மேற்கு சிட்னி தமிழ் கல்வி நிலையம் பரிசளிப்பு விழாவும், ஒன்று கூடலும் - பரமபுத்திரன்
மேற்குசிட்னி தமிழ் கல்வி நிலையம் அவுத்திரேலிய நாட்டின் நியூ சவுத் வேல்சு பெருநிலப்பரப்பில் பிள்ளைகளுக்கு தமிழ்கல்வி வழிகாட்ட செயற்படுகின்றது. இக்கல்வி நிலையம், இவ்வாண்டு 18/10/2025 சனிக்கிழமை அன்று புதிதாக தொடங்கப்பட்ட ஒன்று. தற்போது ‘பங்காரிபீ’ சமூக வள நடுவத்தில் (Bungarribee Community Resource Hub) இயங்கி வரும் கல்வி நிலையத்தில் நடப்பாண்டில் தமிழ் கற்ற மாணவர்களுக்கான பரிசளிப்பு விழாவும், ஒன்று கூடலும் கடந்த (14/12/2025 ஞாயிற்றுக்கிழமை) “Blacktown Boys High School Hall” அரங்க மண்டபத்தில், மாணவர்களின் அரங்க ஆற்றுகைகள், ஆசிரியர் மதிப்பளிப்பு, சிறப்புரைகள் போன்ற நிகழ்வுகளுடன் சிறப்புற நடந்தேறியுள்ளது.
பரிசளிப்பு விழாவினை தொடக்கி வைக்க பள்ளி முதல்வர் செல்வராஜி இரங்கநாதன், பள்ளியின் உதவி முதல்வர் தயாழினி முரளீதரன் ஆகியோர் மங்கள விளக்கினை ஏற்றி வைத்தனர். தொடர்ந்து பள்ளி மாணவர்கள் அவுத்திரேலிய தேசிய கீதம், தமிழ்மொழி வாழ்த்து, பாடசாலைக் கீதம் என்பவற்றினை இசைத்தனர். அதனைத்தொடர்ந்து அவுத்திரேலிய நிலத்தின் உரிமையாளரான பழங்குடி மக்களுக்கு நன்றி சமர்ப்பித்தல், தாயக விடுதலைக்கு உயிர் ஈய்ந்த மக்களுக்கு அகவணக்கம் செலுத்தல் என்பன இடம்பெற்றன. இதனத் தொடர்ந்து நிகழ்வுக்கு வந்திருந்த அனைவரையும் வரவேற்று பள்ளி ஆசிரியர் சரஸ்வதி நாராயணன் அவர்கள் வரவேற்புரை வழங்கினார். அடுத்து அதிபர் உரை இடம்பெற்றது
கோதையின் தமிழைக் கொண்டாடி மகிழ்வோம் !
மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா
மேனாள் தமிழ்மொழிக் கல்வி இயக்குநர்
மெல்பேண் ..... அவுஸ்திரேலியா
மாதங்களிலே மார்கழி மகத்தான மாதம். சைவமும் ,வைணமும் சங்கமிக்கும் மாதம். திருவெம்பாவை யும் திருப்பாவையும் ஆலயங்களில் பக்தி பூர்வமாய் பாடப்படுகின்ற மாதம். ஆண்டாளின் அமுதத் தமி ழும் , மணிவாசகரின் உருக வைக்கும் தமிழும் பக்தியுடன் சேர்ந்து இசையாய் எழுந்து நிற்கும் மாதம். இந்த மாதம் இறையினை ஏற்றிப் போற்றி நிற்க அமைந்திட்ட மாதம். தெய்வீக மாதமாய் விளங்குவதால் - குடும்ப விழா க்களுக்கோ வீட்டு நிகழ்வுகளுக்கோ இடம் கொடுப்பதில்லை. தெய்வீக மாதத்தில் தெய்வ த்தை நினை என்று எங்கள் முன்னோர்கள் சொல்லி வைத்து விட்டார்கள். தெய்வீகம் முன்னிற்பதால் மார் கழி பீடை உடைய து அல்ல - பீடுடைய மாதம் என்பதே மிகப் பொருத்தமானதாகும். கண்ணனும் கீதை யில் " மாதங்களில் நான் மார்கழி " என்று மொழிந்ததாய் அறிகின்றோம். சிவனும் , திருமாலும் ஏற்றிப் போற்றப்பட்டு - சிவன் அடியாரும் , திருமால் அடியாரும் தீந்தமிழால் பாமாலை சூட்டினார்கள். அப்படி அவர்கள் பாமாலை சூட்டி யதும் மார்கழியிலேதான். அந்த வழியில் ஒரு அடியார் பெண்ணாய் அமைந்து திருமாலுக்குப் பாமாலை யோடு , பூமாலையையும் சூட்டி மகிழ்கின்றார். அவர்தான் - சூடிக் கொடுத்த சுடர்க் கொடியான கோதை நாச் சியார். சைவசமய குரவர்போல் - வைணவ சமயத்தில் ஆழ்வார்கள் வருகிறார்கள். அவர்கள் பன்னிருவர். அவர்களில் ஒரே ஒரு பெண்ணாய் வாய்த்தவர்தான் கோதை நாச்சியார். பெரியாழ்வாரின் மகளாய் திரு மாலின் அருளினால் வாய்த்தவர்.
திருமாலினால் ஆட்கொள்ளப்பட்டவர்கள்.திருமாலின் பக்தியில் ஆழ்ந்தவர்கள்.ஆதலால் ஆழ்வார்கள் என்று போற்றப்படும் உன்னத நிலைக்கு ஆழானவர்கள் என்று எடுத்துக் கொள்ளலாம். அப்படியான ஆழ் வார்களில் ஒரு பெண்ணாய் இருக்கும் நிலையில் ஆண்டாள் நாச்சியார் விளங்குகிறார். ஆண்டாளைத் தவிர மற்றைய ஆழ்வார்கள் அனைவரும் ஆண்களாய் இருப்பதால் - அவர்கள் திருமாலை நோக்கும் வித மும் திருமாலை ஏற்றிப்போற்றிப் பாடும் விதமும் ஆண்டாள் போல் இருக்கவில்லை. அவர்கள் யாவரும் ஆண்கள் என்பதால் அவர்கள் நோக்கும் ,போக்கும் அவர்களுக்கே உரித்தானதாய் ஆகியே இருந்தது எனலாம். அவர் களும் திருமாலைக் காதலித்தார்கள். அந்தக் காதலும் பல நிலையிலே அமைந்திருந்தது. அவர்கள் அனை வரும் தம்மைப் பெண்ணாக உருவகித்தே தம்முணர்வுகளை வெளிப்படுத்தும் நிலை இருந்தது. ஆனால் பெண்ணாகவே இருந்த காரணத்தால் ஆண்டாள் நாச்சியாரின் வெளிப்பாடும் , உணர்வுகளும் , பெண் மைக்குரிய பாங்கிலேயே அமைந்திருந்தது. இதனால் ஏனைய ஆழ்வார்களின் தமிழைவிட ஆண்டாள் நாச் சியாரின் தமிழ் - அமுதத் தமிழாய் , சங்கத் தமிழாய் , காதல்த்தமிழாய் , கற்கண்டுத் தமிழாய் , அணைக்கும் தமிழாய் , ஈர்க்குந்தமிழாய் , படிக்கப் படிக்க சுவைக்கும் தமிழாய் - பல்பரிணாம் கொண்டதாய் விளங்கியது - விளங்குகிறது என்பதை மறுத்துரைத்து விடல் இயலாது.
இயல்பும் எண்ணிக்கையும்!
எண் வாழ்க்கையை கணிக்கிறதென்கிறார்
வரும் எண்கள் வாழ்க்கையை கணிப்பதால்
பெரும் எண்கள் தரத்தை குறித்து நிற்குமா
வாக்கு இயந்திரங்களிலும் எண்கள் உள்ளன
அந்த எண்ணிக்கையே ஆட்சி அமைக்கிறது
உயர்ந்த நாடுகள் முற்றாகவே மறுக்கின்றன
உயரிய முறையல்ல எனவும் வெறுக்கின்றன
எண்ணிக்கையை ஏற்றலாம் குறைக்கலாம்
பெரும்பாலும் இதை எல்லோரும் செய்வதே
எண்ணிக்கையின் விளையாட்டு புரிகிறதா
எண்ணிக்கை மக்கள் எண்ணத்தை கூறுமா
நூறுபேர் இருந்தும் கௌரவர்கள் நல்லவரோ
ஐந்துபேர் என்பதால் பாண்டவர் கெட்டவரோ
எண்ணிக்கை எல்லாவற்றையும் காட்டிடாது
ஆயிரம் மின்மினிக்குள் ஆதவன் மிளர்கிறான்
புற்றீசல் பெருகிவந்து எண்ணிக்கை காட்டும்
மற்றொரு கணம் மாயமாய் எல்லாம் மறையும்
பெற்றது அத்தனையும் உண்மை என்றாகுமா
உற்றதை சொல்லாத எண்ணிக்கையும் ஏன்!
-சங்கர சுப்பிரமணியன்.
தமிழன் அன்று சீனாவில் வணிகம்! தமிழன் இன்று சீனாவில் பயணம்!! தொடர்- 7…..சங்கர சுப்பிரமணியன்.
பீஜிங்கிற்கும் ஷியானுக்கும் இடைப்பட்ட தூரத்தில் பல நகரங்களை தொடர்வண்டி ஓடும்போது கடந்து செல்வதை பார்க்கலாம். எங்கு பார்த்தாலும் அடுக்குமாடி குடியிருப்புக்கள் வானுயர்ந்து நின்கின்றன. தனியாக மாடியில்லா கட்டிடங்களைக் காண்பது அரிது. அப்படியே இருந்தாலும் அவை விவசாய நிலங்களுக்கு அருகில் ஓரிரு கட்டிடங்களாக இருக்கும். வழி நெடுக பச்சைப் பசேலன பசுமையாக இருக்கும்.
தென்னிந்திய சினிமாவில் முதல் நூற்றாண்டு நட்சத்திர நாயகி பி. பானுமதி - ச . சுந்தரதாஸ்
தென் இந்திய திரையுலகம் என்றாலே அது ஆணாதிக்கம் நிறைந்தது
என்ற அபிப்பிராயம் இன்றும் நிலவி வருகிறது. ஆனால் அந்த அபிப்பிராயத்தை தகர்க்கும் விதமாக சில பெண்களின் அதிக்கமும் அங்கு நிலை நாட்டப்பட்டு வந்துள்ளது. அப்படி நிலை நாட்டியவர்களில் முதன்மையானவர் நூற்றாண்டு நாயகியான பி. பானுமதி.
பிரபல தெலுங்கு டைரக்டர் பி .என் .ரெட்டி தான் எடுக்கும் ஸ்வர்க்க சீமாவில் பானுமதிதான் கதாநாயகியாக நடிக்க வேண்டும் என்று விடாப்பிடியாக இருந்தார். இறுதியில் கட்டியக் கணவன் விட்டுக் கொடுக்க பானுமதியின் திரைப் பயணம் சிறகடித்து பறக்கலானது.
இலங்கைச் செய்திகள்
மலையக ரயில் மார்க்கத்திற்கு பாரிய சேதம் - வீதிகள் புனரமைக்கப்பட்டு வழமைக்கு திரும்புவதற்கும் குறிப்பிட்டளவு காலம் செல்லும்!
திருகோணமலை – கொழும்பு இரவுநேர ரயில் சேவை இல்லாததால் உள்ளூர் மற்றும் வெளிநாட்டு பயணிகள் பாதிப்பு!
கண்டியின் வத்தேகம – கபரகல பிரதான வீதி மீண்டும் மூடப்பட்டது!
யாழ். தையிட்டி விகாரை தொடர்பில் புதிய தீர்மானம்!
யாழ். கோட்டையை சுற்றியுள்ள பகுதியில் எல்லைக் கல் நடும் தொல்லியல் திணைக்களம்!
தையிட்டி விகாரைக்கு எதிராக போராட்டம் - மத தலைவர்கள் , அரசியல்வாதிகள் கைது ; தொடரும் அராஜகம்
மலையக ரயில் மார்க்கத்திற்கு பாரிய சேதம் - வீதிகள் புனரமைக்கப்பட்டு வழமைக்கு திரும்புவதற்கும் குறிப்பிட்டளவு காலம் செல்லும்!
16 Dec, 2025 | 05:01 PM
நாட்டில் இடம்பெற்ற புயல் மற்றும் மண்சரிவு, வெள்ள அனர்த்தம் காரணமாக கொட்டகலையிலிருந்து அம்பேவெல இடையில் புகையிரதங்களை இயக்குவது மிகவும் கடினம் எனவும் புகையிரத வீதிகள் புனரமைக்கப்பட்டு வழமைக்கு திரும்புவதற்கும் குறிப்பிட்டளவு காலம் செல்லும் என ரயில்வே வீதி பராமரிப்பு பொறியாளர்கள் தெரிவிக்கிறனர்.
இதில் கிரேட் வெஸ்டர்ன் பகுதியில் ஏற்பட்டுள்ள மண்சரிவு மற்றும் ஏனைய இடங்களில் ஏற்பட்ட பாரிய மண்சரிவு மற்றும் வீதி தாழிறங்கி உள்ளதால் கொட்டகலையிலிருந்து அம்பேவெல வரையிலான ரயில் பாதையை மீட்டெடுப்பது மிகவும் கடினம் எனவும் நாட்டில் ஏனைய இடங்களில் பாலங்கள் மற்றும் வீதிகள் புனரமைக்கப்பட்டு பயன்படுத்தப்படுகின்றன எனினும் அவை தற்காலிக புனரமைப்புக்களுக்கே உட்படுத்தப்பட்டுள்ளன எனவும் தெரிவிக்கின்றனர்.
உலகச் செய்திகள்
6 நாடுகளுக்கு உள் நுழைய தடையும், 15 நாடுகளுக்கு பகுதியளவில் கட்டுப்பாடுகளையும் விதித்தது அமெரிக்கா
அமெரிக்க க்றீன் கார்ட் விசா லொட்டரி திட்டம் இடைநிறுத்தம் - ட்ரம்ப் அதிரடி உத்தரவு
பிபிசிக்கு எதிராக ட்ரம்ப் 10 பில்லியன் அமெரிக்க டொலர்கள் இழப்பீடு கோரி வழக்கு
ரஷ்ய நீர்மூழ்கிக் கப்பல் மீது முதன் முறையாக நீருக்கடியிலான ட்ரோன் தாக்குதலை நடத்தியது உக்ரைன்!
நேட்டோவில் இணையும் முயற்சியை கைவிட தயாராக உள்ளோம் - உக்ரைன் ஜனாதிபதி
6 நாடுகளுக்கு உள் நுழைய தடையும், 15 நாடுகளுக்கு பகுதியளவில் கட்டுப்பாடுகளையும் விதித்தது அமெரிக்கா
Published By: Digital Desk 3
17 Dec, 2025 | 10:16 AM
ட்ரம்ப் நிர்வாகம் அமெரிக்காவின் பயணத் தடையை விரிவுபடுத்தியுள்ளது. அதன்படி, சிரியா மற்றும் பாலஸ்தீன உத்தியோகபூர்வ ஆவணங்களைக் கொண்ட பயண ஆவணங்களை வைத்திருப்பவர்கள் உட்பட, நாட்டிற்குள் உள் நுழைய பயண தடை விதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் மேலும் ஆறு நாடுகளைச் சேர்த்துள்ளதாக அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளது.
புதிய அறிவிப்பின்படி, ஆப்கானிஸ்தான், பர்மா, சாட், கொங்கோ குடியரசு, ஈக்குவடோரில் கினியா, எரித்திரியா, ஹெய்ட்டி, ஈரான், லிபியா, சோமாலியா, சூடான் மற்றும் ஏமன் ஆகிய 12 நாடுகளின் குடிமக்களுக்கு ஏற்கனவே இருந்த முழுமையான பயணத் தடைகள் தொடர்கின்றன.
இலக்கியவெளி நடத்தும் இணையவழி ஆய்வரங்கு – 54 “நூல்களைப் பேசுவோம்”
நாள்: சனிக்கிழமை 27-12-2025
நேரம்:
இந்திய நேரம் - மாலை 7.00
இலங்கை நேரம் - மாலை 7.00
கனடா நேரம் - காலை 8.30
இலண்டன் நேரம் - பிற்பகல் 1:30
வழி: ZOOM
Join Zoom Meeting:
Meeting ID: 389 072 9245
Passcode: 12345
https://us02web.zoom.us/j/
நூல்களைப் பேசுவோம்:
அனாமிகாவின் – “ததா கதா”, “உறுமி” – (கவிதைத்தொகுப்புக்கள்)
உரை: சி.ரமேஷ்
ந. இரத்தினக்குமார் தொகுத்த “காடன் கண்டது” – (குறவர் இனக்குழுக்கள் குறித்த சிறுகதைகள்)
உரை: ஜெ. ஹறோசனா
கனலி விஜயலட்சுமியின் “காற்றெனக் கடந்து...” (நாவல்)
உரை: பா.இரவிக்குமார்
ஒருங்கிணைப்பு: அகில்
மேலதிக விபரங்களுக்கு: - 001416-822-6316










.jpg)

