அழிந்து வரும் தமிழர் இசைக்கருவிகள் - அறிமுகம்

பழந்தமிழர்கள் எண்ணற்ற பல இசைக்கருவிகளை பயன்படுத்தியுள்ளார்கள்.500க்கு ம் மேற்பட்ட தமிழர் இசைக்கருவிகள் இருந்துள்ளன.சிலப்பதிகாரமும் திருமுறை திவ்யப்ரபந்தங்களும் கந்தபுராணம் மற்ற தொல் தமிழர் நூல்கள் பலவும் பலவாறான இசைக்கருவிகளின் பெயர்களை நமக்கு காட்டுகின்றன. இன்றைய காலகட்டத்தில் ஒரு 50 கருவிகளை தான் நம்மால் இனம் காண இயலுகிறது.அதிலும் நாதஸ்வரம் தவில் பறை தவிர பல கருவிகளும் அழிவின் விளிம்பில் இருப்பவை. குறிப்பாக பழங்குடி மக்களின் இசை வடிவங்கள் தொலைக்காட்சி மோகத்தாலும் மற்ற காரணிகளாலும் முற்றாக அழிந்து வருகிறது.
திரிவண்ணம் புதியதோர் கலை முயற்சி - பரமபுத்திரன்
.
பொதுவாக அரங்க நிகழ்வுகளை
ஒழுங்கமைப்போர் இந்த நிகழ்வுக்கு இவர்கள்தான் வருவார்கள் என்று முடிவு
செய்வார்கள். அத்துடன் நிகழ்வுக்கு
தொடர்பானவர்கள் அல்லது அந்த நிகழ்வு சம்பந்தமான அறிவுடைய பார்வையாளர்களை மட்டும் அழைப்பார்கள்.
உதாரணமாக நடனம் என்றால் நடனம் தெரிந்தவர்களே பார்ப்பர் என்று முடிவு செய்வது. ஆனால் திரிவண்ணம் கலை என்ற வகையில்
வெற்றிபெற்றுள்ளது. காரணம் வரையறுக்கப்பட்ட
நடனம் தெரிந்தவர்களை மட்டும் மையமாக
கொள்ளாது சகல பார்வையாளர்களும் விரும்பி
இரசிக்கும் கலைநிகழ்வாக உருவாக்கப்பட்டுள்ளமை
இந்நிகழ்வின் சிறப்பு அம்சம் எனலாம். எனவே
கலையையும், பார்வையாளர்களையும் ஒன்றிணைக்கும் அடிப்படையில் நிகழ்வினை தயாரித்த நெறியாளரை பாராட்டலாம். இனி நிகழ்வு தொடர்பாக பார்ப்போம்.
2018 ஆம் ஆண்டில் Parramatta Riverside theatre இல் நடன அரங்கேற்றம் மூலம் தங்கள் திறமையை
வெளிக்காட்டிய ஜெரோம் கொன்சிலா தம்பதியினரின் புதல்விகளான சகானா, இன்பனா, ஆரனா ஆகிய
மூன்று சகோதரிகள் மீண்டும் Brayan Brown theatre இல் வேறு பரிமாணத்தில் திரிவண்ணம் நடன நிகழ்வில் தம்மை வெளிக்காட்டியுள்ளார்கள். அவுத்திரேலியா
சிட்னியில் அரங்கேற்றம் செய்த சகோதரிகள்,
தங்களது இன்னோர் பக்க திறமையை வெளிக்கொணர்வதற்காக நடன ஆசிரியை கலாநிதி திருமதி
ஜெயந்தி யோகராஜா அவர்களை நாடியுள்ளார்கள். அந்த ஆசிரியரே முற்றுமுழுதாக திரிவண்ணம்
நிகழ்வினை நெறிப்படுத்தியிருந்தார். இந்நடன
நிகழ்வு Bankstown, Brayan Brown
theatre மண்டபத்தில் டிசெம்பர் மாதம் 13 ஆம் திகதி நடைபெற்றது. அரங்கத்தில்
நடனநிகழ்வு பரத நாட்டிய வழமைக்கு அமைவாக வந்தனத்தில் ஆரம்பித்து திரிவண்ண சங்கமம்
வரை விரிந்து சென்றது.
கழல் தொழுதல் முறையல்லவா ! மகாதேவஐயர் ஜெயராமசர்மா மெல்பேண் .... அவுஸ்திரேலியா

உதறி நிற்கும் உள்ளங்களே
மன முடைந்து நிற்கின்ற
நிலை யுமக்குத் தெரியலையா
தின மும்மை கண்விளித்து
கண நேரம் பிரியாமல்
பிணி யனைத்தும் தான்சுமந்த
சுமை தாங்கி நினைவிலையா !
அணி மணிகள் கண்டாலோ
துணி வகைகள் பார்த்தாலோ
வகை வகையாய் வாங்கிவந்து
வடி வாக்கும் மனமல்லவா
இரவு பகல் தெரியாது
எதையும் தனக் காக்காது
நில வுலகில் உமைமட்டும்
நினைத்த மனம் கலங்கலாமா !
கிறிஸ்மஸ் மரங்கள் விற்பனைக்கு இல்லை 🎄 - கானா பிரபா
சிட்னியின் புற நகர்ப் பகுதி, கிட்டத்தட்ட ஒரு மணி நேரக் கார்ப் பயணத்தில் இருப்பது மல்கோவா மாதா ஆலயம். வார இறுதி நாட்களில் அந்தப் புனித மிகு தேவாலயம் நோக்கி மத வேறுபாடின்றி தமிழர் படையெடுப்பர். அந்தப் பயணத்தில் வழி ஆங்காங்கே பருவகாலப் பழ விற்பனையையும், மார்கழி தொட்டும் காலத்தில் தறித்து வைக்கப்பட்ட கிறிஸ்மஸ் மரங்களின் விற்பனையையும் கண்டிருப்பர். இந்த முறை வெறுமையான அந்தப் பயணத்தில் “வரட்சி காரணமாக இம்முறை மரங்கள் இல்லை” என்ற வாசகங்களைக் கடந்து போய்க் கொண்டிருப்பர் ஒரு பெருமூச்சோடு.
தமிழ் மக்களின் பிரதிநிதிகளுடைய அரசியல் நிலைப்பாட்டை புரிந்துகொள் முயற்சியுங்கள்
17/12/2019 நாட்டில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு புதிய அரசாங்கம் பல்வேறு வகையிலான அரசியல் நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்ற சூழலில் தமிழ் மக்களின் தேசிய இனப்பிரச்சினைக்கான தீர்வு தொடர்பாகவும் பலவழிகளிலும் பல்வேறு தரப்பினரும் கருத்துக்களை வெளியிட்டு வருகின்றனர். பிரிபடாத நாட்டுக்குள் அதி உச்ச அதிகாரப்பகிர்வு முறைமையின் ஊடாக சகலரும் ஏற்றுக்கொள்ளக்கூடிய வகையில் ஒரு அரசியல் தீர்வு தமக்கு கிடைக்கவேண்டும் என்பதே தமிழ் பேசும் மக்களின் பிரதிநிதிகளின் கோரிக்கையாகவும் நிலைப்பாடாகவும் இருந்து வருகிறது.
இந்த நிலையில் தமிழ் பேசும் மக்களின் தேசிய இனப்பிரச்சினைக்கான தீர்வு தொடர்பில் புதிய அரசாங்கம் எவ்வாறான நகர்வுகளை எடுக்கப்போகிறது? எந்தத்தரப்புடன் பேச்சுவார்த்தை நடத்தப்போகின்றது என்ற கேள்விகளும் பரவலாக எழுப்பப்பட்டு வருகின்றன.
எனினும் புதிய அரசாங்கம் இந்த விடயத்தில் எவ்வாறான அணுகுமுறையை முன்னெடுக்கப்போகின்றது என்பது தொடர்பாக இதுவரை ஒரு தெளிவற்ற தன்மை காணப்படுகின்றது. தற்போது பாராளுமன்றத் தேர்தல் நடைபெறுவதற்கு இன்னும் மூன்று மாதங்கள் காணப்படுகின்றன. அதுவரை ஒரு இடைக்கால அரசாங்கமே தற்போது அமைக்கப்பட்டிருக்கிறது. எனவே அரசாங்கம் அடுத்த பாராளுமன்றத் தேர்தலின் பின்னர் இது தொடர்பில் நடவடிக்கை எடுக்குமா என்பதும் தெளிவில்லாமல் இருக்கிறது.
சுவிஸ் தூதரக விவகாரத்தை வேறுபட்ட முறையில் கையாண்டிருக்க முடியும் -கலாநிதி ஜெஹான் பெரேரா
19/12/2019 கொழும்பிலுள்ள சுவிஸ் தூதரகத்தில் பணியாற்றும் உள்ளூர் பெண் ஊழியர் ஒருவர் தான் கடத்தப்பட்டு, விசாரணைக்க உட்படுத்தப்பட்டதாகத் தெரிவித்த முறைப்பாடு தொடர்பில் தற்போது முன்னெடுக்கப்பட்டுவரும் விசாரணைகளின் காரணமாக இலங்கை விவகாரங்களில் சர்வதேச சமூகத்தின் பாத்திரம் மீண்டுமொரு தடவை முக்கியய கவனத்தைப் பெற்றிருக்கிறது.
பொய்யான தகவல்களைத் திரிபுபடுத்தியதாகவும், அரசாங்கத்தின் மீது அதிருப்தி ஏற்படுத்துவதற்குக் காரணமாக இருந்ததாகவும் கூறியே அந்த ஊழியர் கைது செய்யப்பட்டிருப்பது துரதிஷ்டவசமான ஒரு நிலைவரமாகும்.
அவரின் கடத்தல் தொடர்பாகக் கூறப்பட்ட விபரங்கள் விசாரணைகளிலிருந்து கண்டறியப்பட்ட தகவல்களுடன் ஒருங்கிசைவாக அமையவில்லை என்று அரசாங்கம் கூறியிருக்கிறது.

தூதரக ஊழியர் கடத்தல் விவகாரத்தில் முரண்படும் இலங்கை அரசினதும் சுவிஸர்லாந்தினதும் நிலைப்பாடுகள்
19/12/2019 கடந்த மாதம் கொழும்பிலுள்ள சுவிஸ் தூதரகத்தில் பணிபுரியும் உள்நாட்டு பெண் ஊழியர், கடத்தப்பட்டதாகக் கூறப்படுகின்ற விவகாரத்தில் நீதிமன்றங்களின் தீர்ப்புக்களையும் சுயாதீனமான பொலிஸ் விசாரணைகளின் மூலம் கண்டறியப்படுகின்றவற்றையும் ஏற்றுக் கொண்டு செயற்படுவதற்கு இலங்கை ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ தீர்மானித்திருப்பதாக அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் கூறுகின்றன.

ஈழத்தில் திருப்பாவையும் ஆண்டாளும் ஒரு நோக்கு - மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா .... மெல்பேண் ... அவுஸ்திரேலியா முன்னாள் தமிழ்மொழிக் கல்வி இயக்குநர்
" மாதங்களில் நான் மார்கழி " என்று கீதையில்
கண்ணன் கூறுகிறான். அந்த வாக்கை வைணவர்கள் மனங்கொண்டு மார்கழி முழுவதையும்
வழிபாட்டுக்கு உரிய மாதமாக்கி விட்டார்கள் என்றுதான் எண்ண வேண்டி இருக்கிறது.
மார்கழி என்றதும் சுப நிகழ்ச்சிகளைச் செய்வதை பொதுவாகவே இந்துக்கள் தவிர்த்துக்
கொள்ளுகிறார்கள்.இந்த நிலை ஈழத்திலும் காணப்படுகிறது.
திருமணம், வீடு
குடுபுகுதல், காதுகுத்தல்,
ஏடுதொடக்குதல் முதலான சுப விஷயங்களை மார்கழியில் செய்வதை தவிர்த்து விடுகிறார்கள்.
அப்படித் தவிர்ப்பதற்கு அவர்கள் கூறும் காரணம் - மார்கழி பீடை பிடித்த மாதம்
என்பதே ஆகும். ஆனால் உண்மையில் மார்கழி பீடுடைய மாதமே
எனபதை
மனமிருத்தத் தவறி விடுகின்றனர்.
மார்கழி
தேவ வழிபாட்டுக்கு உகந்த மாதம் என்பதாலேயே அதில் மக்களுக்கான விழாக்களைத்
தவிர்த்தார்கள் என்பதுதான் உண்மையாகும்.
மார்கழியில்த்தான் திருப்பாவை ,
திருவெம்பாவை,
பாடப்படுகிறது. ஆருர்த்தா
தரிசனம், வைகுண்ட
ஏகாதசி சொர்க்கவாசல் திறத்தல், போன்ற
முக்கிய தெய்வ வழிபாடுகள் இடம்பெறுகின்றன.இந்தவகையில் மணிவாசகப் பெருமானும்
ஆண்டாள் நாச்சியாரும் சைவர்களாலும்,
வைணவர்களாலும்
ஏற்றிப் போற்றி வணங்குதலுக்கு ஆளாகி இருப்பதையும்
காண்கின்றோம்.
மணிவாசகப்
பெருமானின் திருவெம்பாவை பற்றி ஈழத்தவர்களுக்கு மிகவும் நன்றாகவே தெரியும்.
ஈழத்தில் இருக்கும் சைவக் கோவில்கள்
பெரியனவாக இருந்தாலும், சிறியனவாக
இருந்தாலும், அங்கெல்லம் மார்கழியில்
திருவெம்பாவை மிகவும் பக்திபூர்வமாக அனுஷ்டிக்கப்படும்.
காலையில் அதுவும் மிகவும் அதிகாலையில் திருப்பள்ளி
எழுச்சியுடன் ஆரம்பித்து திருவெம்பாவை பாடல்முழுவதும் பாடி கோவிலில் பூஜை வழிபாடு
நிறைவு பெறும்/.
கிழக்கில் இலங்கை மாணவர் கல்வி நிதியத்தின் உதவி
அவுஸ்திரேலியாவிலிருந்து கடந்த முப்பது
ஆண்டுகளுக்கும் மேலாக இயங்கிவரும் தன்னார்வத்
தொண்டு நிறுவனமான இலங்கை மாணவர் கல்வி நிதியம்,
அண்மையில் கிழக்கு மாகாணத்தில் அம்பாறை – மட்டக்களப்பு மாவட்டத்தில் வறுமைக்கோட்டில்
வாழும் மாணவர்கள் சிலருக்கு 2019 – 2020 ஆண்டிற்கான சில மாதங்களுக்குரிய நிதிக்கொடுப்பனவை
வழங்கியது.
இந்நிகழ்வு, கல்முனை கோட்டக்கல்வி அலுவலகத்தில் ( தமிழ் பிரிவு) கோட்டக்கல்வி அதிகாரி திரு. எஸ். சரவணமுத்து
அவர்களின் முன்னிலையில் நடைபெற்றது.
அம்பாறை
மாவட்டத்தில் கல்முனை பெரிய நீலாவணை விஷ்ணு மகா வித்தியாலய அதிபர் திரு. ந. கமலநாதனின் ஏற்பாட்டில்
இந்நிகழ்வு ஒழுங்கு செய்யப்பட்டது.
வடக்கு
– கிழக்கு மாகாணங்களில் நீடித்த போரினால் பாதிக்கப்பட்ட
ஏழைத்தமிழ் மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்கு அவுஸ்திரேலியாவிலிருந்து
இயங்கும் இலங்கை மாணவர் கல்வி நிதியம், 1989
ஆம் ஆண்டு முதல் உதவி வருகின்றது.
காலம் தோறும் மாறி வந்த பரத நடன மார்க்கமும் திவ்வியா சுஜேனின் பரத மார்க்கமும் - பாரதி மார்க்கமும் - பேராசிரியர் மௌனகுரு

தரமில்லாத
நடனங்களும் அதை
நிகழ்த்துவோரும் ஊடக
விளம்பரத்தால் உயர்ந்த
நடனங்களாகவும் மிகச்
சிறந்த நடன தாரகைகளாகவும் கட்டமைக்கப்படுகின்றனர்
ஊசியும் செம்பொனும்
ஒப்பவே நோக்கும்
யோக நிலையான பற்றற்ற
நிலையை இப்பத்திரிகைகள்
அடைந்து விட்டனவோ என்று
எண்ணத் தோன்றுகிறது.
திறமையானவர்கள் இனம்
காணப்படுவதில்லை.
ஆடுவோர் எல்லாம்
நடனக் கலைஞர் ஆக்கப்பட்டு விடுகிறார்கள்.
தடி எடுத்தோரெல்லாம்
தண்டல் காரர் ஆகிவிடுவது போல.
ஒரு பரத நடன விமர்சன
மரபு எம்மிடமில்லை.
இதனால் ஆடும் பரத நடனங்கள்
யாவும் அற்புதம் என்றும்
ஆடுவோர் அனைவரும்
அற்புத நடன மணிகள் என்றும்
கூறும் நிலைக்கு
அனைவரும் வந்து விடுகின்றனர்
பரத நடனம் தவிர வேறு
ஏதும் ஆடற்கலைகள் தமிழரிடம் இல்லையோ என எண்ணும் அளவுக்கு நிறைய பரத அரங்கேற்றங்கள்
நடைபெறுகின்றன.
எங்கு நோக்கினும்
பரத அரங்கேற்றங்கள்.
அதன் தரதம்மியம்
பற்றி யாரும் பேசுவது இல்லை.
எங்கு நோக்கினும்
அரங்கேற்றம் நிகழ்வதற்கான காரணங்களும் உண்டு.
1.
பாடசாலை
தொடக்கம் பல்கலைக்ழகம் வரை பரதம் கற்பிக்கப்ப்டுகிறது.
2.
ஒவ்வொரு
நடன ஆசிரியரும் பரத கலாலயம் அமைத்து மாணவர்களுக்கு பரதம் கற்பிக்கின்றனர்.
3. மாணவர்களின்
அரங்கேற்றம் மூலம் தம் இருப்பையும் திறனையும் போட்டி போட்டுகொண்டு வெளிப்படுத்த
மிகவும் பாடு படுகின்றனர்.
4. அதிகாரமும் செல்வாக்கும் மிக்க பணக்காரப்
பெற்றோர்கள் கிடைக்கும் நடன ஆசிரியர்கள் மிகுந்த பாக்கியம் செய்தவர்கள்.
5. பெற்றார் செலவில் தமது தயாரிப்புகளைக்
காட்டிவிடுவர்.
6. இதனைக்கும்
மேலால் இது சிலருக்கு அதிக வருமானம் தரும் பெரும் புகழ்தரும் செயலாகவும் மாறிவிட்
ட து.
இவற்றை விட, பரத நடனத்தை அடியொற்றிய நாட்டிய நாடகங்களையும்
அரங்கேற்றுகின்றனர்.
பெரும் பொருட் செலவுகளுடனும்
கண்கவர் ஆடைகள் அலங்காரங்களுடனும் முக்கியஸ்தர்கள்
முன்னிலையில் ஆர்ப்பாட்டமாக இவை நடை பெறுகின்றன.
மழைக்காற்று - ( தொடர்கதை ) - அங்கம் 15 - முருகபூபதி


நிகும்பலை கடற்கரையில் ஒதுங்கியிருந்த ஒரு படகின் அருகில் அமர்ந்தவாறு, செங்கதிரோன் சமுத்திரத்தாயிடத்தில் மூழ்கிக்கொண்டிருக்கும் ரம்மியமான காட்சியை அபிதாவும் சுபாஷினியும் பரவசத்துடன் பார்த்துக்கொண்டிருக்கிறார்கள். கையோடு எடுத்துவந்த ஒரு பிளாஸ்ரிக் விரிப்பை தரையில் விரித்து, தண்ணீர் போத்தல்களையும் மாலையில் சுட்ட பருப்பு வடை சுற்றப்பட்ட சிறிய பொதியையும் அபிதா வைத்தாள். “ முன்னர் இப்படி பிக்னிக்போன அனுபவம் இருக்கிறதா அபிதா..? “ எனக்கேட்டாள் சுபாஷினி. “ அவரும் நானும் தமிழும் முல்லைத்தீவு கடற்கரைக்குச் சென்றிருக்கிறோம். வற்றாப்பளை அம்மன் கோயிலுக்கு போயிருக்கிறோம். அதெல்லாம் முடிந்த கதை. “ அபிதாவிடமிருந்து பெருமூச்சு உதிர்ந்தது. அவர் என்பது அவள்

இலங்கைச் செய்திகள்
வெள்ளை வேன் ; சர்ச்சைக்குரிய கருத்துக்களை வெளியிட்ட இருவருக்கு விளக்கமறியல் நீடிப்பு!
சுவிஸ் தூதரக ஊழியர் கைது
சுவிஸ் தூதரக ஊழியருக்கு விளக்கமறியல்!
இலங்கைக்கு தொடர்ந்தும் ஒத்துழைப்பு வழங்குவதாக சுவிட்சர்லாந்து உறுதி!
சுவிஸ் தூதரக அதிகாரி கடத்தப்பட்டதாக கூறப்படுவது புனையப்பட்ட கதை ; தூதரகத்தின் நடவடிக்கையில் தவறில்லை - தூதுவரிடம் ஜனாதிபதி தெரிவிப்பு
சுவிஸ் தூதரக அதிகாரி விடயத்தில் நானே பாதிக்கப்பட்டவன் - ஜனாதிபதி
காணாமல் போனவர்களை மீளக் கொண்டுவர முடியாது ; குடும்பங்களுக்கு நிவாரணங்களை வழங்கலாம் - ஜனாதிபதி
இலங்கையிடம் சுவிஸ் தூதரகம் விடுத்த கோரிக்கை!
சட்ட விரோத மண் அகழ்விற்கு எதிர்ப்பு தெரிவித்து மக்கள் போராட்டம்
ஜனாதிபதியின் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் போராட்டம்
சட்டவிரோதமான மணல் அகழ்விற்கு யாழில். எதிர்ப்பு ஆர்ப்பாட்டம்
சுவிஸ் தூதரக பெண் அதிகாரியிடம் இன்றும் விசாரணை
வடக்கு ஆளுநராக திருமதி சார்ள்ஸை நியமிக்க ஜனாதிபதி இணக்கம்
செங்கலடி பிரதேச செயலாளரை விசாரணை செய்யக் கோரி மட்டக்களப்பில் ஆர்ப்பாட்டம்!
அடிப்படை உரிமை மீறல் மனுவை தாக்கல் செய்த சி.ஐ.டி.யின் முன்னாள் பணிப்பாளர்!
வெள்ளை வேன் ; சர்ச்சைக்குரிய கருத்துக்களை வெளியிட்ட இருவருக்கு விளக்கமறியல் நீடிப்பு!
16/12/2019 ராஜித சேனாரத்ன அமைச்சராக பதவி வகித்த காலத்தில் தன்னை வெள்ளை வேன் சாரதியாக அறிமுகப்படுத்திக் கொண்டு சர்ச்சைக்குரிய கருத்துக்களை வெளியிட்ட குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்ட இருவரையும் எதிர்வரும் 27 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு தலைமை நீதிவான் உத்தரவிட்டுள்ளார்.
கடந்த நவம்பர் மாதம் 10 ஆம் திகதி கிருலப்பனை - ஹேவ்லொக் வீதியில் உள்ள புதிய ஜனநாயக முன்னணியின் தலைமையகத்தில் ராஜித சேனாரத்ன தலைமையில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு வெள்ளை வேன் தொடர்பில் சர்ச்சைக்குரிய கருத்துக்களை தெரிவித்தபோதே இவர்கள் குற்றப்புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். நன்றி வீரகேசரி
உலகச் செய்திகள்
வைட் தீவில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 16 ஆக உயர்வு!
பாகிஸ்தானின் முன்னாள் ஜனாதிபதி முஷாரஃப்பிற்கு மரணதண்டனை..!
உலக அழகி பட்டத்தை வென்ற ஜமைக்கா மாணவி ; இந்திய அழகிக்கு 3 ஆவது இடம்
சம்சுங் (Samsung) நிறுவனத்தின் தலைவருக்கு 18 மாதம் சிறை
நிறைவேறியது அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்புக்கு எதிரான தீர்மானம்
போயிங் நிறுவனம் மீது 185 மில்லியன் நஷ்டஈடு கோரி வழக்குத் தாக்கல்!
துருக்கி ஆட்சி கவிழ்ப்பு: 181 பேர் கைது!
நியூஸிலாந்தில் 50 ஆயிரத்துக் மேற்பட்ட துப்பாக்கிகள் பறிமுதல்!
இந்தியாவில் குடியுரிமை சட்டத்திற்கு எதிரான போராட்டங்கள்- உத்தரபிரதேசத்தில் 15 பேர் பலி
டொனால்ட் ட்ரம்பை பதவி நீக்கக்கோரும் தீர்மானத்தில் அடுத்தது என்ன?
வைட் தீவில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 16 ஆக உயர்வு!
15/12/2019 நியூஸிலாந்தின், வைட் தீவில் ஏற்பட்ட எரிமலை வெடிப்பினால் உயிரிழந்தோர் தொகை 16 ஆக அதிகரித்துள்ளது.

ஹிட்டான பாட்டு - ச.கண்மணி கணேசன்
.
(1996ல் மதுரை வானொலியில் ஒலிபரப்பான எனது முதல் உரை)
விடுமுறை தொடங்கியவுடன் பிள்ளைகள் விருப்பத்திற்காகப் பொழுது
போக்கத் திரைப்படம் சென்றோம். சம்பந்தமே இல்லாமல் ஒரு பாட்டிற்குள் பத்து முறை உடைமாற்றம்; திடீரென்று குழுநடனம்; கனவுக்காட்சி; ஆழ்ந்து ரசிக்க முடியவில்லை. அரங்கை விட்டு வெளியேறிய போது என் காதில் விழுந்த விமர்சனங்கள்-
“அத்தனை பாட்டும் சூப்பர்ஹிட்டுப்பா”
“பாட்டுக்காகவே இந்தப்படம் ஓடும்”; என்னைப் பாடலை ஊன்றிக்
கேட்க வைத்தன. அப்படி என்ன இருக்கிறது இந்தப் பாடல்களில்?...... தோண்டிப் பார்த்தால்…….
"விஸ்கி பீரு மத்தவன் காசுல ஓசியில் கெடச்சா டோன்ட் மிஸ்ஸு
வேலவெட்டி ஏதுமில்லாம சோறு கெடச்சா டோன்ட் மிஸ்ஸு" பாடலை
எழுதியவர் யாரென்று பார்த்தால்; இனம் புரியா வலி.
இது காந்தி பிறந்த மண்; இங்கே காந்தியை தேசத்தந்தை என்று
அழைக்கிறோம். காந்தீய சிந்தனை என்று பல்கலைக்கழகங்களில் பாடங்களும் துறைகளும் உள்ளன. நானும் அப்பாடத்தைப் படித்திருக்கிறேன்; மாணவர்களுக்கு அப்பாடத்தை நடத்தியும் இருக்கிறேன். காந்தியடிகள் கள்ளுக்கடை மறியல் தான் செய்தார்; அதற்காக விஸ்கி பீரை அடுத்தவன் காசில் வாங்கிக்
குடிப்பது ஒழுக்கச் சீர்கேடு இல்லையா?
" எக்ஸாமு எக்ஸாமு வந்தா எஸ்கேப்பு பண்ணாத சும்மா
பேப்பர் ட்ரேசோ பிட்டு அடிச்சோ பாஸப் பண்ணப்பா"; தவறுதலாகக்
கரண்டில் கைவைத்து விட்டதுபோல் உதறலெடுத்தது. விழிப்புணர்வோடு பாட்டைக் கேட்டேன்.
"டாடி போட்ட ஃபுல்ஹான்ட் ஷர்ட்டுல சில்லரை இருந்தா டோன்ட்
மிஸ்ஸு"
அப்பாவின் பையிலிருந்து மூன்று பேனாக்களைச் சொல்லாமல் கொள்ளாமல்
எடுத்துவிட்டுத் தன் மனசாட்சி உறுத்த பெற்றவரிடம் கடிதமூலம் மன்னிப்புக் கேட்ட தலைவரின் வரலாறைப் பள்ளியில் பாடமாகப் படித்திருக்கிறேன். ஆனால் இன்றோ வளரும் பிள்ளைகள் மனதில்...அப்பா சட்டைச் சில்லரையை எடுக்கச் சொல்லித் தூண்டுகிறோம்- திரைப்படப் பாடல் மூலம்…
முதல் மரியாதை: - திருமதி புவனேஸ்வரி
.

"எப்படியும் இந்தப் படம் ஓடாது. அவர் மறுபடியும் கஷ்டப்படுவார். திரும்பி
வந்து எங்கிட்டதான் பணம் கேட்பார். அதனால் பணத்தை அவரையே வைச்சுக்கச்
சொல்லு..."என்று பாரதிராஜாவிடம் பணம் வாங்க மறுத்த இளையராஜா!
முதல் மரியாதை 1985 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும்.
இயக்குனர் இமயம் பாரதிராஜா இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில்
நடிகர் திலகம் சிவாஜி கணேசன், ராதா, வடிவுக்கரசி மற்றும் பலர்
நடித்திருந்தனர்!இந்தப் படம் வெளியாகி சிறந்த பிராந்திய மொழிப்
படத்துக்கான தேசிய விருதையும், பாடலாசிரியருக்காக கவிஞர் வைரமுத்துக்கு
தேசிய விருதையும் பெற்றுத்தந்தது. ஃபிலிம்ஃபேர் நடிகர் திலகம்
சிவாஜியையும் ராதாவையும் சிறந்த நடிகர், நடிகையாகத் தேர்வு செய்தது.
கல்யாணமான ஒரு நடுத்தர வயது ஆள்,இளம்பெண்ணோடு காதல் கொள்கிறார் என்பது
அப்போதைய காலகட்டத்தில் எவருமே எதிர்பார்க்காத ஒரு முயற்சி! அந்த வயது
ஆட்கள் ஒரே நாளில் அடுத்தடுத்த காட்சிகளுக்குப் போய் கண்ணீர் சிந்திய
கதையெல்லாம் உண்டு.
திருப்பிய பக்கமெல்லாம் சிவாஜியின் நடையும், ராதாவின் சிரிப்பும்
பற்றித்தான் பேச்சு! அந்தச் சிரிப்புக்குச் சொந்தக்காரர் பின்னணி குரல்
கொடுத்த நடிகை ராதிகா என்பது அப்போது எவருக்கும் தெரியாது. காதல்
தோல்வியடைந்த இளசுகள் மைக் செட் போடும் அண்ணன்களிடம் போய் கெஞ்சிக்
கூத்தாடி முதல் மரியாதை பாடல்கள் மறுபடியும் போடச்சொல்லிக்
கெஞ்சுவார்கள். ஒட்டு மொத்த திரையுலகமும் இயக்குநர் பாரதிராஜாவை
அண்ணாந்து பார்க்க வைத்தது.இவை யாவுமே படம் வெளிவந்த பிறகு நடந்த
வரலாற்றுச் சுவடு. ஆனால், படம் தொடங்கி ரிலீஸ் ஆகிறவரை பாரதிராஜா
பட்டபாடு சொல்லி மாளாது!
Subscribe to:
Posts (Atom)