கார்த்திகா கணேசரின் " இந்துமதத்தின் பரிணாமச் சிந்தனைகள்" ஆய்வரங்கம் - சிவா

 .


வெளிச்சம் கழகத்தினரின் முதல் நிகழ்வாக சிட்னி தமிழ் அறிவகத்தில் கார்த்திகா கணேசரின் " இந்துமதத்தின் பரிணாமச் சிந்தனைகள்" நூல் ஆய்வரங்கம் அண்மையிலே நடைபெற்றது . நூலில் உள்ள கட்டுரைகள் வெவ்வேறு பட்டவர்களால் ஆராயப்பட்டது. இந்நிகழ்வு மெய்நிகராகவும் நடை பெற்றது.

வைத்திலிங்கம் ஈழலிக்கம் அவர்கள் நூலின் முதல் இரு கட்டுரைகளான சிந்தனா வளர்ச்சி, இருக்கு வேதம் ஆகியவை பற்றி பேசினார்.

செ .பாஸ்கரன் உடல் மெய் என்ற திருமூலர் கருத்து பற்றியும் காமசூத்திரம் பற்றியும் தனது கருத்தை பகிர்ந்து கொண்டார். திருநந்தகுமார் அவர்கள் குருசிஷ்ய பாரம்பரியம் தசாவதாரம் பற்றி விரிவாக எடுத்துக் கூறினார். கானா பிரபா இந்துமத சிந்தனை வளர்ச்சியிலே வானியல் பற்றிய ஆய்வு மூலம் கிரகங்கள் பற்றிய அறிவை துல்லியமாக அறிந்திருந்தமையையும் அதன் வெளிபாடாக கி.மு 600 ல் வாழ்ந்த கணாதர் அதுபற்றிய அறிவின் மூல கர்த்தாவாக கருத படுகிறார் என்பதுபற்றியும் கூறினார்.






அ சந்திரகாசன் அவர்கள் கௌதமர் பற்றிக் கூறி இந்திய கண்டத்தில் தலைவர் அம்பேத்கர் அவர்கள் கருத்தையும் முன்வைத்தார்.

இறுதியாக சௌந்தரி கணேசன் நடராச மூர்த்தியின் ஆனந்த தாண்டவமும் திருமூலரின் சிந்தனை அதனுடன் ஒத்து இருப்பதுபற்றியும் கூறி திருமூலரின் பாடல்கள் பலவற்றை எடுத்துக் காட்டி அவரது சிந்தனையும் இன்றைய வளர்ந்துவிட்ட விஞ்ஞான சிந்தனையும் ஒத்து போவதையும் எடுத்துக்காட்டி விளக்கினார். அதன்பின் பல பார்வையாளர்களும் நேரிடையாகவும் மெய்நிகர் மூலமாகவும் தமது கருத்துக்களை பகிர்ந்துகொண்டனர்.






No comments: