கற்பகதருவைக் கருத்தினில் இருத்துவோம் ! [ சுவை இருபத்து நான்கு ]


மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா

மேனாள் தமிழ்மொழிக் கல்வி இயக்குநர்
மெல்பேண் .... அவுஸ்திரேலியா

 

                           

  ழம் விற்கும் கடைகள் எல்லா இடங்களிலும்


சாதாரணமாகவும் பெரிய அளவிலும் இருப்பதைக் காணுகின்றோம். அங்கு எல்லாவி தமான பழங்களும் விற்பனைக்காக வைக்கப்பட்டிருக்கும். அப்படி வைக்கப்பட்டிருக்கும் பழங்கள் உள்நாட்டில் விளைந்த பழங்களாகவும் வெளிநாட்டிலிருந்து தருவிக்கப்பட்ட பழங்களு மாகவேதான் இருக் கும். அப்படி இருக்கும் பழங்களில் ஒரு பழம் மட்டும் இடம் பெற்றி ருக்காது. அந்தப் பழம் எந்தப்பழம் தெரியுமா அதுதான் எங்களின் மண்ணுக்குச் சொந்தமான " பனம்பழம் ". எங்கள் மண்ணின் பழம்.

எங்கள் அருகிலே கிடைக்கும் பழம். உணவாகப் பயன்படுத்தப்பட்டு வந்த பழம்.மரத்தில் ஏறிப்பறிக்காமலே கீழே விழுந்து கிடக்கும்பழம்.   ஆனாலும் அந்தப் பனம்பழம் பழக்கடைகளில் இடம்பெறாமல் இருக் கிறது என்பதை எண்ணக் கவலையாகவே இருக்கிறது.

  விலைகொடுத்து வாங்கிச் சாப்பிட்டால்த்தான் அது நாகரிகம்


என் னும் நிலை மேலோங்கி விட்டது. அதுதான் நவ நாகரிகம் என்று எண்ணும் மனப்பாங்கும் விரிவடைந்து விட்டது.பாரம்பரியமாக உண் டுவந்த உணவுப் பழக்கங்கள் மெள்ள மெள்ளவாய் அகன்று போய்க் கொண்டிருப்பதையே காணமுடிகிறது. அந்த வகையில் பாரம்பரிய உணவாகவே இருந்துவந்த பனம்பழமும் உணவுப்பழக்கத்திலிருந்து அகன்று கொண்டே வருகிறது..பனம் பழம் என்பது எங்களின் நீண்ட கால தினசரியான உணவாகவே இருந்திருக்கிறது. இன்று பனம் பழம் என்று சொன்னால் நகரத்தாருக்கும் அவர்களின் பிள்ளைகளு க்குமே தெரியாத ஒன்றாகப் , புரியாத பழாமாகவே இருக்கிறது என் பதுதான் உண்மையாகும்.பனம்பழத்தை சாப்பாடாக எடுப்பதையே அருவருப்பாய்  எண்ணிடும்  ஒரு நிலைமையும் காணப்படுகிறது. பன ம்பழத்தினை அநாகரிகப் பழம் என்று எண்ணுகிறார்கள் என்பதை மனவருத்தத்துடன் தமிழ் நாட்டைச் சேர்ந்த  பேராசிரியர் ஒருவர் ஒரு பாட்டாகவே ஆக்கி அளித்திருக்கிறார். அவர் தான் சென்னை கிறிஸ்தவக் கல்லூரியில் தாவரவியல் துறையின் தலைவாராக விளங்கிய முனைவர் டி. நரசிம்மன் அவர்கள்.

 

  அநாகரிகப்பழம்

 

தொப் "

எழுந்தோடப்பார்த்தேன்

ஆம் ! பனம்பழம்

 

விழுந்தவுடன் ஒருவாசம்

விழுந்தமறுநாள் ஒருவாசம்

சுடுகையில் வெடிவெடிக்க

தெருவையே

சுண்டியிழுக்கும் வாசம்

 

இழுத்து மென்று

கடித்து சப்பி

முறுக்கிசூப்பிட

வேறெதையும் சுவைக்கமுடியாது

இத்தனைவகையாய்

சாப்பிட்டுவிட இயலாது

பேருந்திலோஇரயிலிலோ

போகிற போக்கில்

 

பழமாஇது "

முகமெல்லாம்பூசி

கையெல்லாம்பிசுபிசுக்க

பற்களில்சிக்கும்நாரை

பார்க்கவேஅருவெறுப்பு

 

விரலிடுக்கில் தேக்கரண்டியைப்பிடித்து

இலகுவாய்வழித்து

பேசிக்கொண்டேசாப்பிட

முடியாதுதான்

 

உண்ண

உழைப்புத்தேவை

சிறிதாவது

 

நாகரிகச் " சமூகம்

கீழாகவேபார்க்கிறது

எல்லாவித உடலுழைப்பையும்

 

யதார்த்தத்தை எவ்வளவு பக்குவமாய் இங்கே கவியாக்கி


அளித்திரு க்கிறார் அந்தப் பேராசிரியர்.பனம்பழத்தையே அநாகரிகப் பழம் என்று நோக்கும் நிலை இருக்கிறது என்பது ஏற்றுக் கொள்ளமுடியாமல்இரு க்கிறதல்லவா ! பச்சையாகவும் அதேவேளை நெருப்பில் சுட்டும் சாப் பிடும் வண்ணம் அமைந்திருக்கும் ஒரே பழம் " பனம்பழம் " மட்டு மே என்பது மனதிருத்த வேண்டியதாகும்.

    பனம்பழம் என்பது அநாகரிகப் பழமாக நவநாகரிகத்தினுள் மூழ்கி இருப்பவர்கள் நினைத்திருக்கின்ற போதும் பனம்பழத்தினை மற்றவ ர்கள் மறந்து விடாது இருக்கிறார்கள் என்பதையும் கருத்திருத்தல் வேண்டும். எங்கள் சொந்தப் பழமாக இருக்கும் பனம்பழத்தை மற ந்திட நகரத்தார் மனமெண்ணினாலும் நகர மயமாகாத பகுதிகளில் இருப்பவர்கள் மனங்களைவிட்டுப் பனம்பழம் அகலாமலிருப்பது ஆரோக்கியமான நிலை என்றே சொல்லலாம்.

  பனம்பழமானது நன்றாக முற்றி பழமாக வருவதற்கு முன்பாக


வெட்டி கீழே இறக்கி விடுகிறார்கள். இப்படி நடப்பது இலங்கையில ல்ல தமிழ்நாட்டிலேயாகும்.கீழே இறக்கப்பட்ட அந்தக்காய்களை கூர்மையான கத்தியினால் விதைப் பகுதியை விட்டு விட்டு சுற்றி யிருக்கும் சதைப்பகுதியினை வெட்டி எடுக்கிறார்கள். கத்தியினால் அறுத்தெடுக்கப்படும் பொழுது அது மூன்று பாகமாய் வருமாறு எடுப் பார்கள்.இப்படி வெட்டி எடுக்கும் பொழுது பழமொன்றுக்கு ஒரு கிலோ எடையான சதைப்பகுதி கிடைக்கக்கூடியதாக இருப்பதாய் அறிகிறோம்.இவ்வாறு கிடைக்கும் சதைப்பகுதியை தமிழ்நாட்டின் கிராமப்பகுதி மக்கள் " கொளக்கட்டை " என்று பெயர் கொடுத்து மகிழுகிறார்கள். இவ்வாறு அமையும் கொளுக்கட்டைகள் எல்லாமே ஒரே சுவையினைக் கொண்டதாகவும் இருப்பதில்லை. வெட்டி எடு க்கப்படும் பழுக்காத நிலையிலுள்ள பனம்பழத்தின் தன்மையினைப் பொறுத்தே இவற்றின் சுவையும் அமைகின்றது என்பது குறிப்பிடத் தக்கதாகும்.சுவையும்நல்ல மணமும் உள்ளதிலிருந்து கிடைக்கும் கொளக்கட்டைகளும் நல்ல சுவையினைத் தருவதாகவே இருக்கும் என்பது முக்கியமாகும்

  தங்க நிறமும் நல்ல மணமுள்ள கொளக்கட்டைகளை


பானை களில் வைத்து நீர் கலந்து அவித்துப் பயன்படுத்தும் ஒரு முறையும் இங்கு காணப்படுகிறது. அதே வேளை அவிக்காமலும் பச்சையாகவே கொளக்கட்டைகளைச் சுவைக்கும் நிலையும் காணப்படுகிறது என் பது நோக்கத்தக்கதாகும்.கொளக்கட்டை யில் இனிப்புக் குறைந்துநிற மும் குறைந்து வரும்பொழுது அதற்குமோர்க்காய் " என்னும் பெய ரினைக் கொடுத்தார்கள் என்பதையும் அறியமுடிகிறது.இப்படி அழை ப்பதோ இப்படிச் சுவப்பதோ ஆன நிலை இலங்கையில் இல்லை. அதே வேளை பனையினைப் போற்றிக் கொண்டாடும் யாழ்ப்பாணத் திலும் இல்லை என்பதும் கருத்திருத்த வேண்டியதேயாகும்.

     பனம்பழம் என்றால் கறுப்புத்தான் என்று பொதுவாக எடுத்துக் கொள்ளுகின்றோம். பனம்பழங்களும் வெவ்வேறு நிறங்களிலும் இரு க்கின்றன என்பதையும் கவனத்தில் கொள்ளுதல் வேண்டும். இப்ப டிப் பார்க்கின்ற பொழுது பனம்பழங்கள் பனிரெண்டு வகையாக இரு ப்பது கண்டறியப்பட்டிருக்கிறது.இலங்கையில் புத்தளம்மண்டல் கண் டல்ஆலன்குடாபகுதிகளில் இருக்கின்ற பனம் பழங்களில்தான் இத் தகைய வகைகள் இருப்பதாக அறிந்திருக்கி றார்கள். அதே வேளை யாழ்ப்பாண மாவட்டத்தில் தீவுப்பகுதிவட மராட்சிப் பகுதிகளிலும் இப்படியான பனம்பழ வகைகள் இருக்கின்ற பொழுதிலும் நிறையவே இல்லாமல் அரிதாகவே இருப்பதாயும் அறிந்திருக்கிறார்கள். பனம் பழங்கள் கறுப்புசிவப்புமஞ்சள்செம்மஞ்சள்இளஞ்சிவப்பு என்று பல வண்ணங்களில் காணப்படுகின்றன என்பது விநோதாமாய் தென்படு கிறதல்லவா !

  பனம்பழங்களுக்கும் ஏனைய பழங்களுக்கும் - உருவத்திலாகட்டும் மணம் சுவையிலுமாகட்டும் வித்தியாசம் மிகுதியாகவே காணப்படு கிறது. சுட்டுச் சுவைக்கும் பழம் பனம்பழம் மட்டுமே. அதே வேளை பனம்பழத்தின் முக்கிய உள்ளடக்கமே அதில் நிறைந்திருக்கும் களித் தன்மையேயாகும்.அந்தக் களியில் ஒரு ஒருவித இனிப்பும் காறல் சுவையும் கலந்தே இருக்கும்.பச்சையாக சுவைத்துச் சாப்பிடும் பொழுது காறல் சுவையையும் இனிப்புச் சுவையும் நன்றாகவே உணர்ந்திட முடியும். சுட்டுச் சாப்பிடும் பொழுது காறல் சுவை சற் றுக் குறைந்து இனிப்புச்சுவை மேலேழுந்து மீண்டும் மீண்டும் உண்டு மகிழ்ந் திடவே  தூண்டி நிற்கும். இதனை எழுத்தினாலோ அல்லது சொல்லினாலோ விளக்கிட முடியாது. சுவைத்துப் பார் த்தால்தான் உணர்ந்திடக் கூடியதாக இருக்கும் என்பது கருத்திருத்த வேண்டியதேயாகும்.

  பனம்பழனங்களின் நிறங்களை அடிப்படையாகக் கொண்டு அவற் றில் காணப்படும் பழச்சாற்றின் தன்மை அதில் இருக்கும் தும்பின் அளவுஅதனுடைய மணம்சுவை யாவற்றையும் அறிந்திருக்கிறார் கள். அப்படி அறிந்தவற்றைப் பார்க்கும் பொழுது எமக்கெல்லாம் ஆச் சரியமாகவே தென்படும்.சிவப்பு நிறமாய் இருக்கும் பனம்பழத்தின் சாறானது தோடம்பழ நிறத்தில் காணப்படுகிறதாம். இதில் தும்பின்த ன்மை குறைவாயும்,சாறு மென்மையாகவும் மணம்குறைந்ததாகவும் அதே வேளை இனிப்புள்ளதாகவும் காணப்படுகிறதாம்.சிவப்பு நிறம் கலந்த பிறவுண் நிறமாய் அமைந்த பனம்பழத்தின் சாறானதுமஞ்சள் நிறத்தைக் கொண்டிருக்குமாம்.இதிலுள்ள தும்பு பாரமானதாகவும் சாறு தடிப்பமானதாகவும்மணத்தைப் பொறுத்தளவில் சற்றுக் குறை ந்தும்,காறல் சுவையானது அதிகமாய் காணப்படுமாம்.மஞ்சள் நிறத்தி லிருக்கும் பனம்பழத்தினுடைய சாறு கடும் மஞ்சள் நிறத்தில் காண ப்படுகிறதாம்.அதில் இருக்கும் தும்பு பாரமானதாகவும்சாறு தடிப்பமா னதாகவும்மணம் உயர்ந்தும் காணப்படுகிறதாம். இப்படியான பனம் பழத்தில் காறல் சுவை குறைவாகவே இருகின்றதாம்.சிவப்புக் கலந்த மஞ்சள் நிறமான பனம்பழத்தில் காணப்படும் சாறானது தோடம்பழ த்தின் நிறத்தில் இருக்கிறதாம்.இதில் உள்ள தும்பானது நடுத்தரமா யும்சாறு மென்மைத் தன்மை உடையதாகவும்மணம் உயர்வாயும்இனிப்புச்சுவை உள்ளதாகவும் இருக்கிறதாம்.

     மேற்பக்கம் கறுப்பும் கீழ் சிவப்பும் கலந்து காணப்படும் பனம் பழத்தின் சாற்றின் நிறம் தோடம்பழத்தின் கடுமையான நிறத்தி லிருக்குமாம்.தும்பானது நடுத்தர மாகாவும்சாற்றின் தன்மை மென் மையானதாகவும்,மணம் உயர்வாயும்,இனிப்பு நிறைந்ததாகவும் காண ப்படுகிறதாம்.முகப்பக்கம் கறுப்பாயும்கடுஞ்சிவப்புப்பும் தோடம் பழத்தின் நிறத்தையும் கொண்டிருக்கும் பனம்பழத்தின்சாறு தோ டம் பழத்தின் நிறமாயும்,தும்பு பலமானதாயும்,சாறு தடிப்பானதாயும், மணமானது உயர்வானதாகவும் இனிப்புச்சுவை உள்ளதாகவும் இரு க்கிறதாம்.கூடுதல் சிவப்பும் தோடம்பழ நிறமும் பிறவுணாயும் இரு க்கும் பனம்பழத்தின் சாறு மஞ்சள் நிறமாயும்,தும்பு நடுத்தரமான தாயும்சாறு தடிப்பமுள்ளதாயும்,மணம் சிறிதளவாயும்,சுவையானது காறலாயும் காணப்படுகிறதாம்.கறுப்பு முகப்பும்அரைச்சிவப்பு,மஞ்சள் நிறம் கலந்து காணப்படும் பனம்பழமானது தோடம் பழத்தின் நிற மான சாற்றினையும்தும்பு பாரத்தினையும்மென்மையுடைய தான சாற்றினையும்மணமானது விரும்பத்தக்கதாகவும்காறல் சுவை குறைவாக அமைந்ததாகவும் காணப்படுமாம்.கறுப்புத் தோலினை யுடைய பனம்பழம் கடும்மஞ்சள் நிறமான சாற்றினையும்பாரமான தும்பையும்தடிப்யான சாற்றையும்மணத்தைப் பொறுத்தளவில் சிறிதாயும்காறல் சுவையினை குறைவாகாவும் கொண்டு இருக்கி றதாம்.பனம்பழம் முழுவதுமே முழுக்கறுப்பாய் அமைந்திருக்கும் பழத்தின் சாறு மஞ்சள் நிறத்தில் இருக்குமாம்.தும்பு பாரமான தாக வும்சாறு மென்மையானதாகவும்,மணமானது விரும்பும் விதமாக வும்சுவை இனிப்பாயும் அமைந்திருக்குமாம்.


No comments: