மரண அறிவித்தல்

.
                                                    திருமதி புஸ்பராணி கந்தசாமி 
மறைவு 13.10.2015
 பெரியவிளான் யாழ்ப்பாணத்தை பிறப்பிடமாகவும்  Australia வை வதிவிடமாகவும் கொண்ட  திருமதி புஸ்பராணி கந்தசாமி அவர்கள் 13 10 2015 செவ்வாய்க்கிழமை Sydney Australia வில் காலமானார் . அன்னார் காலம் சென்ற  செல்லையா கந்தசாமியின் அன்பு மனைவியும்  காலம் சென்ற திரு திருமதி கார்த்திகேசுவின் சிரேஸ்ட புதல்வியும் , தங்கராஜா (Canada) , காலம் சென்ற மங்களேஸ்வரி , மனோரஞசிதம் (Canada), தருமபாலசிங்கம்  (London) ஆகியோரின் அன்புச் சகோதரியும்  ரஞ்சினி (Sydney) , ரஞ்சன் (melbourne), மோகன் (canperra), ரஜனி  (Sydney) ஆகியோரின் அன்புத்தாயாரும் , நடேசன் , ராஜி , ரஞ்சனி ,ரவி இந்திரன் ஆகியோரின் மாமியாரும் , கிஷாந்தன் , லூசியா , அருண் , ரமேஷ் ,றிட்சிரங்கன், அனுஷா , லஷ்மி , ரம்மியா , ரேக்கா , ராம் ஆகியோரின் பேத்தியும் ஆவார் .

அன்னாரின் பூதவுடல்  17.10.2015 Saturday பிற்பகல் 6.00 மணிமுதல்  - 8.00 மணி வரை  அஞ்சலிக்காக  Liberty Funerals, 101 South Street, Granville இல் வைக்கப்பட்டு 
18-10-2015 Sunday காலை 8.30 முதல்  - 10.30 வரை 17 Finney Street, Old Toongabbie இல் இறுதி கிரிகைகள்  நிறைவேற்றி Plassey Road, North Ryde, Macquarie Park, Cemetory இல் 12.00 மணி முதல்  12.45 மணியளவில் தகனம் செய்யப்படும் .

இவ் அறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு  கேட்டுக் கொள்கிறோம் .

தாய்மை - காரைக்குடி பாத்திமா ஹமீத ஷார்ஜா

.

இறைவனக் காண நினைத்தேன்
உன்திருமுகம் காணும் முன்பாக..
உணரத் துடித்தேன் சொர்க்கமதை,
உன்னிரு  பாதங்களில் பணியும் முன்பாக..

எழுத வார்த்தைகள் இல்லையம்மா..
வளர்த்த விதம் சொல்வதற்கு..
பாடிட சொற்கள் கிடைக்கவில்லை..
பாடுபட்டு படிக்க வைத்ததற்கு!

விறகடுப்பின் புகையில்நீ
வெந்துஎம் பசிபோக்கினாய்!
வியர்வை நீரூற்றி எங்களை
வளர்த்து ஆளாக்கினாய்!

பட்டங்கள் பெறவைத்துப்
பார்த்துப் பூரித்துப்போனாய்!
வெற்றிகள் பலகொடுத்து
வேதனைகளை விரட்டினாய்!

கவிதைகளால் தாலாட்டி
கண்ணுறங்கச் செய்தாய்!
வர்ணனைகள் பலதந்து என்னுள்
வாழ்ந்துகொண்டுதானிருக்கிறாய்!

பாரங்களை இறக்கிட
உன் பாதங்கள் வேண்டும்
சுகமாக தூங்கியெழ
உன் மடிவேண்டும் ஒரு நொடி!

முடிவுறாத முகாரி கவிதை நூல் வெளியீடு 17 10 2015

.

தமிழ்முரசு ஆசிரியர் செ .பாஸ்கரனின் முடிவுறாத முகாரி கவிதை நூல் வெளியீடு 17.10.2015 சனிக்கிழமை மாலை 5.00 மணிக்கு இடம்பெற  இருக்கின்றது .

திரும்பிப்பார்க்கின்றேன். - முருகபூபதி

.
தமிழ்   இதழியல்  வாழ்வில்  அமைதியாகவும் நிதானமாகவும்  பயணிக்கும்   சிரேஷ்ட  பத்திரிகையாளர்  அன்னலட்சுமி  இராஜதுரை


 இலங்கையில்  ஒரு  பெண்  அரைநூற்றாண்டுக்கும்  மேலாக தொடர்ந்தும்  பத்திரிகை  ஊடகத்துறையில்  நிலைத்து  நிற்கிறார் என்றால்,  அவர்  யார்...?    என்ற   கேள்வியைத்தான்  முன்னைய -  இன்றைய  தலைமுறை   வாசகர்கள்  விழியுயர்த்திக்  கேட்பார்கள். அப்படி  ஒருவர்  தமிழ்ப் பெண்ணாக  தமிழ்  ஊடகத்துறையில் அமைதியாக   பணிதொடருவதென்பது  மிகப்பெரிய  ஆச்சரியம். சாதனை.
அவர்தான்  திருமதி  அன்னலட்சுமி  இராஜதுரை.  இலக்கிய  உலகில் தொடக்ககாலத்தில்  யாழ்நங்கை  என   அறியப்பட்ட  இவரை  1972 முதல்  நன்கு  அறிவேன்.   எமக்கிடையிலான   சகோதரத்துவ  உறவுக்கு  45  ஆண்டுகள்  நிறைவடைந்துவிட்டன.
இவ்வளவுகாலமும்  அவருடன்  நான்  முரண்படாமல்  அவருடன் உறவைப்பேணிவருவதற்கும்   என்னைப் பொறுத்தவரையில் அவர்மீதான    நல்லமதிப்பீடுகளே  அடிப்படை.
அவர்   வீரகேசரி  பத்திரிகையில்  உதவி  ஆசிரியராக  இணைந்த  1962  ஆம்   ஆண்டு  நான்  படித்தது  ஆறாம்   வகுப்பில்.   அதன்பின்னர்  அவரை  முதல்  முதலில்  சந்தித்தது  1972  இல்.  எனக்கு அப்பொழுதுதான்   வீரகேசரியின்  நீர்கொழும்பு  பிரதேச  நிருபர் வேலை  கிடைத்தது.
அவ்வேளையில்  இலக்கியப்பிரதிகளை   படிக்கும்  ஆர்வமும் துளிர்த்தமையினால்  அன்னலட்சுமி  அவர்களின்  முதல்  நூல் விழிச்சுடரை   அவரிடம்  கேட்டு  வாங்கிப்படித்தேன்.   இரண்டு குறுநாவல்களின்   தொகுப்பு  விழிச்சுடர்.

தமிழ் ஊக்குவிப்புப் போட்டிகளும், பரிசளிப்பு விழாவும் - 2015

.
அவுஸ்திரேலிய பட்டதாரிகள் தமிழர் சங்கம்
தமிழ் ஊக்குவிப்புப் போட்டிகளும், பரிசளிப்பு விழாவும் - 2015


கடந்த 21 வருடங்களாக அவுஸ்திரேலியாவில் தமிழ்ப்பணியாற்றிவரும் ஆஸ்திரேலிய பட்டதாரிகள்  தமிழர் சங்கத்தினால் நடாத்தப்பட்ட 2015 ஆம் ஆம் ஆண்டுக்கான தமிழ் ஊக்குவிப்புப் போட்டிகளின் தேசியப் போட்டிகளும் பரிசளிப்பு விழாவும் இம்முறை மெல்பேணில் நடைபெற்றன. பேச்சுப்போட்டிகள், திருக்குறளும் உரையும் மனனப்போட்டிகள், கவிதை மனனப் போட்டிகள், வாய்மொழித் தொடர்பாற்றல் போட்டிகள் முதலிய போட்டிகள் வயது அடிப்படையில் பல்வேறு பிரிவுகளாக நடாத்தப்பட்டன. மற்றும், தனி நபர் நடிப்பு, குழுநிலை விவாத அரங்கு ஆகிய போட்டிகளும் நடாத்தப்பட்டன. 


பறவைகளின் பாஷை என்ன.. - சுபாரஞ்சன்.



ஒலிக் குறிப்பு ஒன்று
அர்த்தங்களால் நிரப்பப் பட்டு
பேசும் பாஷையாகி.......

நீயும் நானும் 
காதல் மொழியாக
அன்பு மொழியாக........

பேசியும் புரியாத 
மொழியாக பேதங்களால்
நகர்கிறது..............

எழுதிப் படிக்க முடியாத
படித்துப் பொருள் கூற முடியாத 
உணரும் மொழி ஒன்றை.......

என் வீட்டுப் பறவை
நாழிகை மறந்து
நல்ல சங்கீதமாய் பாடுகிறது .........

உற்றுக் கேட்டால் 
உள்ளம் பறி போகிறது இவை பேசும் மொழியே
இன்ப மொழி என தோன்றியது.....

நன்றி :pannagam.com

மெல்பேணில் கலைவளன் சிசு நாகேந்திரம் அவர்களின் அகராதி நூல் வெளியீடு.சு.ஸ்ரீகந்தராசா

.

அவுஸ்திரேலியாவில், விக்ரோறிய மாநிலத்தில் மிகவும் சிறப்பாகத் தமிழ்ப்பணி புரிந்துவரும் கேசீ தமிழ் மன்றத்தினால் வெளியிடப்பட்ட "பழகும் தமிழ்ச்சொற்களின் மொழிமாற்று அகராதி" என்ற நூலின் வெளியீட்டு விழா கடந்த 3.10.2015 சனிக்கிழமை டண்டினோங்க் மூத்த பிரசைகள் மையத்தில் வெகு சிறப்பாக நடைபெற்றது. இந்த அகராதியினை ஆக்கியவர் பழம்பெரும் நடிகரும், எழுத்தாளருமான சிசு நாகேந்திரம் அவர்கள். 95 வயதினைத் தாண்டிக்கொண்டிருக்கும் திரு.சிசு நாகேந்திரம் அவர்கள் தள்ளாத முதுமையிலும் தமிழ்ப்பணி ஆற்றுபவர். கேசீ தமிழ்ச்சங்கத்தின் தலைவர் திரு ஆதவன் தலைமையில் நடைபெற்றநூல் வெளியீட்டு விழாவின் நிகழ்ச்சிகளைச் சங்கத்தின் முன்னாள் தலைவர் திரு சிவசுதன் அழகாகத் தொகுத்து வழங்கினார். நூலாசிரியர் திரு சிசு நாகேந்திரம் அவர்கள், இலங்கையில் அந்த நாட்களில் பட்டி தொட்டியெங்கும் பிரபல்யமாகவிருந்து 1000 தடவைகளிக்கு மேல் மேடையேறிய "சக்கடத்தார்" நாடகத்தில் நடித்தவர்.தமிழ் நாடக உலகில் அளப்பரிய சாதனைகளைப் புரிந்தவர்களான சீசியஸ், குழந்தை சண்முகலிங்கம் ஆகியோருடன் இணைந்து நாடகப்பணியாற்றியவர். நிர்மலா, குத்து விளக்கு. ஆகிய இலங்கைத் தயாரிப்புத் திரைப்படங்களில் நடித்தவர். அந்தக்காலத்து யாழ்ப்பாணம், பிறந்த மண்ணும் புகலிடமும். ஆகிய நூல்களை எழுதியவர். நூல் ஆய்வுரையினை பிரபல எழுத்தாளர்களான சட்டத்தரணி, பாடும்மீன் திரு. சு.ஸ்ரீகந்தராசா அவர்களும், திரு லெ. முருகபூபதி அவர்களும் நிகழ்த்தினர். நூலாசிரியர் ஏற்புரை நிகழ்த்தினார்.

நவராத்திரி அகண்ட தீபம் 2015 17 10 15

.












Navratari Special Daniya Night 2015 - 16/10/2015



ஈழத்தின் இசை உலகம் இழந்த இசை ஆளுமை உ. இராதாகிருஷ்ணன் - இணுவையூர். கார்த்தியாயினி கதிர்காமநாதன்:-

.
இசை ஆற்றுகையின் போதே உயிர் நீத்த இசைப்பேராசான், இசைஞானதிலகம் உ. இராதாகிருஷ்ணன் அவர்களின் நினைவாஞ்சலிக் கட்டுரை -
ஈழத்தின் இசை உலகம் இழந்த இசை ஆளுமை  உ. இராதாகிருஷ்ணன் - இணுவையூர். கார்த்தியாயினி கதிர்காமநாதன்:-

மலர்வு 27.06.1943 – உதிர்வு 06.09.2015


இணுவில் தவில் வித்துவான் திரு.விஸ்வலிங்கம் அவர்களின் இசைப் பாரம்பரியத்தில் முகிழ்த்தெழுந்தவர்களும், ஈழத்தின் இசை உலகம் இழந்த இசை ஆளுமை  திரு. உ. இராதாகிருஷ்ணன் அவர்களும்.

இணுவையூர்.  கார்த்தியாயினி கதிர்காமநாதன்.
(சிட்னி அவுஸ்ரேலியாவிலிருந்து)
இணுவில் என்றால்  அதிகாலையிற் துயிலெழுப்பும் ஆலயமணியின் ஓசை, ஒலிபெருக்கியினூடே காற்றோடு கலந்து வரும் இனிமையான நாதஸ்வர கானம், மார்கழி முழுவதும் வீட்டு வாசல்களிற் தோற்றம் அளிக்கும் மார்கழிப் பிள்ளையார், மார்கழி விடியலிற் கேட்கும் திருப்பள்ளி எழுச்சி திருவம்பாவைப் பாடல்கள், இணுவிற் கந்தசுவாமி ஆலய நாதஸ்வர, தவிற் கச்சேரி, காவடியாட்டம், சின்னமேளம், இவ்வாறு இயல், இசை, நாடகம், சைவநெறி என்று மூழ்கித் திளைத்தெழும் அற்புத வாழ்க்கை, இவற்றோடு கலைஞர்களின் இல்லங்களில் நாள்தோறும் நாதஸ்வரம், தவில்  ஆகியவற்றினைப் பயில்வோருக்கான பயிற்சிகள், நான் இசை பயின்ற காலங்கள் இவை எல்லாம் நினைவினிற்தோன்றும்.   

மனோரமா மறைந்தார்

.

1200 திரைப்படங்களுக்கு மேல் நடித்ததற்காக கின்னஸ் உலக சாதனைப் புத்தகத்தில்இடம்பெற்று சாதனைப் படைத்த தமிழ் திரைப்பட ரசிகர்களால் ‘ஆச்சி’ என அன்போடுஅழைக்கப்படும் மனோரமா கோபிசாந்தா என்னும் இயற்பெயர் கொண்டவர்.  1943  ஆம் ஆண்டுமே 26 ஆம் நாள் இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்திலுள்ள மன்னார்குடி என்ற இடத்தில்தந்தையார் காசி கிளார்க்குடையார் என்பவருக்கும்தாயார் ராமாமிர்தம்மாள் என்பவருக்கும்மகளாகப் பிறந்தார்.
தமிழ்த் திரையுலகம் தந்த முதல்வர்கள் அறிஞர் அண்ணாகலைஞர் கருணாநிதி,புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர்செல்வி ஜெயலலிதா மற்றும் ஆந்திர மாநில முதல்வர்என்.டி.ஆர் என ஐவருடன் நடித்த பெருமைக்குரியவர்தமிழ்தெலுங்குமலையாளம்,கன்னடம்இந்திசிங்களம் என ஆறு மொழிகளிலும் சிறந்த குணச்சித்திர நடிகை என்றபெருமையுடன் நடித்தவர்.

இப்படியும் ஒரு நடன நிகழ்வு



"தொன்மங்களுடனான உரையாடல்" மௌனகுரு உரை

.
"தொன்மங்களுடனான  உரையாடல்படைப்பனுபவங்கள்
தஞ்சாவூர்  தமிழ்  பல்கலைக்  கழகத்தில்   தகைமைசார் பேராசிரியர்  சின்னையா  மௌனகுரு  உரை


தமிழ்நாடு  தஞ்சாவூர்  தமிழ்ப்பல்கலைக்கழகத்தின் அயல்நாட்டுத் தமிழ்  கல்வித்துறையின்  சார்பில்  இலங்கையின்  தகைமைசார் பேராசிரியர்  சின்னையா   மௌனகுரு  அழைக்கப்பட்டார். பல்கலைக்கழகத்தின்  துணைவேந்தர்  பேராசிரியர்  பாஸ்கரன் தலைமையில்  நடந்த  தொன்மங்களுடன்  உரையாடல்  என்ற தலைப்பில்  பேராசிரியர்  மௌனகுரு  தமது  அரங்காற்றுகைகள், படைப்புகள்   பற்றி   உரையாற்றினார்.
தொன்மமாவது யாது...அதுபற்றிய  ஆண்மைக்கால  ஆய்வுகள்,
தொன்மங்களின்  பண்பாட்டு  வலிமை,   தமிழர்  மத்தியிலான தொன்மங்கள்    அவை   தமிழர்  பண்பாட்டில்  வகிக்கும்   காத்திரமான வகிபாகம்  யாது...?   என்பன  பற்றியதாகவும்   தமிழ்  தொன்மங்கள் சிலவற்றை    தன்   நாடகப்   படைப்புகளுக்கு
ஏன்  பயன் படுத்துகிறேன்....எவ்வாறு  பயன்படுத்துகிறேன்...?
அப்படிப்  பயன் படுத்துவதற்கான  காரணங்கள்   என்ன...?அதனால்   எதிர் கொண்ட  சாதகங்கள்  என்ன...பாதகங்கள்   என்ன..? சவால்கள்  என்ன...என்பன பற்றியதாக     அவருடைய   உரை   அமைந்திருந்தது.

தமிழ்த்திரையுலகில் ஒரு பொம்பிளை சிவாஜி மனோரமா ஆச்சி. -முருகபூபதி

.
நாடக  உலகிலிருந்து  திரையுலகம்  வந்து  65 ஆண்டுகளுக்குமேல்  நிலைத்து  நின்ற  கின்னஸ் சாதனையாளர்.
நடிப்புஆடல்,  பாடல்,  பேச்சாற்றல்  யாவற்றிலும்  தனது முத்திரைகளை   பதித்தவர்  நிரந்தரமாக  மௌனமானர்


திரையுலகில்  நடிக்கும்பொழுது  தான்  இணைந்து  நடிக்கப்பயந்த மூன்று  கலைஞர்களைப்பற்றி  நடிகர்திலகம்  சிவாஜி கணேசன்  ஒரு சந்தர்ப்பத்தில்  கூறியிருந்தார்.
அம்மூவரும்:  நடிகையர்  திலகம்  சாவித்திரி,   நடிகவேள்  எம்.ஆர். ராதா,   சகலகலா  ஆச்சி  மனோரமா.   இன்று  இவர்கள்  அனைவரும் திரையுலகை   விட்டு  விடைபெற்றுவிட்டனர்.   இறுதியாக  கடந்த  10 ஆம்  திகதி  சென்றவர்  ஆயிரம்  படங்களுக்கு  மேல்   நடித்து சாதனைகள்   பல  நிகழ்த்திய  மனோரமா.
தமிழ்சினிமா  மிகைநடிப்பாற்றலுக்கு  பெயர் பெற்றது. நாடக மேடைகளிலிருந்து  அந்தக்காலத்தில்  வந்த  நடிகர்,  நடிகைகளும் அவர்களுக்கு  உணர்ச்சியூட்டும்  வசனம்  எழுதிக்கொடுத்தவர்களும் சினிமா  என்றால்  இப்படித்தான்  இருக்கும் -  இருக்கவேண்டும்  என்ற   கற்பிதம்  தந்தவர்கள்.
அதனால்   யதார்த்தப்பண்புவாத  தமிழ்ப்படங்களின்  எண்ணிக்கை தமிழ்  சினிமாவில்  குறைந்தது.
இந்தக்கருத்தை   இலங்கைப் பேராசிரியர்  கா. சிவத்தம்பி  அவர்களும் கனடா  மூர்த்தி  சிவாஜி  கணேசன்  மறைந்தபொழுது  தாயாரித்த சிவாஜிகணேசன்   ஒரு  பண்பாட்டுக்குறிப்பு  என்ற  ஆவணப்படத்தில்  நரேற்றராகத்தோன்றி   தெரிவித்துள்ளார்.
மனோரமா  1937  ஆம்  ஆண்டு  மே  மாதம் 26 ஆம்  திகதி   தமிழ்நாட்டில்  தஞ்சாவூரில்  மன்னார்க்குடியில்  பிறந்தவர். ஏழ்மையான  குடும்பத்தில்  பிறந்த  இவர்  கற்றது  ஆறாம்  தரம் வரையில்தான்.   வறுமையில்  வாடிய  இவருடைய  குடும்பம் காரைக்குடிக்கு   அருகில்  பள்ளத்தூர்  என்ற  இடத்திற்கு இடம்பெயர்ந்தது.