துர்க்கா தேவி தேவஸ்தான சமய அறிவுப்போட்டி 2010



துர்க்காதேவி தேவஸ்தான அறிவுத் திறன் போட்டி - 2010

இப் போட்டிகள் ஏப்ரல் மாதம் 18ம் திகதி சிட்னி துர்க்கை அம்மன் கோவிலில் பிற்பகல் 1 மணியிலிருந்து மாலை 7 மணி வரை நடைபெறவுள்ளது.

வர்ணம் தீட்டுதல் (பாலர் பிரிவுக்கு மட்டும்), சமய அறிவுப் போட்டி, பேச்சுப் போட்டி என மூன்று போட்டிகள் நடைபெறும். (பேச்சுப் போட்டிக்கான பேச்சுக்களும் வழங்கப்படும்)



இப்போட்டிகளில் பங்குபற்றுபவர்களுக்கு பரிசில்கள் முதற் பிரிவு, இரண்டாம் பிரிவு, மூன்றாம் பிரிவென மூன்று வகையாக வழங்கப்படவுள்ளது. ஓவ்வொரு பிரிவிலும் ஓன்றுக்கு மேற்பட்ட திறமையானவர்களுக்கு பரிசில்கள் கிடைக்கவேண்டும் என்பதற்காக இப்படி வகுக்கப்பட்டடுள்ளது.
போட்டி நடாத்தப்படும் பிரிவுகளும் போட்டிகளும்
பிரிவுகள் பிறந்த திகதி விபரம் போட்டிகள்

பாலர் ஆரம்ப பிரிவு 01.08.2005 இலும் அதன் பின்னரும் பிறந்தவர்கள்
சமய அறிவுப் போட்டி  வர்ணம் தீட்டுதல்

பாலர் பிரிவு 01.08.2003 க்கும் 31.07.2005 க்கும் இடையில் பிறந்தவர்கள்

சமய அறிவுப் போட்டி வர்ணம் தீட்டுதல்

கீழ்ப்பிரிவு 01.08.2001 க்கும் 31.07.2003 க்கும் இடையில் பிறந்தவர்கள்

சமய அறிவுப் போட்டி பேச்சுப்போட்டி

மத்தியபிரிவு 01.08.1998 க்கும் 31.07.2001 க்கும் இடையில் பிறந்தவர்கள்

சமய அறிவுப் போட்டி பேச்சுப்போட்டி

மேற்பிரிவு 01.08.1995 க்கும் 31.07.1998 க்கும் இடையில் பிறந்தவர்கள்

சமய அறிவுப் போட்டி பேச்சுப்போட்டி

அதிமேற்பிரிவு  31.07.1995 இலும் அதன் முன்பும் பிறந்தவர்கள்

சமய அறிவுப் போட்டி பேச்சுப்போட்டி
போட்டிகளுக்கான விண்ணப்படிவம்

போட்டிகளுக்கான விண்ணப்படிவத்தை ஸ்ரீ துர்க்காதேவி தேவஸ்தான கரும பீடத்திலும்; பின்வரும் அறிவுப்போட்டிக் குழு அங்கத்தவர்களிடமும் பெற்றுக்கொள்ளலாம்.

திரு செ பாஸ்கரன் 0407 206 792
திரு கு கருணாசலதேவா 0418 442 674
திரு செ மகேஸ்வரன் 02 9642 5241
திருமதி க ஜெகநாதன் 02 9749 1842
திரு தி ரவி 02 9764 2138
திருமதி சி நிஷ்கலா 02 9863 1465
திருமதி அ சாரதா 02 9863 3769

விண்ணப்பப் படிவங்களை பூர்த்தி செய்து 15 APRIL 2010 க்கு முன்பாக கிடைக்கக் கூடியதாக ஸ்ரீ துர்க்கா தேவி தேவஸ்தானம், 21- 23 Rose Crescent Regents Park 2143  என்ற முகவரிக்கு அனுப்பி வைக்கப்பட வேண்டும் அல்லது ஆலய கரும பீடத்திலோ மேற்குறிப்பிட்ட அறிவுப்போட்டிக் குழு அங்கத்தவர்களிடமோ கையளிக்கப்பட வேண்டும். ஓருவர் அந்தந்த வயதிற்கேற்ற போட்டிகளில் பங்குபற்றலாம். ஒருநபருக்கு போட்டிக்கான நுளைவுக்கட்டணமாக $5 பெறப்படுகின்றது.


போட்டிக்கான விதிமுறைகள், புள்ளிகள் வழங்கும் முறை பற்றிய குறிப்புகள் என்பனவற்றை விண்ணப்பப் படிவத்தோடு பெற்றுக்கொள்ளலாம்.

          

No comments: