அவுஸ்ரேலிய தமிழ் ஒலிபரப்புக்கூட்டுத்தாபனத்தின் ஒன்று கூடல்
.
சென்ற ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற அவுஸ்ரேலிய தமிழ் ஒலிபரப்புக்கூட்டுத்தாபனத்தின் நத்தார் இரவு ஒன்றுகூடலில் 80 பதற்கும் மேற்பட்ட நிகழ்ச்சித் தயாரிப்பாளர்கள் அறிவிப்பாளர்கள் தொழில் நுட்பவியலாளர்கள் என்போர் கலந்து கொண்டு சிறப்பித்திருந்தார்கள். சிலரால் வருகைதரமுடியாதிருந்தாலும் பலர் பங்கேற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.
வருடாவருடம் அவுஸ்ரேலிய தமிழ் ஒலிபரப்புக்கூட்டுத்தாபனம் என்ற குடும்பத்தினர் ஒன்றுகூடி உணவருந்தி மகிழும் நிகழ்வு இடம் பெறுவது வழமையானது. 2013 ம் ஆண்டிற்கான அந்தநிகழ்வின் படங்களில் சிலவற்றை கீழே காணலாம்.
மார்கழி மாத சிறப்புக்கள் -டாக்டர் சந்திரிகா சுப்ரண்யன்
.
பீடை மாதம் என்ற அடை மொழியோடு ஒதுக்கப்பட்ட மாதமா?
பீடை மாதம் என்ற அடை மொழியோடு அழைக்கப் படும் மார்கழி மாதம் உண்மையிலே ஒதுக்கப்பட்ட மாதமா? பீடு அதாவது பன்னிரு மாதங்களில் மார்கழி பெருமை கொண்ட மாதம் என்பதே மருவி பீடை மாதம் என்றாகியாது என்றே கொள்ள வேண்டும்.
சூரியனின் இயக்கம் வடக்கு நோக்கி தெற்கு நோக்கி நடக்கும். அந்த இயக்கம் அயனம் – பயணம் எனப்படும்.. கதிரவன் தெற்கு நோக்கி இயங்குவது தட்சிணாயனம். வடக்கு நோக்கி இயங்குவது உத்தராயனம். பின் தை மாதத்தில் உத்தராயனம் தொடங்கும். தட்சிணாயனத்தின் கடைசி மாதம் மார்கழி.
தை மாதம் உழவர் வயலின் விளை பொருட்களை வீட்டுக்கு கொண்டு வரும் திரு நாளாம் பொங்கல் நடக்க இருப்பதால் தட்சிணாயனத்தின் கடைசி மாதம் மார்கழியில் அவை தொடர்பான வயல் சார்ந்த அறுவடை முதலான தொழில்களில் மிகுந்த நேரம் செலவிட இருக்கிற காரணத்தினால் வேறு விசேடங்களுக்கு நேரம் ஒதுக்குவதில்லை.உண்மையில் உணவு முதலான தானியங்களை சேமிக்கும் மாதம் இதுவாகும்.
பிரியாணி படம் என் பார்வையில் - கனா பிரபா
.
மயிரிழையில் தப்பிப் பிழைத்திருக்கிறது வெங்கட் பிரபு டீம். மலையாளத்தில் வந்த த்ரில்லர் படங்கள், குறிப்பாக அண்மையில் பிருத்விராஜ் நடிப்பில் வந்த "Memories" போன்ற படங்களைப் பார்த்துப் பழகிய ரசிகனுக்கு பிரியாணி ஒரு வெறுஞ்சோறு ஆகவே படும். நல்ல கதையம்சமுள்ள படங்களைத் தனியாகவும், முழு நீள மசாலாப் படங்களைத் தனியாகவும் வைத்துப் பார்த்து ரசிப்பதில் தப்பேதுமில்லை. ஆனால் முழு நீள மசாலா என்ற பெயரில் வழக்கமான இரவு விடுதி, இரட்டை அர்த்த வசனங்கள், மது போதைக் கொட்டங்களையே அரைவாசி வரை காட்டி கொஞ்சூண்டு விறுவிறுப்பைக் கடைசிக் காட்சியில் காட்டிப் புண்ணியம் தேடிக்கொண்டிருக்கிறது.
யுவன் ஷங்கர் ராஜாவின் 100 வது படம் என்ற பெருமையை மட்டும் கொண்டிருக்கிறது. ஆரம்பம் உள்ளிட்ட இவரின் சமீப சறுக்கல்களைப் பொறுப்போடு கவனிக்க வேண்டும்.
பருத்தி வீரனோடு தொலைந்த கார்த்தியை இயக்குனர் பாலா போன்றவர்களிடம் கொடுத்து மீட்டெடுக்க வேண்டிய அவசியம் மீண்டும் உணரப்படுகின்றது.
நடிகர் ராம்கிக்கு மீள் வரவாக அமைந்த இந்தப் படத்தில் அந்த சிபிஐ அதிகாரியாக இவரையே போட்டிருந்தால் எவ்வளவு கம்பீரமாக இருந்திருக்கும், இன்னொரு துணை நடிகராகப் பயன்பட்டிருக்கிறார்.

இலங்கைச் செய்திகள்
யாழில் மலேரியா தடுப்பு
இலங்கையில் கஞ்சா போதைப்பொருள் பாவனையாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு
மன்னார் தாழ்வுபாட்டு கிராமத்தில் 50 இலட்சம் ரூபாய் பெறுமதியான கஞ்சா போதைப்பொருள் மீட்பு
தெஹிவளையில் மூன்று பள்ளிகளில் தொழுகைகளுக்கு பொலிஸார் தடை : மறுக்கின்றார் பேச்சாளர்
வவுனியா அட்டம்பகஸ்கட சிறுவர் இல்லத்தை மறு அறிவித்தல்வரை மூடுவதற்கு உத்தரவு
உள்நாட்டு, வெளிநாட்டுக் கலைஞர்கள் வழங்கும் மாபெரும் பரத நாட்டிய நிகழ்வு
யாழில் மலேரியா தடுப்பு
16/12/2013

சங்கானை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் இருந்து இந்தியாவுக்கு பயணத்தை
மேற்க் கொள்பவர்களுக்க மலேரியா கட்டுப்பாட்டு மருந்து குளிகை கொடுக்கும்
நடவடிக்கைகள் சுகாதார வைத்தியதிகாரியினால் மேற்க்கொள்ளப்படவுள்ளது.
தமிழ் மாணவி மாதுமையை தமிழ்முரசு வாழ்த்துகிறது
.
HSC நடந்து முடிந்து விட்டது. பல மாணவர்கள் குதூகலித்துக் கொண்டிருப்பார்கள். இந்த வேளையில் தமிழ் பாடத்தில் அதி உயர் புள்ளியைப் பெற்று Minster for Education Adrian Piccoli யிடமிருந்து விருதினைப் பெற்ற பெருமையை பெற்றிருக்கிறார் செல்வி மாதுமை கோணேஸ்வரன். இவரை வாசகர்கள் சார்பாக தமிழ்முரசு வாழ்த்துகிறது.
இவரை பயிற்றுவித்த கோம்புஸ் தமிழ் கல்விநிலயத்தையும் ஆசிரியர்களையும் பாராட்டுவதோடு ஊக்கமளித்த பெற்றோரையும் பாராட்டுகிறோம் .
112 பாடங்களுக்கு 121 பிள்ளைகள் அதிஉயர் புள்ளிகளை பெற்றிருக்கின்றார்கள். இவர்களில் 83 பெண்களும் 38 ஆண்களும் என்பது குறிப்பிடத்தக்கது.

திரும்பிப்பார்க்கின்றேன் - 20 -முருகபூபதி
.
இதுவரையில்
எழுதியதைப்படியுங்கள் எனச்சென்ன
ஆளுமை ஜெயகாந்தன்
தமிழ்நாடு
இடைசெவல் கிராமத்தில் கி.ராஜநாராயணனை 1984 இல் சந்தித்தபொழுது, சென்னையில்
'ஜெயகாந்தனை பார்க்கவில்லையா?" என்று கேட்டார்.
' இல்லை.
அவரைப்பார்ப்பதற்கு ஏதோ
தயக்கம். அவர்
மிகவும் கோபக்காரர் என்று
சிலர் சொல்லிக்கேள்விப்பட்டிருக்கிறேன். அதனால் அவரைச்சந்திப்பதில் எனக்கு
ஆர்வம் இருக்கவில்லை" என்றேன்.
' உங்கள் கணிப்பு தவறு.
அவர் பழகுவதற்கு இனியவர்.
அவரைச்சீண்டினால் என்ன எவரைச்சீண்டினாலும் கோபம்
வருவது இயல்புதானே. சென்னையிலிருந்து வெகு தூரம்
என்னைப்பார்க்க வந்திருக்கிறீர்கள்.
ஆனால் - அவரைப்பார்க்கத்தவறிவிட்டீர்களே... நீங்கள் திரும்பிச்செல்லும்பொழுது அவரையும் சென்னையில் பாருங்கள்." என்றார் கி.ரா.
'மதுரைக்குத்திரும்பி
அங்கிருந்து இராமேஸ்வரம் சென்று கப்பல் மார்க்கமாக இலங்கை திரும்புகின்றேன். அடுத்ததடவை வரும்பொழுது நிச்சயம் ஜெயகாந்தனை
சந்திப்பேன்." என்று அவரிடம் சொன்னவாறு
- மீண்டும் தமிழகத்திற்கு 1990 ஏப்ரிலில்
சென்றவேளையில் நான் அவுஸ்திரேலியா
வாசியாகியிருந்தேன்.
தமிழ் பேசுவோம் தமிழில் மட்டும் பேசுவோம்
.
தமிழை கலப்பில்லா
தமிழை கலப்பில்லா மல் பேசவேண்டிய அவசியத்தை பற்றி சிந்திக்கவை க்கும் குறும்படம்
வரலாற்றுத் தடங்கள் – கட்டுரை -- ஷம்மிக்கா
.
நேற்று பிரான்ஸ் நாட்டிலிருந்து ஊரைச்
சுற்றிப்பார்ப்பதற்காக இலங்கை சென்றிருந்த நண்பன் குகநேசனுடன் உரையாடியதன் மூலம்
அந்தச் சம்பவம் மீண்டும் புத்துயிர் பெறுகின்றது.
அது நடந்து நாற்பது வருடங்கள் கடந்துவிட்டன.
●
அன்று அலுமினியம் தொழிற்சாலைக்கு வேலைக்குப் போயிருந்த
இராசன் அண்ணை மதியம் சாப்பிட வீட்டிற்கு வந்தபோது அந்த அதிசயத் தகவலைச் சொன்னார்.
அலுமினியம் தொழிற்சாலை, மாவிட்டபுரம் கந்தசாமி கோவில் இருக்கும் பிரதேசத்தில்
இருந்து கீரிமலைக்குப் போகும் பாதையில் அமைந்துள்ளது.
சீமெந்துத்தொழிற்சாலைக்கு சுண்ணாம்புக்கற்கள்
அகழ்ந்தெடுக்கும்போது அந்த அதிசய சம்பவம் நடந்தது. குவாறியில் டைனமற்
வெடிக்கும்போது சிதறியகற்களுடன் நீரும் சீறிப் பாய்ந்தது. சிலநிமிடங்கள் நீடித்த
அந்தக்காட்சியில், வானோக்கிப் பாய்ந்த நீர் மாவிட்டபுரம் கோபுரமளவிற்கு உயர்ந்ததை
தான் அலுமினியம் தொழிற்சாலையில் இருந்து பார்த்ததாக அண்ணா சொன்னார். வெடித்த
இடத்தில் ஒரு பெரிய குகை இருந்ததாகவும்
அது முடிவில்லாமல் சுரங்கமாகப் போவதும் ஒரு வரலாற்றுப்புதுமை என்றும் சொன்னார்.
அண்ணை சொல்லிவிட்டு தன்பாட்டில் மீண்டும் வேலைக்குப் போய்விட்டார். அவர் சொன்ன
எல்லாவற்றையும் அமைதியாகக் கேட்டுக்கொண்டிருந்தார் அவருக்கு இளையவரான எனது அடுத்த
அண்ணன் ஆனந்தன்.
தெளிவத்தை ஜோசப்பின் - மனிதர்கள் நல்லவர்கள் -நயப்புரை
.
முருகபூபதி
இந்த ஆண்டு தமிழகத்தின்
விஷ்ணுபுரம் விருதைப்பெற்றுக்கொள்ளும் தெளிவத்தை
ஜோசப் இலங்கை மலையகத்தின் மூத்த எழுத்தாளர். இவரை உங்களில் பலர் 2009 ஆம் ஆண்டு நாம் அவுஸ்திரேலியாவில் நடத்திய ஒன்பதாவது எழுத்தாளர் விழாவில் சந்தித்திருப்பீர்கள்.
வெகு சுவாரஸ்யமாகப்பேசுவார். அவரது எழுத்துக்களும்
சுவாரஸ்யமானவை.
மனிதர்கள் நல்லவர்கள் என்ற சிறுகதையை அவர் மல்லிகையில் பல வருடங்களுக்கு முன்னர் எழுதியிருக்கிறார். காலத்தை முந்திய கதையென்றாலும் மனித உணர்வுகள் இன்றும்
அப்படியே வௌ;வேறு வடிவங்களில்தான் இருக்கின்றன. அதனால் காலத்தை வென்றும் வாழும் கதையாக என்னை கவர்ந்தது.
அனைவரும் ஒன்றாகிக்களிக்க ஏதாவது ஒரு பண்டிகை வரவேண்டியிருக்கிறது.
அது தீபாவளி இந்தக்கதையில்.
இங்கு நாமும் ஒன்றாக கூடிக்களிக்க இந்த அமர்வு தேவையாக இருக்கிறது.
அவுஸ்திரேலியாவின் இயந்திரமயமான வாழ்க்கை வாழும்
எம்மவருக்கும் குடும்ப ஒன்று கூடல்கள் வாராந்தம் அல்லது மாதாந்தம் அல்லது வருடாந்தம் தேவையாக
இருக்கிறது.
இலங்கையில் மலையகத்தில் பண்டிகைகள்தான் உறவினர்கள் ஒன்று
கூடுவதற்கு சிறந்த நிகழ்வாகியிருக்கிறது என்பதை கதையின் தொடக்கத்திலேயே சொல்லிவிடுகிறார்.
அடுத்த வரியை பாருங்கள்:
பஸ்ஸில் ரயிலில் தியேட்டரில் ஒரு நல்ல இடம்பிடித்துக்கொள்வதற்கு முட்டிமோதும் அளவுக்கு
வாழ்க்கையில் ஒரு நல்ல இடம் பிடிப்பதற்கு நம் மக்கள் முட்டுவதில்லை. மோதுவதில்லை. இந்த
அங்கதம் எந்தவொரு நாட்டு மக்களுக்கும் பொருந்துகிறது.
உலகச் செய்திகள்
விண்வெளிக்கு இரண்டாவது தடவையாக குரங்கை வெற்றிகரமாக அனுப்பிய ஈரான்
துண்டிக்கப்பட்ட கரத்தை ஒரு மாதத்தின் பின் பொருத்தி சீன மருத்துவர்கள் சாதனை
ஈராக்கில் ஷியா யாத்திரீகர்கள் மீது தாக்குதல்: 66 பேர் பலி
முசாபர்நகர் நிவாரண முகாம்களில் தங்கியிருந்த 30 குழந்தைகள் பலி
பண மோகத்தால் இளைஞரை பிணமாக்கிய பெண்கள்
சோமாலியாவில் 4 மருத்துவர்கள் சுட்டுக்கொலை
தென் சூடானிய பிரதான நகரை கைப்பற்றிய கிளர்ச்சியாளர்கள்
=======================================================================
விண்வெளிக்கு இரண்டாவது தடவையாக குரங்கை வெற்றிகரமாக அனுப்பிய ஈரான்
துண்டிக்கப்பட்ட கரத்தை ஒரு மாதத்தின் பின் பொருத்தி சீன மருத்துவர்கள் சாதனை
ஈராக்கில் ஷியா யாத்திரீகர்கள் மீது தாக்குதல்: 66 பேர் பலி
தென் சூடானிய தலைநகரில் உக்கிர மோதல்: 26 பேர் பலி; 130 பேர் காயம்
முசாபர்நகர் நிவாரண முகாம்களில் தங்கியிருந்த 30 குழந்தைகள் பலி
பண மோகத்தால் இளைஞரை பிணமாக்கிய பெண்கள்
சோமாலியாவில் 4 மருத்துவர்கள் சுட்டுக்கொலை
தென் சூடானிய பிரதான நகரை கைப்பற்றிய கிளர்ச்சியாளர்கள்
=======================================================================
விண்வெளிக்கு இரண்டாவது தடவையாக குரங்கை வெற்றிகரமாக அனுப்பிய ஈரான்
16/12/2013 ஈரானானது
விண்வெளிக்கு மனிதருடனான பயணத்தை முன்னெடுப்பதற்கான தனது
நிகழ்ச்சித்திட்டத்தின் அங்கமாக இந்த வருடத்தில் இரண்டாவது
தடவையாக குரங்கொன்றை வெற்றிகரமாக அனுப்பி வைத்துள்ளதாக
அந்நாட்டு ஜனாதிபதி ஹஸன் ரோவ்ஹானி தெரிவித்தார்.
பர்காம் என்ற மேற்படி குரங்கு விண்வெளியில் ஆரோக்கியமாகவுள்ளதாக அவர் கூறினார்.

அந்நாடு இதற்கு முன் முதல் தடவையாக குரங்கொன்றை விண்வெளிக்கு
அனுப்பிய போது, அனுப்பப்பட்ட குரங்கு ஒன்றாகவும் தரையிறங்கிய
குரங்கு வேறொன்றாகவும் காட்டப்பட்டமை பெரும் சர்ச்சையை
ஏற்படுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
ஈரானானது தனது விண்வெளி நிகழ்ச்சித் திட்டத்தை ஏவுகணை
தாக்குதல்களுக்கு பயன்படுத்தக்கூடும் என மேற்குலக நாடுகள் அச்சம்
கொண்டுள்ளன.
இந் நிலையில் விண்வெளிக்கு குரங்கை அனுப்பும் செயற்கிரமத்தில்
பங்கேற்ற விஞ்ஞானிகளுக்கு ஈரானிய ஜனாதிபதி பாராட்டைத் தெரிவித்துள்ளார். நன்றி வீரகேசரி
மனிதர்கள் நல்லவர்கள் -சிறுகதை --தெளிவத்தை ஜோசப்
.
நாளைக்குத் தீபாவளி .
பண்டிகை நெரிசலில் பஸ் திணறியது.
கை நிறைந்த பைகளும், பை நிறைந்த சாமான்களுமாய், ஆட்கள் முட்டி மோதிக்கொண்டிருந்தனர்.
உத்தியோகம் என்று பிரித்துவிட்ட பிறகு பெற்றவர் பிள்ளைகளுடன் கணவன் மனைவி மக்களுடனும் – உற்றார் உறவினருடனும் ஒன்றாகிக் களிக்க ஏதாவது ஒரு பண்டிகை வரவேண்டியிருக்கிறது.
“இந்த பஸ்சை விட்டாச்சுன்னா அடுத்தது அஞ்சுக்குத்தான்” என்றபடி தனது முழுப்பலத்தையும் காட்டி ஒருவர் முண்டி முன்னேறுகிறார்.
பஸ்ஸில் – ரயிலில் – தியேட்டரில் ஒரு நல்ல இடம் பிடித்துக் கொள்வதற்கு முட்டி மோதும் அளவுக்கு வாழ்க்கையில் ஒரு நல்ல இடம் பிடிப்பதற்கு நம் மக்கள் முட்டுவதில்லை. மோதுவதில்லை.
மரண அறிவித்தல்
.
திருமதி சகிதேவி கந்தையா |
(இளைப்பாறிய ஆசிரியர்- இராமநாதன் கல்லூரி) |
இறப்பு : 12 டிசெம்பர் 2013 |
|
மரண சடங்குகள் பாரதி மண்டேலா - ஜீவகுமாரன்
.

பிறப்பு - 11-12-1882 18-07-1918
இறப்பு - 11-09-1921 05-12-2013
வயது - 39 95
மரணத்தில் கலந்து கொண்டோர் 14 பேர் மட்டும் . நூற்றுக்கு மேற்ப்பட்ட உலகத்தலைவர்கள் லட்ச்சக்கணக்கான மக்கள்
ஒருவர் சுதந்திரப் போராட்ட வீரர். கவிஞர் - பத்திரிகை ஆசிரியர் - எழுத்தாளர் - பன்மொழி வித்தகர்
மற்றவர் உலகம் தலைவணங்கும் அரசியல்வாதி.
ஒருவர் இந்தியாவின் விடுதலையையையும் சமாதானத்தையும் கனவு கண்டவர்.
மற்றவர் தென் ஆபிரிக்காவிற்கு விடுதலையையும் பெற்று உலக சமாதானத்திற்கான நோபல் பரிசையும் பெற்றவர்.
இருவரும் வாழ்ந்த காலங்களும் வாழ்ந்த வயதுகளும் மிகவும் மாறுபட்டது. இரண்டு காலங்களிலும் உலக அரசியலின் நிலைப்பாடுகளும் வேறுவேறானவையே.
மண்டலேவின் மொழி பேச்சாய் இருந்தது. இசையும் நாட்டியமும் அவருக்கு இயற்கையிலேயே இருந்தது. அதில் அரசியல் மட்டும் இருந்தது. அத்துடன் அரசியல் பின்பலமும் இருந்தது. எனவே மக்களை இலகுவில் சென்று அடையக் கூடியதாய் இருந்தது.

தமிழ் சினிமா
பிரியாணி – விமர்சனம்

பிரியாணி என்றாலே எல்லோரையும் கவர்ந்து சுண்டி இழுத்து நமது
வாயில் ஜிராவை கசிய விடும் தன்மை கொண்டது என்பது அறிந்து விஷயம். இதுபோல்
பல மாதிரியான பிரியாணியை பார்த்து ரசித்து ருசித்த நமக்கு வெங்கட்பிரபுவின்
கைவண்ணத்தில் தயாரான பிரியாணி ஒரு கட்டு கட்டும் வகையில் அமைந்து
இருக்கிறது .
கட்டி முடிக்காத பாலத்தில் இருந்து படு வேகமாக காரில் ஹய் ஜம்ப்பில்
அந்தரத்தில் கார் பறக்கும் போது பிரேம்ஜியின் வழியில் தான் கதை
ஆரம்பமாகிறது. தோழன் உயிர் காப்பான் ஆனால் பிரேம்ஜியின் தோழனான கார்த்தி
என் உயிர் மட்டுமே எடுப்பான் என ஏக பில்டப்போடு ஃப்ளாஷ்பேக் சொல்ல
துவங்குகிறார் பிரேம்ஜி , கார்த்தியும் பிரேம்ஜி இருவருமே சின்ன
வயதிலிருந்தே நண்பர் பிரேம்ஜி கரெக்ட் செய்ய நினைக்கும் பெண்களையெல்லாம்
கார்த்தி கரெக்ட் செய்துவிட அவ நல்ல பொண்ணு இல்ல மச்சி என்று பிரேம்ஜியை
சமாதான வார்த்தை சொல்லி எஸ்கேப் ஆகி ப்ளேபாய் கேரக்டரில் எல்லா பெண்களையும்
சொல்லி அடிக்கிறார் கார்த்தி. எல்லாவற்றையும் சகித்து கொண்டு நட்பின்
இலக்கணமாக கடைசி வரை கூடவே வருகிறார் பிரேம்ஜி.
வழக்கம் போல் குடி,கும்மாளம் என கதை நகர்கிறது. கார்த்தியின் மாமாவாக
வரும் சுப்பு மேனஜராக இருக்கும் கம்பெனியில்தான் கார்த்தியும்,
பிரேம்ஜியும் வேலை பார்க்கிறார்கள். நாசர் இந்தியாவின் டாப் 10 தொழில்
அதிபர்களில் ஒருவர், அவருடைய மருமகனாக ராம்கி. சுப்புவின் கம்பெனியில்
நடக்கும் ஒரு விழாவுக்கு நாசர் வர அங்கே ஒரு சந்தர்ப்பத்தில் கார்த்தியின்
அறிமுகம் நாசர்க்கு கிடைக்கிறது.
பிறகு வழக்கம்போல பார், பார்ட்டி என நகர்கிறது கதை. ஒரு சமயத்தில்
கார்த்தியும், பிரேம்ஜியும் ஃபுல் போதையில், பிரியாணி கடையை தேடும்போதுதான்
ஒரு செம ஃபிகர் கதையில் எண்ட்ரி ஆகிறார். கார்த்தியை பற்றி சொல்லவே
வேண்டாம் பிரேம்ஜி ஆளையே கரைக்ட் செய்யும் இவர் இப்படி ஒரு லெக் பீஸ்
கிடைச்சா விடுவாரா. அந்த ஃபிகரை பின் தொடர்ந்து செல்கிறார்கள் இருவரும்.
அப்போது தான் இவர்களின் ஆனந்த வாழ்க்கையில் தோனி சிக்சர் அடிச்ச மாதிரி
வாயை பிளக்க வைக்கிறது இவர்கள் செய்யும் கொலை. அந்த கொலையை நாங்க பண்ணல
என்று கார்த்தியும், பிரேம்ஜியும் சொல்ல போலீஸ் இவர்களை நுங்கு எடுப்பதற்கு
பதிலாக கார்த்தி போலீஸை புரட்டி எடுத்துவிட்டு எஸ்கேப் ஆகிறார். யார் அந்த
கொலையை செய்தது அதில் நாம் எப்படி மாட்டினோம் என்று இரண்டாம் பாதியில் தீ
மிதிக்கும் பக்தன் போல அவ்வளவு வேகமாக சொல்லியிருக்கிறார் இயக்குநர்.
இந்த படத்தில் ஹன்சிகாவுக்கு அவ்வளவு வேலை பளுவை தரவில்லை வெங்கட்
பிரபு. பதிலுக்கு உமா ரியாஸ் விஜயசாந்தியின் ஒன்னு விட்ட தங்கச்சியோ என
என்னும் அளவுக்கு ஆக்ஷனில் விளையாடி இருக்கிறார். கார்த்தியின் பட
வரிசையில் இதற்கு முன்பு சில சறுக்கல்கள் இருந்தாலும் இந்த படம் அவரை ஒரு
படி மேலே ஏற்றும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. நடிப்புக்கு கூடவே
பிரேம்ஜி இருக்கும் போது நீங்க தாராளமா அடுத்த படத்தையும் வெங்கட்
பிரபுவுடன் பண்ணலாம்.
யுவனுக்கு இது 100வது படம். ஃபாரின் எல்லாம் சென்று என்னென்ன புது புது
இசை கருவிகள் இருக்கிறதோ அதை எல்லாம் உபயோகித்திருக்கிறார். ஒரு புதுவித
புத்துணர்ச்சி மனதுக்குள் சில்லறையாய் சிதறி விழுகிறது. இன்னும் மெலடியில்
கொஞ்சம் கவனம் செலுத்தியிருக்கலாமோ என்று தோன்றுகிறது.
இனி பிரியாணி சாப்பிடும் போது ஒரு செம பீஸ் நம்மை கிராஸ் பண்ணிபோனா கூட
கையில் ஒரு லெக் பீஸ் வச்சி சமாதானப்படுத்திக்க வேண்டியது தான். நன்றி tamilcinema
பெய்து முடிந்த மழையின் ஈரம் உலராத கவிதை ஒன்று..
.
இப்போதெல்லாம்
நாம் சந்தித்த இடங்களில்
யாருமே இருப்பதில்லை...
சிந்திக்கிடக்கின்றன
காய்ந்துபோன
சில மஞ்சள் பூக்களும்
நம் நினைவுகளும்....
காதலும் கவிதைகளுமாய்
மாறி மாறி துலங்கிய அந்நாட்கள்
தொலைந்துவிட்டன..
மாலை வெய்யில் தன் மஞ்சள்
நிறமிழந்த ஒரு கோடையில்தான்
நேசிப்பை விற்று
காய்ந்துபோனது உன் இதயம்...
நினைத்துப்பார்க்கையில்
நெஞ்சத்தின் ஆழத்துள்
மெல்ல இறங்குமொரு முள்..
அந்தரவெளியும்
கலவர நிழலுமாய்
நூறாயிரம் கதைகளை
சுமந்தலையும் இதயத்தை
உடைத்துவிடுகிறது
ஒற்றைக்கண்ணீர்த்துளி..
பொழுதில்லை அழுவதற்கும்..
இப்போதெல்லாம்
நாம் சந்தித்த இடங்களில்
யாருமே இருப்பதில்லை...
சிந்திக்கிடக்கின்றன
காய்ந்துபோன
சில மஞ்சள் பூக்களும்
நம் நினைவுகளும்....
காதலும் கவிதைகளுமாய்
மாறி மாறி துலங்கிய அந்நாட்கள்
தொலைந்துவிட்டன..
மாலை வெய்யில் தன் மஞ்சள்
நிறமிழந்த ஒரு கோடையில்தான்
நேசிப்பை விற்று
காய்ந்துபோனது உன் இதயம்...
நினைத்துப்பார்க்கையில்
நெஞ்சத்தின் ஆழத்துள்
மெல்ல இறங்குமொரு முள்..
அந்தரவெளியும்
கலவர நிழலுமாய்
நூறாயிரம் கதைகளை
சுமந்தலையும் இதயத்தை
உடைத்துவிடுகிறது
ஒற்றைக்கண்ணீர்த்துளி..
பொழுதில்லை அழுவதற்கும்..
நான் ரசித்த Laughing O Laughing – ஜெயந்தி மோகன்
.
சிட்னி வாழ் தமிழ் மக்கள் அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்திருந்த அந்த ஞாயிற்றுக்கிழமை அழகாக விடிந்தது. ஆம் 08.12.2013 அன்று அவுஸ்திரேலிய மருத்துவ உதவி மையத்தினால் முத்தமிழ் மாலை என்னும் நிகழ்வு ஞாயிறு மாலை 5:30 மணிக்கு நோத் பரமட்டா, கிங்ஸ் பாடசாலை அரங்க மண்டபத்தில் சோபனம் நாடகக்குழுவினரால் நடாத்தப்;பெற்ற Laughing O Laughing நிகழ்ச்சி தான் அனைத்து தமிழ் மக்களையும் ஒவ்வொரு வருடமும் வயிறு வலிக்க சிரிக்க வைக்கும் நிகழ்ச்சி என்பது மறுக்கமுடியாத உண்மை. வாய் விட்டுச் சிரித்தால் நோய் விட்டுப் போகும் என்பதை சோபனம் நாடகக்குழுவினர் இந்த வருடமும் நிரூபித்துள்ளனர். சிட்னியில் மட்டுமல்லாது கன்பரா, பிறிஸ்பேன் மற்றும் மெல்பேன் நகரங்களிலும் Laughing O Laughing மாபெரும் நிகழ்வாக நடைபெற்றுள்ளது.
ஒற்றைத் தீப ஒளியில் பாடலுடன் ஆரம்பிக்கப்பட்ட இந்நிகழ்வில் ஆபிரிக்கத் தலைவர் மண்டேலாவின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்ததுடன்ää இதனைத் தொடந்து சோபனம் நாடகக் குழுவின் தாரகமந்திரமே “அன்பே சிவம்” எனக் கூறப்பட்டதுடன் இடம்பெறப் போகும் ஐந்து நாடகங்களும் சோபனம் நாடகக் குழுவினரின் நான்கு மாதத்துக் கடின உழைப்பு எனவும் சொல்லப்பட்டது. ஒவ்வொரு நாடகம் தொடங்குவதற்கு முன்பு கடவுளும்ää சாத்தானும் தோன்றி அந்நாடகத்தைப் பற்றியும் அதில் உள்ள நன்மை தீமை பற்றியும் உரையாடுவார்கள்.
முதலாவதாக நல்லவன்Vs கெட்டவன் என்னும் நாடகம் இடம் பெற்றது. நன்மைக்கும் தீமைக்கும் இடையிலான இழுபறிதான் இந்த நாடகத்தின் கரு.

மெல்பனில் நடந்த தமிழ்ச்சிறுகதை இலக்கியம் அனுபவப்பகிர்வு
.
மெல்பனில் நடந்த தமிழ்ச்சிறுகதை இலக்கியம் அனுபவப்பகிர்வு
வாசிப்பு அனுபவமும் - செம்மைப்படுத்தலும் - தேர்ந்த ரஸனையும்
( கடந்த 7 ஆம் திகதி சனிக்கிழமை மெல்பனில் வேர்மண்ட் சவுத்
சமூக நிலைய மண்டபத்தில் அவுஸ்திரேலியா தமிழ் இலக்கிய கலைச்சங்கம் நடத்திய நிகழ்ச்சி)
முருகபூபதி
தொடக்கவுரை:
இந்த
நாட்டில் புகலிடம் பெற்ற எழுத்தாளர்கள், இங்கு
வந்தபின்னர் படைபிலக்கியத்துறைகளில் ஈடுபடுபவர்கள் எம்மத்தியிலிருக்கிறார்கள். சிறுகதை,
கவிதை, நாவல், விமர்சனம், நாடகம்,
பத்தி எழுத்துக்கள் எழுதுபவர்கள் இந்தக்கண்டத்தில் சில
மாநிலங்களில் வசித்துவருகிறார்கள்.
நாம் இன்று சிறுகதை இலக்கியம்
தொடர்பாகவே அனுபவப்பகிர்வு நிகழ்ச்சியை ஒழுங்கு
செய்துள்ளோம். எதிர்காலத்தில் இலக்கியத்தின் இதர துறைகள்
தொடர்பான அனுபவப்பகிர்வுகளையும் நடத்தவுள்ளோம்.
ஆங்கில இலக்கியத்துறையில் இந்த நடைமுறை நீண்டகாலமாக இருந்துவருகிறது. ஆனால்
எமது தமிழ்ச்சூழலில் ஒரு படைப்பிலக்கிய நூலின்
வெளியீட்டு விழாவில் நூலாசிரியரை போற்றிப்புகழ்ந்துவிட்டு, அவரது நூலைப்பற்றி மேலெழுந்தவாரியான கருத்துக்களை மாத்திரம் சொல்லிவிட்டு சிறப்புப்பிரதி வழங்கும்
சடங்குகளுடன் ரசனையை மட்டுப்படுத்திக்கொண்டு அகன்றுவிடுகிறோம். இணைய
இதழ்கள் பத்திரிகைகளில்
படங்களுடன் செய்தி வெளியானதும் அதனைப்பார்த்து
திருப்தியடைவதுடன் காரியம் முடிந்துவிடும்.
சிறப்பு பிரதி
பெற்றவர் அதனைப்படித்தாரா? என்ன
கருத்துடன் அவரது
வாசிப்பு அனுபவம்
இருக்கிறது? என்ற கவலையெதுவும்
இல்லாமல் அடுத்த நூலை எழுதவும் வெளியிடவும் தயாராகிவிடுகின்றோம்.
இலங்கைச் செய்திகள்
காணாமல் போனோரின் உறவுகள் மீது திருகோணமலையில் தாக்குதல்
பிரித் ஓதி முஸ்லிம் வியாபாரியை மன்னிப்பு கோரச் செய்த தேரர்கள்
ஆர்ப்பாட்டத்தை யாழ்ப்பாணத்தில் நடத்துங்கள்,இது எங்கள் இடம்
அட்டனில் பெண்களுக்கு எதிரான வன்முறைகளை கண்டித்து ஊர்வலம்
150 வருட பழைமை வாய்ந்த காளியம்மன் சிலை உடைப்பு : ஹாலி-எல உடுவரை பெருந்தோட்ட மேற்பிரிவில் சம்பவம
காணாமல் போனோரின் உறவுகள் மீது திருகோணமலையில் தாக்குதல்
10/12/2013 திருகோணமலை பஸ் நிலையத்திற்கு முன்பாக
காணாமல் போனோரின் உறவுகளால் இன்று முற்பகல் மேற்கொண்ட ஆர்ப்பாட்டத்தின்
போது இனந்தெரியாத நபர்கள் ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது தாக்குதல்
மேற்கொண்டுள்ளதால் அங்கு பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது.

இதன்போது பொலிஸார் அருகில் இருந்தும் தாக்குதல் மேற்கொண்டவர்கள் மீது
எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை என ஆர்ப்பாட்டக்காரர்கள்
தெரிவிக்கின்றனர். நன்றி வீரகேசரி
பரணில் இருந்த பழைய நாட்குறிப்பேட்டில் இருந்து
.
மீண்டும் ஒரு வெறுமையான நாளாகத்தான் இன்றைய பொழுதும் போனது. இப்படியே தொடருமோ என்ற அச்சம் மனதை வாட்டுகிறது. எதுவுமேயின்றி வீணாகப் பொழுதைக் கழிப்பது வீண்வேலை என்றும் தெரிந்தும் தொடர்ந்தும் அதுதான் நடக்கின்றது. கோயிலுக்குப் போயிருந்தேன். பெண்களைப் பார்க்கத்தான் மனம் அலைபாய்கின்றது. என்றாலும் சிறிது கடவுள் பக்தியும் அங்கு இருப்பதுபோலத்தான் தெரிகின்றது. கடவுள் என்ற உன்னதமானதொன்றை எவ்வாறு பணம் சம்பாதிக்கப் பாவிக்கின்றார்கள் என்பதைத்தான் கோயிலினுள் நிற்கும் ஒவ்வொரு கணத்திலும் மனம் சிந்திக்கின்றது. ஐயர் செய்யும் கிரியைகள் கூடச் செயற்கையாகத்தான் தோன்றுகின்றது. பற்றுச் சீட்டின் அளவைக் கொண்டு பக்தியை மதிப்பிடுவது போல இருக்கின்றது. ஒரு பவுண் அர்ச்சனைக்கு வெறும் பூவும் திருநீறு சந்தனமும், ஐந்து பவுணிற்கு கூடுதலாக ஒரு ஆப்பிளும் அளவுகோலாக உள்ளது. மன அமைதியை நாடிச் சென்று மனச் சஞ்சலத்துடன் திரும்பிவந்தேன்.
27 பெப். திங்கள்
அதிர்ஷ்டமில்லாத இன்னொரு வாரத்தின் ஆரம்ப நாளாகத்தான் தோன்றுகிறது. எந்த ஒரு நாள் கூட மன அமைதியுடையதாக இல்லாமல் போனது ஏன் என்று விளங்கவில்லை. எனது எதிர்காலத்தில் நான் எப்படி ஆகவேண்டும் என முன்கூட்டியே திட்டமிடாமல் ஏதோ ஒன்றை ஏற்றுக்கொண்டதுதான் காரணம் என்று நினைக்கின்றேன். என்னால் ஏன் மன ஈடுபாட்டுடன் படிக்கமுடியவில்லை என்று தெரியவில்லை. சந்தர்ப்பங்கள் அதிகம் இருந்தும் நழுவ விட்டுக் கொண்டு வருகிறேன். கடைசி நேரத்தில் அவதிப்படுவதை ஏன் விரும்புகிறேன் என்று புரியவில்லை. அதிகம் சோம்பேறியாகிவிட்டேன். படிக்க மனமில்லை. எங்கும் போக மனமில்லை. சும்மா கஷ்டப்படாமல் சுகமாக வாழலாம் என்று கனவு காண்பதுதான் வாழ்க்கையாகிவிட்டது. தலையிடி வேறு தொல்லை தருகின்றது. பீடித்த பிசாசு எப்போது விடும் என்று புரியவில்லை.
02 மார்ச் வியாழன்
இன்று உடல் நிலை அவ்வளவு ஒத்துழைப்புத் தரவில்லை. தடிமன், காய்ச்சல் வரலாம் போலத் தெரிகின்றது. சிறு வருத்தம் கூடப் பலவீனத்தைத் தருகின்றது. எப்போதும் போல வலி நிவாரணிகளில் தங்கியிருக்க வேண்டியுள்ளது. வழமையான ஒரு தலையிடி என்றாலும் கூட இனிப்புச் சாப்பிடும் ஆர்வத்துடன் என் மனம் வலி நிவாரணிகளைத் தேடுகின்றது. இவ்வளவு தூரம் அடிமையாக என்னால் மாறமுடியும் என்று நான் நினைத்திருக்கவில்லை. சில விடயங்கள் பிழையானது என்று தெரிந்தும் கைவிட முடியாத நிலைமை. கைவிட முடியாத விடயங்களை பிழையில்லாத விடயங்கள் என்று என்னை நானே ஏமாற்றும் தர்க்கங்கள். இதன்மூலம் எப்போதுமே
06 ஜன. வெள்ளி

தமிழ் பாடசாலை VC மாணவர்களுக்கான கெளரவிப்பும் விருந்துபசாரமும்
.
ஈழத்தமிழ் சங்கத்தின் தமிழ் பாடசாலை VC மாணவர்களுக்கான கெளரவிப்பும்
விருந்துபசாரமும் கடந்த 14/12/13 மாலை 06.30 Vermont south community center ஈழத்தமிழ் சங்கத்தின் தலைவர் திரு.பரமு பரமநாதன்
தலமையில் நடைபெற்றது இரண்டு நிமிட அகவணக்கதுடன்.ஆரம்பித்து வரவேற்புரையை திரு.பரமநாதன் வழங்க மாணவன் சுதன் அவர்கள் தமிழ் கற்றதையும் தமிழால் தான்பெற்ற பெருமையையும் தமிழின் பெருமையையும் அழகான தமிழில்
எடுத்துரைதார்
திரு. சதிஸ் நாகராசா சிறப்புப் பேச்சின் போது அவரின் வாழ்வனுபவத்தின்
சில பகுதிகளையும், தமிழின் சிறப்பையும்,பற்றி சிறந்த உதாரணங்களுடன் சுட்டிக்காட்டி
பாரதியாரின் கவிதை ஒன்றை முத்தாப்பாய் தந்து சிறப்புரையை நிறைவு செய்தார்..
வீசி பழைய மாணவர்களின்
பட்டி மன்றம் ”மனிதன் பூரணமடைவதற்கு” பெற்றோரே காரணம் என்று ஒரு குழுவினர் இல்லை பிறகாரணிகளும் பங்களிக்கின்றன என்று மற்றைய குழுவினரும் வாதாடினர் எல்லா மாணவர்களும் மிகச்சிறப்பாக தமது குழுவுக்காக
மிகச் சிறப்பாக தம்து வாதங்களுக்காக நல்ல உதாரணங்களை முன்னிறுத்திப் பேசினார்கள்.
கடைசியாக விசி பாடத்திட்டத்தின் ஒருங்கிணைப்பாளர் திரு.ரவிஸ்கந்தா கடந்தா ஆண்டு, நடப்பாண்டு திட்டங்களையும்
மாணவர்களின் வளர்ச்சியையும் மிகச் சுருக்கமாக கூறி அமர்ந்தார் அதன் பின் மாலை விருந்தோம்பலுடன்
நிகழ்ச்சி நிறைவு பெற்றது.
சந்திரன் சண்முகம்
திரும்பிப்பார்க்கின்றேன் 19- -முருகபூபதி
.
இலங்கை
முற்போக்கு
இலக்கிய
முகாமில்
எனக்கொரு தந்தை
இளங்கீரன்
இலங்கைத்தமிழ்ச்சூழலில் ஒருவர்
முழு நேர எழுத்தாளராக
வாழ்வதன் கொடுமையை
வாழ்ந்து பார்த்து
அனுபவித்தால்தான் புரியும். எனக்குத்தெரிய பல முழுநேர
தமிழ் எழுத்தாளர்கள் எத்தகைய
துன்பங்களை, ஏமாற்றங்களை,
தோல்விகளை, வஞ்சனைகளை, சோதனைகளை சந்தித்தார்கள்
என்பதை மனதில் பதிவு செய்யத்தொடங்கியபோது அவர்களின்
வாழ்வு எனக்கும் புத்திக்கொள்முதலானது.
நான் எழுத்துலகில் பிரவேசித்த
காலப்பகுதியில் மினுவாங்கொடையைச்சேர்ந்த நண்பர்
மு.பஷீர், எங்கள்
இலக்கியவட்டத்தின் கலந்துரையாடல்களின்போது குறிப்பிடும் பெயர்:-
இளங்கீரன். இவரது இயற்பெயர்
சுபைர். இவரும்
முழு நேர எழுத்தாளராக
வாழ்ந்தவர்.
நீர்கொழும்பில் எனது
உறவினர்
மயில்வாகனன் மாமா 1966 காலப்பகுதியில் தாம் நடத்திய அண்ணி
என்ற சஞ்சிகையின்
முதலாவது இதழில் இளங்கீரன் அவர்களின் நேர்காணலை பிரசுரித்திருந்தார். அப்பொழுது எனக்கு இளங்கீரனைத்தெரியாது. அந்த இதழில்
முன்புற - பின்புற அட்டைகளைத்தவிர உள்ளே அனைத்துப்பக்கங்களிலும் விடயதானங்கள் கறுப்பு
நிறத்தில் அச்சிடப்பட்டிருந்தன. ஆனால், இளங்கீரனின் நேர்காணல் மாத்திரம் சிவப்பு நிறத்தில் அச்சாகியிருந்தது.
கூட்டித்துடைத்துத் துப்புரவாக்கவேண்டும். - -வடபுலத்தான்
![]() கொலையுண்டதும் கொலைக்குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டதும் ஒரே கட்சியைச் சேர்ந்தவர்கள். அப்படியென்றால் இது உட்கட்சி மோதலா? அல்லது தனிப்பட்ட முறையிலான முரண்பாடா? எதுவென்று அறிவதற்காக விசாரணைகள் நடக்கின்றன. ஆனால், இந்த மாதிரியான சம்பவங்களை மக்களும் விரும்பவில்லை. கட்சி அபிமானிகளும் விரும்பியிருக்க மாட்டார்கள். இதை அந்தக் கட்சியான ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியே கண்டித்திருக்கிறது. இவற்றை முழுமையாக விசாரித்து நடவடிக்கை எடுக்குமாறு கட்சியின் தலைமைப்பொறுப்பிலிருக்கும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா சட்டத்துறையிடம் விட்டிருப்பது ஆரோக்கியமான விடயம். இந்தச் சம்பவம் அவருடைய கட்சிக்கு நெருக்கடியைக் கொடுத்தாலும் சட்டத்தின் பொறுப்பில் இதை அவர் விட்டிருப்பது கட்சியை பாதுகாக்கக் கூடிய ஒரு நடவடிக்கையே. அரசாங்கத்தின் செல்வாக்கையோ அமைச்சுப் பதவியின் அங்கீகாரத்தையோ வைத்து அவர் தன்னுடைய ஆட்களைக் காப்பாற்ற முயற்சிக்காமல் சட்டத்திடம் பொறுப்பை ஒப்படைத்திருப்பது பரவாயில்லை. கடந்த சில மாதங்களுக்கு முன்பு, கொழும்பு – கம்பஹா பகுதியிலும் இதைப்போன்று ஒரே கட்சியைச் சேர்ந்த இருவர் மோதினர். அதில் ஒருவர் கொல்லப்பட்டார். இன்னொருவர் சிறைக்குச் சென்றார். |
தமிழ் சினிமாவின் ஞான பாடல்கள்? - -தமிழ்மகன்
.

தமிழ் சினிமாவின் ஞான பாடல்கள்?
தமிழ் சினிமா பாடல்களில் ஒரு வித நவீனத் தன்மை பெருகி வருகிறது. நவீனத் தன்மையென்றால் பழைய சிந்தனைகளுக்கு மெருகேற்றுவதல்ல.
நீலமலர்கள்' என்ற தமிழ்ப்படத்தில் பார்வை தெரியாத நாயகி நாயகனைப் பார்த்துக் கேட்கிறாள்:
இது இரவா பகலா?
நாயகன் பதில் -ன்னொரு கேள்வியாக அமைகிறது... ''நீ நிலவா, கதிரா?''
அடுத்து பாடல் இப்படி தொடர்கிறது...
இது வனமா மாளிகையா?
''நீ மலரா ஓவியமா?''
மேகம் என்பதும் மின்னல் என்பதும் அருகில் இல்லையா?
''உன் கூந்தல் என்பதில் பூச்சரம் வைப்பதை அறிவாய் இல்லையா?''
இதே பாடல் இப்போது ''உன் சமையல் அறையில் நான் உப்பா, சர்க்கரையா?'' என்று நவீனப்பட்டிருக்கிறது.
நாம் சொல்ல முனைந்தது இத்தகைய நவீனத்துவத்தைப் பற்றியல்ல.
தமிழ் சினிமா பாடல்களில் இப்போது அதிகரித்து வரும் அறிவியல் செய்திகளும் புள்ளிவிவரங்களும்தான் நாம் சொல்லும் நவீனம்.
வைரமுத்து இன்னும் கொஞ்சம் அதிகமாகவே புள்ளிவிவரங்கள் கொடுப்பார்... 'காதலன்' படத்தில் வரும் ''ஊர்வசி ஊர்வசி'' பாடலில் ''உடம்பில் நரம்புகள் ஆறு லட்சம் அதில் காதல் நரம்பு எந்த பக்கம்?'' என்கிறார். அதே பாடலில் ''தமிழில் வார்த்தைகள் மூன்று லட்சம் இரண்டு சொல்லடி அதிகபட்சம் என்று காதலன் காதலியிடம் ஏங்குவான். ''தண்ணீரில் மூழ்காது காற்றுள்ள பந்து என்னோடு நீ பாடிவா சிந்து'' என்பார் -ன்னொரு பாடலில். ''அட பூகம்ப வேலையிலும் வான்கோழி களவி கொல்லும்'' என்கிறது 'தாஜ்மகால்' படத்தில் இடம்பெறும் அவருடைய பாடல்வரி ஒன்று. உன் விழி ஈர்ப்பு விசையினிலே நான் வந்து விழுந்துவிட்டேன் என்பது போன்ற அவருடைய வார்த்தைப் பிரயோகங்கள் ஏராளம், ஏராளம்.
வாலி நுனிப்புல் மேய்வது போல் சில விஞ்ஞான விஷயங்களைச் சொல்லுவார். விஞ்ஞானத்தைவிட விரசம் சற்று தூக்கலாகவே இருக்கும். 'அபூர்வ சகோதரர்கள்' படத்தில் ''ராஜா கைய வெச்சா'' பாடலில் காரையும் பெண்ணையும் ஒப்பிடுவார். ''கட்டியவன் விரல்தான் மேலே படணும், கண்டவன் கைபட்டா கெட்டுப் போயிடும்'' என்றும் ''காரும் பெண்போல வேகம் உண்டாக தேகம் சூடேறுமே'' என்றும் ஒப்பிட்டார்.

விழா அழைப்பிதழ் -2013 ஆம் ஆண்டுக்கான விஷ்ணுபுரம் விருது
.

2013 ஆம் ஆண்டுக்கான விஷ்ணுபுரம் விருது மூத்த தமிழ்ப் படைப்பாளியான தெளிவத்தை ஜோசப் அவர்களுக்கு வழங்கப்படுகிறது.
நாள் 22. 12. 2013
இடம் நாணி கலையரங்கம், மணி ஸ்கூல், பாப்பநாயக்கன் பாளையம் கோவை
நேரம் மாலை 6 மணி
நிகழ்ச்சிகள்

நான்கு மாநில சட்டசபை தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி அபார வெற்றி : காங்கிரஸ் படுதோல்வி
சவூதியில் பாகிஸ்தானிய பிரஜைக்கு தலையை வாளால் வெட்டி மரண தண்டனை
சிங்கப்பூரில் இந்தியப் பிரஜையின் மரணம் தொடர்பில் கலவரம்
பூட்டிய விமானத்தில் சிக்கிய நபர்
நான்கு மாநில சட்டசபை தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி அபார வெற்றி : காங்கிரஸ் படுதோல்வி
09/12/2013 இந்தியாவில் அடுத்த ஆண்டு, பாராளுமன்ற
தேர்தல் இடம்பெறவுள்ள நிலையில் தற்போது நடைபெற்று முடிந்துள்ள
டில்லி, சத்தீஸ்கர், ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம் ஆகிய நான்கு
மாநிலங்களுக்கான சட்டசபைத் தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி
பெருவாரியான வெற்றியை பெற்றுள்ளது. அதேநேரம், காங்கிரஸ் கட்சி
படுதோல்வியடைந்துள்ளது. இந்த தேர்தலில் குறிப்பிடத்தக்க
மாற்றமாக, தலைநகர் டில்லியில் 15 ஆண்டுகளாக ஆட்சியமைத்துவந்த
காங்கிரஸை, புதிதாக வந்த 'ஆம் ஆத்மி' கட்சி மூன்றாம் நிலைக்கு தள்ளி
இரண்டாம் நிலைக்கு உயர்ந்துள்ளது. இதன்மூலம் கடும் பின்னடைவை
சந்தித்திருக்கும் காங்கிரஸ் கட்சி, இந்த முடிவு பாராளுமன்ற
தேர்தலில் எதிரொலிக்குமா என்ற கலக்கத்தில் உள்ளது.

டில்லி, சத்தீஸ்கர், ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம் உள்ளிட்ட
மாநிலங்களின் சட்டசபைத் தேர்தல்களின் வாக்குபதிவு கடந்த
வியாழக்கிழமை இடம்பெற்றது. இதனையடுத்துஇ இந்த வாக்குகள் எண்ணும்
பணி நேற்று காலை 8 மணிக்கு ஆரம்பித்தது.
டில்லியை இழந்தது காங்கிரஸ்
ஜனநாயகத்தின் வெற்றி என்கிறது 'ஆம் ஆத்மி' இதில், 70 தொகுதிகளை கொண்ட டில்லி சட்டசபைத் தேர்தலில், ஆளும் காங்கிரஸ் கட்சி மூன்றாம் நிலைக்கு தள்ளப்பட்டது.
34 இடத்தை பெற்று பாரதிய ஜனதா கட்சி இந்த மாநிலத்தில் வெற்றிபெற்றது.
அரவிந்த் கெஜ்ரிவாலின் 'ஆம் ஆத்மி' கட்சி 27 இடங்களை பிடித்து இரண்டாம்
இடத்தைபெற்றது.
பெண்களும் வர்க்கமும் – சங்க இலக்கியங்களை மையமாகக் கொண்ட ஆய்வு
.
பேராசிரியை அம்மன்கிளி முருகதாஸ்
கிழக்குப்பல்கலைக்கழகம்,
இலங்கை
மனிதசமூகத்தில் அதிகாரக்கட்டமைவு என்பது காலந்தோறும் நிலையான ஒன்றாகவே காணப்படுகிறது. சமத்துவ சமுதாயம் என்பது பெரும்பாலும் சொல்லளவிலேதான் உள்ளது. ஆண்டான்-அடிமை ஏழை -பணக்காரன் முதலாளி -தொழிலாளி ஆண்-பெண் என்ற வேறுபாடுகள் பொருளாதாரத்தினால் கட்டமைக்கப்பட்டவை. பொருளாதார அதிகாரத்திலுள்ளோர் தம்மிலும் அதிகாரத்தில் குறைந்தோரை ஆட்டிப்படைத்தலும் பொருளாதார அதிகாரமற்றோர் அதிகார முடையோரைப் பார்த்துப் பயப்படுவதும் அடிபணிந்து வாழ்தலும் இயல்பான நடவடிக்கைகளாக என்றும் காணப்படுகின்றன. சங்க இலக்கியக் கோட்பாடான திணைக்கோட்பாடானது அக்கால சமூகத்தின் பொருளாதார அசமத்துவ நிலையைப் பிரதிபலிக்கிறது என்பார் கா.சிவத்தம்பி (பார்க்க: திணைக்கோட்பாட்டின் சமூக அடிப்படைகள் -சிவத்தம்பி.கா )
தமிழ் இலக்கியங்களில் மேற்கொள்ளப்பட்ட பெண்கள் பற்றிய பெண்ணிய ஆய்வுகள் பெண்களும் வர்க்கமும் தொடர்பாக ஆய்வு செய்வதில் பெரும்பாலும் கவனஞ் செலுத்துவதில்லை. பெண்கள் எந்த வர்க்கத்திலிருந்தாலும் அவர்கள் இரண்டாந்தரப் பிரஜைகளாகவே மதிக்கப்படுகின்றனர். எனினும் அப்பெண்கள் வாழும் அவ்வச்சமூகத்தின் சிந்தனைக்கு ஏற்ப தம் சிந்தனைகளையும் வாழ்க்கையையும் கட்டமைத்துக் கொள்கின்றனர். அதாவது ஓரு ஆண்டானின் மனைவி ஆள்பவளாவும் அடிமையின் மனைவி அடிமைப் பெண்ணாகவுமேயுள்ளனர்.இந்த அடிமைப்பெண் தன்னிலும் உயர்ந்த வர்க்க ஆண்களுக்கு மட்டுமல்ல உயர்வர்க்கப் பெண்களுக்கும் அடிமையாகவே இருந்தாள். இங்கே ஆண்டானின் மனைவியின் சிந்தனைக்கும் வாழ்க்கை முறைக்கும் அடிமையாக இருக்கும் பெண்ணின் சிந்தனைக்கும் வாழ்க்கை முறைக்குமிடையே வேறுபாட்டைக் காணலாம்.
வீரயுகத்தின் இறுதிக்கட்டத்தில் இருந்த சங்ககால சமூகமும் அதன் தன்மைகளுக்கேற்ப அதிகாரப் படிநிலையில் உயர்ந்தவர்களையும் அதிகாரத்திற் குறைந்தவர்களையும் கொண்டிருந்தது.

ஆரம்பம் |
![]() |
தீபாவளிக்கு இரண்டு நாட்களுக்கு முன்பு வெளியாகி ரசிகர்கள் ’தல’ தீபாவளி என்று கொண்டாடக் காத்திருந்த ஆரம்பம் படம் உண்மையிலேயே தீபாவளிக் கொண்டாட்டத்தை வழங்கியிருக்கிறதா?![]() ஆர்யாவின் கல்லூரித் தோழியும், அஜித்தின் கூட்டாளியுமான நயன்தாரா இதற்கு உதவுகிறார். இதில் ஆர்யாவின் காதலி டாப்சியையும் நம்பவைத்து தனது பாதுகாப்பில் வைத்துக்கொள்கிறார் அஜித். மேலும் அவரை வைத்து ஹேக்கிங்கில் தேர்ந்தவரான ஆர்யாவை மிரட்டி காரியம் சாதித்துக்கொள்கிறார். இந்நிலையில் ஆர்யாவின் மூலம் செய்தி அலைவரிசை உரிமையாளர் ஒருவருக்கு பல கோடி ரூபாய் நஷ்டம் ஏற்படுத்துகிறார். பிறகு அவரைக் கடத்திக் கொல்லும் முயற்சியில் காவல்துறையினரால் கைதுசெய்யப்படுகிறார். ![]() உள்துறை அமைச்சர், காவல்துறை உயரதிகாரி மற்றும் செய்தி அலைவரிசை உரிமையாளர் ஆகியோர் இணைந்து செய்யும் ஒரு மாபெரும் ஊழலால் தனது நண்பர் ராணா டகுபதியை இழக்கிறார் அஜித். தன் நண்பனின் மரணத்துக்கு காரணமானவர்களை அம்பலப்படுத்துவதோடு பணத்துக்காக பயங்கரவாதத்துக்குத் துணைபோகும் அவர்களின் மற்றொரு திட்டத்தையும் தகர்ப்பதே மீதிக்கதை. அஜித் ஒரு நேர்மையான அஸிஸ்டண்ட் கமிஷ்னர். படத்திற்கு மையபலம் அஜித் தான் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. சால்ட் அன்ட் பெப்பர் ஸ்டைலில் ஒன் மேன் ஆர்மியாக கலக்கியிருக்கிறார். படத்தில் அஜித்துக்கு வசனங்கள் அதிகமாக கிடையாது. அனைத்தும் ஆக்சன் தான். ![]() ராணாவின் தங்கச்சியாக நயன்தாரா வருகிறார். படம் முழுவதும் அஜித் கூடவே இருக்கிறார். நடிப்பிலும் குறை சொல்ல ஒன்றும் இல்லை, கவர்ச்சிக்கும் இடமிருக்கிறது. சாப்ட்வேர் இன்ஜினியராக வருகிறார் ஆர்யா. துறு துறு நடிப்பில் ஈர்க்கிறார். இவரின் காதலியாக வரும் டாப்ஸி அழகாக இருக்கிறார். சில காட்சிகளில் அவர் வெளிப்படுத்தும் முகபாவங்கள் நச்சென்று இருக்கின்றன. கடமையைச் செய்யும்போது உயிரிழக்கும் காவல் அதிகாரியாக வரும் ராணா டகுபதி சிறிய பாத்திரம் என்றாலும் மனதில் பதியும் வகையில் செய்திருக்கிறார். ![]() விஷ்ணுவர்தன் இந்தப் படத்திலும் அஜித்தை மிகவும் ஸ்டைலிஷ்ஷாக காட்டியிருக்கிறார். யுவன்ஷங்கர் ராஜாவின் பாடல்கள் எதுவும் நினைவில் தங்கவில்லை. அந்தக் குறையை பின்னணி இசையில் சமன் செய்துவிட்டார். ஓம்பிரகாஷின் ஒளிப்பதிவு மும்பையை அதன் இயல்பு மாறாமல் பதிவு செய்திருக்கிறது. துப்பாக்கிச் சண்டைக் காட்சிகளும் கண்களுக்கு அலுப்பூட்டாத வகையில் படம்பிடிக்கப்பட்டிருக்கின்றன. ![]() ஹாலிவுட் படத்தை அணு அணுவாக ரசித்தவர்களுக்கு வேண்டுமானால் இந்தப்படம் திருப்தியளிக்காமல் போகலாம். ஆனால் சாராசரி தமிழ் ரசிகனுக்கு, முக்கியமாக தல ரசிகர்களுக்கு இந்தப்படம் செமத்தியான தீபாவளி விருந்து. நடிகர்கள்: அஜித், ஆர்யா நடிகைகள்: நயன்தாரா, டாப்ஸி ஒளிப்பதிவு: ஓம்பிரகாஷ் இசை: யுவன்ஷங்கர் ராஜா இயக்கம்: விஷ்ணுவர்தன் தயாரிப்பு: ஏ.எம்.ரத்னம், ஏ.ரகுராம் நன்றி விடுப்பு தமிழ் சினிமா |
மண்ணுலகு வாழும் வரை மண்டேலாவும் வாழ்வார் கலாநிதி சந்திரிகா சுப்ரமண்யன்
சொந்த சகோதரர் சொத்தினைத் தின்றிடும்,
பந்து மித்திரர் பணப் பசி கொண்டிடும்,
வந்த புத்திரர் வரவினை கணக்கிடும்,
இந்த உலகிலும் ………………………
உரிமைக்காக ஊண் , உயிர் ஈந்த
இதோ ஒர் இரங்கற் பா!
ஒன்பது என்பது பெருக்கின் வர்க்கம்
பதினெட்டாம் ஆண்டு பதினெட்டாம் தேதி
ஆடியில் பிறந்த பெருக்கு - உம்மிடம்
இல்லை - தான் எனும் செருக்கு
இன வெறி ஆதிக்கம் வைத்தது
இருபத்து ஏழு ஆண்டு சிறை.
ஆனாலும் உலகு உம்மிடம்
கண்டதில்லை ஒரு கறை
ஆயுள் தண்டனை மீண்ட போது
உடல் எங்கும் கொண்டது சுருக்கம்
ஆனாலும் நின் மனஉறுதி கண்டதோ
உருக்கின் இறுக்கம்.
காதலனை தேடுகிறாள்!
தலைவனும் தலைவியும் உயிருக்குயிராய் காதலித்தனர். இணைபிரியாத துணையாக
வாழ்ந்தனர். திருமணம் செய்துகொள்ளலாம் என முடிவெடுத்த போது தலைவன் சொன்னான்
‘நான் பொருளீட்டி வந்தபிறகு நமக்கு திருமணம் நடைபெறட்டும். நான் இப்போது
பொருளீட்ட வெளியூர் செல்கிறேன். இன்னும் இரண்டு வருடங்களில் திரும்பி
வந்துவிடுவேன்.’ என்று. தலைவியும் நம்பிக்கையோடு மூன்று வருடங்களாய்
தலைவனுக்காய்க் காத்திருக்கிறாள். ஒரு சூழ்நிலையில் தலைவனைத் தேடி அவன்
சென்ற ஊருக்கே போய் அவனைத் தேடுகிறாள். அப்போது பாடுகிறாள் இப்படி.
பாலமிட்ட பால்நிலவு பால்வெளியில் பாடுதடா!
கோலமிட்ட காதல்நிலா காதலனை தேடுதடா!!
கன்னத்தின் வீக்கத்தை கண்ணீரின் ஏக்கத்தை
எண்ணங்களை கவிதைகளாய் எழுதுதடா என்பேனா!!
பனிவாடைக் காடுகளில் பகல்நேரம் பாடுகிறேன்!
துணிவோடு நானுனையே துணையாகத் தேடுகிறேன்!!
வெயில்நேரம் வந்தபோதும் குயில்கூவும் சத்தம்!
உயிரோடு பதிந்ததடா உன்நினைவே நித்தம்!!
காற்றோடு பேசுகிறேன் கவிதைவழி பாடுகிறேன்!
நேற்றோடு போனவனே நெஞ்சோடு வாழ்பவனே!!
கொஞ்சிக்கொஞ்சிப் பேசவந்து காதல்தனை வளர்த்தவனே!
வஞ்சியென் மனங்கவர்ந்து வாழ்க்கைத்துணை தந்தவனே!!
மணமேடை ஏறும்முன்னே மணாளனேநீ போனதென்ன!
பிணவாடை வீசுவதுபோல் பிணமாகநான் ஆனதென்ன!!
செத்தாலும் சுகந்தருமே முத்தாக உன்முகம்வருமே
கத்தாத குயில்நானே பித்தாக ஆனேனே!!
மோனநிலை கனவுறக்கம் மங்கையென் உயிரிருக்கும்!
தேனொழுக நீபேச முத்துமுத்தாய் கவிபிறக்கும்!!
எங்கேயோ போனாயே என்னோடு வாநீயே!
மங்காத புகழோடு வாழ்வோம் இங்கேயே!!
- முனைவென்றி நா. சுரேஷ்குமார்
நெல்சன் மண்டேலாவின் மறைவுக்கு உலக தலைவர்கள் அனுதாபம்
07/12/2013 தென்னாபிரிக்க முன்னாள் ஜனாதிபதி நெல்சன் மண்டேலா வியாழக்கிழமை
தனது 95 ஆவது வயதில் மரணமானதையொட்டி உலகத் தலைவர்கள் பலரும் ஆழ்ந்த
கவலையை வெளியிட்டுள்ளனர்.

இந்த உலகத்திற்கான மிகப் பெரிய ஒளி மறைந்து விட்டது என பிரித்தானிய பிரதமர் டேவிட் கமெரோன் தனது அனுதாபச் செய்தியில் தெரிவித்துள்ளார்.
எமது காலத்தில் உச்ச நிலையிலிருந்த உலகின் உண்மையான வீரபுருஷர் ஒருவர் மரணமடைந்துள்ளதாக அவர் தெரிவித்தார்.
பிரான்ஸ் ஜனாதிபதி பிரான்கொயிஸ் ஹொலன்ட் தனது அனுதாபச் செய்தியில், நெல்சன் மண்டேலாவின் மறைவானது சுதந்திரத்துக்காக போராடுபவர்களுக்கு உத்வேகமளிப்பதாக தொடர்ந்தும் இருப்பதுடன் பிரபஞ்ச உரிமைகளை பாதுகாப்பதில் மக்களுக்கு நம்பிக்கையளிப்பதாகவும் இருக்கும் என தெரிவித்தார்.

அமெரிக்காவில் ரயில் விபத்து: நால்வர் பலி
விமான விபத்தில் 33 பேர் பலி
யேமன் பாதுகாப்பு அமைச்சு கட்டிடத்தின் மீது குண்டுத் தாக்குதல்
==========================================================================அமெரிக்காவில் ரயில் விபத்து: நால்வர் பலி

02/12/2013 அமெரிக்கா, புரான்ஸ் பகுதியில் பயணிகள்
ரயில் ஒன்று நேற்று விபத்துக்குள்ளானதில் நான்கு பேர் பலியானதுடன் 65க்கும்
மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.
அமெரிக்கா, நியூயோர்க் நகரிலிருந்து புறப்பட்ட பயணிகள் ரயில், புரான்ஸ்
என்ற இடத்தில் சென்ற போது, வளைவில் வேகமாகத் திரும்பியுள்ளது. இதன்போது,
ரயிலின் ஏழு பெட்டிகள் தடம் புரண்டுள்ளன.
இந்த விபத்தையடுத்து நூற்றுக்கும் அதிகமான தீயணைப்பு படையினர் விரைந்து வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். நன்றி வீரகேசரி
Subscribe to:
Posts (Atom)