கவிதை




கடல் குடிக்கும் போட்டி
- எச். . அஸீஸ்
குந்தியிருந்து எல்லோரும்
குடிக்கிறார்கள் கடலை
இது கடல் குடிக்கும் போட்டி
மீன்களெல்லாம் மேலெழுந்து
மூக்குகளால் பயணம் செய்ய
சுறாவும் திமிங்கிலமும்
சுருண்டு படுத்திருக்க
கரையில் எல்லோரும்
குந்தியிருந்து குடிக்கிறார்கள்
கடல் குடித்து முடிந்து
பெரும் குழிதான் தோன்றியது
எலும்புகளும் எச்சங்களும்
மிச்சங்களா
சூரியக்கதிர் பட்டு தெறித்தன
மலை உயர
கூட்டம் கூட்டமாய் பெரு மீன்கள்
கரை வந்து கையுயர்த்தி சரணடைய
ஒரு போர் முடிந்த காட்சிபோல்
தெரிகிறது எங்கும்
குந்தியிருந்து
குடித்து முடித்தனரோ
பெரும் கடலை
ஒருகணம் தான்
எங்கே 

தொண்டீஸ்வரத்துக்கு ஒரு யாத்திரை - பராசக்தி சுந்தரலிங்கம்

..
WHAT HAPPENED TO THE SIVAN TEMPLE AT THONDESWARAM


                                தொண்டீஸ்வரத்துக்கு ஒரு யாத்திரை    

                                             பராசக்தி சுந்தரலிங்கம் 


தொண்டீஸ்வரமா ?
அப்படி ஒரு தலம் எங்கே இருக்கிறது ?என்று பலரின் மனதில் கேள்வி எழலாம் !



வரலாற்று ஆர்வலர் திரு  திருமுகம் ஆறுமுகம் அவர்கள்     எங்களை அங்கே அழைத்துச் செல்கிறார்

 வாருங்கள்  நாமும் அங்கே செல்லலாம்

சென்ற வியாழன் மே 28' , 2015 அன்று சிட்னி மூத்தபிரசைகள் சங்கத்தின் ஏற்பாட்டிலே திரு திருமுகம் ஆறுமுகம் அவர்கள் தொண்டீஸ்வரத்தின் பெருமையை  வரலாற்றுச் சான்றுகளுடன் ஆதாரபூர்வமாக விளக்கி ஓர் அரிய சொற்பொழிவை Power  Point  Presentation  மூலம்   விபரித்து எமது பாரம்பரியத்தின் பெருமையை உணர்த்தி  எம்மெல்லோரையும்  பரவசத்திலாழ்த்திவிட்டார். தொண்டீஸ்வரம்  இற்றைக்கு  மூவாயிரம்   ஆண்டு காலம்  முதலே இருந்திருக்கலாமோ   என்று   கருதத் தோன்றுகிறது 

இலங்கையின்  நான்கு திசைகளிலும் காவல் தெய்வமாக ஐந்து ஈஸ்வரங்கள் கரையோரங்களில் அமைந்து இருப்பதை    அறிந்திருக்கிறோம் 
வடக்கிலே நகுலேஸ்வரம் கிழக்கிலே  திருக்கோணேஸ்வரம்       மேற்கிலே  திருக்கேதீஸ்வரமும் முன்னேஸ்வரமும் தெற்கிலே தொண்டீஸ்வரமும் இருந்தன என்று வரலாற்றாசிரியரின் குறிப்புகள் கூறுகின்றன   (சில வரலாற்று நூல்களிலே முன்னேஸ்வரம் என்ற தலம் பற்றிய செய்தி காணப்படவில்லை --நான்கு திசைகளிலும்  நான்கு ஈஸ்வரங்கள் என்ற குறிப்பே உள்ளது )

சொற்பொழிவும் கலந்துரையாடலும்





“போரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்குப் பொருளாதார வலுவூட்டல்: யதார்த்தமும் சவால்களும்” என்ற பொருளில் மாவை நித்தியானந்தன் வழங்கும் உரையும் கலந்துரையாடலும் கன்பராவிலும் சிட்னியிலும் இடம்பெற உள்ளன.

நிலையான வாழ்க்கைத் தீர்வுகள் நம்பிக்கை நிதியத்தின் ஆதரவில் இந்த நிகழ்ச்சிகள் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளன.

கன்பரா நிகழ்ச்சி
இம்மாதம் 13 ம் திகதி சனிக்கிழமை மாலை 6.30 மணிக்கு, கன்பரா Bromby Street, Isaacs இல் அமைந்துள்ள மூத்த பிரஜைகள் மண்டபத்தில் நடைபெறும்.

சிட்னி நிகழ்ச்சி
இம் மாதம் 14 ம் திகதி ஞாயிற்றுக்கிழமை மாலை 4.30 மணிக்கு Toongabbie Community Centre இல் நடைபெறும்.

மேலதிக விபரங்களை 0411 114699 என்ற தொலைபேசி எண்ணில் பெற்றுக் கொள்ளலாம்.

இன்றைய தமிழ்த் திரையுலக வில்லன்கள் இயல்பாக நடித்தார்கள் முன்னாள் வில்லன் நடிகர்கள் மேடையிலிருந்து உரத்துப்பேசியவாறு திரையுலகம் வந்தார்கள்



(அவுஸ்திரேலியா  சிட்னியில்  அண்மையில்  நடைபெற்ற ஊடகவியலாளர்  சுந்தரதாஸ்  எழுதிய  மறக்க முடியாத வில்லன்கள்    நூல்    வெளியீட்டில்  எழுத்தாளர்  முருகபூபதி நிகழ்த்திய    உரையின்  சாராம்சம்)
                                                                                                                    முருகபூபதி
வாழ்க்கையில்    மறக்க  முடியாத  சம்பவங்கள்,   மறக்க  முடியாத காட்சிகள்,     மறக்க  முடியாத  இடங்கள்,   மறக்க முடியாத  நூல்கள், மறக்க முடியாத கதைகள்,   மறக்க  முடியாத  கலைஞர்கள், எழுத்தாளர்கள்,   மறக்க முடியாத  நல்ல  அல்லது  கெட்ட மனிதர்கள் இருப்பார்கள்.
இவ்வளவு  மறக்க முடியாத  விடயங்கள்  உலகில்  இருக்கும்பொழுது    நண்பர்  சுந்தரதாஸ்,    மறக்க முடியாத வில்லன்களை  ஏன்  தேர்ந்தெடுத்தார்...?  என்று,  அவர்  இந்தத்தொடரை    இதழ்களில்  எழுதத்தொடங்கியது  முதலே யோசித்தேன்.
இந்த   வில்லன்  என்ற  சொல்லுக்கு  எமது  தமிழில்  என்ன அர்த்தமோ   அதே   அர்த்தம்தான்   ஆங்கிலத்திலும்  Villain .
கெட்டவன்,  துஷ்டன்,  தீயவன்,  அயோக்கியன்,  துரோகி,  போக்கிரி, மோசமானவன்    என்றெல்லாம்  வில்லனுக்கு  பொருள்  இருக்கிறது.
சுந்தரதாஸ்   தெரிவுசெய்துள்ள  வில்லன்கள்,   தமிழ்த்திரையுலகில் வில்லன்களாக   தோன்றிய  முன்னாள்  நடிகர்கள்.   அவர்களில்  சிலர் மறைந்துவிட்டார்கள்

" தமிழ்த்திரையுலக வில்லன் நடிகர்கள் தனிப்பட்ட வாழ்வில் மிகவும் நல்லவர்கள் " சிட்னியில் நடந்த சுந்தரதாஸ் எழுதிய மறக்க முடியாத வில்லன்கள் நூல் வெளியீட்டில் கருத்துரைகள்"



  

அடிலெய்டில் பன்னாட்டுத் தமிழ் மாநாடு --- அன்பு ஜெயா


மதுரையில் அமைந்துள்ள தமிழக அரசின் உலகத் தமிழ்ச் சங்மும் அடிலெய்டு தமிழ்ச் சங்கமும் இணைந்து அயலகத்தில் தமிழ் கற்றல் கற்பித்தலில் உள்ள சிக்கல்களும் தீர்வுகளும்” என்ற பொருளில் நடத்திய பன்னாட்டு மாநாடு மே மாதம் 30, 31ஆம் தேதிகளில் அடிலெய்டு நகரில் சிறப்பாக நடந்தது. முதல் நாள் மாநாடு தெற்கு ஆஸ்திரேலிய பல்கலைக்கழக மேற்கு வளாகத்திலும், இரண்டாம் நாள் மாநாடு தெற்கு ஆஸ்திரேலிய தமிழ்ப் பள்ளி வளாகத்திலும் நடைபெற்றது.
முதல் நாள், பல்லினக் கலாச்சார அமைச்சர் மாண்புமிகு சோ பெட்டிசன் மாநாட்டு துவக்க உரையாற்றினார். அடிலெய்டு தமிழ்ச் சங்கத்தின் தலைவர் லாரண்ஸ் அண்ணாதுரை வரவேற்புரையாற்றினார். உலகத் தமிழ்ச் சங்கத் தனி அதிகாரி முனைவர் பசும்பொன் கருப்பையா அவர்களின் முயற்சியில் இந்த மாநாடு ஏற்பாடு செய்யப்படிடிருந்தது. உலகத் தமிழாராய்ச்சி மையம் (சென்னை) இயக்குனர் முனைவர் விஜயராகவன் கோவிந்தசாமி அவர்களும், தெற்கு ஆஸ்திரேலியப் பல்கலைக்கழகப் பேராசிரியர்கள் பீட்டர் கேல் தாமஸ் மிகால் ஆகியோர் சிறப்புரை ஆற்றினர். மதுரைப் பல்கலைக் கழகத் தமிழ்த்துறை பேராசிரியர் ரேணுகா தேவி, சிங்கப்பூரைச் சேர்ந்த பல்கிஷ் ஜெஹாங்கீர், சிட்னி சட்ட வல்லுநர் முனைவர் சந்திரிகா சுப்பிரமணியன், லாரண்ஸ் அண்ணதுரை, மெல்பர்ன் நகர் ஜெயராம சர்மா, நாகை சுகுமாரன், மாவை நித்தியனந்தம் மற்றும் பல தமிழறிஞர்கள் மாநாட்டுப் பொருள் பற்றி உரையாற்றி சிறப்பித்தனர். விழாவில் தமிழ் அவுஸ்திரேலியன் ஆசிரியர் கலாநிதி சந்திரிகா சுப்பிரமணியன் எழுதிய தில்லை என்னும் திருத்தலம்” என்ற நூல் வெளியிடப்பட்டது.
இரண்டாம் நாள் நிகழ்வில் ஆஸ்திரேலிய பாராளுமன்ற உறுப்பினர் மாண்புமிகு மேட் வில்லியம்ஸ் கலந்துகொண்டு தமிழ்ப்பள்ளி ஆசிரியர்களையும், மாணவர்களையும் சந்தித்து உரையாடினார். அதன்பின், பள்ளி அரங்கத்தில் தெற்கு ஆஸ்திரேலிய தமிழ்ப் பள்ளியின் முதல்வர் ஜோசப் சேவியர் வரவேற்புரை ஆற்றினார். மாண்புமிகு மேட் வில்லியம்ஸ் அவர்கள் துவக்கவுரையாற்றினார். சிட்னி தமிழாசிரியரும் தமிழ் அவுஸ்திரேலின் துணை ஆசிரியருமான அன்பு ஜெயா தலைமை உரையாற்றினர். வெளிநாட்டு விருந்தினர்கள் சிறப்புரை ஆற்றினார்கள். உலகத் தமிழ்ச் சங்கம் மாநாட்டு பேராளர்களுக்கும், அமைப்பாளர்களுக்கும் சான்றிதழ் வழங்கி சிறப்பு செய்தது.