பொங்கல் திருநாள் புதுப்பாதை திறந்திடட்டும் !


மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா      

மேனாள் தமிழ்மொழிக் கல்வி இயக்குநர்
மெல்பேண் ... அவுஸ்திரேலியா

 

 எல்லோரும் எல்லாமும் பெற்று இன்புற்றிருக்க வேண்டும் என்று - பொங்கல் திருநாளில் எல்லாம் வல்ல இறைவனை வேண்டி நிற் போம்.வறுமை அகல வேண்டும். வாய்மை நிலைக்க வேண்டும். பொறுமை பொலிய வேண்டும். பொய்மை அகல வேண்டும்.அறிவு பெருக வேண்டும். ஆன்மீகம் சிறக்க வேண்டும்.அன்பு நிலைக்க வேண்டும்.அறியாமை மறைய வேண்டும்.

  பொங்கல் என்றாலே புத்துணர்வு வருகிறதல்லவா ! பொங்கல்


என்றாலே பூரிப்பு பெருகிறது அல்லவா ! பொங்கல் என்றாலே ஆனந்தம் பெருக்கெடுக்கிறது  அல்லவா ! அதனால்த்தான்“ பொங்கலோ பொங்கல் “ என்று பொங்கலை மகிழ்வாய் வரவேற்றுப் பொங்கியும் மகிழுகின்றோம். 

  உறவுகள் கூட வேண்டும்.ஒற்றுமை ஓங்க வேண்டும். பிரிவுகள் மறைய வேண்டும்.பெரியவர் வாழ்த்த வேண்டும்.இளையவர் சிறக்க வேண்டும். இன்பமே இருக்க வேண்டும். இதுதானே பொங்கலின் உட் பொரு ளாய் அமைந்திருக்கிறதல்லவா ! 

  பொங்கலின் சிறப்புகள் எங்கள் தமிழினத்தின் ஏற்றமிகு பண்பாட்டுப் பெட்டகமே ஆகும். புத்தரிசி புதுப் பானை  கோலம் மாவிலை வாழையிலை மஞ்சள் கரும்புஅது தரும் சுவையான சர்க்கரையும் வெல்லமும். வெற்றிலை பழங்கள், நிறைகுடம் குத்து விளக்குஇலக்குமியாய் எங்களின் பசுக்கள்அது அன்பாய் பொழியும் அமுதாம் பசும்பால் ,அத்தனையும்  பொங்கலுக்கு வாய்த்திட்ட பொக்கிஷங்கள் அல்லவா ! 

   இனிப்பாய் இருக்க வேண்டும். சிறப்பாய் இருக்க வேண்டும். பொறுப்பாய் உழைக்க வேண்டும். நன்றி யாய் இருக்க வேண்டும். நலிந்தோர்க்கும் நல்கவேண்டும். பொங்கிய பொங்கலை நாமும் உண்ண வேண் டும். மற்றவர்க்கும் பகிர்ந்தளித்து மகிழவும் வேண்டும். 

   
   உதவும் மாடுகளுக்கு நன்றி. உழைக்கும் உழைப்புக்கும் நன்றி. ஒளி கொடுக்கும் ஆதவனுக்கும் நன்றி.
மண்ணுக்கும் நன்றி. விண்ணுக்கும் நன்றி. மண்போட்ட விதை முழைக்க வைத்திட்ட மாமழைக்குக்கும் நன்றி.இத்தனைக்கும் உரித்தாய் அமைந்திருக்கும் உன்னதத் திருநாள் தான் எங்களின் “ பொங்கல்த் திரு நாள் “ . அந்தத் திருநாளைப் பற்றி அறிவதும்அகத்திருத்துவதும் அவசியம் அல்லவா ! 

தைபிறந்தால் வழிபிறக்கும் " என்று தமிழர்கள் சொல்லுவது வழக்கமாகும். அந்த வழக்கம் தொடர் ந்து வரவேண்டும் என்பதே யாவரதும் ஆசையாகும்.

" தை பொறந்தால் (பிறந்தால்) வழி பிறக்கும் தங்கமே தங்கம்               
தங்கச் சம்பா நெல் விளையும் தங்கமே தங்கம்                                              
முத்துச் சம்பா நெல்லு குத்தி தங்கமே தங்கம்                                     
முத்தத்திலே சோறு பொங்கி தங்கமே தங்கம்                                           
குத்து விளக்கேத்தி வச்சு ( வைத்து ) தங்கமே தங்கம்                               
கொண்டாடி மகிழ்ந்திடுவோம் தங்கமே தங்கம் "  -  

 என்னும் இந்தப் பாடல் மனமகிழ்ந்த பொங்கலை, மலர்ந்த பொங்கலை , மண் வாசனை தரும் பொங் கலை , உயிர்த் துடிப்பான பொங்கலை , கலாசாரம் பண்பாடு கலந்த பொங்கலை நினைவூட்டி நிற்கி றதல்லவா ?  அப்படி ஒரு காலம் இருந்தது. அந்தக் காலம் எங்கள் ஆழ் மனதில் அமர்ந்திருக்கிறதல் லவா ? அப்படி ஒரு காலம் வரவேண்டும் என்பதுதான் எல்லோரதும் ஆசை !

" உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனை செய்வோம் - வீணில்                             
உண்டு களித்திருப்போரை நிந்தனை செய்வோம் "
" உழுதுண்டு வாழ்வார்க்கு ஒப்பில்லைக் கண்டீர்                                        
பழுதுண்டு வேறோர் பணிக்கு " 

" சேற்றில் கால் வைக்காவிட்டால் சோற்றில் கைவைக்க முடியாது " இவையெல்லாம் பொங்கலை மனமிருத்தும் அமுத வாக்குகள்.

  தைமாதத்தின் தொடக்கத்தில் இந்த விழா ஏன் கொண்டாடப்படுகிறது ? இந்த விழாவினை யாரை மையப்படுத்திக் கொண்டாடுகிறோம் ? இந்த விழாவின் அடிப்படை எதனை உணர்த்துகிறது ? இந்த விழாவில் தமிழரின் எத்தகைய பண்பாட்டு அம்சங்கள் நிறைந்திருக்கின்றன ?  பொங்கல் என்றால் புது உடைகள் வாங்குவோம். பொங்குவோம். தொலைக்காட்சியில் நடக்கும் பொங்கல் கொண்டாட்ட நிகழ் ச்சிகளைப் பார்த்து ரசிப்போம். அத்துடன் பொங்கல் விழா நின்றுவிடும். இதுவா பொங்கல் திருநாள் !

உழைப்பு என்பதுதான் சமுதாயத்தின் அடிப்படை. அந்த உழைப்பில் பங்கு கொள்ளும் அனைவரும் வாழ்த்தப்பட வேண்டியவர்களே. உழைப்புக்கு உதவும் மனிதர்கள்உழைப்புக்கு உதவிடும் விலங்கு கள்,உழைப்புக்கு உதவிடும் கரு விகள் கவனத்தில் கொள்ளப்படுவதுதான் சமூதாய அறமாகும். அப்படி யான ஒரு அறத்தினை வலியுறுத்தத்தான்  தைப்பொங்கலைக் கொண்டாடுகிறோம் என்பதை மனமிரு த்தல் வேண்டும்

    உலகிலே  உயிர்வாழ்வதற்கு வெப்பம் முக்கியமானது. காற்று முக்கிய மானது . நீர் முக்கியமானது. உணவு  முக்கியமானது. இவற்றுக்கெல்லாம் இறை அம்சம் கொடுத்து அவற்றை சமூகத்தின் உயர் நிலையில் வைக்கும் வழக்கம் நெடுங் காலமாக இருந்து வருகிறது. இவையாவும் தைப்பொங் கலுடன் இணைத்து வைத்தார்கள் எங்கள் முன்னோர்கள்.இதனால் பொங்கல் சிறப்பான விழாவாக அமைகிறது லென்பதும் நோக்கத்தக்கது.. 

    விவசாயம் என்பதுதான் சமூக வாழ்வுக்கு முதுகெலும்பாகும். விவசாயம் கொண்டு வருகின்ற பொருட்களால்த்தான் சமூகத்தில் மக்களின் அன்றாட வாழ்வே சிறப்பாகிறது. அந்த விவசாயத்தைச் செய்பவன் இந்தப் பொங்கலில் போற்றப்படுகின்றான். அந்த விவசாயிக்கு உதவும் மாடுகள் பூசிக்க ப்படுகின்றன. விவசாயத்தை செழிப்பாக்கும் சூரியன் வணங்கப்படுகிறான்.. விவசாயத்துக்கு உதவும் கருவிகள் மதிக்கப்படுகின்றன.இதனால் தைப்பொங்கல்  என்பது  நன்றியினை நவில்கின்ற பெருவிழா அமைகிறது என்பது முக்கிய கருப்பொருள் எனலாம்.

   தையில் அறுவடை செய்த புத்தரிசி கொண்டு புதுப்பானையில் பாலும் சர்க்கரையும் சேர்த்து மண் பானையில் பொங்கி மகிழும்பொழுது பொங்கி வரும் பாலினைப் பார்த்து குடும்பத்தில் உள்ளார்கள்     " பொங்கலோ பொங்கல்  " என்று மகிழ்ந்து நிற்கும் நிலையினை எங்கள் பிள்ளைகளின் உள்ளத்தில் இருக்கச் செய்வது மிக இன்றியமையாததாகும்.

   கலப்படம் இல்லாமல் யாவுமே உழைப்பின் பயனாக வந்த அரிசிபால் சர்க்கரைகரும்புஇஞ்சிமஞ் சள்வாழைமாவிலைஇவையெல்லாம் மகிழ்ச்சியின் அடையாளங்கள். மனித சமூகத்தின் மாண்பின் அடையாளங்கள். எங்களின் பண்பாட்டின் அடையாளங்கள்.இவைகள் தைப்பொங்கலில் பயன்படுத்தும் பொழுது ஏற்படும் மனநிறைவுக்கு ஈடு இல்லை எனலாம்.

    கூட்டுறவின் மகத்துவம் தைப்பொங்கலின் சிறப்பாகும். மனிதனும் வில ங்குகளும் கூடி உழைத்து அதன் பயனாக வெளிப்படும் ஒரு கூட்டுறவுத் திருநாள் என்றுகூட தைப்பொங்கலை எடுத்துக் கொள் ளலாம். வருடத்தின் தொடக்கமாய் வரும் தையினை மங்களகரமாக வரவேற்க வேண்டுமென்று எண் ணி பொங்கல் திருநாளினை ஏற்படுத்திய எங்களின் முன்னோர்களை நாங்கள் வாழ்த்தாமல் இருந்திட முடியுமாவருடத் தொடக்கத்தில் மனதில் ஏற்படும் எண்ணங்கள்தான் அந்த வருடம் முழுவதையும் மகிழ்வுடன் வாழ வைக்கும் என்று எண்ணிய உளவியல் சிந்தனையை உவந்தேற்ற வேண்டாமா ? 

     பொங்கலின் முதலில் மார்கழியின் நிறைவில் போகி என்றொரு பண்டிகை கொண்டாடப்படுகிறது. போகி என்றால் பழைய விஷயங்களை பழைய பொரு ட்களைக் களைந்து விடுவதாகும். அடுத்து பொங்கல் வருகிறது. பழைய பொரு ட்களை எரித்து விடுவதைத்தான் போகியில் காண்கிறோம்உண் மையில் இத ன் அர்த்தம் அதுவன்று. எங்கள் மனத்திலுள்ள பொறாமை வஞ்சகம். பொய்கபடுசூது வாதுஇவற்றையெல்லாம் ஞானம் என்னு. தீயில் பொசுக்கி மனதைத் தூய்மை ஆக்கி புத்தாடை உடுத்து புதுப்பொங்கலை சுவையாக உண்டு புத்துணர்வு பெற்று நிற்கவேண்டும் என்பதுதான் இதன் தாற்பரியம் எனலாம். 

   பொங்கலுக்கு அடுத்து மாட்டுப் பொங்கல் வருகிறது. விவசாயத்துக்கு உதவிய மாடுகளுக்கும்பால் தந்து எம்மை வாழ்வித்த பசுக்களுக்கும் நன்றி நவிலும் நாளாக இது அமைகிறது. அடுத்த நாள் 
" காணும் பொங்கல் " அமைகிறது. உற்றார் உறவினரைபெரியவர்களைக் கண்டு அவர்களின் வாழ்த் தினை ஆசியினைப் பெற்றுக் கொள்ளும் நாளாக இந்த நாளை அமைத்து மகிழ்கின்றார்கள்.

    மாட்டுப்பொங்கல்போகித்திருநாள்காணும்பொங்கல் இவைபற்றி எல்லாம் நகரத்தில் வாழ்கின்ற வர்களுக்கோ.  புலம்பெயர் பகுதிகளில் வாழ்கின்றவர்களுக்கோ தெரியவருவது குறைவாகும். பொங்க லைக் கூட குக்கரில் பொங்கி தாங்கள் இருக்கும் வீட்டின் அடுப்படியில் வைத்து கரண்டியால் இரண்டு கர ண்டி அவசர அவசரமாக வாயில் போட்டுவிட்டு வேலைக்கு ஓடும் நிலை யினைத்தான் பொங்கல் நன்னாளில் காண்கின்றோம்.மாடிக் குடி இருப்புகளில் வாழ்கின்றவர்களின் பொங்கலை நினைத்துப் பார்க்கவே பரிதாபமாகவே இருக்கும். 

   சமயம் கடந்த விழாவாக தமிழர் விழாவாக தைப்பொங்கல் விளங்குகிறது என்பதுதான் இந்த விழா வின் மிகச் சிறப்பு எனலாம். உலகில் வாழுகின்ற தமிழர்கள் - தைப்பொங்கலை மகிழ்வுடன் " பொங் கலோ பொங்கல் " என்று பொங்கும் மனத்துடன் கொண்டாடி மகிழ்கிறார்கள். சமயச்சாயம் பூசப்படாத தமிழர் திருநாளாய்  தைப்பொங்கல் திகழ்கிறது என்பது தமிழருக்கெல்லாம் மிகவும் பெருமையான விஷயம் அல்லவா !  நன்றி நவிலும் விழா ! உழைப்பாளரின் உன்னத விழா ! கூட்டுறவின் விழா ! மத பேதமற்ற மகோன்னத விழா ! எல்லோரும் ஓரினம் எல்லோரும் ஓர் நிறை என்னும் விழா ! எனவே பொங்கலோ பொங்கல் என்று ஆனந்தமாய் கொண்டாடி அகமகிழ்வோம் வாருங்கள்!    உதவுவதை உளமிருத்த பொங்கல் திருநாளில் அனைவரும் சங்கற்பம் எடுத்திடுவோம். கற்பவர்க்கு இயலுமான வரை கைகொடுக்க எண்ணிடுவோம். ஏழையாய் இருப்பார்க்கு இயன்றவரை இருப்பதைக் கொடுத்திட வும் எண்ணிடுவோம். கற்கின்ற மாணவர்கள் ஏழ்மையால் உழலுவதைக் கைகட்டி நின்று பார்க்கும் மனநிலையைக் கைவிட்டு அவர்களைக் கையணைப்போம். உள்ளங்கள் அன்பாய் அருகணைய வேண் டிடுவோம். பொங்கல் திருநாள் புத்தொளியை தந்திடட்டும் ! பொங்கல் திருநாள்  புதுப்பாதை திறந்தி டட்டும் ! 

தை பிறக்கும் நாளை விடியும் நல்ல வேளை
பொங்கப் பான வெள்ளம் போலப் பாயலாம்
அச்சு வெல்லம் பச்சரிசி வெட்டி வெச்ச செங்கரும்பு

அத்தனையும் தித்திக்கிற நாள்தான்                                  
எங்கள் தை பிறக்கும் நாள்தான்
ஆடுவோம் பாடுவோம் கொண்டாடுவோம்
அன்பாகச் சேர்ந்துமே பொங்கி மகிழ்வோம் 


No comments: