.
தோழியே என் உயிர் தோழியே
நீ காணாமல் போனதேனோ
கண்கள் கலங்கி தேடுகிறோம்
உள்ளம் மயங்கி தேடுகிறோம்
உள்ளத்தில் நல்ல உள்ளமடி
உனக்கு ஆனால் நீ
பள்ளத்தில் விழுந்து கிடந்தது
ஏனோ ஏனோ நெஞ்சு தவிக்கிறது
எல்லோரையும் விழுந்து விழுந்து
உபசரித்து மனம் மகிழ்ந்தாய்
இப்போது என்ன செய்கிறாயோ
என ஏங்குது எங்கள் இதயம்
உயிருக்கு உயிராய் நீ
நேசித்த உன் அருமை மகனை
உன் விருப்பம் போலவே
உன்னோடு அழைத்துச் சென்று விட்டாய்
ATBC வானொலி தான்
உன் அருமை உலகம்
நேயர்கள் தான் உன் கண்கள்
பாடல்கள் தான் உன் மூச்சு
நேயர்களின் இதயராணி நீ
ATBC வானொலியில் கலைவாணி நீ
ஞாயிறு போல் திகழ்ந்த நீ
ஞாயிறு அன்று மறைந்தது ஏனோ
உற்றார் உறவினர்கள்
நண்பர்கள் நேயர்கள்
அனைவரது நெஞ்சிலும்
என்றும் வீற்றிருப்பாய் நீ
மண்ணில் வாழ்வாங்கு வாழ்ந்தால் நீ
விண்ணில் அமைதியாய் மகனுடன் வாழ
உன் உறவு நட்பு அனைவரும்
என்றும் வாழ்த்தி நிற்போம்.
No comments:
Post a Comment