தமிழ் திரையுலகில் நடிகராக புகழ் பெற்று பின்னர் பட இயக்குனராக மாறி பிரபலமடைந்தோர் பலர் உள்ளனர். ஆனால் அம் முயற்சியில் ஈடுபட்டு ஒரே படத்துடன் ஒதுங்கி கொண்டவர் ஒருவர் உள்ளார். அவர்தான் ஜே. பி. சந்திரபாபு! தட்டுங்கள் திறக்கப்படும் என்ற ஒரே படத்துடன் அவர் அந்த முயற்சியில் இருந்து ஒதுங்கி கொண்டார்.
1950 ம் ஆண்டுகளில் நகைச்சுவை நடிப்பில் கொடி கட்டி பறந்தவர் சந்திரபாபு. எம் ஜி ஆருடன் இவர் நடித்த நாடோடி மன்னன், குலேபகாவலி, மகாதேவி, சிவாஜியுடன் நடித்த சபாஷ் மீனா, புதையல், பதி பக்தி போன்ற படங்களில் அவர் நடிப்பு ரசிகர்களினால் பெரிதும் வவேற்கப்பட்டது. பிஸி காமெடி நடிகராக இருந்த இந்த கால கட்டத்தில் சந்திரபாபு ஒரு விபரீத முடிவை எடுத்தார். இனிமேல் , தான் படங்களில் கதாநாயகனாக நடிக்கப் போவதாக பிரகடனப் படுத்தினார். அந்த வகையில் அவர் ஹீரோவாக நடித்த குமார ராஜா, கவலை இல்லாத மனிதன், போன்ற படங்கள் தோல்விப் படங்களாகி அவரின் கதாநாயகன் ஆசையில் மண்ணைப் போட்டது. இதனிடையில் அவர் கதை எழுதி ஹீரோவாக நடிக்கத் தொடங்கிய அப்துல்லா படமும் இடையில் நிறுத்தப் பட்டு சிவாஜி நடிப்பில் பாவ மன்னிப்பானது.
இவற்றுக்கு பிறகு சந்திரபாபு திரையுலகில் பட இயக்குனராக
அவதாரம் எடுத்தார். எம் ஜி ஆர், சாவித்திரி நடிப்பில் மாடி வீட்டு ஏழை படத்தை இயக்கத் தொடங்கினர். இந்த படத்தில் நடிப்பதோடு நின்று விடாது சாவித்திரி நிதியுதவியும் வழங்கியிருந்தார். ஆனால் படப்பிடிப்பு தொடரவில்லை. இன்று பரபரப்பாக பேசப் படும் விஜய், த்ரிஷா உறவைப் போல் அன்று இப் படம் உருவாகிய கால கட்டத்தில் சந்திரபாபு, சாவித்திரி இருவர் இடையில் மிக நெருக்கமான உறவு நிலவி வந்தது. இதனை விரும்பாத ஜெமினி , திரையுலகின் Big brother ரான எம் ஜி ஆரிடம் இது பற்றி முறையிட்டார். அதனைத் தொடர்ந்து படத்திலிருந்து சாவித்திரியை நீக்க வேண்டும் என்று எம் ஜி ஆர் கண்டிஷன் போட்டார். தனக்கு வேண்டிய சாவித்திரியை கதாநாயகியாக தக்க வைக்க விரும்பிய பாபு அதனை ஏற்கவில்லை. போதாக்குறைக்கு சாவித்திரியிடம் இருந்து பணம் வேறு வாங்கி இருந்தார். இந்த பிரச்னை எம் ஜி ஆர், சந்திரபாபு மோதலாக உருவெடுத்து மாடி வீட்டு ஏழை படத் தயாரிப்பு நின்றே போய் விட்டது.

அடாது மழை பெய்தாலும் விடாது நாடகம் நடக்கும் என்பது போல் சந்திரபாபு தனது அடுத்த படத்தை இயக்கும் முயற்சியில் இறங்கினார். அதன் வெளிப்பாடுதான் தட்டுங்கள் திறக்கப்படும் படம். படத்தின் கதாநாயகி அதே சாவித்திரிதான்! எம் ஜி ஆர் போனால் போகட்டும் என்று படத்தின் ஹீரோவாக தானே நடித்தார் சந்திரபாபு. ஆனால் மாடி வீடு ஏழை படத்தின் கதைக்கும் இப் படத்தின் கதைக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.
கேளிக்கை விடுதி ஒன்றை நடத்தி வரும் சங்கரிடம் எடுபிடியாக
வேலை செய்கிறான் வாய் பேச முடியாத அடைக்கலம். அவனிடம் அடைக்கலம் தேடி வருகிறார்கள் மீனாட்சியும் அவள் சிறு வயது மகளும். ஏராளமான கடன் தொல்லைகளுடன் வாழும் சங்கர் அவனுடன் living together ஆக வாழும் வசதி மிக்க குடும்பத்தை சேர்ந்த கீதாவை பணம் கேட்டு நச்சரிக்கிறான். அவளோ காதலை மட்டும் தருகிறாள், பணத்தை அல்ல. அடைக்கலம் மீது சங்கருக்கு ஒரு soft corner உண்டு. இது கேளிக்கை விடுதியில் வேலை செய்யும் ஏனைய பணியாளர்களுக்கு பொறாமையை ஏற்படுத்துகிறது. தருணம் பார்த்து அடைக்கலம் ஒரு பெண்ணுடனும் , குழந்தையுடனும் குடும்பம் நடத்துவதாக சங்கரிடம் போட்டு கொடுக்கிறார்கள். இது என்ன புதுப் பிரச்னை என்று கலவரப்படும் சங்கருக்கு மற்றுமோர் அதிர்ச்சி காத்திருக்கிறது. அடைக்கலத்திடம் அடைக்கலம் அடைந்திருக்கும் மீனாட்சி தன் மனைவி, குழந்தை தன் குழந்தை என்று அறிந்து அதிர்கிறான். இதனிடையே கீதா கேளிக்கை விடுதியில் மர்மமாக இறந்து கிடக்கிறாள். அவளை கொன்றது அடைக்கலம் என்று எல்லோரும் பழி சுமத்துகிறார்கள். அவ்வூர் தேவாலயத்தின் பாதிரியார் மட்டும் அடைக்கலம் நிரபராதி என நம்புகிறார். மீனாட்சி, சங்கர், குழந்தை, அடைக்கலம் இவர்களின் கதி என்ன என்பதே படத்தின் மீதி.

அறுபது ஆண்டுகளுக்கு முன் தமிழுக்கு இது போன்ற கதை புதுசு.
அதனை தன்னால் முடிந்த வரை இயக்கி இருந்தார் சந்திரபாபு. வசனங்களுக்கு பதில் காட்சிகளினால் படத்தை நகர்த்தியது குறிப்பிட வேண்டியது. சில காட்சிகள் ஆங்கிலப் படப் பாணியில் அமைந்திருந்தன. அவர் அறிமுகமாகும் காட்சி, எல்லோரிடமும் அடி வாங்கும் காட்சி , என்று ரசிகர்களின் கவனத்தைப் பெற்றுக் கொள்கிறார். அடி வாங்கி இயேசுவின் பாதத்தில் இரத்தம் சொட்ட அழும் போதும், வாய் பேச முடியாமல் முக பாவத்தின் மூலம் தன் உணர்வைக் காட்டும் போதும் சந்திரபாபுவின் நடிப்பு பிரகாசிக்கிறது. அவர் மீது அனுதாபம் பிறக்கிறது. ஆனால் இதன் காரணமாக அவரின் நகைச்சுவை படத்தில் மிகக் குறைவு. போதாக் குறைக்கு அவர் ஊமையாக நடித்ததும் ரசிகர்களுக்கு திருப்பதியை அளிக்கவில்லை . படம் முழுவதும் அவர் கந்தல் உடையுடன் வருவதும் நெருடலாகவே உள்ளது. அதே போல் கேளிக்கை விடுதியில் பலர் முன்னிலையில் நடக்கும் நடன விருந்தில் கந்தல் உடையணிந்து சந்திரபாபு ஆடுவது அபத்தம்.

சோகமே உருவாய் படம் முழுவதும் வருகிறார் சவித்திரி. ஏற்கனவே
பல படங்களில் பார்த்த நடிப்புதான். கண்ணுக்கு விருந்தாகவும், கவர்ச்சியாகவும் வரும் கே. ஆர். விஜயா சில காட்சிகள் வந்தாலும் கவருகிறார். ஆர் எஸ் . மனோகர் படம் முவதும் எடுப்பாக வருகிறார். அவரின் வில்லன் நடிப்பில் குறையில்லை. சந்திரபாபு இயக்கும் படம் என்பதால் எஸ். வி. ரங்காராவ், எம் ஆர். ராதா, ஏவி. எம் ராஜன், சோ, வி. கே. ராமசாமி , தங்கவேலு என்று பலரும் நடித்திருந்தார்கள். இவர்களோடு எம் ஆர் ஆர் வாசு, நம்பிரஜன், விஜயஶ்ரீ, என்னத்தே கன்னையா, மனோரமா , அங்கமுத்து, என்று பலர் நட்புக்காக படத்தில் தோன்றினார்கள். படத்தில் குழந்தை நட்சத்திரமாக வந்து கிளைமாக்ஸ் காட்சிக்கு உதவுபவர் பேபி மகாலக்ஷ்மி. இவர் கதாசிரியர் மா . லஷ்மணனின் மகளாவார்.

பாடல்களை கண்ணதாசன் எழுத, எம் . எஸ் . விஸ்வநாதன் இசையை வழங்கினார். கல்யாணப் பந்தல் அலங்காரம் பாடல் ஹிட்டடித்தது. தித்திப்பது எது, ந்கண்மணி பப்பா மனிதன் பிறந்தது பாடல்கள் பிரபலமடைந்தன . சாம் டி தாசன் வசனங்களை எழுதினார். படத்தை லஷ்மண் கோரே ஒளிப்பதிவு செய்தார்.
படத்தின் கிளைமாக்ஸ் காட்சி நுணுக்கமாக எடுக்கப்பட்டது.
இயக்குனர் சந்திரபாபுவின் திறமையை வெளிப்படுத்தியது. ஆனால் சென்சார் போர்டின் ஆட்சேபணைக்கு உள்ளானது. இதனால் அக் காட்சியை மீண்டும் மாற்றி எடுக்க சந்திரபாபு திட்டமிடுப்பிருந்த போதும், அவர் சென்னையில் இல்லாத சமயம் பார்த்து தயாரிப்பாளர் படத்தை அவசரத்தில் பூர்த்தி செய்து வெளியிட்டு விட்டார். இதனால் படத்தின் முடிவு எனோ தானோ என்று அமைந்து விட்டது. படமும் தோல்விப் படமானது. சந்திரபாபுவின் படம் இயக்கும் முயற்சியும் முடிவுக்கு வந்தது! 1974ல் காலமான சந்திரபாபுவுக்கு மார்ச் 8ம் தேதி நினைவு தினமாகும்.

.png)
.png)
.png)
.png)
.png)
.png)
No comments:
Post a Comment