தனையால் பனை ஓலை மேலும் ஒரு வித பரிமாணத்தைப் பெற்று மக்கள் மத்தியில் செல்வா க்கினைச் செலுத்தி நின்றது.சாமிநாதன் என்னும் இந்த இளைஞர் - தான் உருவாக்கிய பனை ஓலையினாலான திருமண அழைப்பிதழை தன்னுடைய திருமணத்திலேயே அரங்கேற்றினார் என்பதுதான் முக்கி யமாகும். செய்யுங்கள் என்று சொல்லி நிற்காமல் அதனைத் தானே செய்து நல்ல எடுத்துக்காட்டாய் விளங்கிய சுவாமிநாதனை அவரின் மனைவியும் பெருமையுடன் வரவேற்று நின்றார். அவரின் மனைவி ஒரு கல்லூரிப் பேராசிரியாயும் இருந்தார். திருமணத்த்தின் பின் - பேராசிரியர் வேலையினையே விட்டு விட்டு 
கணவனுடன் இணைந்து பனை ஓலைப் பொருட்கள் உற்பத்தியில் உழைத்து வருகிறார்.பனை ஓலையால் செய்யப்படும் திருமண அழைப்பிதழ்களுக்கு நல்ல வரவே ற்பு கிடைத்திருக்கிறதாம். அத்துடன் நல்ல வருமானமும் வருகிறதாம் என்று படித்துப் பட்டம் பெற்ற தம்பதிகள் சொல்லி மகிழ்கிறார்கள் . பட் டம் பெற்றவர்களையும் கவர்ந்து தன்வசம் ஆக்கிய பனை ஓலையைப் பாராட்டாமல் இருந்திட முடியாதுதானே !

  திருமண அழைப்பிதழை பனை ஓலையில் சாமிநாதன்


உருவாக்கினார். தூத்துக்குடியைச் சேர்ந்த பால்பாண்டி என்பவர் இன்னு மொரு வகையில் சிந்திந்து அதன் வழியில் பயணப்பட்டு - பனை ஓலைகளைக் கொண்டு மனித உருவங்களை செய்து அனைவரையும் அசரவைத்து வருகிறார். பால்பாண்டியின் பரம்பரையே பனையோடுதான் வாழ்ந்து வருகிறது.தன்னுடைய பேரன் பேர்த்திகளுக்காக பொம்மைகளை ஆரம்பத்தில் செய்யத் தொடங்கினார். பின்னர் ஆர்வம் மேலிட்டதால் விமானம் செய்தார். வண்டி செய்தார்.தொடர்ந்து ஒட்டகம்
யானைகுதிரை செருப்புஎன்று செய்து கொண்டே போனார். செய்யச் செய்ய ஆர்வமும் ஆசையும் மேலிட - திருச்செந்தூர் கோயில் கோபரத்தையே மூன்றடி உயரத்தில் ஆக்கினார். திருச்செந்தூர் கோவிலைக் காணவைத்தவர் அதுடன் அமையாது கிறித்தவ தேவாலாய

கோபுரத்தையும் அமைத்து ஆனந்தப்பட்டார். காதலை மனமிருத்தி யாவரும் விரும்பும் 
 தாஜ்மகாலையும் கலை நயத்துடன் செய்தார்.உழைத்து நிற்கும் விவசாயியைக் காட்டிட ஆசை கொண்டு - கலப்பை ஏந்திய விவசாயிஉழவு விவசாயி என்று பொம்மைகளை ஆக்கி நின்றார்.பலவற்றைக் கருத்திருத்தி பொம்மைகள் செய்தவர் ஓய வில்லை. கல்விக்கண் திறந்த காமராசர் ஏழைகளின் தோழன் காமராசர் ! எங்களின் உள்ளம் உறையும் காமராசர் ! என்று போற்றும் வண்ணம் தமிழ்நாட்டின் முதலமைச்சராக விளங்கியவர்தான் காமராசர். அவர் மேல் மிகவும் பிரியம் கொண்டிருந்தார் பால் பாண்டி. அதனால் அவரின் சிந்தனை காமராசரை பனை ஓலை கொண்டு பொம்மையாக்க எண்ணியது.அவரின் முதல் மனித உருவப் பொம் மையாக அமைந்தது காமராசர் பொம்மையேயாகும். அதன் பின் வியத்தகு விஞ்ஞான மேதை மேதகு இந்திய

முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் அவர்களை பனை ஓலையினால் பொம்மையாக்கிப் பெருமிதப் பட்டார். ஜனாதிபதியினை உருவாக்கியவருக்கு
  தமிழ்நாட்டின் முதலமைச்சராய் இருந்த முத்தமிழறிஞர் கலைஞர் கருணாநிதியை  விட்டுவிட  மனம் வரவில்லை. முத்தமிழ் அறிஞரின் பொம்மையினை ஏழுடி  உயரத்தில் அமைத்துச் சாதனையாளராய் விளங்குகிறார் பால்பாண்டி. இரண்டு மாதங்களில் இந்தப் பொம்மையினைச் செய்து முடித்ததாக அறிய முடிகிறது.இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் பொம்மையினை ஆக்கும் பணியில் பால்பாண்டி இப்பொழுது இருக்கிறார். வருங் காலத்தில் அவரின் சிந்தனையால் பனையின் ஓலை புதுப் புது வடிவங்களைத் தாங்கி வரப்போகிறது என்பது நோக்கத்தக்கதாகும்.

  குடை தந்தது. தொப்பி தந்தது. கூரை தந்தது.கூழ்குடிக்கப் பிளாவும் தந்தது.காற்றில்லா வேளை கைகொடுக்க விசிறியாயும்


ஆகியது பனை ஓலை 
-  மின் விசிறி இல்லாக் காலத்திலும்   விசிறியாய்   பயன்பட் டது.மின் விசிறி வந்த பின்பும் பனை ஓலை விசிறி பயன்பாட்டில் இருக்கிறது என்பதும் நோக் கத்தக்கது.மின்சாரம் இருந்தும் பல வீடுகளில் ஒழுங்காக மின்சாரம் வராத நேரங்களில் அனைவரது கைகளிலும் பனை ஓலை விசிறியே வந்து நிற்கும். வெய்யில் காலங்களில் விசிறிதான் எங்களுக்குப் பெருந்துணையாய் இருந்தது.சாய்மானற் கதிரையில் பத்திரிகை வாசிக்கும் அப்பாவோ   தாத்தாவோ பெரியப்பாவோ - பத்திரிகையுடன் பனை ஓலையினாலாகிய விசிறியையும் கையில் வைத்திருப்பார்கள். பாட்டிமார் வெற்றிலை இடிக்கும் உரலைப் பக்கத்தில் வைத்துக்கொண்டு - கைகளிலே பனை ஓலை விசிறியை விசிறிக் கொண்டு இருப்பார்கள்.நாங்கள் கூட பனை ஓலை விசிறியை பங்குனி சித்திரை மாதங்களில் விட்டுவிட்டு நகரவே மாட்டோம் அல்லவா ? பனை ஓலை விசிறி பாரம் அற்றது.அது அமைந்திருக்கும் அமைப்பால் காற்று தேவையான அளவு வந்து விழும். பிடிப்பதற்கு என்று அளவான கைப்பிடி.பனை ஓலை விசிறியை விசிறுவதால் கையும் வலிக்காது. காற்றும் சுகமாகக் கிடைக்கும்.பனை ஓலைப் பாயில் படுத்தபடி பனை ஓலை விசிறியால் விசுறுவதே ஒரு ஆனந்தமாகும். அனுபவித்தவர் களுக்குத்தான் அதன் ஆனந்தம் தெரியும் !

  விசிறிக் கொண்டே பசும்பாலைப் பருகுவதும் ஒரு பேரானந்தமேயாகும்.பாலைப் பொழிந்து தருகின்ற பசுக்களின் பசியினைப் போக்கும் நிலையிலும் பனை ஓலை வந்து  கைகொடுத்து நிற்கிறது என்பதையும் கருத்திருத்த வேண்டும்.பச்சைப் பனை ஓலையைக் கிழித்து அவற்றைத் துண்டாக்கி பசுக்களுக்கு வைக்கும் பொழுது - அதனைத் தின்னும் பசுக்களின் பால் - நல்ல மணமும், சுவையும் கொண்டதாய் இருக்கும். பசுக் களுக்கும் பனை ஓலையின் சுவையும் நன்றாகவே பிடிக்கும். பாலைத் தரும் பசுவோடு - வண்டியிழுக்கும் மாடுகளும், வயலை உழும் மாடுகளும் பனை ஓலையினை விருப்பத்துடன் சாப்பிடுகின்றன.பனை ஓலை யின் மீது கொண்ட ஆசையினால் - வேலியில் இருக்கும் பனை ஓலையினை இழுத்து அவற்றை வாயால் கடித்து இழுப்பதையும் காண முடிகிறது.

 இப்படி - எல்லா வகையிலும் பயனான பின்னரும் - பனை ஓலை நின்று விடவில்லை. பயிர்களுக்கு நீர் ஊற்ற , நீரிறைக்கப் பயனாகி இருந்த பனை ஓலை தன்னுடைய கடைசிக் காலத்தில் - பயிர் செய்யும் நிலத்துக்கு உரமாகி தன்னுடைய வள்ளல் தன்மையினைக் காட்டியே நிற்கிறது.பனை ஓலையின் பயன்பாடு " பயன்மிக்க பயன்பாடு ". 

கூரையானேன் குடையானேன்

குழந்தைக்கும் தடுக்கானேன்
வேலியானேன் தாலியானேன்
வியர்வைக்கு விசிறியானேன்
கால்நடைக்கு உணவானேன்
கல்யாண அழைப்பானேன்
மணமக்கள் மாலையானேன்
மங்கலமாய் பூவானேன்
கோபுரங்கள் ஆகினேன்
குழந்தைக்கும் பொம்மையானேன்
நாட்டுத் தலைவரையும்
காட்டுதற்குத் துணையானேன்
கொடுத்துவிடத் துணிந்தனால்
கொண்டாடி மகிழ்கின்றார்
மடிகின்ற நிலையினும்
மண்செழிக்க உரமானேன்   

No comments: