மேகங் கறுத்தாலும் மின்ன லடித்தாலும்
வானம் பொழிவ தில்லை
ஆசை எழுந்தாலும் கோபம் மிகுந்தாலும்
ஆவது எதுவும் இல்லை
தானம் கொடுத்தாலும் தவமும் இருந்தாலும்
தலைமை வருவ தில்லை
ஞானம் பிறந்தாலும் மோனம் கலைந்தாலும்
நமக் கெது மாவதில்லை
கள்ளம் மிகுந்தாலும் கசடு மிகுந்தாலும்
கருணை குறை வதில்லை
உள்ளம் உடைந்தாலும் உண்மை குலைந்தாலும்
உணர்வு அழிவ தில்லை
செல்வம் குறைந்தாலும் சிறப்பு இழந்தாலும்
உள்ளம் மெலிவ தில்லை
கல்வி மிகுந்தாலும் கடமை மிகுந்தாலும்
கண்ணியம் குறைவ தில்லை
தெய்வம் இருந்தாலும் தெரிசனம் கிடைத்தாலும்
தெளிவது வருவ தில்லை
தேவை மிகுந்தாலும் தெரிவு குறைந்தாலும்
தெளிவது வருவ தில்லை
No comments:
Post a Comment