மரண அறிவித்தல்



மண்ணுலகில்  - 03/05/1933                   இறைவனடி- 20/10/2024

 

இலங்கை ஏழாலையை பிறப்பிடமாகவும் சிட்னியில் வசித்தவரும்,  இளைப்பாறிய ரத்மலானா இந்து கல்லூரி யாழ் ராமநாதன் கல்லூரி மற்றும் சிட்னி தமிழ் கல்வி நிலையம் ஆசிரியையுமாகிய திருமதி மகேஸ்வரி தில்லைநடேசன் அவர்கள் 20/10/2024 அன்று காலமானார்.

 அன்னார் திரு சிவப்பிரகாசம் தில்லைநடேசன் அவர்களின் அன்புமிகு மனைவியும், சிட்னியில் வசிக்கும் அருள்முருகன், யோவனா, உதயசீலன், நந்தினி ஆகியோரின் பாசமிகு தாயாரும். ராகுலன், விஷாலினி, யாதவன் ஆகியோரின் பாசமிகு அப்பம்மாவும், ஜதுஷன், துஷான், சஞ்சய், அர்ச்சனா ஆகியோரின் பாசமிகு அம்மம்மாவும் ஆவார்

 அன்னாரின் பூதவுடல் South Chapel, Rookwood Crematorium, Memorial Avenue, Rookwood இல்  பார்வைக்காக புதன்கிழமை 23/10/2024 காலை 11.30 இல் இருந்து 12.30 வரை வைக்கப்பட்டு பின்னர் ஈமைக்கிரிகைகள் நடத்தப்பட்டு 2.30 மணிக்கு தகனம் செய்யப்படும். இவ்வறிவித்தலை உற்றார், உறவினர் மற்றும் நண்பர்கள் ஏற்றுக்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.

 அறிவித்தல் – நந்தினி

மறக்காதீர்கள் !

 












மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா
மேனாள் தமிழ்மொழிக் கல்வி இயக்குநர்
மெல்பேண் … அவுஸ்திரேலியா 




இமயம் தொட்டாலும்
ஏணியை மறக்காதீர்
அபயம் அளித்தாரை
அரைக்கணமும் மறக்காதீர்
கவலை இருந்தாலும்
காரியத்தை மறக்காதீர்
கஷ்ட நிலையிலும்
கண்ணியத்தை இழக்காதீர்

ஆசானை மறக்காதீர்
அன்னையை ஒதுக்காதீர்
அரவணைக்கும் அனைவரையும்
அகமார வாழ்த்துங்கள்
மாசுகளைச் சேர்க்காதீர்
மனமிருளச் செய்யாதீர்
மயக்கமுடன் வாழாமல்
மனவெழுச்சி கொள்ளுங்கள்

பெருங்கனவு காணுங்கள்
பேராசை தவிருங்கள்
அருங்குணத்தை அணையுங்கள்
அன்பையே ஈயுங்கள்
அறவழியை நாடுங்கள்
அறிவுரைகள் கேளுங்கள்
ஆன்றோர்கள் பாதையிலே
அடியெடுத்து வையுங்கள் 

யாழ் மத்திய கல்லூரி பழைய மாணவர் சிட்னி கிளையின் இசை அமுதம் நிகழ்வு - எனது பார்வையில்

 கடந்த சனிக்கிழமை மாலை 5.30 மணிக்கு Silverwater C3 Church Hall இல் இடம்பெற்றது. அறிவித்தது போல் சரியாக 5.30 மணிக்கு எமது சிம்ம குரலோன் மகேஸ்வரன் பிரபாகரன் மேடையில் இசைக்குழுவுடன் தோன்றி நிகழ்ச்சியை ஆரம்பித்து வைத்தார்.

Drummer செல்வாவின் தலைமையிலான Shastra இசைக்குழு எனும்   மிகவும் திறமைவாய்ந்த இசைக்குழுவினருடன், சோனியா, ஜிதின், சக்தி மற்றும் ரேஷ்மா பாடல்களை மிகவும் இனிமையாக பாடி அசத்தினார்கள்  

சோனியா மேடையில் தோன்றி ஆனந்த ராகம் பாடலை தனது வசீகர குரலால் பாடி சபையோரின் பாராட்டை பெற்றார். அடுத்து ஜித்தின் பெரியோனே என்னும் அவரின் குரலில் ARR கு பாடிய பாடலை பாடினார். நான் இதற்கு முன் எந்த மேடை நிகழ்ச்சியிலும் இவரை பார்த்திருக்கவில்லை. மிகவும் திறமை வாய்ந்த பாடகர். நல்ல குரல் வளம் கொண்டவர். அதன் பின் ரேஷ்மா வா வாத்தி என்னும் பாடலை பாடினார். அதை தொடர்ந்து அத்தித்தோம் என்னும் பாடலை ஷக்தி பாடினார். இவர் திருச்சி லோகநாதனின்  பேரன் என்பதை இங்கு குறிப்பிட விரும்புகின்றேன். தனது தாத்தாவின் பாடலை சபையினர் கேட்டவுடன் பாடி மகிழ்வித்தார். மிகவும் கனமான குரல் வளம் கொண்ட சிறந்த பாடகர்.

முதல் பாதியில் நிறைய பழைய மற்றும் இடைக்கால பாடல்களை பாடினார்கள். விழியே கதை எழுது, காலங்களில் அவள் வசந்தம், நிலவே என்னிடம் நெருங்காதே, வானிலே தேனிலா, பாடவந்ததோர், ஒ மானே மானே, தங்கமகன் என பல இனிமையான பாடல்களை நான்கு பாடகர்களும் மிகவும் இனிமையாகவும் திறமையாகவும் பாடி அசத்தினர்.

மிருகங்களா குழந்தைகளை பராமரித்தவை? - நாட்டியகலாநிதி கார்திகா கணேசர

 


தாய்மையின் உன்னத பாசத்தை மிருகங்களிடமும் கணமுடியும். ஆனால் மனித நாகரீக உலகில் குப்பை தொட்டியில் குழந்தைகள் கண்டெடுக்கப் படுகிறது.  அனாதை இல்ல வாசலில் குழந்தைகள், ஏன் இந்த குழந்தையை பெற்றெடுத்தவள் தாய் இல்லையா? அவளுக்கு பாசம் கிடையாதா?  மிருகங்களிலும் மோசமானவளா அந்த் தாய். இல்வே இல்லை,அவளை அந்த நிலைக்கு ஆளாக்கியது இந்த நாகரீக சமுதாயமே, ஒருவள் திருமண பந்தத்திற்கு உட்படாது கருதரிப்பதோ குழந்தையை பெற்று கொள்வதோ சமுதாயம் ஏற்று கொள்ளாத ஒன்றாக  ,இருந்தமேயே  இத்தகைய கொடுமைகள் நடக்க காரணமானது. அவ்வாறு குழந்தையை பெற்று விட்டவள் அவமான படுத்தப்படுகிறாள்.அதற்கு முகம் கொடுக்க பயந்தே குழந்தையை அறியா பருவத்தில் அனாதரவாக விட்டு விடுகிறாள். இந்த கொடுமை இன்று நேற்று ஏற்படதல்ல, புராண காலத்தில் குந்திதேவியால் கைவிடபட்ட கர்ணன்

கதை நாம் அறிந்ததே.
  காளிதாசனின் நாடகங்களிலே மிக பிரபலமாது சாகுந்தலம், சாகுந்தலை என்ற காவிய நாயகியோ குழந்தைப் படுவத்திலே அன்ன பட்சிகளால் பராமரிக்கப்படுகிறாள், கண்ணுவ முனிவர் அவளை கண்டெடுத்து தனது செல்ல குழந்தையாக வளர்கிறார். அன்ன பட்சி வட மொழியிலே  சாகுந்தலம் ஆகும்.அன்ன பட்சிகளால் வளர்க்க பட்ட பெண் ஆதலால் சாகுந்தலை என பெயரிட்டு வளர்க்கப்பட்டாள். என்ன அன்ன பட்சி வளர்பது வெறும் கற்பனை என தோன்றுகிறதா. மனித குழந்தைகளை மிருகங்கள் பறவைகள்பராமரித்து வளர்பதா? அழகான கற்பனை என எண்ணுகிறோம். ஆனால்மனித ஜென்மங்களால் அனாதரவாக விடப்பட்ட  மனிதக் குழந்தைகளை மிருகங்கள் பராமரித்தமை 
நிஜ வாழ்வில் நடந்த உண்மையே,, அண்மையில் Geographic channel இல்இதை விரிவாக காட்டினார்கள்.

நேற்று இன்று நாளை - பொன் விழா ஆண்டில் இந்த படங்கள் - ச. சுந்தரதாஸ்

 திரைப் படங்களில் வில்லன் கதாநாயகனை துன்புறுத்துவான்,


பலவித சிரமங்களை ஏற்படுத்துவான் , கொடுமைக்கு மேல் கொடுமைப படுத்துவான். இறுதியில்தான் கதாநாயகன் போராடி வில்லனை வெற்றி கொள்வான். ஆனால் நிஜ வாழ்வில் கதாநாயகன் வில்லனை கஷ்டப்படுத்தி, சீரழித்து , வெறுத்துப் போக வைத்து இறுதியில் பிழைத்துப் போ என்று விமோசனம் அளித்த சம்பவம் ஐம்பது ஆண்டுகளுக்கு முன்னர் இடம் பெற்றது. அதற்கு காரணமாக அமைந்த படம்தான் நேற்று இன்று நாளை.

தமிழ் சினிமாவில்பிரபல வில்லன் நடிகராகவும், குணச்சித்திர

நடிகராகவும் திகழ்ந்தவர் எஸ் ஏ அசோகன். பி ஏ பட்டதாரியான இவர் எல்லாத் தயாரிப்பாளர்களினாலும் விரும்பப்படும் ஒருவராக திகழ்ந்தார். அதே போல் எம் ஜி ஆரின் அன்புக்கும் உரிய ஒருவராக விளங்கினார். இதன் காரணமாக எம் ஜி ஆரின் பெரும்பாலான படங்களில் தொடர்ந்து நடிக்கும் வாய்ப்பு இவருக்கு கிடைத்தது. இதைத் தவிர ஜெய்சங்கர், ரவிச்சந்திரன், ஜெமினி கணேசன் ஆகியோரின் பல படங்களிலும் இவர் நடித்து வந்தார். ஒரு சில சிவாஜி படங்களிலும் அசோகன் நடித்து , அவரின் நடிப்பு சிலாகித்து பேசப்பட்டது. பழகுவதற்கு இனியவராகவும், பிறருக்கு உதவுபவராகவுமே எல்லோரும் அவரை அடையாளம் கண்டிருந்தனர்.
 

இந்த அசோகனுக்கு போதாதா வேலையோ என்னவோ சொந்தமாக படம் தயாரிக்கும் ஆசை வந்தது. அதுவும் எம் ஜி ஆர் நடிப்பில் படம் தயாரிக்கும் எண்ணம் ஏற்படவே அதற்கமைய நேற்று இன்று நாளை படத் தயாரிப்பு ஆரம்பமானது. படத் தயாரிப்பு தொடங்கிய போது எம் ஜி ஆர் தி மு கவில் இருந்தார். அசோகனுக்கும் தி மு க ஆதாரவாளராகவும், கருணாநிதியின் அபிமானியாகவும் விளங்கினார். இதன் காரணமாக சிக்கலின்றி படப்பிடிப்பு நடைபெற்று வந்தது .

பாராளுமன்றத் தேர்தலில் இருந்து ஒதுங்கிய அரசியல் பிரபலங்கள்!

 October 14, 2024 6:00 am 

சுதந்திர இலங்கையின் பத்தாவது பாராளுமன்றத் தேர்தல் எதிர்வரும் நவம்பர் 14 ஆம் திகதி நடைபெறவிருக்கிறது. ஒரு கோடி 70 இலட்சத்துக்கும் மேற்பட்டட மக்கள் இத்தேர்தலில் வாக்களிக்கவிருக்கின்றனர். அரசியல் கட்சிகளும் சுயேச்சைக் குழுக்களுமாக 690 வேட்புமனுக்கள் தேர்தல்கள் ஆணைக்குழுவினால் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளன. 8,388 பேர் இத்தேர்லில் அபேட்சகர்களாகக் களம் இறங்கியுள்ளனர்.

இது வரலாற்று முக்கியத்துவம்மிக்க தேர்தலாக அமையுமென அரசியல் ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். ஏனெனில் அண்மைக்கால வரலாற்றில் இடம்பெறாத பல நிகழ்வுகள் கடந்த சில தினங்களாக இடம்பெற்று வருகின்றன.

இந்நாட்டின் ஒன்பதாவது ஜனாதிபதியைத் தெரிவு செய்வதற்கான தேர்தல் கடந்த செப்டம்பர் 21 ஆம் திகதி நடைபெற்றது. அத்தேர்தலில் 39 பேர் அபேட்சகர்களாகப் போட்டியிட்டனர். அவர்களில் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, முன்னாள் அமைச்சர் நாமல் ராஜபக்‌ஷ உள்ளிட்டவர்கள் குறிப்பிடத்தக்கவர்கள்.

இவர்களில் ரணில் விக்கிரமசிங்க இந்நாட்டு பாராளுமன்ற அரசியலில் 45 வருடங்களுக்கும் மேற்பட்ட அரசியல் அனுபவத்தைக் கொண்டவர். அவர் ஐந்து தடவைகள் பிரதமராகப் பதவி வகித்துள்ளதோடு அமைச்சு பதவிகள் பலவற்றையும் வகித்திருக்கிறார். அதேநேரம் எதிர்க்கட்சி தலைவராகவும் பல வருடங்கள் இருந்துள்ள அவர், நாட்டின் ஜனாதிபதி பதவியையும் இறுதியாக வகித்துள்ளார்.

இஸ்ரேல் மீது அதிகரிக்கும் உலக எதிர்ப்பு!

 October 19, 2024 7:00 am 

கடந்த ஓராண்டாக காஸா போரை எதிர்த்து, அரபுலகம் ஆர்ப்பரித்து எழுந்து நிற்பது ஒருபுறமிருக்க, ஐரோப்பாவிலும் வடஅமெரிக்காவிலும் பிற மேற்குலக நாடுகளிலும் போர்நிறுத்தம் கோரி பலஸ்தீன ஆதரவுப் போராட்டங்கள் அந்தந்த நாடுகளின் தலைநகரில் நடைபெற்றுள்ளன.

அதேவேளை தங்கள் பெயரால் இந்தக் கொடூர யுத்தம் வேண்டாம் என புலம்பெயர்ந்து வாழும் யூதர்களில் ஜனநாயக உணர்வு கொண்டோர் போராட்டங்களில் ஈடுபட்டுள்ளனர்.

ஐரோப்பாவில் பிரெஞ்சு அதிபர் இம்மானுவேல் மைக்ரன், பயங்கரவாத எதிர்ப்புப் போர் என முதலில் இஸ்ரேல் ஆதரவு நிலைப்பாடு எடுத்திருந்த போதும், பின்னர் உள்நாட்டுப் போராட்டங்களின் அழுத்தம் காரணமாக போர்நிறுத்தத்தை வலியுறுத்தும் நிலைக்குத் தள்ளப்பட்டார்.

மாற்றம் என்ற மாயை?

 October 18, 2024

தேசிய மக்கள் சக்தியின் தலைமைத்துவ கட்சியான ஜனதா விமுக்தி பெரமுன (ஜே.வி.பி) இலங்கையின் தேசிய இனப்பிரச்னைக்கு அரசியல் தீர்வொன்றைக் காண்பதற்கு இதுகாலவரையில் முன்னெடுக்கப்பட்ட சகல முயற்சிகளையும் எதிர்த்த ஒரு வரலாற்றைக் கொண்டிருக்கிறது. பண்டா – செல்வா ஒப்பந்தமும் டட்லி – செல்வா ஒப்பந்தமும் செய்துகொள்ளப்பட்ட வேளைகளில் ஜே.வி. பி. தோன்றியிருக்கவில்லை.

ஜே.ஆர். ஜெயவர்த்தன அரசாங்கம் 1981 ஆம் ஆண்டில் கொண்டுவந்த மாவட்ட அபிவிருத்தி சபை தொடக்கம் இந்தியாவின் தலையீட்டையடுத்து அதே ஜெயவர்த்தன அரசாங்கம் 1987 ஆம் ஆண்டில் கொண்டுவந்த மாகாணசபை வரை சகல தீர்வு முயற்சிகளையும் ஜே.வி.பி. எதிர்த்தது. அதன் அரசியல் அகராதியில் அதிகாரப் பரவலாக்கலுக்கு இடமிருந்ததில்லை. ஆனால், கடந்த மாதம் நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில் அனுரகுமார திசநாயக்க வெற்றிபெற்று பதவிக்கு வந்த பிறகு இனப்பிரச்னை தொடர்பில் தேசிய மக்கள் சக்தியின் குறிப்பாக ஜே வி.பி.யின் நிலைப்பாட்டில் ஓரளவுக்கேனும் நெகிழ்ச்சித் தன்மை ஏற்படக்கூடும் என்று எதிர்பார்த்தவர்களுக்கு ‘இல்லை, இல்லை.

இலங்கைச் செய்திகள்

ஐந்து பில்லியன் அமெ. டொலரில் இலங்கை – இந்தியாவுக்கிடையில் தரைவழி ரயில் பாதைத் திட்டம்

இரணைமடு குளத்தின் இடதுகரை நீர் விநியோக வாய்க்கால் ரூ. 35 மில்லியன் செலவில் புனரமைப்பு 

ஸ்ரீலங்கன் விமான சேவை நிறுவனம் விற்கப்படாது

பலத்த மழை நிலை படிப்படியாக குறையும் சாத்தியம்

லசந்த – வசிம் தாஜூதீன் கொலை; எக்னலிகொட காணாமலாக்கப்பட்டமை

அதிக ஞாபகத்திறன் மூலம் உலக சாதனை படைத்த திருகோணமலை சிறுமி


ஐந்து பில்லியன் அமெ. டொலரில் இலங்கை – இந்தியாவுக்கிடையில் தரைவழி ரயில் பாதைத் திட்டம் 

இந்திய ஊடகத்துக்கு இலங்கை அதிகாரி பேட்டி

October 16, 2024 7:00 am 

இலங்கை, இந்தியாவுக்கிடையில் 05 பில்லியன் அமெரிக்க டொலர் வீதி மற்றும் ரயில் பாதை இணைப்பு திட்டம் குறித்து மீண்டும் ஆராயப்படுவதாக, சுற்றாடல் அமைச்சின் செயலாளர் பிரபாத் சந்திரகீர்த்தி இந்திய ஊடகம் ஒன்றுக்கு தெரிவித்துள்ளார்.

உலகச் செய்திகள்

காசாவுடன் லெபனான் நகரங்களிலும் இஸ்ரேல் தொடர்ந்தும் குண்டு மழை

ஈரான் மீதான எங்கள் தாக்குதலை அமெரிக்கா முடிவு செய்ய முடியாது

வடக்கு காசாவில் முற்றுகையை இறுக்கும் இஸ்ரேல்

காசாவில் இஸ்ரேலின் புதிய தாக்குதல்களில் மேலும் 55 பேர் பலி: முற்றுகை தொடர்கிறது

பாதுகாப்பு கண்காணிப்பு திறன்களை மேம்படுத்த இந்தியா நடவடிக்கை 


காசாவுடன் லெபனான் நகரங்களிலும் இஸ்ரேல் தொடர்ந்தும் குண்டு மழை 

-உதவிகள் செல்ல இஸ்ரேலுக்கு அமெரிக்கா காலக்கெடு

October 17, 2024 6:09 am 

லெபனானில் போர் நிறுத்த அழைப்பை நிராகரித்த இஸ்ரேல், தெற்கு பெய்ரூட்டில் புதிய தாக்குதல்களை நடத்தியதோடு தெற்கு லெபனானின் பிரதான நகரான நெப்டியேவின் மாநகர கட்டடத்தின் மீது நடத்திய வான் தாக்குதலில் நகர மேயர் உட்பட ஐவர் கொல்லப்பட்டுள்ளனர்.

சிட்னி ஸ்ரீ துர்காதேவி தேவஸ்தான வருடாந்த நிதி திரட்டும் இராப்போசன விருந்து - அக்டோபர் 27, 2024 ஞாயிற்றுக்கிழமை மாலை 5:30



ஈழத் தமிழர் கழகம் - தொண்டு நிதி திரட்டும் இராப்போசன விருந்து - 27/10/2024 மாலை 6:30 மணி



மகாஜன மாலை 2024

தவிர்க்க முடியாத சூழ்நிலையில் இத்திட்டம் ஒத்திவைக்கப்பட்டது.

புதிய தேதி விரைவில் அறிவிக்கப்படும்.

































ஏதேனும் சிரமத்திற்கு மன்னிப்பு கேட்டுக்கொள்கிறோம்.