இனிய கானங்கள் 2020 - நாட்டிய கலாநிதி கார்த்திகா கணேசர்
.
கடந்த February 22 ம் திகதி Recover இசைக் குழுவினரால் மீண்டும் இனிய கானங்கள் நிகழ்வு
Bowman Hall, Blacktown மண்டபத்தில் நடந்தேறியது. இருபதுக்கும் அதிகமான இளைஞர்களும் யுவதிகளும் பங்கேற்ற அற்புதமான நிகழ்ச்சி.
மங்கள விளக்கை Dr. பரன் தம்பதியினரும் Dr கௌரிபாலனும், சட்டத்தரணி சந்திரிகாவும் ஏற்றி மங்களகரமாக ஆரம்பித்து வைத்தனர். நிகழ்ச்சி குறிப்பிட்டபடி 6.30 மணிக்கு ஆரம்பமானது. மகிழ்விற்குரிய விடயம் என்னவென்றால் அவுஸ்திரேலியாவில் பிறந்து வளரும் இவர்கள் தமிழ் பாடல்களை அட்சர சுத்தமாகப பாடி மகிழ்வித்தனர். புலம் பெயர்ந்த நாடுகளிலே தமிழ் இனி மெல்லச் சாகும் என பலர் கூறுவது எமக்குத் தெரியும். அத்தகையோர் அன்று அங்கு வந்திருந்தால் தமது கருத்தை மாற்றி இருப்பார்கள்.
இக்குழு தாய் மொழி தமிழில் நிகழ்ச்சி நடாத்தியது மட்டுமல்லாது அதில் சேரும் பணத்தில் பாதியை தாயகத்தில் வாழும் அல்லல்படும் உறவுகட்கு அனுப்பியும் வைத்துள்ளார்கள்.
முருகர் தங்கம்மா நடராசா நினைவு முற்றம் என்ற பலநோக்கு இலவச சமூக சேவையாளர்களுக்கு $ 6280 ம் புற்று நோய் மையத்திற்கு $ 4,853 இவர்களால் வழங்கப்பட்டுள்ளது. இவை கடந்த இரு வருட நிகழ்வில் பெற்ற பணத்தில் வழங்கபட்டது. இவ்வருடம் சிட்னி தமிழ் நூலகத்திற்கும், சொந்த பிரதேசத்திற்கும் வழங்க உள்ளார்கள். இந்த இளம் உள்ளங்களை போற்றாமல் இருக்க முடியுமா?
இத்தனைக்கும் முற்று முழுதாக உழைப்பவர்கள் பானு போல், கவிதா போல் சகோதரிகளே. இசையிலும் பாடலிலும் அபார திறமை படைத்தவர்கள். சேர்ந்து பாடியும் தனித்துப் பாடியும் மகிழ்வித்தனர். அன்று பாடிய இளம் கலைஞர்கள் மற்றும் வாத்தியக் கலைஞர்களின் கூட்டு முயற்சியும் கடின உழைப்பும் போற்றவேண்டியதே.
இது தவிர பானு பரதநாட்டிய நிகழ்ச்சியில் பங்கேற்றதுடன் அன்று நடந்த ஆடல்களையும் நெறியாள்கை செய்திருந்தார். ஆடல்கள் அருமையாக அமைந்திருந்தன. ஆடிய அத்தனை கலைஞர்களும் உணர்ந்து ஆடியிருந்தனர்.
பரதத்தை கற்றதுடன் நில்லாது மேலும் அந்தக் கலையில் ஈடுபட்டு வளர்க்கும் பானுவிற்கு எனது வாழ்த்துக்கள்.
வருடாவருடம் Recover இசை ஆடல் நிகழ்ச்சியை வெற்றிகரமாக நடாத்த வேண்டும் என இறைவனைப் பிரார்த்திக்கின்றேன்.

மெல்பனில் அமரர் சிசு. நாகேந்திரன் - நினைவரங்கு
அவுஸ்திரேலியத் தமிழ்
இலக்கிய கலைச்சங்கத்தின்

வாசிப்பு
அனுபவப்பகிர்வு அரங்கு
சிசு. நாகேந்திரன் அய்யா எழுதிய அந்தக்காலத்து யாழ்ப்பாணம்
என்னும் நூலை திருமதி புஸ்பா சிவபாலனும், பிறந்த மண்ணும் புகலிடமும் நூலை திருமதி
கலாதேவி பாலசண்முகனும், பழகும் தமிழ்ச் சொற்களின் மொழிமாற்று அகராதி ( தமிழ் – ஆங்கிலம்
) நூலை திரு. அசோக்கும் சபையோருக்கு மீளவும் அறிமுகப்படுத்தி, இந்நூல்களின் சமூகப்பயன்பாடுகள்
குறித்து தங்கள் வாசிப்பு அனுபவங்களை பகிர்ந்துகொள்வார்கள்.
நிகழ்ச்சியின்
இறுதியில் சங்கத்தின் செயலாளர் கலாநிதி மு. ஶ்ரீகௌரி சங்கர் நன்றியுரை நிகழ்த்துவார்.
அனைவரும் அன்புடன் அழைக்கப்படுகின்றனர்.
மேலதிக விபரங்களுக்கு: முருகபூபதி
நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் – அவுஸ்திரேலியத் தமிழ் இலக்கிய
கலைச்சங்கம் - தொலைபேசி: 0416 625 766
கவிஞர் அம்பி எழுதும் சொல்லாத கதைகள் - அங்கம் -02
கோயிலுங்
குளமும்

கோயிலின்
வீதியிலே, குழு குழுவென்று செழித்து வளர்ந்து, பொன் பூச்செரிந்து நின்றது ஒரு தன்னந்தனியான
கொன்றை மரம். அதன் அழகுக்கோலம் இன்றும் அகக் காட்சியில் பசுமை தருகிறது. அது தன் கிளைகளிலே
கட்டித் தொங்கவிட்டுப் புதுப்பொலிவு தருகிறது. அது தன் கிளைகளிலே கட்டித் தொங்கவிட்டுப்
புதுப்பொலிவு தந்த பொற்றோரணம் அக்கொன்றையின் நினைவை மீட்டு வருகிறது.
கோயிலின்
மேற்குப் புறத்தில், ஒரு குளம், தாமரைக்குளம். அக்குளத்திலே மலர்ந்து நின்று ஆடல் பயிலும்
செங்கமலமும் வெண்கமலமும், திருமகளும் கலைமகளும்
ஊரை அழகுசெய்து ஆசிபுரிதல் போன்று அமைந்த அகங்கொள் காட்சி. அக்காட்சியாற் கவரப்பட்டவர்
நம்மூர்க் கவிஞர் நாவற்குழியூர் நடராசன்.
‘ ஆருக்கும்
எட்டாத வாவியில் – நீர்
ஆடிக் குதிக்கிறாள்
தாமரை ‘
என்று
பாடல் அடிகளைத் துவங்கி, அவள் நடனத்தைத் தமிழ் செய்து ரசித்த பின்னர், அவளை விளித்து,
‘ ஏனடி இத்தனை
நாட்டியம் – இதில்
எத்தனை பேரை
நீ வாட்டுறாய்..? ‘
என்று
கேட்டு முடிக்கிறார். ஆம், தாமரையாள் நாட்டியமாடிக் குதித்து நின்று வாட்டிய ஊர் வாசிகளுள் நானும் ஒருவன்.
இளமைப்பருவத்திலே,
அந்தக்கோயிலும் குளமும் தந்த இனிமையான அனுபவங்கள் பல. குளத்திலே நீராடுவதும் கோயிலுக்குச்சென்று
வழிபாடு செய்வதும் வழக்கமாகியது.
எழுத்தாளர் சுஜாதாவை நான் வானலையில் சந்தித்த போது _ கானா பிரபா
18 ஆண்டுகளுக்கு முன் அப்போது வானொலி உலகத்தில் என் வயசு மூன்று. நான்கு தசாப்தங்கள் எழுத்துத் துறையில் இருக்கும் ஆதர்ஷ நாயகன் எனதருமை சுஜாதாவோடு பேட்டி எடுக்க ஆசைப்பட்டு அழைக்கிறேன். சின்னப் பையனிடம் என்ன பேட்டி என்று உதாசீனப்படுத்தி விடுவாரோ என்ற தயக்கம் வேறு. ஆனால் நடந்ததோ வேறு.
2002 ஆம் ஆண்டு "கன்னத்தில் முத்தமிட்டால்" படம் வந்த கையோடு நான் அப்போது பணிபுரிந்த வானொலிக்காக என் ஆதர்ஷ எழுத்தாளர் சுஜாதா அவர்களைப் பேட்டி காணத் தொடர்பு கொள்ள விழைத்தேன். எழுத்துலகில் உச்சத்தில் இருக்கும் இவர் நமக்கெல்லாம் பேட்டி கொடுப்பாரா என்ற அவநம்பிக்கை வேறு மனசின் ஓரத்தில் இருந்தது. ஆனால் நான் சற்றும் எதிர்பார்க்காத மனிதரைத் தனிப்பட்ட தொலைபேசி அழைப்பில் உணர்ந்தேன். வானொலிப் பேட்டிக்கு வந்து கலந்துகொண்டு கொட்டமடிக்கும் சில வித்துவச் செருக்குகளைக் கண்டிருக்கின்றேன். ஆனால் சுஜாதாவின் உரையாடல் என்னை அவர்பால் இன்னும் நேசிக்க வைத்தது.
எங்கள் கல்லூரி நூலகத்தில் செங்கை ஆழியானின் நாவல்களைத் தேடித் தேடி வாசித்துத் தின்று முடித்த கணமொன்றில் தென்பட்டது "பிரிவோம் சந்திப்போம்" பாகம் 1. அது தான் சுஜாதாவை எனக்கு அறிமுகப்படுத்திய முதல் புதினம். விறுவிறுவென்று வாசித்து முடித்த பின்னர் தான் அவரை அசை போடத்தொடங்கினேன். அட இது வித்தியாசமான ஒரு வாசிப்பு அனுபவமாக இருக்கிறதே என்று என்ற் வியந்தவாறே, பிரிவோம் சந்திப்போம் இரண்டிலிருந்து, விடாமல் சுஜாதாவை தொடர்ந்தேன். கரையெல்லாம் செண்பகப்பூ, அனிதா இளம் மனைவி, காகிதச் சங்கிலிகள், என் இனிய இயந்திரா, மீண்டும் ஜீனோ, கனவுத் தொழிற்சாலை, "ஆ" என்று கிட்டத்தட்ட முக்கால்வாசி நாவல்களை ஏப்பம் விட்டும் அடங்கவில்லை. இவரின் எழுத்துக்கள் வரும் சஞ்சிகைகளில், சினிமாப் பகுதிக்கு முன்னர் படிக்கும் பக்கங்கள் இவருடையதாக மாறி விட்டது.
அருணகிரி தமிழருந்தி ஆன்மீகவழி நடப்போம் ! மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா ..... மெல்பேண் .... ஆஸ்திரேலியா
கந்தருக்கு அலங்காரம்
கந்தருக்கு அந்தாதி
தந்துநின்றார் அருணகிரி
வேலவனின் வாகனத்தை
வேலவனின் கொடியதனை
வேலவனின் வேலதனை
விருத்தமாய் எமக்களித்தார் !
தாளமொடு தமிழ்பாட
ஆழநிறை சொல்லமைத்து
நீளமுள்ள கவிதைகளாய்
நெக்கருக உவந்தளித்தார்
செந்திலவன் திருவடியை
சந்ததும் நினைப்பதற்கு
சந்தமதைத் தமிழாக்கி
தந்துநின்றார் அருணகிரி !
பக்தியொடு தத்துவத்தை
பாடினின்றார் சந்தத்தில்
கையாண்ட சந்தங்கள்
கந்தனருள் பெற்றனவே
எங்கள் தமிழிலக்கியத்தில்
சந்தமழை சிந்துகவி
அருணகிரிக் கவிமேகம்
அள்ளியே தந்ததுவே !
அழிந்து வரும் தமிழர் இசைக்கருவிகள் - பகுதி 8 - ஐமுகமுழவு/குடமுழா
அழிந்து
வரும் தமிழர் இசைக்கருவிகள் - பகுதி 8 - ஐமுகமுழவு/குடமுழா
ஐமுகமுழவு/குடமுழா
- தோற்கருவி
அமைப்பு
குறிப்பு

சைவர்களின் நம்பிக்கைப்படி வாணாசுரன்
திரிபுர அசுரர்களில் ஒருவன். தனது புன்னகையால் திரிபுரங்களை எரித்த சிவபெருமான் இரக்கம் மேலிட்டு இரு
அசுரரை தன் வாயிற்காவலராகவும் கடைசி தம்பியான வாணாசுரனை தன் ஆடலுக்கு முழவு
இசைக்கும் கலைஞனாகவும் மாற்றி விடுகிறார். இதனை சுந்தரரின் திருப்புன்கூர்
திருப்பதிகத்தில் காணலாம்.
மழைக்காற்று - தொடர்கதை - அங்கம் 25 --- முருகபூபதி
கற்பகம் ரீச்சரின்
குரல் கேட்டதும் அபிதா துள்ளிக்கொண்டு
ஓடிவந்தாள்.
“ என்ன ரீச்சர்….?
“ என்னுடைய அறையில் நீ வாங்கி வந்த அந்த இலுப்பெண்ணெய் போத்திலை எடுத்து வந்து, என்பாதங்களில் பூசி
தேய்த்துவிடு… அதற்குத்தான் கூப்பிட்டேன்.
“ சரி.. ரீச்சர் “
அபிதா,
கற்பத்திற்கு முன்னால் இலுப்பெண்ணெய் போத்தலுடன்
தரையில் அமர்ந்தாள். பிறகு எழுந்தாள்.
“ எங்கே… போகிறாய்…?
“
“ இல்லை ரீச்சர், முதலில் கையை கழுவிக்கொண்டு வாரன் “
தான்
சொல்ல நினைத்தை அபிதா செய்வதில் கற்பகத்திற்கு திருப்தி. குளியலறை குழாயில் தனது இரண்டு கைகளையும் சோப் போட்டு
நன்றாக கழுவித்துடைத்து , ஈரலிப்பை போக்கியவாறு
வந்த அபிதா, மீண்டும் தரையில் அமர்ந்து, கற்பகத்தின் கால் பாதங்களை அடுத்தடுத்து, தூக்கி
தனது மடியில் வைத்து, பக்குவமாக எண்ணெயை தேய்த்துவிட்டாள். கற்பகத்திற்கு சுகமாக இருந்தது.
கண்களை மூடி அந்த சுகானுபவத்தை அனுபவித்தாள்.
“ ரீச்சர். கொஞ்சநேரம் அப்படியே இருங்க. அவசரப்பட்டு
கால்களை நனைத்துவிடவேண்டாம். இனிமேல் என்ன
செய்யவேண்டும் தெரியுமா….? நீங்கள் இரவு சாப்பாடு எல்லாம் முடித்து, படுக்கைக்கு செல்லும்
போது கூப்பிடுங்கள். கட்டிலுக்கே வந்து எண்ணெய் வைத்து தேய்த்துவிடுவேன். பிறகு பித்தவெடிப்பின் கடுகடுப்பு இல்லாமலேயே நித்திரை சுகமாக வரும்.
“ என்றாள் அபிதா.
“ இப்போதே வருகிறது. பிறகு இலுப்பை
மரங்களும் அதில் வந்து தொங்கும் வௌவால்களும் கனவில் வரும் “ என்று சொன்னவாறு கற்பகம் கண்விழித்து கலகலவென சிரித்தாள்.
‘ அடடா, இந்த சிடுமூஞ்சிக்கும் ஜோக் சொல்லத் தெரிகிறதே ‘ என்று மனதில் நினைத்தவாறு அபிதாவும் சம்பிரதாயத்திற்கு
சிரித்தாள்.
மஞ்சுளாவின் மன அவஸ்தைக்கு தேறுதல் சொல்லிக்கொண்டிருக்கும்போது,
கற்பகம் திடீரென அழைத்தது சற்று கோபத்தை தந்திருந்தாலும், அப்போது அமைதியில் ஆழ்ந்தாள்.
தப்பித்தவறி மஞ்சுளாவின் தற்போதைய
கவலைகள் இந்த கற்பகம் ரீச்சருக்கு தெரிந்துவிடக்கூடாது.
மஞ்சுளாவின் அறையிலிருந்து, அவளது
மனக்குறைளைக்கேட்டதும் தெரியக்கூடாது.
சாலப்பரிந்து… - சிறுகதை - நாஞ்சில் நாடன்
.
என்னைப் பொறுத்தவரை, நான் எழுதும் மனிதனின் வாழ்க்கையின் சகல பரிமாணங்களையும் நான் அறிந்திருக்க வேண்டும்.மொழியை மட்டும் அல்ல.கிராமியக்கலை என்பது குடியரசு தின ஊர்வலத்தில் ஆடிக்காட்டுவதல்ல.அது ஒரு திருத்தப்பட்ட மாதிரி.அந்த மாதிரிகளை வைத்துக் கொண்டு வாழ்க்கையை ஆராய முடியாது.
நாஞ்சில் நாடன்
மதுரை தமிழ் சங்கத்தில் ஆசி கந்தராஜாவின் ‘கள்ளக்கணக்கு’ சிறுகதை நூலுக்கு பரிசு
.
பன்முக நோக்கில் அயலகத் தமிழ்ப் படைப்புக்கள் என்னும் தலைப்பில்,பன்னாட்டுக் கருத்தரங்கம் 27, 28 பெப்ரவரி இரண்டு நாள்கள் மதுரை உலகத் தமிழ்சங்கத்தில் நடைபெற்றது. இரண்டாம் நாள் நிகழ்வில் ஆசி கந்தராஜாவின் ‘கள்ளக்கணக்கு’ சிறுகதை நூலுக்கு, சிறந்த சிறுகதை நூலுக்கான விருதையும் பணப் பரிசுப் பொதியையும், தமிழக அரசின் சார்பில் மாண்புமிகு தமிழ் ஆட்சி மொழி, தமிழர் பண்பாடு மற்றும் தொல்லியல் துறை அமைச்சர் திரு க. பாண்டியராஜன் வழங்கி கௌரவித்தார்.

அவுஸ்திரேலியாவின் பிரசித்திபெற்ற பழைய நியூ சவுத் வேல்ஸ் பாராளுமன்றத்திலே பொங்கல் பண்டிகை
சென்ற பெப்ரவரி 4ஆம் திகதி செவ்வாய்க் கிழமை அவுஸ்திரேலியாவின் பிரசித்திபெற்ற பழைய நியூ சவுத் வேல்ஸ் பாராளுமன்றத்திலே பொங்கல் பண்டிகை மிகவும் சிறப்பாகக் கொண்டாடப்பெற்றது. இந்த விழாவை தமிழ் மற்றும் பண்பாட்டுக் கழகம் ஒழுங்குசெய்திருந்தது.
5 ஆண்டுகளுக்கு முன்னர் இந்தப் பாராளுமன்றத்திலே பொங்கல் விழா முதன்முறையாக ஆரம்பிக்கப்பெற்றதைத தொடர்ந்து ஒவ்வொரு ஆண்டும் சிறப்பாக நடைபெற்று வந்தது.
திருமுறை விழா
விஷ்ணு
சிவா கோயில், மோசன், கன்பராவில்
15.02.2020, சனிக்கிழமை பி.ப. 5.00
மணிக்கு , சித்தாந்தரத்தினம்
கலாநிதி க. கணேசலிங்கம் தலைமையின் கீழ் 10-வது திருமுறை விழா மிகச் சிறப்பாக நடைபெற்றது.
இசை ஆசிரியை தமிழ்ச்
செல்வியின் பஞ்ச புராணத்தைத் தொடர்ந்து, சபையிலிருந்த அனைவருமாக மாணிக்க சுவாமிகள் அருளிச் செய்த
சிவபுராணத்தை பக்தியுடன் ஓதினார். தொடர்ந்து “பன்னிரு திருமுறைகள்” , “பெரிய புராணம்” என்ற தலைப்புகளில் மாணவர்களின் பேச்சு இடம்பெற்றது. அதன் பின்னர் கானாமிர்த இசைப்பள்ளி மாணவர்களின் திருமுறை
இசை இடம்பெற்றது. மாணவர்கள் தேவாரம் பாடியவர், பாடப்பெற்ற தலம், பண், தாளம், இராகம் என்பவற்றை கூறி அருமையாகப் பாடினார்கள். மாணவர்கள்
அனைவரும் தேவாரங்களை மனப்பாடம் செய்திருந்தமை பாராட்டப் பட வேண்டிய விடயம்.
தொடர்ந்து தலைமை உரையில், விழாத்தலைவர் சித்தாந்தரத்தினம் கலாநிதி க. கணேசலிங்கம் அவர்கள் மூலன் சொன்ன
கதை என்ற தலைப்பில் திருமந்திரத்தின் சிறப்புகளையும் "இருட்டறை மூலை யிருந்த
கிழவி" என்ற பாடலுக்கு விளக்கமும் கூறினார். தொடர்ந்து பல் வைத்திய
கலாநிதி திருமதி அபிராமி அவர்களின் மாணவர்கள் “ஆனந்தத்தாண்டவம்” என்ற தலைப்பில்
நடனம் வழங்கினார்கள். திருமறைக் காட்டில் திருநாவுக்கரசு நாயனார் கதவு திறக்கப்
பாடியதையும், திருஞான சம்பந்த மூர்த்தி நாயனார் கதவு மூடப் பாடியதையும்
கருப்பொருளாகக் கொண்டு இந்நடனம் அமைந்திருந்தது.
இலங்கைச் செய்திகள்
காரைக்கால் - இலங்கை இடையில் கப்பல் சேவை
MCC ஒப்பந்தத்தில் அரசு கைச்சாத்திடாது; அமைச்சரவை முடிவு!
வெள்ளை வேன் நபர்களின் குரல் மாதிரிகள் உறுதியானது
தீர்மானத்திலிருந்து வெளியேறினாலும் நல்லிணக்க செயற்பாடுகள் தொடரும்
ரஞ்சன் ராமநாயக்கவுக்கு பிணை; வெளிநாடு செல்ல தடை
காணாமல் போனோரின் உறவுகள் 1101 நாட்களாக போராட்டம்
காரைக்கால் - இலங்கை இடையில் கப்பல் சேவை
Friday, February 28, 2020 - 11:55am
உலகச் செய்திகள்
உலகளாவிய ‘வைரஸ்’ அச்சுறுத்தலுக்கு முகம்கொடுக்க தயாராகும் உலக நாடுகள்
உலகின் பல நாடுகளுக்கும் கொவிட்-19 வைரஸ் பரவல்
கொவிட்-19: மோசமாக பாதிக்கப்பட்ட நாடுகளில் தடுப்பு நடவடிக்கை தீவிரம்
பாலியல் வழக்கில் ஹொலிவுட் தயாரிப்பாளர் ஹார்வி குற்றவாளி
மலேசிய பிரதமர் மஹதிர் இராஜினாமா
அமெரிக்க ஜனாதிபதி வேட்பாளர் போட்டியில் சான்டர்ஸ் முன்னேற்றம்
உலகளாவிய ‘வைரஸ்’ அச்சுறுத்தலுக்கு முகம்கொடுக்க தயாராகும் உலக நாடுகள்
Friday, February 28, 2020 - 6:00am
ஸ்வீட் சிக்ஸ்டி - விஜயபுரி வீரன் - சுந்தரதாஸ்
.
தமிழ் சினிமாவில் எம்ஜிஆரும் ரஞ்சனும் கத்திச் சண்டை வாள் சண்டை என்பவற்றினால் புகழ்பெற்றிருந்த போது திடீரென்று அறிமுகமாகி ரசிகர்களைத் திரும்பிப் பார்க்க வைத்தவர் விஜயபுரி வீரன் ஆனந்தன் , இவருடைய கதாநாயக அந்தஸ்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
சிட்டாடல் பிலிம்ஸ் சார்பில் படங்களை தயாரித்து டைரக்ட் செய்து கொண்டிருந்த ஜோசப் தளியத் மல்லிகா என்ற படத்தை உருவாக்கினார் , இதில் ஜெமினியும் பத்மினியும் நடித்தார்கள். கண்ணன் என்ற இளைஞன் இதில் வருவேன் நான் உனது மாளிகையின் வாசலுக்கே என்ற பாடலுக்கு நடித்திருந்தார். மல்லிகா எதிர்பார்த்த வெற்றியை தராததால் தான் அடுத்து தயாரிக்கும் படத்தை புதுமுகங்களை போட்டு தயாரிப்பது என தீர்மானித்த தளியத் அப்படத்திற்கு அதிரடியாக கண்ணனை கதாநாயகனாக தெரிவு செய்தார். கண்ணன் சேலத்தைச் சேர்ந்தவர் முஸ்லிமான அவரின் பெயர் ஹக்கீம் .கண்ணன் என்று பெயர் சூட்டியிருந்தார்.
தன் படத்துக்கு கதாநாயகன் ஆக்கிய கையோடு அவர் பெயரையும் ஆனந்தன் என்று மாற்றிவிட்டார். நடனம் சண்டை என்பவற்றில் நன்கு தேர்ச்சி பெற்றிருந்த ஆனந்தன் விஜயபுரி வீரன் படத்துக்கு நன்கு பொருந்தினார் . இவருக்கு ஜோடியாக ஹேமலதா என்ற நாடக நடிகை ஒப்பந்தமானார் . பிரெஞ்சு நாவலாசிரியரான அலெக்சாண்டர் டூமாஸ் எழுதிய ஸ்றீமத் கிடிஎஸ் என்ற கதையை தழுவி ஏசி திருலோகச்சந்தர் இப்படத்தின் கதையை எழுதி உதவி டைடக்ரராகவும் தளித்திடம் பணியாற்றினார்.படத்திற்கான வசனங்களை நாஞ்சில் நாடு ராஜப்பா எளுதினார் .

சர்வதேச மகளிர் தினம் 2020 28/03/2020
.
எமது அவுஸ்திரேலியத் தமிழ் இலக்கிய கலைச்சங்கத்தின் வருடாந்த - அனைத்துலக பெண்கள் தின விழா எதிர்பாராத கொரோனோ வைரஸ் அச்சுறுத்தலினால் இரத்துச்செய்யப்பட்டது என்பதை தங்களுக்கு அறியத்தருகின்றோம்.
எமது அவுஸ்திரேலியத் தமிழ் இலக்கிய கலைச்சங்கத்தின் வருடாந்த - அனைத்துலக பெண்கள் தின விழா எதிர்பாராத கொரோனோ வைரஸ் அச்சுறுத்தலினால் இரத்துச்செய்யப்பட்டது என்பதை தங்களுக்கு அறியத்தருகின்றோம்.
தமிழ் சினிமா - திரௌபதி திரைவிமர்சனம்

சாதியக் கொடுமைகளும், பாதிக்கப்பட்டோரின் அவலங்களும் சினிமா படங்களில் அவ்வப்போது பிரதிபலிக்கப்பட்டு வருகின்றன. அண்மையில் பல இடங்களில் காதல் திருமணத்திற்கு எதிராக ஆணவக்கொலைகள் அரங்கேற்றப்பட்டு வருகின்றன. அப்படியான பிரச்சனைகளை பேசும் படங்கள் சர்ச்சையாகியும் வருகின்றன. அதில் ஒன்றாக திரௌபதி படம் வெளியாகியுள்ளது. திரௌபதி யார்? அவளின் பின்னணி என்ன? நோக்கம் என பார்க்கலாம்.
கதைக்களம்
படத்தின் நாயகன் ரிச்சர்டு ஊரில் சிலம்ப கலைஞர். அவர் தன் மாமன் மகளான திரௌபதியை மணமுடித்துக்கொள்கிறார். இவரின் சித்தப்பா கிராமத்தில் மரியாதைக்குரிய தலைவராக இருக்கிறார். இவருக்கும் ஒரு மகள்.
கிராமத்தில் அழகாக இவர்களின் வாழ்க்கை செல்கிறது. திரௌபதி கிராம மக்களின் நலத்திற்காக பல விசயங்களை செய்து வருகிறார்.
ஊரில் குளிர்பான கம்பெனிக்காக ஒரு கும்பல் பித்தலாட்டத்தில் ஈடுபடுகிறது. கிராம நலனை பாதிக்கும் இந்த விசயத்தை ஊரும் திரௌபதி குடும்பமும் எதிர்த்து நிற்கிறது.
இதற்கிடையில் கிராமத்தலைவரின் மகள் பதிவு திருமணம் செய்துகொண்டதாக செய்தி வர அவர் உயிர் விடுகிறார். மற்றொரு நாள் எதிர்பாராத விதமாக திரௌபதியையும் அவரின் தங்கையையும் கொலை செய்ய திட்டம் தீட்டப்படுகிறது.
சிறைக்கு சென்ற ரிச்சர்டு என்ன ஆனார், திரௌபதி ஆபத்திலிருந்து உயிர் தப்பினாரா, அவரின் தங்கைக்கு என்ன நேர்ந்தது என்பதை பேசுகிறாள் இந்த திரௌபதி.
படத்தை பற்றிய அலசல்
ரிச்சர்டு அஞ்சலி படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்தவர். ஷாலினியின் தம்பி அஜித்தின் மைத்துனர் என்பது பலருக்கும் தெரிந்திருக்கும். ஏற்கனவே மலையாளம், கன்னடம் படங்களில் நடித்துள்ளார். தமிழில் இப்படத்தின் மூலம் அவரின் மீதான எதிர்பார்ப்பு கூடியது. ஒரு கலைஞராகவும், மனைவியின் உணர்வுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கணவராகவும் அவர் நடித்திருக்கிறார். சாதிக்க அவருக்கு இப்படம் ஒரு சரியான கதைக்களம்.
ஷீலா ராஜ்குமாரை அழகிய தமிழ் மகள் சீரியலில் நீங்கள் பார்த்திருக்கலாம். பின் டூ லெட், அசுரவதம், நம்ம வீட்டு பிள்ளை படங்களில் நடித்திருந்தார். திரௌபதியாக இப்படத்தில் அவர் பேச்சு, செய்கை மூலம் சமூக விரோதிகளை விளாசி எடுக்கிறார். கேரக்டருக்கேற்ற நடிப்பு.
கருணாஸ் ஒரு பொது நல வழக்கறிஞராக சமூக அவலங்களுக்கு எதிராக குரல் கொடுப்பதும், திரௌபதியின் நியாயத்திற்காக போராடுவதும் என விடாமல் வசனம் பேசுகிறார். இந்த கதாபாத்திரம் அவரின் அரசியல் முயற்சிகளுக்கு கைகொடுக்கும்.
காதல் விசயத்தில் ஆணவக்கொலை என்னும் சமூக அவலத்தை தைரியமாக பேசியதற்கு இயக்குனர் மோகனுக்கு ஒரு வாழ்த்து. அதே வேளையில் படத்தில் சில விஷயங்கள் ஒட்டாதது போல் இருந்ததாக ஒரு உணர்வு எழுகிறது. இன்னும் பட ஆக்கத்தை முறைப்படுத்தியிருக்கலாம்.
மனோஜ் நாராயணனின் ஒளிப்பதிவு, தேவராஜின் எடிட், ஜுபின் இசை என எல்லாம் ஓகே. இன்னும் நல்ல படைப்பை எதிர்பார்க்கிறோம்.
கிளாப்ஸ்
போலி பதிவு திருமண முறைகேடுகளுக்கு துணை போபவர்கள் இனி மனம் மாறினால் மகிழ்ச்சி.
காதல் வலை விரித்து பல பெண்களின் வாழ்க்கையை சூறையாடும் கயவர்களுக்கு சாட்டையடி கொடுத்தது.
ரிச்சர்டு, ஷீலா, கருணாஸ் ஆகியோரின் ரியலான நடிப்பு.
பல்பஸ்
படத்தின் மேக்கிங்கில் இன்னும் கவனம் செலுத்தியிருக்கலாம்.
மொத்தத்தில் திரௌபதி சாதியக்கொலைகளுக்கு எதிரான சமூக விழிப்புணர்வு.
Subscribe to:
Posts (Atom)