.
பாடும்மீன் சு.ஸ்ரீகந்தராசா
பெற்றமனம் நோதல்
காதல் வயப்பட்டுவிட்ட பெண்ணொருத்தியின் நிலைமை, அதனை உணர்ந்துகொண்ட பெற்றோரின் கவலை, அக்கறை, அறிவுரை போன்ற விடயங்கள் சம்பந்தமான சில பாடல்கள் இப்பகுதியில் தொகுத்துத் தரப்படுகின்றன.
வயதுக்கு வந்துவிட்ட பெண்பிள்ளை ஏதாவது தப்புத் தண்டாவுக்கு ஆட்பட்டுவிடக் கூடாதே என்கிற கவலை எல்லாத் தாய்மாருக்கும் இருப்பதுண்டு. அதிலும் தன்பிள்ளை அழகாகவும் இருந்து விட்டால் அந்தக் கவலை ஒரு பயமாகவே மனதில் நிலைகொண்டிருக்கும். நல்லவன் ஒருவனுடைய கையில் பிடித்துக் கொடுக்கும்வரை அந்தப் பயம் நீடிக்கும். கிராமத்தில் வாழ்கின்ற தாய்மாருக்கு இந்தக் கிலி பண்பாட்டின் ஒரு பகுதியாகவே உள்ளது.