(வாழ்நாள் சாதனையாளர்)
வையகத்தில் உயர்ந்ததொரு நாகரிகந் தன்னை
வளர்த்ததுடன் வரையறையும்
செய்தான் தமிழன்!
ஐயமின்றி நம்பிவாழ்ந்தான்! பயனும் பெற்றான்!
அவசியமென் றேநல்ல விழுமி
யங்கள்
மெய்யாக வழிவழியாய்த் தெடர வைத்தான்!
விரும்பாத சிலரின்று அவற்றை
மறந்து
பொய்வாழ்க்கை வாழ்கின்றார்! மனதை மாற்றிப்
புரியவைத்துப் புடஞ்செய்ய எவரால் முடியும்?
;புலம்பெயர் நாட்டிலே கூட்டுக் குடும்ப வாழ்க்கையைக் கைவிட்டோர் பலர்!
பண்பாட்டுச் சிறப்புடனே அன்று வாழ்ந்த
பரந்தமனம் கொண்டுயர்ந்த தமிழன்
வாழ்க்கை
கண்பட்டு விட்டதுவோ? காலப் போக்கில்
கலைந்திட்ட கூடுவிட்ட தேனீக் கள்போல்
மண்விட்டுப் புலம்பெயர்ந்த ஈழத் தமிழர்
மாறிவிட்ட கலாசாரக் கலப்பிற்
குள்ளே
எண்பட்ட தாற்றானோ கூட்டுக் குடும்பம்
எப்படியோ அருகிடுதே! அதுவே உண்மை!







.png)

.jpg)
.jpg)