அவள் சிறந்தவள் தான்! - க.ஷியா

 .

யாரையோ ஒருவரைப் பற்றிவிமர்சித்து விட்டுஅந்த வகையில் நீ சிறந்தவள் என்று விட்டுப் போகும் பக்கத்து வீட்டுப்

பாட்டிக்கு என்ன தெரியும்
அவள் மனப் புழுக்கள் பற்றி....
முக்கியத்துவம் தருவதாகச்
சொல்லி கூடவே நின்று கணங்களாய்
போனவர்களுக்கு
என்ன தெரியும் அவள் வெதும்புவது பற்றி...
அனுவசைவுக்கும் அழைப்பு
விடுத்தவர்கள் எல்லாம்
அவள் தனிக்கையின் குருடராய் போன
பின் என்ன தெரியும் அவளிடம்
கொண்ட குணங்கள் பற்றி....
நலமா என்ற வாசகங்கள்
கூட நல்லடக்கம் செய்யப்பட்ட
பொழுதுகளைத் தான் அவள் கடக்கிறாள்
அந்த வகையில் அவள்
சிறந்தவள் தான்
அவளைத் திமிரென்றும்
அடங்காப்பிடாரி என்றும்
மதிக்கத் தெரியாதவள் என்றும்
கணிக்கத் தெரிந்த அவர்களுக்கு
அவளுக்குள்ளும் ஒரு மனமிருக்கிறது
என்பதை உணர மறந்த உங்களை விடவும்
அவள் சிறந்தவள் தான்....
இன்னமும் உங்களிடம்
யாசகம் கேட்காத வரை...
இன்னமும் அவளது நெருப்பு இருக்கையை
புலனப்படுத்தாத வரை...
இன்னமும் அவளது பட்டினிச் சுருக்கங்களை உங்கள் முன் விரிக்காதவரை....
இன்னமும் உங்கள் கைப்பாவையாகாதவரை...
அவள் சிறந்தவள் தான்!
இன்னமும் நீங்கள் அவள் பற்றி
சிந்தித்திடாதவரை....
இன்னமும் நீங்கள் அவளுக்கு கருணை
வீசாதவரை ....
இன்னமும் உங்களிடம் அகப்படாதவரை
இன்னமும் உங்களுக்கு வெட்கம்
வெளிப்படாதவரை உங்கள் புத்திக்குத் திமிரானவள்
அவள் சிறந்தவள் தான்!

No comments: