தைபிறந்து விட்டாலே தங்கமே தங்கம்தளர்வகன்று போயிடும் தங்கமே தங்கம்பொங்லென்று சொன்னாலே தங்கமே தங்கம்புத்துணர்வு பிறந்திடுதே தங்கமே தங்கம்நன்றி சொல்லும் பெருவிழாதான் பொங்கலாகுமேநாளுதிக்கும் சூரியயனே நமக்கு ஆதாரம்உழவதனை உளமிருத்தும் உயர்ந்த விழாவேஉயர்வான எங்களது பொங்கல் விழாவேவாசலிலே கோலமிட்டு வாழை கட்டியேமஞ்சளிஞ்சி கரும்புமதில் சேர்த்துக் கட்டியேதோரணமாய் அலங்கரித்து வீட்டு வாசலில்வீட்டிலுள்ள அனைவரு மதிகாலை எழும்பியேவிரைவாக நீராடி புத்தாடை அணிந்துமேபொங்கல் பொங்க புறப்படுவோம் பூரிப்பாகவேமங்கலமாய் பெற்றவர்கள் மகிழ்ந்து நிற்பார்கள்பொங்கற்பானை அடுப்பினிலே ஏற்றி வைத்ததும்அக்கினையை மூட்டிவிடப் பாட்டி வந்திடுவாஅரிசி பருப்பு சர்க்கரை அனைத்தையையுமேஅம்மாயங்கே ஒழுங்காய்க் கொண்டு வந்திடுவாபானையிலே பாலையூற்ற தாத்தா வந்திடுவார்பாட்டியோடு அம்மாவோடு நாமும் ஊற்றுவோம்பொங்கிவரும் வேளைக்காக காத்து நின்றுமேஅரிசியுள்ளே போடுதற்கு ஆவல் கொள்ளுவோம்பொங்கிவரும் பாலைப்பார்க்க பூரிப் பெய்துவோம்அரிசியினை கையெடுத்து அனைவரும் போடுவோம்பொங்கிலினை பெருவிருப்பாய் மனதில் எண்ணியேபொங்கலோ பொங்கலென்று சொல்லி மகிழுவோம்அரிசிவெந்த பின்னரம்மா சர்க்கரை போடுவார்அக்கம்பக்கம் பொங்கல்மணம் காற்றில் கலந்திடும்பானைநிறைய பொங்கலெம்மை பார்த்துச் சிரித்திடும்அம்மாவுடனே பொங்கலினை இறக்கி வைத்திடுவார்கோலமிடை வாழையிலை அம்மா வைத்துமேபொங்கலினை பக்குவமாய் படைத்து மகிழுவார்அந்தவேளை ஆதித்யன் ஆசி வழங்குவான்அனைவருமே அவனை வணங்கி ஆசிவேண்டுவோம்தம்பிதங்கை பட்டாசை வெடித்து மகிழுவார்தாத்தாபாட்டி தூரநின்று கேட்டு மகிழுவார்அப்பாவம்மா அனைத்தையுமே பார்த்து மகிழுவார்ஆனந்தமாய் பொங்கலங்கே பொங்கி ஒளிருமேதாத்தாபாட்டி கால்களிலே விழுந்து வணங்குவோம்ஆசிகூறி காசுதந்து வாழ்த்தி மகிழுவார்அப்பாவம்மா ஆசிதந்து அணைத்து நிற்கையில்ஆனந்தமே எங்களுக்குள் பெருகி நின்றிடும்பொங்கலன்று அனைவருமே கோவில் செல்குவோம்எல்லோர்வாழ்வும் சிறப்புறவே இறையை வேண்டுவோம்ஆலயத்தில் பக்குவாய் அனைத்தும் நடந்திடும்ஆண்டவனின் நினைப்புடனே வீடு திரும்புவோம்பொங்கலினை மற்றவர்க்கும் கொடுத்து மகிழுவோம்தருகின்ற பொங்கலினை ஏற்றும் மகிழுவோம்உறவுகளைப் பார்ப்பதற்கு உவப்பாய்ச் செல்குவோம்உடனிருந்து பொங்கலினை உண்டு மகிழுவோம்பொங்கலெனும் வார்த்தையது பொருள் பொதிந்ததுமங்கலத்தை மாநிலத்தில் பதித்து நிற்பதுஎங்கணுமே இன்பமதைப் பெருக்கி நிற்பதுஇனிப்போடு உறவுகளை இணைக்கச் செய்வது
No comments:
Post a Comment