ஆட்சியில் புதிதாக குடியேறுபவர்கள் தொகை படிப்படியாகக் குறைக்கப்படும் எதிர் கட்சித் தலைவர் ரோனி அபேட்

.


எதிர் கட்சித் தலைவர் ரோனி அபேட் லிபரல் கட்சியின் ஆட்சியில் புதிதாக குடியேறுபவர்கள் தொகை படிப்படியாகக் குறைக்கப்படும் என்று அறிவித்தார். அவரின் இந்த  அறிவிற்பிற்கு கட்சியின் முக்கிய உறுப்பினர்களிடம் இருந்து  பலத்த எதிர்ப்புக் கிளம்பியுள்ளது. எதிர் கட்சியின் குடிவரவுத் துறை பேச்சாளர் Scott Morrison, ரோணி அபேட் வெளியிட்டுள்ள குடிவரவுக் கொள்கை தனிப்பட்ட முறையில் அவரால் மேற்கொள்ளப்பட்ட முடிவு எனவும் இது  தொடர்பாக கட்சியில் கலந்து ரையாடப்படவோ அல்லது கட்சியில் முடிவெடுக்கவோ இல்லை எனத் தெரிவித்துள்ளார். முன்னாள் எதிர்கட்சித் தலைவர் மல்கம் ரேண்புல் முக்கிய விடயங்களில் கட்சியுடன் கலந்துரையாடாமல் முடிவுகளை மேற்கொண்டமையாலேயே கட்சித் தலைமையை இழந்தார் அதே போன்ற செயல்பாட்டினை ரோனி அபேட்டும் மேற்கொள்கின்றார் என கட்சியில் மற்றுமொரு முக்கியமானவர்  கருத்துத் தெரிவித்துள்ளார்.

No comments: