மனித உடலின் நோக்கும் நமது பொறுப்பும்


உடலுக்குத் தனியாக எந்தவிதமான அறிவோ அல்லது பகுத்தறிவு சக்தியோ இல்லை. பகுத்தறிவும் (விவேகம்), அறிவும், தீர்மானிக்கும் சக்தியும் மனமும் புத்தியும் கொண்டவைகளே. ஆனால் இன்றைய மனிதர்கள் அடிப்படைப் பகுத்தறிவை பயன்படுத்துவதில் பெரும்பாலும் தவறுகின்றனர். அவர்களின் எண்ணங்களில் சுயநலமே மேலோங்கி நிற்கிறது.

மனிதர்கள் தங்களுக்கே நன்மை கிடைக்கும்படி தங்கள் அறிவை பயன்படுத்துகின்றனர்; சமூக நலனைக் குறித்து அதிகம் சிந்திப்பதில்லை. இவ்வாறு அவர்கள் உடலை தவறான வழிகளில் பயன்படுத்துகின்றனர். மனிதனை உயர்ந்த அறிவொளிக்குக் கொண்டு செல்லும் பாதையைப் பின்பற்றுவதற்காக உடலை பயன்படுத்துவதில்லை.

கோதுமையை மாவு ஆலைக்கு வைத்தால் கோதுமை மாவு கிடைக்கும். அரிசியை வைத்தால் அரிசி மாவு கிடைக்கும். ஆனால் உணவை உடலுக்குள் போட்டால் இறுதியில் வெளியே வருவது கழிவுப் பொருள்தான். ஒரு ஜாடியில் ஊறுகாயை வைத்தால் அது ஒரு வருடம் வரை கெடாமல் இருக்கும். ஆனால் அதையே உடலுக்குள் போட்டால் குறுகிய காலத்திலேயே அது அழுகி விடுகிறது. உடலின் இயல்பு இதுவாகும்.

ஆனால் உயர்ந்த இலட்சியங்களை அடைவதற்கு மனிதனுக்கு உடல் அவசியமானது. ஆகையால் வாழ்க்கையின் குறிக்கோளை அடைவதற்காக இந்த உடலை இறைவனுக்காக அர்ப்பணிக்க வேண்டும். உடலை சரியான பாதையில் செலுத்தி, மற்றவர்களுக்கு முன்னுதாரணமாகத் திகழும் மனிதராக ஒளிர வேண்டும்.

No comments: