வருடாந்த மாசி மக தேர்த் திருவிழா 12/03/2025
அவுஸ்ரேலிய செய்திகளையும் அறிவித்தல்களையும் விளம்பரங்களையும் தாங்கி வாரம் ஒருமுறை 28/04/2024 - 04/05/ 2025 தமிழ் 16 முரசு 03 tamilmurasu1@gmail.com, murasuau@gmail.com
எப்பொழுதும் எல்லோர்க்கும் இப்புவியில் உதவுதற்கு
முப்பாலை உவந்தளித்தார் முழுமையுடன் வள்ளுவனார்
முப்பொருளைப் பக்குவமாய் முப்பாலும் செப்பியதே
அச்செயலை அகமெண்ணி ஆனந்தம் அடைந்திடுவோம்
வரலாற்றில் பலநூல்கள் வந்துவந்து போகிறதே
வரலாறாய் ஒருநூலே வாழ்ந்தபடி இருக்கிறதே
வரலாறாய் வாழ்வதற்கு வரமதற்கு வாய்த்ததனால்
வள்ளுவவரின் முப்பாலாய் மலர்ந்துமே இருக்கிறதே
இலக்கியங்கள் இலக்கணங்கள் எவ்வளவோ இருக்கிறது
அதைப்படித்த பலபேர்கள் தலைக்கனத்தில் இருக்கின்றார்
தலைக்கனத்தைத் தகர்ப்பதற்கு தகுந்தவொரு மருந்தாக
முப்பாலைக் கொடுத்தாரே முறையாக வள்ளுவனார்
உலகிலே பல மொழிகள் காணப்படுகின்றன. ஒவ்வொரு மொழியும் முக்கியமான மொழிகள்தாம். ஒவ் வொரு மொழிக்கும் ஒவ்வொரு விதமான சிறப்பு இருக்கிறது. ஆனால் எந்த ஒரு மொழிக்குமே இல்லாத சிறப்பினை உலகில் எங்கள் தமிழ் மொழி பெற்றிருக்கிறது. அந்தச் சிறப்புத்தான் " பக்தி இலக்கியம் " என் னும் சிறப்பாகும். பக்தி என்பது - இலக்கியமாக எழுந்திருப்பது உலகமொழிகளில் தமிழ் மொழியில் மட் டுமே என்பதை எல்லா மொழியியல் அறிஞர்களுமே ஏற்றுக் கொள்ளுகிறார்கள். அந்த அளவுக்கு தனித்து வமாய் , வளர்ந்து யாவரும் வியக்கும் வண்ணம் பக்தி இலக்கியம் தமிழில் அமைந்திருக்கிறது என்பது தமிழருக்கெல்லாம் மிகவும் பெருமை அல்லவா !
பக்தி இலக்கிய வரலாற்றை எடுத்து நோக்கினால் தமிழகத்திற்கு தனித்த தொரு இடமுண்டு எனலாம். சைவ நாயன்மார்களும், வைணவ ஆழ்வார்களும் உவந்தளித்த பக்தி இலக்கியத்தால் எங்கள் தமிழ் மொழி " பக்தியின் மொழி " என்னும் சிறப்பினைப் பெற்றது என்பது மறுக்கமுடியாத உண்மை எனலாம். இவர்களின் அருட்பாடல்களால் " பக்தி இலக்கியம் " தமிழின் தமிழ்ச் சமூகத்தின் பெருஞ் சொத்தாக ஆகி விட்டது எனலாம்.
இங்குள்ள கடைகளுக்கு உதயம் பத்திரிகையை முருகபூபதி விநியோகித்த போது
இவரைக்கண்ட ஒருவர்,
“ அவுஸ்திரேலியாவுக்கு வந்த பின்பும் நீர் இந்த வேலையை விடவில்லையா ? “ என்று கேட்டதாக
எனக்கு முருகபூபதி சொன்னார். அவரது பெயரை அறிந்தபோது, அவர் உணவுகளை
வீட்டில் தயாரித்து கடைகளுக்குக் கொடுக்கும் தொழில் செய்பவர் என அறிந்தேன்.
வயிற்றுக்கு உணவு கொடுப்பவர், அறிவை வளர்க்கப்
பத்திரிகையை விநியோகிக்கும் ஒருவரைப் பார்த்து இப்படிக் கேட்டிருக்கிறாரே!
என ஆச்சரியப்பட்டேன்.
“ பத்திரிகையை விட எனக்கு வேறு என்ன தெரியும்? “ என
முருகபூபதி தற்போது அனைத்துலக
பெண்கள் தினத்தில் ஒரு பத்திரிகையாளராக இந்த பெண் ஆளுமைகளை யாதுமாகி இரண்டாம் பாகத்தில்
நமக்கு அறிமுகப்படுத்துகிறார்.
பல வருடங்களுக்கு முன்னர் நடந்த அந்தச்சம்பவத்தை நினைவுபடுத்தியவாறு இந்நூலில் நான் வாசித்துப் பெற்ற அனுபவத்தை இங்கு சமர்ப்பிக்கின்றேன்.
இந்த நூலில் லண்டனில் வதியும் பூங்கோதை என்ற கலா ஶ்ரீரஞ்சனை,
தான் சிறுவயதில் சந்தித்த புவனேஸ்வரி ஆசிரியையின் மகளாகவும், பின்பு
“நிறமில்லாத மனிதர்கள் ” என்ற சிறுகதைத் தொகுப்பின் ஆசிரியராக ஒரு
படைப்பாளியாகவும் நமக்கு அடையாளம்
காட்டியுள்ளார்.
ஒரு பத்திரிகையாளரின் வேலை
அதுவே. சமூகத்தில் முக்கியமானவர்களை எமக்கு கைகாட்டி விடுவதே
அவர்களின் பணி. அத்துடன் அவர்களது
கடமை முடிந்து விடுகிறது. மேற்கொண்டு என்ன செய்வது ? என்பது சமூகத்தைப் பொறுத்தது.
கலா ஶ்ரீரஞ்சனது இலக்கிய விடயங்கள்பற்றி நான் வேறு ஒரு இடத்தில் பேசவேண்டும்.
இங்கே நான் கலாவின் தனித்தன்மையைப்பற்றிப் பேசவேண்டும். இதுவே இங்கு முக்கியமானது .
பலரது மனங்களில் அது பதியவேண்டும் என்பதும் எனது விருப்பம்.
நமது சமூகம் மற்றவர்களது துன்பத்தை உள்வாங்குவது குறைவு . ஏதோ ஒரு விதத்தில் தனது அதிர்ஸ்டத்தை, பலத்தை அல்லது தனது உழைப்பை தனக்குத்தானே மெச்சிக்கொள்ளும். மிகவும் சிலரே தாம் நடந்த பாதையில் , காலில் ஒரு கல்லுத் தடக்கி இரத்தம் வரும்போதும் அந்த இடத்தில் நின்று, அந்தக் கல்லை எடுத்து பாதையிலிருந்து ஓரத்தில் போடுவதுடன், தனக்கு நடந்ததை எடுத்துச் சொல்லி மற்றவர்களுக்கு விழிப்புணர்வைத் தூண்டுவர். இந்த உன்னதமான விடயத்தை செய்பவர்கள் சமூகத்தில் முக்கியமானவர்கள்
பட்டமும் பறக்க நல்லதோர் திட்டம்
பயன்தான் அளித்திடுமே!
பட்டறி வளித்தப் பாடமும்
அதுவே,
பகுத்தே அறிந்திடுவீர்!
திட்டமும் தீட்டும் முன்னரே நமக்கோர்
தெளிந்த பார்வைவேண்டும்!
தீரவே ஆய்ந்துத்
தொடங்கியத் திட்டம்
திறமாய் நிறைவுறுமே!
திட்டமும் ஐந்தைந் தாண்டென அன்று
திறமாய் நடந்ததுதான்;
திரும்பியே பார்த்தால்
அதுவுமே கரைந்தும்,
தேய்ந்தும் போனதன்றோ?
சட்டமும் இயற்றும் ஆள்பவர் இன்றும்
சற்றே சிந்தித்தால்
சார்பிலாத் தன்மை
நிறைந்தவோர் சிறப்பாம்
சட்டம் பிறந்திடுமே!
எம் ஜி ஆருடன் பி. பானுமதி, பத்மினி, சரோஜாதேவி,ஜெயலலிதா
Published By: Digital Desk 2
♦ வீரகத்தி தனபாலசிங்கம்
புலம்பெயர் இலங்கை தமிழ்ச் சமூகத்தின் மத்தியில் வாழும் மூத்த பத்திரிகையாளரும் சிறந்த அரசியல் ஆய்வாளர்களில் ஒருவருமான டி.பி.எஸ். ஜெயராஜ் அண்மைக் காலத்தில் எழுதிய கட்டுரைகள் சிலவற்றின் தமிழ் மொழிபெயர்ப்பு ஒரு நூலாக வெளிவந்திருக்கிறது.
தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுரா குமார திசாநாயக்க கடந்த வருடம் செப்டெம்பரில் இலங்கையின் ஜனாதிபதியாக பதவியேற்ற பிறகு அவரது ஆரம்பகால வாழ்க்கை மற்றும் அரசியல் எழுச்சி குறித்து ஆறு கட்டுரைகளையும் பாராளுமன்ற தேர்தலில் தேசிய மக்கள் சக்தி வடக்கு, கிழக்கு மாகாணங்களில் பெற்ற வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த வெற்றி குறித்து மூன்று கட்டுரைகளையும் ஜெயராஜ் எழுதியிருந்தார். அவற்றின் இந்த மொழிபெயர்ப்பு நூலுக்கு ' அரசியல் அதிகாரத்தின் வர்க்க மாற்றம் ; இலங்கையின் முதலாவது இடதுசாரி ஜனாதிபதி அநுரா குமார திசாநாயக்க ' என்று தலைப்பு.
இத்தகையதொரு நூல் வெளிவரப்போகிறது என்று முன்கூட்டியே அறிந்துகொண்ட ஜெயராஜின் எழுத்துக்களை பற்றி நன்கு தெரிந்த அரசியல் ஆர்வலர்களும் ஊடகவியலாளர்களும் அவர் இலங்கையில் ஏற்பட்ட ஆட்சிமாற்றம் குறித்து மார்க்சியப் பார்வையில் வர்க்க அடிப்படையிலான ஆய்வு ஒன்றைச் செய்து எழுதியிருக்கிறாரா என்று பதிப்பாளர்களிடம் வினவினார்கள். கொழும்பு தமிழ்ச்சங்க மண்டபத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை (9/3) மாலை நடைபெற்ற நூல் வெளியீட்டு நிகழ்விலும் அந்த கேள்வி எழுந்தது. குறிப்பாக, அங்கு உரையாற்றிய சமூக, அரசியல் மற்றும் மனித உரிமைகள் செயற்பாட்டாளரான சுவஸ்திகா அருலிங்கம் அந்த விடயம் குறித்து ஒரு வகையான விமர்சன அடிப்படையில் கருத்து வெளியிட்டார்.
ஆர நவமணி மாலைகள் ஆட
ஆடும் அரவம் படம் விரித்தாட
சீரணி கொன்றை மலர்த்தொடை ஆட
சிதம்பரத்தோர் ஆட
பேரணி வேதியர் தில்லை
மூவாயிரம் பேர்களும்
பூசித்துக்கொண்டு
நின்றாட
காரணி காளி எதிர்த்து நின்றாட
கனகசபை தனிலே…
என நர்த்தனம் புரியும் நடராஜரை தில்லையம்பதியிலே தரிசிக்க, பலகாலம் ஆசை கொண்டேன். சிறுமியாக ஆடல் கலையை கற்று, அந்த ஆடல்வல்லானையே நித்தம் ஆடல் தெய்வமாக வணங்கிப் பயின்ற என் மனதிலே சிதம்பரம் போய் நடராஜரை தரிசிக்க வேண்டும் என்ற ஆவா வளர்ந்தது. மேலும் ஆழமாக ஆடலைக் கற்று ஆய்வுகள் மேற்கொண்ட காலத்திலே, தில்லை சிதம்பரக் கோயில் கோபுர வாசலிலே, நாட்டிய சாஸ்திர நூலிலே வர்ணிக்கப்பட்ட நடன நிலைகள் சிலைகளாக வடிக்கப்பட்டுள்ளதையும் அறிந்தமையால் மேலும் ஆவல் பெருகியது. இறுதியாக அந்த நாளும் வந்தது.
உள்ளூராட்சி மன்றத் தேர்தல்: இம்முறை 155,976 பேர் புதிய வாக்காளர்கள் - தேர்தல்கள் ஆணைக்குழு
தையிட்டி சட்டவிரோத திஸ்ஸ விகாரை கட்டுமானத்திற்கு எதிராக போராட்டம்
உலக குளுக்கோமா வாரத்தை முன்னிட்டு யாழில் விழிப்புணர்வு நடைபவனி!
அநுராதபுரம் வைத்தியசாலையின் பெண் வைத்தியர் மீது பாலியல் துஷ்பிரயோகம் ; பிரதான சந்தேக நபரின் சகோதரி உட்பட இருவர் கைது
அநுராதபுரம் போதனா வைத்தியசாலை பணிப்புறக்கணிப்பு போராட்டம் நிறைவுக்கு வந்தது
உள்ளூராட்சி மன்றத் தேர்தல்: இம்முறை 155,976 பேர் புதிய வாக்காளர்கள் - தேர்தல்கள் ஆணைக்குழு
Published By: Vishnu
(இராஜதுரை ஹஷான்)
உள்ளூராட்சிமன்றத் தேர்தலில் வாக்களிப்பதற்கு இம்முறை 1 கோடியே 72 இலட்சத்து 96,330 பேர் வாக்களிக்க தகுதிப்பெற்றுள்ளனர். இவர்களில் 155,976 பேர் முதல் தடவையாக வாக்களிக்க தகுதிப் பெற்றுள்ளனர் என்று தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
போர் நிறுத்தத்துக்கு ஒப்புக் கொள்கிறோம் ஆனால்.. ’ - புட்டின் நிபந்தனைகள்
உக்ரைன் 30 நாள் யுத்தநிறுத்தத்திற்கு தயார் - பாதுகாப்பு உதவிகளை வழங்குவதை மீண்டும் ஆரம்பித்தது அமெரிக்கா
பனாமா கால்வாயை முழுமையான கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவருவது எப்படி?அமெரிக்க இராணுவத்திடம் ஆலோசனை கேட்டார் டிரம்ப்
பிலிப்பைன்ஸின் முன்னாள் ஜனாதிபதி ரொட்ரிகோ டுடேர்டே கைது
கனடாவின் அடுத்த பிரதமராக மார்க் கார்னே தெரிவு
போர் நிறுத்தத்துக்கு ஒப்புக் கொள்கிறோம் ஆனால்.. ’ - புட்டின் நிபந்தனைகள்
“30 நாட்கள் போர் நிறுத்தம் என்ற அமெரிக்காவின் பரிந்துரையை நாங்கள் ஏற்கிறோம். ஆனால் அதற்கு முன்னர் சில பிரச்சினைகளைக் களைய வேண்டும்.” என்று ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் தெரிவித்துள்ளார்.