கடவுள் நாடுவார் களிப்புடன் வாழுவார் !


மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா  ... மெல்பேண் ... அவுஸ்திரேலியா 
முத்தை எடுப்பார்
    சிப்பியை மறப்பார்
சொத்தைக் குவிப்பார்
    சுகத்தை இழப்பார் 
நித்தம் சிரிப்பார்
    நிம்மதி பெறுவார்
சுத்தம் நினைப்பார்
     சுகத்தை அடைவார்  !


உண்டி குறைப்பார்
    உடலைப் பேணுவார்
உறக்கம் தொலைப்பார்
    உளநல முடைப்பார் 
சண்டை போடுவார்
    சஞ்சலம் பெருக்குவார்
சமரசம் நாடுவார்
    சந்தோசம் காணுவார்  !


வாய்மை நாடுவார்
    வளமுடன் வாழுவார்
தாழ்மை பேணுவார்
    தலமை தாங்குவார் 
கீழ்மை எண்ணுவார்
     கீர்த்தி பெருக்கிடார் 
ஆழ்மை அறிவுளார்
      அறிஞர் ஆகுவார்  ! 


அருளைப் பேணுவார்
    பொருளை எண்ணிடார்
அன்பைத் தேருவார் 
     அறத்தை மறந்திடார்
கருணை காட்டுவார்
      கடமை மறக்கிலார் 
கடவுள் நாடுவார்

      களிப்புடன் வாழுவார்  !  


No comments: