மகாதேவ ஐயர் ஜெயராமமசர்மா
மேனாள் தமிழ்மொழிக் கல்வி இயக்குநர்
மெல்பேண் .... அவுஸ்திரேலியா
சமயம் என்றால் என்ன ? சமயம் என்றாலே கடவுள் நெறி பற்றிச்
சொல்லுவதா ? என்னும் ஐயம் எழுவது இயல்பா னதுதான். இதனால் சமயம் என்றால் என்ன வென்று ஒரு தெளிவு அவசியமாய் வேண்டப்படுகிறது அல்லவா ! சம யம் என்றால் " மக்கள் ஆன்மலாபத்தை அடைதற்குரிய வழியைத் தெரிவிப்பதே " என்று சொல்லப்படுகிறது. கடவுள் நெறி பற்றிக் கண்டு கொள்ளாமலே சமயம் என்று சொல்லிக் கொள் ளும் நெறிகளும் காணப்படுகின்றன என்பதும் நோக்கத்தக்கது.
சமயங்கள் யாவுமே கடவுள் கொள்கையினை ஏற்றுக் கொண்டுள்ளனவா என்பதிலும் தடுமாற்றம் காணப்படுகி றது. சமயங்கள் என்று பெயரளவில் இருந்தாலும் கடவுள் என்னும் சிந்தனையினைத் தொடாதன வாகவும் சமயங்கள் இருப்பதையும் காணமுடிகிறது.
கடவுள் கொள்கையினுக்கு முதன்மை கொடுக்காமல் ஓரளவு நிலையில் ஒத்துக் கொள்ளும் சமயங்களும் இருக்கின்றன.அதேவேளை சமயம் என்னும் பெயரில் இந்தியாவில் தோற்றம் பெற்ற பெளத்தமோ , சமணமோ கட வுள் என்னும் கருத்தை ஏற்றிடாச் சமயங்களாகவே இருக்கின்றன. தர்க்கம் வேறு. தத்து வம் வேறு. தர்க்கிப்பது என்பதை மூலமாய்க் கொண்ட னவே பெளத்தமும் , சமணமும். தத்துவத்தை முதன்மைப் படுத்தும் சமயங்கள் நிலை வேறாய் அமைகிறது. அந்த வகையில் சைவசமயமானது சைவசித்தாந்தம் என்னும் தத்துவத்தை முழுமையாக்கி கடவுள் நெறியினை வலிமையாக்கி நிற்கிறது என்பதைக் கருத்திருத்தல் அவசிய மாகும்.
உலகில் பிறக்கின்ற உயிர்களின் நிலையினை மையபடுத்தி சமயங்களின் நிலையினை நோக்குதல் அவசிய மாகிறது.எல்லாச் சமயங்களுமே உயிரின் இறுதி நிலை என்ன என்பது பற்றி எடுத்துக் கொள்ளு வதில் நாட்டம் உடையனவாக இருக்கின்றன என்பதும் கருத்திருத்த வேண்டியதே.இந்த நோக்கில் பார்க்கின்ற பொழுது ; உயிரின் முடிந்த பயன் என்பது " முத்தி " அல்லது " வீடுபேறு " என்னும் நிலைக்குள் வந்து விடுகின்றன. ஆனால் இதிலும் ஒருமித்த நிலை இல்லை என்றே ஆகிறது. அந்தந்த சமயத்தின் நிலைக்கு ஏற்பவே இந்த " முத்தி " என்பதும் எடுக் கப்படுகிறது என்பதும் மனங்கொள்ளத்தக்கது.

.jpeg)
.jpeg)

%20%E0%AE%8E%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%20%20%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D%20%E0%AE%95%E0%AF%8A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D.jpg)
.jpg)













.jpg)