தமிழ் அரசுக் கட்சியின் தமிழ்த் தேசிய எதிர்காலம்?

 April 17, 2024


இலங்கை தமிழ் அரசுக் கட்சி தமிழ்த் தேசியத்துக்குள்ளும் – தமிழ்த் தேசிய எதிர்நிலை அரசியலுக்குள்ளும் சிக்கி சிதைவின் விளிம்பில் ஊச லாடிக் கொண்டிருக்கின்றது. நீதிமன்றத்துக்குள் சிக்கிக்கிடக்கும் கட்சியின் எதிர்காலம் தொடர்பான கேள்விக்கு ஏதோவொரு வகையில் பதில் கிடைத்தாலும்கூட தமிழ் அரசுக் கட்சி அதன், தமிழ்த் தேசிய கற்பை நிரூ பிப்பது மிகவும் கடினமானது. ஏனெனில், தேவையற்ற உட்கட்சித் தேர்தல் ஒன்றால் அது ஏற்கனவே நெருக்கடியின் உச்சத்துக்குச் சென்றுவிட்டது. இவ்வாறானதொரு பின்னணியில், அதன் தமிழ்த் தேசிய கற்பை மீளவும் எவ்வாறு நிரூபிக்கப் போகின்றது என்பதே தமிழ் அரசுக் கட்சிக்கு முன்னா லுள்ள பிரதான – அதேவேளை தவிர்த்து ஓடவே முடியாத நெருக்கடியும் சவாலுமாகும்.
தமிழ் அரசுக் கட்சிக்கான புதிய தலைவரைத் தெரிவு செய்யும் தேர்தலா னது கட்சிக்குள் தமிழ்த் தேசியம் மற்றும் தேசிய எதிர்நிலை என்னும் இரண்டு பிரிவுகளை உருவாக்கிவிட்டது.
இந்த இரண்டு பிரிவுகளும் ஓர ணியில் இணைந்து பணியாற்றுவது முடியாத காரியம். ஏனெனில், இது கற்புநெறிக்கும் பால்வினைத் தொழிலுக்கும் இடையிலான பிரச்னை. இரண்டும் எவ்வாறு ஒரு நேர்கோட்டில் பயணிக்க முடியும்? தமிழ் அரசுக் கட்சி தமிழ் மக்களின் எதிர்காலம் தொடர்பில் தீர்க்கமான முடிவுகளை எடுக்க முற்படும் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் அதன் கோர முகத்தைக் காண்பிக்கும் – உள் சிக்கல்கள் மிகவும் அசிங்கமாக வெளிப்படும். தற்போது அதனைத் தெளிவாகவே காணமுடிகின்றது.
தமிழ்த் தேசிய நிலையில் நிற்க வேண்டுமென்று கருதுவோர் – ஜனாதிபதித் தேர்தலில் கண்ணை மூடிக்கொண்டு வழமைபோல் மக்கள் வாக்களிக்க முடியா தென்னும் நிலைப்பாட்டை வெளிப்படுத்துகின்றனர். ஆனால், தமிழ்த் தேசிய நிலைப்பாட்டை புறந்தள்ள முயற்சிக்கும் அணியினரோ மீண்டும் தென்னிலங்கை வேட்பாளர் ஒருவருடன் பயணிப்பதை நியாயப்படுத்தி வருகின்றனர்.
இவ்வாறான பின்புலத்தில்தான் தமிழ் அரசு கட்சியின் ஓர் அணியினர் தமிழ் பொது வேட்பாளரை நிறுத்தினால் தென்னிலங்கையில் இனவாத சக்திகள் வலுவடையுமென்று பழைய பஞ்சாங்கத்தில் தமிழ் மக்களின் எதிர்காலத்தை கணிக்குமாறு கூறிவருகின்றனர். தமிழ் அரசுக் கட்சியின் புதிய தலைவர் தெரிவின்போது தமிழ்த் தேசியத்தை முன்னிலைப்படுத்தி தமிழ் அரசுக் கட்சிக்குள் தங்களின் செல்வாக்கை நிரூபித்தவர்களோ தமிழ் பொது வேட்பாளர் நிலைப்பாட்டை ஆதரிக்கின்றனர்.
தமிழ்த் தேசிய நிலையில் சிந்திப்பவர்கள் தமிழ் பொது வேட்பாளர் நிலைப்பாட்டை ஆதிரிப்பது தவிர்க்க முடியாதது. அதனை அவர்கள் நன்கறிவார்கள். இந்தப் பின்புலத்தில் நோக்கினால், தமிழ் அரசுக் கட்சி தமிழ்த் தேசியத்தின் பாதையில் பயணிக்க வேண்டுமென்றால் தமிழ் பொது வேட்பாளர் நிலைப்பாட்டை நிராகரிக்க முடியாது. அதற்கு தமிழ் அரசுக் கட் சியே தலைமையேற்க வேண்டும். ஆனால், ஓர் அணியினர் அதனைத் தடுப்பதற்காக எந்த எல்லைக்கும் போகக்கூடும். இவ்வாறான தொரு பின்புலத்தில் ஒப்பீட்டு அடிப்படையில் பலமான நிலையிலிருக்கும் தமிழ் அரசின் தமிழ்த் தேசிய அணியினர் என்ன செய்யப் போகின்றனர். இந்தக் கேள்விக்கான பதிலில்தான் தமிழ் அரசுக் கட்சியின் தமிழ்த் தேசிய எதிர் காலம் தங்கியிருக்கின்றது.   நன்றி ஈழநாடு 

No comments: