
மேசைமீது உருண்டோடும் பென்சிலை
"ஓடாமல் நில்" என அதட்டி நிறுத்தி
என்னுலகத்தைச் சரிசெய்தபின்
எனை அழைத்துக் கொண்டிருக்கும் குரலை
எதிர்கொண்டு தலை நிமிரும் தருணத்தில்
உங்களால் முன்வைக்கப் படுகின்ற
வினாக்களைச் செவியுற்று
வெகுவாகக் குழம்புகிறேன்
கரும்பலகையின் இருண்மைக்குள்
கண்ணெறிந்து தோற்கிறேன்
நான்,
பின்தங்கிவிட்ட சிறுமியாயிற்றே!
ஆசிரியரே..
உங்கள் உயர்மட்ட
அறிவு நிலைகளிலிருந்து
கீழிறங்கி வந்து
எனது இருக்கைதனில் அமருங்கள்
தங்களின் தேர்ச்சி மிகுந்த சொற்களை
தூர எறிந்துவிட்டுத்
திக்கித் திணறுகின்ற குரலொன்றினை
வழிகூட்டிச் செல்லுங்கள்
வளராப் பிள்ளை நான்







இந்த
குறைபாடுள்ள குழந்தைகளுக்கு பிரத்யேக பயிற்சி கொடுத்தால் அவர்களும்
தங்களின் அதீத திறமைகளை வெளிக்காட்டி இந்த உலகில் ஒரு சராசரி மனிதனாக வாழ
முடியும் என்பதை உலகில் பல பேர் நிரூபித்துள்ளார்கள்.
மிடுக்கான
காவல் துறை அதிகாரியாக வரும் கிஷோர், கதாபாத்திரத்திற்கு ஏற்ற மிடுக்கும்
உடலமைப்பும் கொண்டதால், இவரை போலிஸ் அதிகாரியாக எளிதில் ஏற்றுக்கொள்ள
முடிகிறது. இவர் ஒரு என்கவுண்டர் ஸ்பெஷலிஸ்ட். தன்னுடைய பாத்திரம் என்ன
என்பதை அறிந்து நடித்திருக்கிறார். பல காட்சிகளில் நம் கண்களை குளமாக்கவும்
தவறவில்லை.
ஆட்டிசம்
பாதிக்கப்பட்ட சிறுவனாக பிரிதிவிராஜ் தாஸ். படத்தின் மிகப்பெரிய பலமே
இவன்தான். முகத்தில் எந்தவித உணர்ச்சியும் காட்டாமல் ஆரம்பம் முதல் நடிப்பை
மட்டும் வெளிக்காட்டியுள்ளான். உண்மையிலேயே ஒரு ஆட்டிசம் குறைபாடுள்ள ஒரு
சிறுவன் நடித்தல் எப்படி இருக்குமோ அந்த அளவுக்கு நடிப்பில் கச்சிதம்.
இவன்
மீது பதினெட்டு கொலை வழக்குகள் உள்ள நிலையில் மத்திய மந்திரியின் தம்பியை
அவர் கண்முன்பே கொன்று விடுவதால் தம்பியை இழந்த மந்திரி, பகவானை
‘என்கவுன்டர்’ செய்ய ஏற்பாடு செய்கிறார்.
சண்டை
காட்சிகளில் அபாயத்தின் உச்சத்தை தொட்டு விளையாடியிருக்கிறார். குறிப்பாக
பொலிசாரிடமிருந்தும், முரட்டுத்தனமான பணக்காரர்களிடமிருந்து தப்புவதற்காக
மோதுகிற சண்டை காட்சியும், நீத்து சந்திராவுடன் மோதும் சண்டை காட்சியும்,
படம் பார்ப்பவர்களை இருக்கையின் நுனியில் அமரவைக்கின்றது.
தேவராஜின்
ஒளிப்பதிவில் பாங்காக், மும்பை நகரங்களின் அழகையும் பிரமிப்புகளையும்
நேரில் பார்த்தது போன்று திருப்தியாக இருந்தாலும் யுவன்ஷங்கர்ராஜாவின்
இசையில் பாடல்களைவிட பின்னணி இசை தான் கதையோட்டத்துக்கு உதவியிருக்கிறது.