உன்னை நீ நம்பு வெற்றி வசமாகும் !


மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா  
மேனாள் தமிழ்மொழிக் கல்வி இயக்குநர் மெல்பேண் ... அவுஸ்திரேலியா 
உன்னை அறிந்தால் உலகத்தில் 

வாழலாம்
உன்னை அறிந்தால் உண்மையை
உணரலாம்
உன்னை உணர்ந்தால் உள்ளொளி 
பெருகிடும்
உன்னையே தேடிடு வெற்றிகள்
வசமாகும் !

ஆணவம் என்பது அன்னியம் 
இல்லை
அதிகாரம் தருவதும் அயலவர் 
இல்லை
ஆசைகள் என்பதும் பேரலை 
ஆகும்
அடக்கிட முனைந்தால் வெற்றிகள்
வசமே !

கிடத்ததை மகிழ்வாய் எடுத்திடல்


சிறப்பே
முடிந்ததை எண்ணி இருப்பது
 தவறே
நாளதை எண்ணி நடப்பது 
முறையே
நம்பியே இருந்தால் வெற்றிகள் 
வசமே !


செல்வம் என்பது சிறப்பினை 

அளிக்கா
அழிக்கும் நினைப்பை அகிற்றிடல்
செல்வம்
செல்வம் என்பது நம்பிக்கை 
வெளிச்சம்
வெளிச்சம் மிகுந்தால் வெற்றிநம்
வசமே !

அளவாய் பேசு அறிவாய்
 பேசு
ஆற்றல் காட்டி வீச்சுடன் 
நில்லு
தோற்போம் என்பதை துடைத்துமே 
நில்லு
வாழ்க்கையில் வெற்றி வசப்படும்
சிறப்பாய் !
No comments: