ஊடகங்கள் என்றால் என்ன? தகவல்களைப் பரிமாற உதவும் சாதனங்களே ஊடங்கங்களாகும். தொழில்நுட்ப வளர்ச்சி அடைந்திருக்கின்ற எம் நாட்டில், சமூக ஊடகங்கள் என்பவை செய்திகளைப் பரிமாறுவதில் பெரிய பங்கினை வகிக்கின்றன. முற்காலத்திலே ஓலையிலும், துணியிலும் எழுதி, தூதுவர்கள் பறவைகள் மூலம் செய்திப் பற்றிமாற்றங்களை மேற்கொண்டனர். இன்று நவீன ஊடகங்கள் மூலம் ஒரு கணப்பொழுத்தில் உலகத்தின் மூலைமுடுக்குகளில் வசிக்கும் அனைத்து மக்களுக்கும் தகவல்கள் சென்றடைகின்றன. இவ்வூடகங்கள் வழியாக கல்வி,கலை, கலாசாரம், விஞ்ஞானம், விளையாட்டு, அரசியல் தொடர்பான செய்திகளையும், அறிவித்தல்களையும் மக்களால் அறிந்து கொள்ள முடிகின்றது. மனித தகவல் தொடர்பு பண்டைய காலங்களில் குகை, ஓவியங்கள், வரைபடங்கள், மற்றும் கல்வெட்டுகள் மூலம் இடம் பெற்று வந்தன.
இதன் பின்னர் தொழில்நுட்ப பரிணாம வளர்ச்சியின் காரணமாக படிப்படியாக வளர்ந்து செய்திப்பத்திரிகை, வானொலி, தொலைக்காட்சி மற்றும் இன்றைய நவீன கைப்பேசிகள் போன்றவைகள் முக்கியத்துவம் பெறத் தொடங்கின.
ஆனால், இப்போதைய கால கட்டத்தில் முகநூல், மின்னஞ்சல், instagram , twitter,போன்றவைகள் மக்களிடையே, எதிர்மறையான விளைவுகளை தோற்றுவிக்க கூடியதாக உள்ளன. இதனால், தனிமனித சுதந்திரம் பாதிக்கப் படுவதும், ஒருவரது தனிப்பட்ட விடயங்கள் வேறொருவரால் விமர்சிக்கப் படுவதும், சமூகங்கள் இடையே பிளவுகளையும், பிணக்குக்களையும் தோற்றுவிக்க வழி வகுக்கும். இருந்தாலும், சமூக ஊடகங்களைப் பலர் நற்செய்திகளுக்கும் பாவிக்கிறார்கள். உதாரணத்திற்கு, உலகத்தில் எந்த மூலையில் நடக்கின்ற ஒரு நிகழ்வையும் இமைப்பொழுதில் சமூக ஊடகங்கள் மூலம் பரவலடையச் செய்யலாம்.
சமூக ஊடகங்கள் எவ்வளவு தான் தீமைகளை விதைத்தாலும், நாம் அதில் இருந்து வருகின்ற நன்மைகளை மட்டும் எடுத்துச் சென்றால் எம் வாழ்வு நன்றாக இருக்கும் என்பதே எனது கருத்தாகும்.
அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு, அல்லவா?
யாழவன் தமிழ்ச்செல்வன்
ஆண்டு 7, மவுண்ட்றூயிட் தமிழ்க் கல்வி நிலையம்
No comments:
Post a Comment