கற்பகதருவைக் கருத்தினில் இருத்துவோம் ! [ சுவை இருபத்து ஐந்து ]


மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா

மேனாள் தமிழ்மொழிக் கல்வி இயக்குநர்
மெல்பேண் .... அவுஸ்திரேலியா

                 

 மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா அவர்கள் எழுதும்   கற்பகதருவைக் கருத்தினில் இருத்துவோம்  அங்கம் 25 இன்று வெளியாகுகின்றது . மெல்பேர்னில் வசிக்கும் எழுத்தாளர் தொடர்ச்சியாக தமிழ்முரசுக்கு எழுதி வாசகர்களின் மதிப்பையும் அன்பையும் பெற்றுள்ளார் . வெள்ளிவிழா வாராமான இன்று அவருக்கு எமது நன்றியும் பாராட்டுக்களும் . நீண்ட காலம் அவர் மக்களுக்காக எழுத வாழ்த்துக்கள் .

ஆசிரியர் குழு 

   பழக்கடைகளில் பலபழங்கள் மத்தியில் பனம்பழம்


இடம்
 பெறாவிடி னும் தெரு ஓரங்களில் பனம் பழங்களை விற்பதும் அதனை வாங்குவதும் நடைபெற்று வருகிறது என்னும் செய்தியானது - எங்களின் சொந்தப்பழம் எங்களை விட்டுப் போய்விடவே இல்லை என்பது மகிழ்வினை ஏற்படுத்துகிறதல்லவா ! தமிழ்நாட்டில் சேலத்தில் தெரு ஓரங் களில் பனம்பழங்களை விற்பவர்களைக் காணலாம்.விவசாயிகள் பலர் சேலம் பகுதியில் தெரு ஓரங்களில் பனம்பழக் காலங்களில் பனம் பழங்களை எடுத்துவந்து அதனைக் குவியலாக வைத்து விற்று வருகிறார்கள்.பச்சையாகவும் கொடுக்கிறார்கள். விரும்பினால் அதே இடத்தில் பனம்பழத்தினைச் சுட்டும் விற்பனை செய்கிறார்கள்.ஒரு பனம் பழத்தை இருபது அல்லது முப்பது ரூபாய்க்கு விற்பதாக விற்பனையில் ஈடு பட்டி ருக்கும் விவசாயிகள் தெரிவிக்கிறார்கள். இலங்கை யிலும்

பனம்பழங்
 கள் விற்கப்பட்டன என்றும் அறிந்திட முடிகிறது.பனம்பழக் காலத்தில் புத்தளம்சிலாபம் பகுதிகளிலிருந்து கொண்டுவரப்படும் பனம்பழங்கள் நூறு ரூபா தொடக்கம் நூற்று ஐம்பது ரூபாய் வரைக் கும் விற்பனை செய்யபட்டிருக்கிறது. எங்களின் சொந்தப் பழமான பனம்பழமானது மற்றய பழங்களுக்கு ஈடு கொடுக்கும் பாங்கிலே இருக்கிறது என்ப தைக் கருத்திருத்துதல் அவசியமே யாகும். யாழ்ப்பாணம் என்றவுடன் மாம்பழமே யாவரதும் நினைவுக்கு வந்து நிற்கும். மாம்பழத்துடன் பனம்பழமும் யாழ்மண் ணில் சிறப்பாய் அமைகிறது என்பதும் நோக்கத்தக்கதாகும்.

  பனம்பழமானது ஏனைய பழங்களிலிருந்தும் தனித்துவம் மிக்கதாகவே இருக்கிறது என்பது முக்கியமாகும். பனம்பழத்தின் சிறப்பே அதில் அ மைந்திருக்கும் களித்தன்மையே எனலாம். ஏனைய பழங்களில் இவ் வாறான களித்தன்மை இல்லை என்றுதான் சொல்லலாம். பனம்பழ த்தில் காணப்படும் களியின்


காறல் தன்மையும்
இனிப்புத் தன்மையும் ஏனைய பழங்களில் இல்லவே இல்லை என்பதைக் கருத்திருத்தல் வேண்டும். இவ்வாறு காணப்படுவதால்த்தான் பனம்பழம் தனித்துவ மான பழமாக விளங்குகிறது எனலாம்.ஏனைய பழங்களை நாங்கள் மரத்திலிருந்து பறித்துத்தான் எடுக்கிறோம்.சில வகைகளை முற்றிய பருவத்தில் மரத்திலிருந்து பறித்து அவற்றை பல முறைகளில் பதப் படுத்தியே பின்னர் பழமாகச் சுவைக்கின்றோம். ஆனால் யாருக்கும் எந்தவிதக் கஷ்டமும் கொடுக்காமல் தானாகவே மரத்தில் பழுத்து நிலத்தில் விழுந்து நாமெடுத்துச் சுவைத்திட வைக்கும் நிலையில் இருப்பதுதான் பனம்பழமாக இருக்கிறது.இதனாலும் பனம்பழம் தனித்துவமான பழமாகவே தெரிகிறதல்லவா !

  பனம்பழத்தினை நெருப்பில் சுட்டு அதன் தோலினை நீக்கியபின்னர் அதில் இருக்கும் களியினைக் கையினால் எடுக்கின்றனர். அந்தக் களியினைச் சோற்றுடன் கலந்து அதில் தேங்காய்ப் பாலையும் விட்டு பிசை ந்து உண்ணும் வழக்கமும் மக்களிடையே காணப்படுகிறது. சில பேர் சுட்ட பனம்பழத்தையே உணவாக்கினார்கள் என்பதும் நோக்கத்தக்கது.தங்களின் ஒரு நேர உணவாகவே பனம்


பழத்தினை நெடுங்கால மாகவே மக்கள் கொண்டிருந்திருக்கிறார்கள் என்பதும் மனமிருத்த வேண்டிய கருத்தெனலாம்.

  பனம்பழம் என்றதும் பனங்காய்ப்பணியாரம் கட்டாயம் நினைவிலே வந்து நிற்கும். பனங்காய்ப் பணியாரத்தின் மூலப் பொருளே பனம் பழ த்தின் களியேயாகும்.எங்கள் தங்கத்தாத்தா நவாலியூர் சோமசுந்தரப் புலவர்கள் அவர்கள் பனம் பழத்தையும் அதிலிருந்து செய்யப்படும் பணியாரத்தையும் எப்படிப் பார்த்து எமக்கெல்லாம் தந்து நிற்கிறார் என்பதை அறிந்திட வேண்டாமா !

 

    கைப்புமுப் பும்போக நாலுமொன் றாகவே

        கலந்து சுவைக்கும் பனம்பழத்தின்

    துய்க்குஞ் சுவைக்கு நிகரான வேறொன்றைச்

          சொல்ல முடியுமோ ஞானப்பெண்ணே

 

    அந்தப் பனைதரும் நல்ல பழத்தினை

          யாராய்ந் தெடுத்துத் தழலிலிட்டே

      வெந்த பழத்தினில் நீரிற் கழுவியே

            மேற்றோலை நீக்குவார் ஞானப்பெண்ணே

 

        கையாற் பிசைந்து கறந்து கறந்து

            களியினை வாய்வைத்துத் துறுஞ்சியுண்டாற்

        செய்தேன் திரட்சிப்பால் சீனி முதலிய

              தித்திப்பென் றுண்ணாரே ஞானப்பெண்ணே

 

        வாய்ச்சிட்ட கற்பக றாருவெ னும்பனை

            மதுரப் பழத்தினை யாமறந்தே

        ஈச்சம் பழத்திற்கு வாயூறிக் கைப்பொருள்

              இழக்கின்ற வாறென்ன ஞானப்பெண்ணே

 

  காய்முற்றி நன்றாகய்க் கனிந்து பரிமளித்து

  வேய்முற்று தோளி விழுமெடுத்துத் - தீமுற்றுஞ்

  செந்தழலி லப்பழத்தைத் திட்டமிட்டமுடன் சுட்டெடுத்துச்

  சந்தநீ ரிற்கழுவித் தோல்தள்ளி - வந்திருந்து

  கையாற் பிசைந்து கறந்துகுடிப் பாரதற்குச்

  செய்தேன் திரட்சிப்பால் சீனியொவ்வா - செய்துவைத்த

  காடிபுளி நீர்தெளித்தும் காதலுட னுண்பதுவு

  நாடி யுரைப்பர் நல்மென்றே - தேடி

 

  கறந்தெடுத்த நல்லபனங் காய்க்களியைக் காய்ச்சி

  சிறந்தமா சீனியுடன் சேர்த்து - நிறந்திகழும்

  எண்ணெயில் நெய்யி லியைந்தொன்றி லேயிட்டுப்

  பண்ணிகாரஞ் சுட்டுப் பாத்துண்பார் - திண்ணமாய்

  அல்லல் பசிக்கு மரும்பிணிக்கு மாரதமுதாஞ்

 

மதுரமாம் பனம்பழத்தினைத் தங்கத்தாத்தா தன்னுடைய இதயத்தில் தாங்கியே நிற்கிறாரல்லவா ! அவரின் பார்வை பனம்பழத்தினை உணரா திருப்பாரை எள்ளிநகையாடுவதாகவும் இருக்கிறதல்லவா ! அதே வேளை பனம்பழம் என்பது எமக்கு வாய்த்த நற்பழம் என்று காட்டி அதனால் செய்யப்படும் பணியாரத்தை சுவைக்கும் படி சொல்லி நிற்பதும் யாவரும் மனதிருத்த வேண்டிய கருத்தெனலாம்.

    தங்கத்தாத்தா பனம்பழத்தையும் அதலிருந்து செய்யப்படும் பணியாரத்தையும் அழகு தமிழில் காட்டினார். பனங்காப் பணி யாரமும் அதன் சுவையும் ஏனைய


பணியாரங்களிலிருந்தும் தனித்துவமானது. அதற்குக் காரணம் பனம்பழத்தில் நிறைந்
 திருக்கும் களியேயாகும். நன்கு பழுத்த பனம்பழங்கள் ஒன் றையோ அல்லது இரண்டையோ எடுத்து நன்றாகக் கழுவிக் கொள்ளுதல் வேண்டும்.பின்னர் பனம்பழத்தில் மேலிருக்கும் அதன் தோலினை உரித்தெடுத்து விட வேண்டும்.உரித்த பின்னர் பனம்பழத்தை அதன் விதைகளுக்கு ஏற்பப் பிரித்து எடுத்து ஒரு பாத்திரத்தில் நீரினை நிரப்பி அதில் பிரித்த பனம்பழப் பகுதிகளை வைத்து கையினால் நன்றாகவே கசக்கி அதிலிருக்கும் களி யினை எடுக்க வேண்டும். இப்படி ஒவ்வொருவிதைப்பகுதியையும் நீரில் வைத்து கசக்கி எல்லாக் களியையும் எடுத்துவிடுதல் முக்கியமாகும். இப்பொழுது பனம் பழத்தில் இருந்த களியெல் லாம் நாமெடுத்த பாத்திரத்தில் ஒருவித கூழாகிக் காட்சி தரும்.

மஞ்சள் நிறமாய் மங்கலமாய் அந்தக்களி எம்மைப் பார்த்தபடி இருக்கும். அந்தக் களியினை வடிதட்டு அல்லது நல்ல பருத்தித் துணி கொண்டு வடித்து எடுப்பது அவசியமாகும்.வடிக்காவிட்டால் பனம்பழக் களியுடன் தும்பு கலந்து விடும். தும்பினை அகற்றா விட்டால் பணியாரம் செய்வது பொருத்தமாக இருக்கவே மாட்டாது. வடித்தெடுத்த பனங்களியினை வேறு ஒரு பாத்திரத்தில் மாற்றியெடுத்து அதனை அடுப்பில் வைத்து குறிப்பிட்ட அளவு கொதிக்க வைக்கவேண்டும். கொதிக்க வைத்த பனங்களியினை சற்று சூடு ஆறுவதற்கு விடுவது அவசியமாகும்.சூடு ஆறிய பனங்களியுடன் கோதுமை மாஅல்லது அரிசி மாஅல்லது உழு த்தம் மாவினைச் சேர்க்கலாம்.களியுடன் மாவினைச் சேர்க்கும் பொழுது சிறி தளவு சீனியினையும் சேர்க்கலாம். பனங்களியில் இனிப்பு இருந்தாலும் சீனி சேரும் பொழுது இன்னும் ஒருவித சுவை ஏற்படும் என்பதாலும் பனம்பழத்தில் காணப்படும் காறல் சுவை சற்றுத் தணியும் என்பதாலும் சீனியைச் சேர்க்கிறார்கள் என்பதும் நோக்கத்தக்கது. இவை எல்லாவற்றையும் நன்றாகப் பிசைந்து கொள்ளுதல் வேண்டும்.அடுப்பில் பொருத்தமான பொரிக்கும் பாத்திரத்தை வைத்து அதில் எண்ணெய்யினை விட்டு சூடாக வரும்வரை காத்திருந்து சேர்த்து வைத்திருக்கும் பனங் களியினை கைகளினால் எடுத்து கொதிக்கும் எண் ணெய்யில் சிறிய சிறிய அளவில் போட வேண்டும். நல்ல பொன்னிறமாக வரும் வரை காத்திருந்து இறக்கி ஒரு பாத்திரத்தில் வைக்க வேண்டும்.இப்பொழுது இறக்கி வைக்கப்பட்ட பனங்காப்பணியார த்தின் வாசனை வீடெல்லாம் கம கம என்று வாசத்தைப் பரப்பிய படி இருப்பதை நாங்கள் உணருவோம்.கோது மை மா கலந்தால் பனங்காப் பணியாரம் மெதுமையாக இருக்கும். அரிசிமாவோ அல்லது உழுத்தம்மாவோ கலந்தால் சற்று கடினமாய் இருக்கும். இதுதான் இந்தக் கலவைகளினால் ஏற்படும் நிலையாகும். அவரவர் விருப்பத்துக்கு ஏற்றவாறு மாவினைக் கலந்து பணியாரத்தைச் செய்து சுவைத்து மகிழலாம்.

  கிழக்கு மாகாணத்தில் பனங்காப் பணியாரங்களைச் செய்து தென்னை ஈர்க்கில் கோர்த்து சந்தைகளில் விற்கிறார்கள். சில வேளை ஈர்க்கில் கோர்க்காமலும் பெட்டிகளில் கொண்டு வந்து சந்தைகளில் விற்பதையும் காணமுடிகிறது. இக்காட்சியை நான் என்னுடை சிறிய வயதில் கண்டிருக்கிறேன்.சில நேரங்களில் ஈர்க்கில் கோர்த்த பனங்காப் பணியாரங்களை தெரி ஓரங்களில் மர நிழல்களில் இருந்து விற்பதையும் கண்டிருக்கிறேன். வாகன ங்களில் வருவோர்கள் வாகனங்களை நிறுத்தி அந்தப் பனக்காப் பணியாரங்களை விருப்பதுடன் வாங்கிச் சுவைப்பதையும் பார்த்திருக்கிறேன்.யாழ்ப்பாணத்தில் பனம்பழக்காலங்களில் வீடுகளில் செய்யும் பனங்காப்பணியாரங்கள் ஓலைப் பெட்டியில் அமர்ந்து புகைவண்டியில் தென்னிலங்கையில் இருக்கின்றவர்கள் சுவைத்திட பயணப் பட்டதும் என் நினைவில் நிற்கிறது.பனங்காப் பணி யாரம் என்றால் அவ்வளவு சுவை. அந்தப் பணியாரமானது பனை ஓலைப் பெட்டிகளில் அமரும் பொழுது அதன் சுவையோ ஒரு தனிச் சுவையாகவே இருக்கும்.நினைத்துப் பார்த்தால் இன்றும் நாவெல்லாம் நீரூறியபடியே இருக்கிறது.

    தென்னையும் பனையும் எங்களின் வாழ்வில் இணைந்தே வரு கிறது. தென்னையும் பலவற்றைக் கொடுக்கிறது. பனையுடன் சரி சமமாக வர ஆசைப்பட்டாலும் அதன் ஆசை அரைகுறையாகவே ஆகிவிடுவதைத்தான் காணமுடிகிறது.தென்னையில் ஒரே இனமே இருக்கிறதுஆனால் பனை அப்படி அமையவில்லை. பனையில் ஆண்பனை பெண்பனை என்று வகைப்படுத்தப் பட்டிருக்கிறது. இது பனையில் தனித்துவம் எனலாம். தென்னையிலிருந்து இள நீரை பறிக்கின்றோம்அதுபோல் நுங்கினைப் பார்க்க முடியாது. பெண் பனைகள் மட்டுமே நுங்கினைத் தரும் நிலையிலே இருக்கின்றன. நுங்குகளை வெட்டி இறக்கிவிட்டால் பின்னர் பனங்காய்களைப் பார்க்கவே முடியாமல் ஆகிவிடும்.பனங்காய் பழுத்தால் த்தான் நாம் சுவைப்பதற்கு உரிய பனம் பழத்தினைப் பெற்றுக் கொள்ளக் கூடியதாக இருக்கும். பனம்பழம் வந்தால்த்தால்த்தான் பனம் விதைவரும். பனம் விதைதான் பின்னர் பனைகளை உருவாக்கும் கருவாக அமைகிறதல்லவா! ஆகவே பனம்பழம் என்ப தைப் பெறுவதற்கு பனையில் வருகின்ற நுங்குகளை வெட்டி வீழ்த்தாமல் இருப்பதைக் கவனத்தில் கொள்ளுதல் மிக மிக அவசியமானதேயாகும் என்பதை கருத்திருத்தல் வேண்டும். இதனால் பனம் பழம்பற்றி முழுமையாக அனைவரும் அறிவதோடு அதனை அகத்தில் இருத்திக்கொள்ளுவதும் மிக மிக அவசியமே யாகும்.

No comments: