கற்பகதருவாம் பனையினைக் கருத்தினில் இருத்துவோம் ! [ சுவை பதினாறு ]


மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா

மேனாள் தமிழ்மொழிக் கல்வி இயக்குநர்
மெல்பேண் .... அவுஸ்திரேலியா                                  

 

  கங்குமட்டை கைத்தொழிலுக்குக் கைகொடுத்து நிற்கிறது என்று


சொன்னால் நம்மனது நம்பமறுக்கிறது. பனையின் கங்குமட்டையா ? அது விறகாய் எரிக் கத்தானே எடுக்கிறோம். அதைக் கைத் தொழிலு க்குப் பயன்படுத்துவதா என்ன .... கதையா .. அளக்கிறீர்கள் என்று தான் எம்மனமானது எண்ணியே நிற்கும். உண்மையில் - கங்குமட்டை கைகொடுக்கும் மூலப் பொருளை  வழங்கும் நிலையில்தான் இருக்கி றது என்பதுதான் உண்மையாகும். கங்குமட்டை அளித்து நிற்கும் மூல ப்பொருளாக இருப்பதுதான் பனந்தும்பு என்று பார்த்தோம். பனந்து ம்பு என்று சொல்லி அதன் வகைகளையும் பார்த்தபின்னர்தான் கங்கு மட்டை கைகொடுக்கும் மட்டையாய் ஆகியிருக்கிறது என்பதை யாவ ரும் ஏற்றுக் கொண்டிருப்பார்கள் என்று என்ணுகிறேன்.

  


பனந்தும்பைக் கொண்டு - பலவிதமான துடைப்பங்கள் ( பிரஷ்கள் ) செய்யப்படுகின்றன. வீட்டைச் சுத்தம் செய்யகப்பலை சுத்தம் செய்யகுதிரை வண்டி நிறுத்தும் இடத்தைச் சுத்தம் செய்யகுதிரை கட்டப்படும் இடங்களைச் சுத்தம் செய்யஇயந்திரங்களைச் சுத்தம் செய்ய என்று பலநிலைகளில் பயன்படுத்தப்பட்டு வருகிறது பனந்தும்பினால் ஆகிய பிரஷ்கள்.பிரஷ்களை அதாவது துடைப்பங்களை பல தொழிற்கூடங்கள் சுத்தம் செய்வதற்கும் பயன்படுத்து வதால் - உலகின் பல நாடுகளில் பனந்தும்புக்கு நல்ல சந்தை வாய்ப் புக் கிடைத்திருக்கிறது என்பது மனமிருத்த வேண்டிய கருத்தெனலாம்.கப்பல் கட்டும் தொழிற்சாலை களும் வாகனங்கள் உற்பத்தி செய்யும் நிறுவனங்களும்பனந்தும் பினாலாகிய பிரஷ்களை விரும்பிப்

பயன்படு த்துகின்றன. 
 அத்துடன் பெற்றோலிய இரசாயன சாலைகளைத் துப்பரவு செய்யவும்வீதி களைத் துப்பரவு செய்யவும் ஆகிய வகையில் - நாற்பத்து ஏழு வகை யான தொழில்களில் பனந்தும்பினாலாகிய துடைப் பங்கள் உதவி நிற்கின்றன என்பது கருத்திருத்த வேண்டியதேயாகும்.

  கங்குமட்டையிலிருந்து பனந்தும்பை எடுப்பதற்கு பல கருவிகள் பயன்படுத்தப்படுகின்றன.  கங்கு மட்டை யிலிருந்து தும்பினை எடுக்கும் முறை பெரும்பாலும் குடிசைக் கைத்தொழிலாக நடைபெற்று வருகிறது என்பதும் நோக்கத் தக்கதாகும்.அதனால் அங்கு பயன்படுத்தப்படுகின்ற பொருட்களும் சாதாரணமான கருவிகளாகவே அமைந்திருக்கின்றன. கங்குமட்டையினை வெட்டவும் பின் உரிக்கவும் பயன்படுவது கத்தி ஆகும்.கங்குமட்டையினை வைத்து அடிப்பதற்கு பொருத்தமாய் அமைவது அடைக்கல் என்று அழை க்கப்படுகிறது. இதனை அடிக்கும் கல் என்றும்


சொல்லுவார்கள்.மரக்குத்தி என்றும் பெயர் பெறுகிறது. அடிக்கும் கல்லில் வைத்து கங்குமட்டையினைத் தட்டுவதற்காக அமையும் கருவி தட்டுப்பொல்லா கும். இது மரத்தால் அமைந்திருக்கும். தும்பினை அடிப்பவர்கள் இருப்பதற்குப் பயன்படுத்தப்படும் வகையில் மரத்தால் ஆகிய பலகை வந்து நிற்கும்.தும்பினை வாருவதற்கு அமை ந்திருக்கும் கருவி சீப்பு என்று அழைக்கப்படுகிறது. தட்டுப் பொல்லினால் அடித்தபின் வருகின்ற பனந்தும்பு - சீப்பில் வைத்து வாரப்படு  கிறது.வாரப்படுவதற்கான காரணம் என்னவென்றால் மூலத் தும்பிலுள்ள கழிகவுகளை எடுக்க வேண்டும் என்பதேயாகும். கழிவினை எடுத்தால்த்தான் நல்ல தும்பினை எடுத்துப் பயன்படுத்தலாம்.

  கங்குமட்டையிலிருந்து தும்பினை எடுக்கும் முறை கவனிக்கப்பட வேண்டிய நுட்பமாய் அமைகிறது எனலாம்.


கங்குமட்டையில் இரண்டு பகுதிகள் காணப்படுகின்றன. அந்தப்பகுதிகள் முதலில் தனித்தனியே பிரிக்கப்படுகின்றன. பிரித்து எடுக்கப்பட்ட கங்கின் உட்பகுதியில் இருக்கின்ற தோல் கத்தியினால் மெது வாக இழுத்தெடுக்கப்படுகிறது. கங்கு மட்டையின் உட்புறத்தோல் பிரிக்கப்பட்டவுடன் கங்குமட்டை பிரியும். அப்படிப் பிரிவதனால் அதிலிருந்து தும்பினை எடுப் பது இலகுவாய் இருக்கும்.உட்தோலைப் பிரிக்காம லேயே - தட்டுப்பொல்லினால் - அடிக்கும் கல்லின் மீது அடித்தும் தும்பினைப் பெற்றுக் கொள்ளும். நிலையும்

காணப்படுகிறது.இப்படிவருகின்ற தும்புகளை- 
தும்பு வாருவதற்கு இருக்கும் கருவியினால் வாரும் பொழுது . அங்கே காணப்படும் சோற்றுப் பாகம் களையப்படுகிறது. மேலும் மைரிழை போன்று காணப்படுகின்ற தும்புகளும் களையப்படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கதாகும். கங்கு மட்டையினின்றும் கிடைக்கும் தும்பானது ஈரமாய் இருக்கும். அப்படியிருக்கும் தும்புகளை சிறு சிறு முடிச்சுகளாகக் கட்டி ஈரம் உலர்வதற்காக வெய்யிலில் வைக்கப்படுகிறது. இப்படியாக உலர்ந்துவரும் பனந்தும்பு கோரா “ என்னும் பெயரைப் பெறுகிறது.

  கோரா தும்புகள் முன்று வகையாய் தரம் பிரிக்கப்படுகின்றன.


உறுதியான கறுப்பு அதாவது இதை          " பிரைம் ஸ்டிப் " என்றும் 
இதற்கு அடுத்ததை " மத்திய தரம்"  என்றும் " மென்மையானது "  என்னும் நிலையில் மூவகையாகப் பிரிக்கப்படுகிறது.முதலாம் தரமாய் இருக்கும் பனந்தும்பு ,  கங்குமட்டையின் இரண்டு ஓரங்களிலும் அமைந்திருக்கும் கறுப்பு நிறத்தில் இருக்கும்.இப்படிக் கறுப்பு நிறத்தில் இருக்கும். இத்தும்பானது மிகவும் உறுதியானதாகவே காணப்படுகிறது. உறுதியானதாக வருகின்ற முதல்நிலைப் பனந்தும்புகள் பிரித்தெடுக்கப்படுகிறது .பின் அவற்றை தனியே சுத்தம் செய்யப்படுகிறது.தும்பின் நீளத் துக்கு ஏற் பவகைப்படுத்தப்படுகிறது. எண்பது விகிதம் கறுப்புக் கலந்த தும்பாக எடுத்து அவை சந்தை ப்படுத்தப்படுகின்றன.கோராவின் அடுத்த நிலையில்

தெரிவாவது மத்தியதரப் பனந்தும்பாகும்.முதலாம் தரத்தைப் பிரித்தபின் வருகின்ற உறுதியான கறுப்பும் வெள்ளையும் கலந்து இம் மத்தியதரப் பனந்தும்பு காணப்படும்.

இவ்வாறு மத்தியதரமாய் பிரிக்கப்படும் தும்பு காயவிடப்படுகிறது.அதன் பின் நீரில் ஊறவைக்கப்படுகிறது. நீரில் ஊறவைக்கப்பட்ட பின்னர் சீப்பில் இடப்பட்டு சுத்தம் செய்யப்பட்டு - தும்பின் நீளத்துக்கு ஏற்றவாறு பிரிக்கப்படுகிறது. அதன் பின்னர் அளவுக்கு உகந்தவாறு வகை வகையாய் கட்டப்பட்டு சந்தை ப்படுத்தப் படுகிறது,இவ்வாறு மத்தியதரமாய் இருக்கும் பனந்தும்பில் ஐம்பத்து ஐந்து பாகம் வெள்ளையாயும் நாற் பத்து ஐந்து பாகம் கறுப்பாயும் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கதாகும். கோரத்தும்பி லிருந்து இராண்டு வகையான தரங்களும் பிரிக்கப் பட்ட பின்னர் இருக்கும் பனந்தும்பு மூன்றாந்தர மாய் வந்து அமைகிறது. இந்த மூன்றாந் தரமாய் ஆகியிருக்கும் பன ந்தும்புகள்,  துடைப்பங்கள் செய்யப் பயன்படுவதோடு  நாற்பத்து ஏழு வகையான தொழில்களுக்கும் பயனாகி இருக்கிறது என்பது கருத்திருத்த வேண்டியதேயாகும்.

  பனந்தும்பானது நல்ல சந்தைவாய்ப்பினைப் பெற்றதாக இருக்கிறது. இதனால் இந்தியாவில் பல இடங்க ளிலும் இலங்கையிலும் பனந்தும்பு உற்பத்தி நடை பெற்றுவருகிறது என்பது குறப்பிடப்பட வேண் டியதா கும். இந்தவகையில் இந்தியாவில் தமிழ்நாடுஆந்திரப் பிரதேசம் கேரளம்ஒரிசா மாநிலங்களைக் குறிப் பிடலாம்.ஆந்திராவில் கிழக்குக் கோதாவரி மாவட்டத்தில் கர்நூல் பகுதிகளில் பனந்தும்பு எடுக்கப்படுகி றது. இங்கு எடுக்கப்படும் பனந்தும்பானது - நல்ல விறைப்பானதாயும் நீளமானதாயும் காணப்படுகிறது. இதற்குக் காரணம் இங்கு காணப்படும் பனைகளின் நல்ல வளர்ச்சியே எனலாம்.இங்கு தரமான கறுப்பு ரகத் தும்புகள் கிடைக்கின்றன.

   தமிழ்நாட்டைப் பொறுத்தவரை பல மாவட்டங்களில் பனந்தும்பு கிடைக்கும் நிலை காணப்படுகிறது. அந்தவகையில் - இராமநாதபுரம்தூத்துக்குடிதிருநெல்வேலிநாமக்கல்ஈரோடுசேலம்கோயமுத்தூர்மாவட்டங்கள் அமைந்திருக்கின்றன.இங்கெல்லாம் பனந்தும்பானது கிராமியத் தொழிலாகவே விளங் குகிறது என்பது குறிப்பிடத்தக்க தாகும்.

   கன்யாகுமரி மாவட்டங்களில் கல்குளம்விலவங்கோடுமாவட்டங்களில் அதிகமாய் பனந்தோப்புகள் காணப்படுகின்றன.தமிழகத்தின் உயர்ந்த வகையான பனந்துப்பு இப்பகுதியிலேயே கிடைக்கிறது  என்பது நோக்கத்தக்கதாகும்.தும்பினைச் சேகரிப்பதுஅவற்றைச் சுத்தஞ் செய்வதுதரம்பிரிப்பதுசாயம் இடுவது என்னும் வகையில் இங்கிருப்பவர்களின் செயற்பாடு மிகவும் சிறப்பாகவே இருப்பதாய் அறியமுடிகிறது. வெளிநாட்டுச் சந்தைக்கு ஏற்றவகையில் இவர்களின் செயற்பாடு அமைந்திருக்கிறது என்பதையும் கட்டா யம் சொல்லியேயாக வேண்டும்.ஐம்பத்து ஐந்து கிலோ பனந்தும்பைச் சுத்தஞ் செய்தால் அதிலிருந்து ஐம்பத்து இரண்டு கிலோ நல்ல தும்பு கிடைக்கிறது என்பதும் நோக்கத்தக்கதாகும்.

  திருநெல்வேலி மாவட்டத்தில் கிடைக்கும் தும்பு வெள்ளை நிறமாய் இருக்கிறது.வெள்ளையாய் இருந் தாலும் விறைப்பினை உடையதாக இருக்கிறது.” பால்வெள்ளை “ என்னும் பெயரில் இப்பகுதிப் பனந்தும்பு ஏற்றுமதி செய்யப்படுகிறது..

  இராமநாதபுரம் மாவட்டத்தில் - கீழக்கரைதிருப்புல்லாணிரெட்டை ப்பூரணிகன்னிராஜபுரம்மூகையூர்நரிப்பையூர்,சாயல்குடிஆகிய இடங்களில் பனந்தும்பு எடுக்கப்படுகிறது. இங்கு கிடைக்கும்பனந்தும்பானது நடுத்தரமானதாகவே இருக்கிறது.இராமநாதபுரத்தின் கிழக்கே வடலிப் பனைகள் நிறையவே காணப்படு கின்றன.இதனால் இங்கு பனந்தும்பு உற்பத்தி சிறப்பாக இருக்கிறது..

  திண்டுக்கல் மாவட்டத்தில் - ஒட்டன்சத்திரம்மேலப்பட்டிவேடசந்தூர்போன்ற இடங்களில் பனந்தும்பு அதிகமாய் கிடைக்கிறது.கரூர் மாவட்ட த்தில் - சின்னத்தாராபுரம் கரூர்அரவக் குறிச்சிஆகிய இடங்க ளும் பனந்தும்பினை தந்து நிற்கின்றன.

  தமிழகத்தில் பனந்தும்பினைச் ஆண்டு முழுவதும் சேகரிப்பதில் - சேலம்நாமக்கல் மாவட்டங்கள் முதன்மை பெற்று நிற்கின்றன. சங்ககிரி, தொளசம்பட்டி,மேச்சேரி , செங்கோடுசலகண்டபுரம்வையப்ப மலைகொளத்தூர்கொங்கணபுரம் ஆகிய இடங்களில் பனந்தும்பு தாராளமாய் கொள்வனவு செய்யப் படுகிறது.

    சேலம் மாவட்டதில் இருக்கும் - தொளசம்பட்டிமேச்சேரிதீராம்பட்டி ஆகிய இடங்களில் கோரா அதிக ளவில் கிடைக்கிறது. அப்படிக் கிடை க்கும் கோரா ஈரம் நிறைந்ததாகவே இருக்கிறது. தொளசம்பட்டியிலும் மேச்சேரியிலும் ஒரு சந்தை இருக்கிறது. தொளசம்பட்டியில் அமை ந்திருக்கும் சந்தைக்கு மல்லிக் குட்டை என்னும் பகுதியிலிருந்தும் - மேச்சேரிச் சந்தைக்கு குட்டம் பட்டிதீராம்பட்டிதண்ணீர் குட்டப்பட்டி பகுதிகளிலிருந்தும் அதிகளவு ஈரமான பனந்தும்பு கொண்டு வரப்ப டுகிறது என்பது நோக்கத்தக்கதாகும். சேலம் மாவட்டத்தில் தொள சம்பட்டிகொளத்தூர்பகுதிகளிலும் திருச்செங்கோடு பகுதியிலும் பனந்தும்பு சுத்தம் செய்யப்படுகிறது.

  ஈரோடு மாவட்டத்தில் - கன்னிவாடிவெள்ளக்கோவில்,சென்னிமலைபெருந்துறை,தாராபுரம் மூலனூர்முத்தூர்காங்கேயம்ஆகிய இட ங்களில் பனந்தும்பு எடுக்கப்படுகிறது.நீளமான பனந்தும்பு இங்கு இருக் கும் சென்னிமலையில் கிடைக்கிறது என்பது நோக்கத்தக்கது.இந்த நீளமான தும்பு சீப்பிடப்படுகிறது. இப்பகுதியில் எடுக்கப்படும் பனந்தும்பானது -  நீளத்துக்குத் தகுந்தவாறு ஏ தரம் பி தரம் சி தரம்என்னும் நிலையில் தரநிர்ணயம் செய்யப்படுகிறது.இப்படித் தரம் பிரிப்பதால் இதற்கு " சென்னிமலை அளவு " என்று பெயர் சூட்டப்பட்டிருக்கிறது.

     தஞ்சை மாவட்டத்தில்  மதுரைக்காடுபட்டுக்கோட்டைபோன்ற இடங்களில் பனந்தும்பு பெருமளவில் எடுக்கப்படுகிறது.நல்ல தரமான தும்பானது மரைக்காடு என்னுமிடத்தில் கிடைக்கிறது.கறுப்பு நிறம் குறைந்திருந்தாலும் நல்ல விறைப் பானதாய் இங்கு கிடைக்கும் பனந்தும்பு இருக்கிறது.இப்பகுதியில் எடுக்கப்படும் கோரத்தும்பானது - சுத்தம் செய்யப்பட்டுகாயவிடப்பட்டு ஒருதடவை சீப்பில் இடப் பட்டதாகவே இருக்கிறது என்பது முக்கியமாகும். மற்றைய மாவட்டங்களில் இவ்வாறு செய்யப்படுவது இல்லை என்பதும் கவனத்துக்குரியதேயாகும்.இவ்வாறு சுத் தமாய் வருகின்ற நிலையில் அந்தத் தும்பு " சீப்பிட்ட கோரத் தும்பு " என்று அழைக்கப்ப டுகிறது.பனந்தும்பினை எடுப்பதில் புதுக்கோட்டை மாவட்டமும் அடங்குகிறது.

  இலங்கையில் முல்லைத்தீவு மாவட்டம் பருத்தித்துறைபுலோலிசாவகச்சேரிபேசாலைதலைமன்னார்கைதடிஆகிய பகுதிகள் பனந்தும்பினை வழங்கி நிற்கும் பகுதிகளாக விளங்குகின்றன.எனினும் பனந்தும்பு எடுக்கும் நிலை பெருதாக விருத்தி யடையாது இருக்கிறது என்று அறியக்கிடக்கிறது. இந்தியா போன்று குறிப்பாக தமிழக மாவட்டங்கள் போன்று - பனந்தும்பினை எடுக்கும் முயற்சி இலங்கையிலும் முன்னெ டுக்கப்பட வேண்டும்.இலங்கையில் நிறையவே கற்பகதருவாம் பனை யானது காணப் படுகிறது என்பது கவனத்துக்குரியதாகும்.

No comments: