வேண்டும். எங்கள் தமிழ் மொழியின் ஏற்றத்தைப் பறைசாற்ற இலங்கியங்கள் குவிந் திருக்கின்றன என்று - மேடை களில் முழங்குகிறோம்.கரு
உ.வே.சா என்னும் மூன்று எழுத்து தமிழ் வரலாற்றில் பதிந்து விட்ட மந்திரச் சொல்லாகும். தமிழ் இலக்கிய வரலாற்றை ஆராய்வார்க்கு ஆதார சுருதியாய் அமையும் மூல மந்திரம் ஆகும். இம்மந்திரத்தை மறந்தால் எங்கள் தமிழன்னை கண்ணீர் வடிப்பாள். எங்கள் தமிழன்னை எங்களைத் தனது பிள்ளைகளென்றே எண்ணமாட்டாள்.
அந்த மந்திரச் சொல்லை மறப்பார் தமிழர் என்னும் நிலையில் இருக்கவே மாட்டா ர்கள். அப்படி அந்த மூன்றெழுத்து மந்திரம் பெற்ற முக்கியத்துவம்தான் என்ன? அந்த மந்திரமாய் விளங்கும் டாக்டர் சாமிநாத ஐயர் என்னதான் செய்துவிட்டார் ? அவர் மறைந்து விட்டார் என்று சொல்லுகிறார். ஆனால் அவருக்கு மறைவேயில்லை. அவ ரென்றுமே வாழ்ந்து கொண்டே இருக்கிறார் என்பது தான் நிதர்சனமாகும். மறைந் தவர் வாழ்ந்து கொண்டிருக்கிறார் என்றால் புதிராக இருக்கிறதா ? இன்று நாம் படி க்கின்ற பழந்தமிழ் இலக்கியங்களில் அவர் வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறார். ஒவ்வொரு பழந்தமிழ் இலக்கியங்களையும் தொட்டு வாசிக்கும் வேளை தமிழ்த் தாத்தாவும் உயிர்ப்புடன்தான் உலவுகிறார் என்று எடுத்துக் கொள்ளலாம் அல்லவா !
ஆங்கிலம் இவ்வுலக வாழ்வுக்கு பயனளிக்கும். வடமொழி அவ்வுலக வாழ்வுக்கு பயனளிக்கும் என்று உ.வே. சா அவர்களிடம் எடுத்துச் சொன்னால் ; அவர் " இவ்வுலகத்தி
உ.வே. சா அவர்களின் காலப்பகுதியில் ஆங்கிலம் சிம்மாசனத்தில் இருந்தது.
ஆங்கிலத்தையே அனைவரும் ஏற்றினார்கள், போற்றினார்கள். அந்தணராய் பிற ந்தாலும் வடமொழியினைப் பெரிதாக எண்ணாமல் வாடாத தமிழினையே வரவேற்று நின்றார்கள். இப்படி அக்காலத்தில் திகழ்ந்தமையால்தான் அவரை வாழ்ந்து கொண் டே இருக்கிறார் என்று சொல்லவேண்டி இருக்கிறது.ஆங்கிலத்தைப் படித்து பெரிய பதவிகளில் அமர்ந்திட அவர் ஆசை கொண்டார் இல்லை. அந்தணருக்கு உரிய வட மொழியிலே பாண்டித்தியம் பெற்று சிறந்த சிவாச்சாரியராய், வேத விற்பன்னராய் விளங்கிட விரும்பினார் இல்லை. ஆனால் தாயின் மொழியை, தாய்மண்ணின் மொழியை தனது மூச்சாயும் , பேச்சாயும், தொண்
ஆனந்த வருடம் ஆயிரத்து எண்ணூற்று ஐம்பத்து ஐந்தில் அவர் இம்மண்ணில் கால் பதிக்கின்றார். ஆனந்த வருடத்தில் பிறந்த காரணத்தால்த்தான் உ.வே.சா அவர்கள் அருந்தமிழினை ஆனந்தமாய் பருகி நின்றாரோ என்று எண்ணிடத் தோன்றுகிறது.
' கொடிது கொடிது இளமையில் வறுமை ' என்பது மூதாட்டி மொழிந்த மொழி. இஃது முற்றிலும் உண்மையே. வளரும் பருவ த்தில் வறுமை வாட்டினால் வளரும் நிலை என்
னாகும் ? உ.வே. சா அவர்களின் இளமையும் வறுமையில் கிடந்து உழன்றது என் பதை அறிகிறோம். தந்தையின் பிரசங்க வருமானத்தில்த்தான் அவரின் வாழ்க்கைப் பய ணம் தொடரும் நிலை காணப்பட்டது. வருமானம் இல்லா நிலையில் அவரும் கூடவே தந்தையுடன் இளம் பராயத்திலே பிரசங்கம் செய்யும் பணியில் ஈடுபடுகிறார். வறுமை தாண்டவ மாடினாலும் தனது மகனை நன்கு கற்றிடச் செய்திடல் வேண்டு என்னும் எண்ணத்தை மட்டும் அவரின் தந்தை விட்டு விடவில்லை. கற்றவர் முன்னிலையில் தனது பிள்ளை வந்து நிற்க வேண்டும் என்று தந்தையார் ஆசைப்பட்டார். அதனால் பல நல்ல வல்ல குருமாரைத் தனது பிள்ளைக்குத் துணை யாக்கிக்கொடுத்தார். படிப்பதிலே நாட்டம் மிக்க பிள்ளையாய் உ.வே.சா விளங்கிய மையால் தந்தையின் எண்ணம் மிகவும் சிறப்பாய் ஈடேறியது எனலாம்.
பல ஆசிரியர்கள் உ.வே.சா வாழ்க்கையில் ஒளி ஊட்டினார்கள். பேரொளியாய் வந்தமைந்தார் மீனாட்சி சுந்தரம்பிள்ளை அவர்கள் எனலாம். மீனாட்சி சுந்தரம் பிள்ளை உ.வே.சா வாழ்க்கையில் உரமாய், வரமாய், அவரின் உயர்வின் உறுதுணை யாய் வந்து அமைந்தார் எனலாம். உ.வே.சா என்னும் ஆளுமையினை வெளியுலகுக்கு க்கு குறிப்பாக தமிழுலகுக்கு கொடுத்த பெருமை மீனாட்சி சுந்தரம்பிள்ளை என்னும் பேராசானுக்கே உரியது என்பதை எவருமே மறுப்பேசிட இயலாது எனலாம்.' எரிவிளக் காயினும் தூண்டு கோல் வேண்டும் ' என்பார். உ.வே.சா எரிவிளக்கு ! அவரின் ஆசிரி யர் நல்லதோர் தூண்டு கோல் ! என்ன பொருத்தம்! இதைத்தான் வரப்பிரசாதம் என்பர் ! " தாரமும் குருவும் தலை விதிப்படி " என்பார்கள். நல்ல விதியால் உ. வே. சா அவர்களுக்கு குருவும்
வாய்த்தது. தாரமும் வாய்த்தது.
முறையான பாடப் புத்தகங்களில் உ.வே. சா படிக்கும் வாய்ப்பு அக்காலத்தில் இருக் கவில்லை.இப்போது இருப்பதுபோன்று அச்சிட்ட புத்தகங்கள்.குறிப்புப் புத்தகங்கள் என்று எந்தவித வசதிகளுமே இருக்கவில்லை. ஏடுகள்தான் துணை ! மனனம்தான் மா மருந்து ! எழுத்தணிதான் பெருந்துணை ! ஆனாலும் உ.வே. சா கற்றார். " கற்கக் கசட றக் கற்க - கற்பவை கற்க " என்பதை மனமிருத்தி உறுதியாய் கற்றார். இலக்கியம் கற்றார். இலக்கணம் கற்றார். இசையும் கற்றார். ஆங்கிலத்தை எழுத்தாய் கற்றார். அவரின் ஆசை அருந்தமிழின் பாலே பெருகி நின்றது எனலாம்.
பழந்தமிழ் இலக்கியங்கள் என்னும் கருவூலங்கள் பல ஏட்டிலே இருந்ததை யாவரும் அறிந்திட வேண்டும் என்னும் ஆவலினால் அவற்றை அச்சிற் பதிப்பிக்க வேண்டும் என்னும் மிகவும் சிறந்த சிந்தனை உ.வே.சாவின் எண்ணத்தில் உதயமானது. ஏட்டில் இருந்தால் நாட்டில் பலரும் அறியும் வாய்ப்பும் வராமல் போய்விடும். நாளடைவில் பொக்கிஷமான இலக்கியங்கள் மறைந்தும் போய் விடக்கூடும் என்னும் என்னும் ஏக்கம் அவரின் உள்ளதை உறித்தியபடியே இருந்தது. " தன்னை மறந்தாள் தன்னாமம் கெட்டாள் தலைப்பட்ட்டாள்
நங்கை " என்றபடி ; தனது சொந்தச் சுகத்தை மறந்தார், இளமையை மறந்தார், இன்பத்தை மறந்தார், எண்ண மெல்லாம் பழந்தமிழ் ஏடுகள் பற்றியதாகவே ஆக்கிக் கொண் டார்.
பிரயாணம் செய்வதற்கு தற்போது போன்று வசதிகள் பல அக்காலத்தில் இருக்க வில்லை. அத்துடன் உ.வே.சா வசதிகள் வாய்ப்புகள் மிக்கவராயும் இருக்கவுமில்லை. ஆனால் - தான் எடுத்துக்கொண்ட பணியில் என்னதான் இடர் வந்தாலும் அவற்றைத் தாங்கி - தமிழ் ஒன்றே - இலட்சியம் என்று கங்கணம் கட் டிக் கொண்டு வண்டிகள் போகாத பாதையிலெல்லாம் வைராக்கியத்து
ஏடுகள் தேடிப்போகும் பொழுது அவர்பட்ட அல்லல்களையும் , அவர்பட்ட வேதனை களையும், அவருக்குண்டான அவமானங்களையும் தனது நுலான " என் சரித்திரத்தில் " எழுதிக் குவித்திருக்கிறார். என் சரித்திரம் என்பது தமிழருக்கெல்லாம் நல்ல ஒரு பாடப் புத்தகம் எனலாம். படித்துப் பாருங்கள் உ.வே.சா என்னும் மூன்றெழுத்து மந்தி ரத்தின் உன்னதத்தை உணர்ந்து கொள்ளுவீர்கள்!
ஏடுகளின் அருமை தெரியாமல் தீயில் இட்டார்கள். ஓடும் நீரில் எறிந்தார்கள். கறை யான் அரித்திடுவதைக் கண்டு கொள்ளாமலே இருந்தார்கள். இவற்றைப் பார்க்கும் நிலையில் உ.வே.சா பதறித் துடித்தார்கள். தழிச் சொத்து அழிவதை அவரால் தாங் கவே முடியாமல் போய்விட்டதாம் . கிடைத்தவற்றைக் காப்பாற்றி இன்று நாங்கள் படிக்கும் நூல்களாய் எமக்கு அளித்திருக்கிறார் உ.வே. சா என்றால் அவர் இன்னும் வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறார் என்று சொல்லுவதில் என்ன தவறு இருக்கிறது ?
சிலப்பதிகாரமா சிறப்பதிகாரமா என்று மயங்கி நின்றவர்கள் மத்தியில் - சிலப்ப திகாரத்தை கொண்டு வந்தவர் உ.வே. சா அவர்கள். அவரில்லா விட்டால் சிலப்ப திகாரத்தை நாங்கள் அறிந்திருக்கவே முடியாமல் போயிருக்கும். அகநாநூற்றுக்கும் புறநாநூற்கும் என்னதான் வேறுபாடு என்பதையே தெரியாமல் போயிருக்கும். மணி மேகலை மண்ணுக்குள் மறைந்திருக்கும். சங்கத்தமிழ் ,
ஏடுகளைப் பரிசோதித்து சரியான விபரங்களுக்காக பல நாட்கள் அலைந்து திருந்து - அவற்று விளக்கங்கள் எழுதி , அடிக் குறிப்புகள் எழுதி, நூற்குறிப்பு எழுதி, யாவரும் நன்கு விளங்கும் வகையிலேயே பதிப்பினை மேற்கொண்டார்.இவரை ஏடுகாத்த ஏந்தல் எனலாம் , ஏட்டினை எழுத்துருவில் அச்சுவாகனம் ஏற்றிய அருந்திறலோன் எனலாம், குறிப்புகள் வரைந்து குறைகளைந்த குணாளன் என்று கூடச் சொல்லலாம் அல்லவா !
ஐம்பது ஆண்டுகாலம் ஏடுகள் தேடி அவற்றைப் பரிசோதித்து அவர் பதிப்பித்த நூல்களின் எண்ணிக்கை நூறாகும். சீவக சிந்தாமணி, மணி மேகலை, சிலப்ப திகாரம், புறநாநூறு, திருமுருகா
பதிப்புத்துறையில் கால்பதித்த உ.வே.சா அவர்கள் படைப்புத் துறையிலும் கால் பதித்து நின்றார் என்பதற்கு அவரால் படைக்கப்பட்ட நுல்களே சான்றாக விளங்கு கின்றன. மீனாட்சி சுந்தரம்பிள்ளை சரித்திரம், பழயதும் புதியதும், கண்டதும் கேட்டதும், நினைவு மஞ்சரி, என் சரிதம், மணிமேகலை கதைச்சுருக்கம், உதயணன் கதைச்சுருக்கம், சிலப்பதிகாரக் கதைச்சுருக்கம் , திருக்குறளும் திருவள்ளுவரும், மதியார்ச்சுன மான்மியம், புத்தர் சரித்திரம், தியாகராசச் செட்டியார் சரித்திரம், நல்லுரைக் கோவை , சங்கத் தமிழும் பிற்காலத் தமிழும் , என்னும் கட்டுரை நூல்க ளுடன் ; கயர்கண் மாலை,தமிழ்ப்பா மஞ்சரி ஆகிய கவிதை நூல் களையும் ஆக்கி அளித்திருக்கிறார்கள்.
தமிழுக்கு ஆற்றிய பணிகளுக்காக இவரை நாடி பல கெளரவங்களும் பட்டங்களும் வந்து சேர்ந்தன. சென்னைப் பல்கலைக் கழகத்தினால் முதன் முதலாக தமிழில் மதி ப்புறு முனைவர் அதாவது டாக்டர் பட்டம் பெற்றவர் என்னும் பெருமையினை உ.வே. சா - அவர்களே பெறுகிறார்கள்.ஆங்கில அரசும் இவரைவியந்து ' மகாமகோ பாத்தி யாய ' என்னும் கெளரவத்தை வழங்கியது. சங்கராச்சாரியார் சுவாமிகள் இவருக்கு தட்சினாத்திய கலாநிதி என்னும் பட்டத்தை வழங்கி ஆசிவழங்கினார்.பாரத தருமா மகா மண்டலத்தார் திராவிட வித்யபூஷணம் என்று பட் டம் வழங்கிப் பாராட் டியது. பதிப்புத்துறையில் இமயமாய் இருந்ததால் ' பதிப்புத்துறை வேந்தர் ' என்று கெளர விக்கப் பட்டார். எழுத்துலச் சித்தர் கல்கியால் ' தமிழ்த்தாத்தா ' என்
தமிழ் ஆசிரியராய். தமிழ்ப்பேராசிரி
3000 க்கு மேற்பட்ட ஏட்டுச்சுவடிகளைச் சேகரித்து , கையெழுத்து ஏடுகளையும் சேகரித்து எமக்கு நூலாக்கிக் கொடுத்த இந்த மேதை உத்தமதானபுரம் வேங்கட சுப்பையர் சாமிநாத ஐயர் ஆவார். இவரை உ.வே.சா என்று மூன்றெழுத்து மத்திரமாய் தமிழர்கள் உச்சரித்துப் ஏற்றிப் போற்றி நிற்கிறார்கள்.மண்ணில் பிறப்பதால் மண் ணும் பயனுற வேண்டும். மக்களும் பயனுற வேண்டும். அப்படிப் பிறப்பவர்களைத் தான் யாவரும் அகத்தில் அமர்த்திக் கொண்டாடி வருவார்கள். அப்படிக் கொண்டாடிப் பெருமைப்படும் வகையில் யாரெல்லாம் இருந்தார்களோ அவர்கள் எல்லாம் வையத் துள் வாழ்வாங்கு வாழ்ந்தவர்கள் என்றே கருதப்படுவார்கள். அப்படி வையத்துள் வாழ்வாங்கு வாழ்ந்தவர்கள் மறைந்தாலும் அவர்கள் வாழ்ந்து கொண்டே இருக்கி றார்கள் என்று சொல்லுவதிலும் எந்தத் தவறுமே இல்லை. அந்தவகையில் எங்கள் தமிழ்த்தாத்தா உ.வே.சாசாமிநாத ஐயர் அவர்களும் வாழ்ந்து கொண்டே இருக்கிறார் என்பது பொருத்தமாய் இருகிறது அல்லவா !
" தமிழுக்குத் தொண்டு செய்வோன் சாவதில்லை
No comments:
Post a Comment