எல்லாம் துறந்தவர்!‏ - படித்து சுவைத்தது



.
அந்த ஊருக்கு அருகாமையில் ஒரு துறவி வசித்து வந்தார்.
அவரது ஆன்மீகப் பணி  அனைத்து தரப்பினருக்கும் பயனளிக்கும் வண்ணம் இருந்தது. 
அவரது அறிவுரைகளை பெற மக்களின் கூட்டம் வந்தவண்ணமே இருந்தது. எல்லா மதத்தினரும் அவரது ஏற்று நடந்தனர்.
அதனால் அவரது புகழ் நாளுக்கு நாள் பெருகியது.
அதே ஊரில் ஒரு நாத்திகர் இருந்தார். அவரது கொள்கைப்படி துறவி ஒரு ஏமாற்றுக்கார வித்தகராகவே தெரிந்தார்.
துறவி ஒரு ஏமாற்றுப் பேர்வழியென்று அனைவருக்கும் தெரிவிக்கும் முயற்சியில் இறங்கினார்.
ஒரு நாள், துறவியை சந்திக்க காத்திருந்த பெரும் கூட்டத்தில் நாத்திகரும் அமர்ந்துகொண்டார்.
எல்லோருக்கும் கேட்கும் வண்ணம் துறவியிடம்,
ஐயா, இந்த ஊரில் தாங்கள் ஒருவர்தான் முற்றும் துறந்த  துறவி, ஞாநி என்று எல்லோரும் 
கூறுவது உண்மையா என்றார்.

அதற்கு அந்த துறவி பதில் கூறினார்:
யார் சொன்னது, என்னைவிட உயர்ந்த துறவி, இந்த ஊரில் அதுவும் இந்தக் கூட்டத்திலேயே  இருக்கிறார் என்றார்.
கூட்டத்தில் இருந்தவர்கள் அனைவரும்  யாரைக் குறிப்பிடுகிறார் என ஆவலாய் துறவியை நோக்கினர்.
துறவி நாத்திகரைப் பார்த்துச்  சொன்னார் :
என்னை விடப்பெரிய துறவி நீங்கள்தான்,  ன்னைப் போன்ற துறவிகள் கேவலம் உலகத்தில் இருக்கும் பொருட்களைத்தான் துறப்பது வழக்கம் நீரோ கடவுளையே துறந்து விட்ட துறவியாயிற்றே... என்றார்.
நாத்திகர் புன்னகைத்துவிட்டு ஒன்றும் பேசாமல் அவ்விடத்தை விட்டு அகன்றார்.
 
 கொசுறு:
துறவி ஒருவரிடம் வந்த நாத்திகர்,“கடவுள் கடவுள் என்கிறீரே... உம்மால் கடவுளைக் காட்ட முடியுமா?’’ என்றார்.

ஞானி நிறைய விளக்கங்கள் தந்தார்.நாத்திகர் விடுவதாக இல்லை. ‘‘கடவுளைக் காட்டியே தீர வேண்டும். இல்லையென்றால் நீவிர் போலி சந்நியாசி என ஊர் முழுவதும் சொல்வேன்’’ என்றார்.

அது மதிய வேளையாயிருந்ததால்,‘‘கடவுள் நம் தலைக்கு மேல் வானத்தில் இருக்கிறார்... பார்’’ என்றார் ஞானி.

நாத்திகர் அண்ணாந்து பார்க்க,சூரிய வெளிச்சம் அவர் கண்களைக் கூசச் செய்தது.

‘‘கண்கள் கூசுகிறது’’ என்றார் நாத்திகர்.

‘‘கடவுளின் படைப்புகளில் ஒன்றான சூரியனையே உன்னால் பார்க்க முடியவில்லையே. உன்னால் எப்படிக் கடவுளைக் காணமுடியும்?’’ என்று ஞானி கூற, நாத்திகர் தலை குனிந்தார்.

No comments: