தமிழ் முரசு வாரம் ஒருமுறை திங்கட் கிழமைகளில் மலரும் என்பதை வாசகர்களுக்கு அறியத்தருகின்றோம். மரண அறிவித்தல்கள், பிறந்தநாள் வாழ்த்துக்கள், விளம்பரங்கள் போன்றவைகளை அனுப்பி வைத்தால் இலவசமாக பிரசுரிக்கப்படும். ஆசிரியர் குழு
ஈன்ற தாயும் இல்லத்தரசியும்
-சங்கர சுப்பிரமனியன்
இங்கே மகனாக என்னை ஈன்றெடுத்தாள் அன்னை
எங்கிருந்தோ வந்து சேர்ந்தாள் இவள் என்னுடனே
பத்து மாதம் என்னை சுமந்தாள் கருவறையில்
மொத்த காலம் என்னை சுமந்தாள் உளவறையில்
ஈருயிராய்ப் பிரிந்து பெற்றெடுத்தாள் வெவ்வேறாக்கி
ஓருயிரென்று சொன்னாள் நாங்கள் ஈருடலாயிருந்தும்
பாலும் சோறும் ஊட்டி பாசமுடன் வளர்த்தாள் தாய்
பாசத்தையே இறுதிவரை தொடர வந்தாள் மனைவி
தொட்டிலில் தாலாட்டி தூங்கவைத்தாள் தாய்
தொட்டிலில் மகவைத் தலாட்டினாள் மனைவி
வெண்ணிலா காட்டி உண்ண வைத்த தாய்
தண்ணிலா முகம்காட்டி உணவளிக்க மனைவி
பெருமையுடன் நிமிர்ந்து நட – அன்பு ஜெயா (பா வகை: வஞ்சி மண்டிலம்)
உன்றன் பெருமையை உயர்வென
என்றும் எண்ணியே இருந்திடு,
தன்னை நம்புவோர் தரைதனில்
என்றும் பெறுவது ஏற்றமே! (1)
நன்றாய் நல்வழி நடந்துமே
என்றும் பீடுடன் இருந்திடு,
நன்றே பெரியவர் நயமுடன்
அன்றே உரைத்தனர் அறிந்திடு! (2)
உன்னை நாளுமே உயர்த்திட
என்றும் உழைத்திடின் ஏற்றமே!
இன்றே உறுதியும் எடுத்திடு
நன்றே வாழ்ந்திடு நாளுமே! (3)
அவுஸ்திரேலிய தேர்தலில் ட்ரம்ப் எதிர்ப்பலை ; ட்ரம்புக்கு பதிலடி கொடுத்த கனடா!!
Published By: Digital Desk 2
04 May, 2025 | 10:10 AM

- ஐங்கரன் விக்கினேஸ்வரா
உலகளாவிய ரீதியில் டொனால்ட் ட்ரம்ப் அரசாங்கத்தின் வர்த்தக வரிச் சுமைகளால் பாதிப்புக்குள்ளான நாடுகளில் தற்போது தேர்தல்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. குறிப்பாக, கனடாவில் நடந்த தேர்தல் முடிவுகள் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்பின் அடாவடித்தனத்துக்கு எதிரான பலத்த அடியாக கணிப்பிடப்படுகிறது.
அவுஸ்திரேலியாவில் நேற்று சனிக்கிழமை (3) பொதுத் தேர்தல் நடைபெற்றது. பிரதமர் அந்தோணி அல்பானீஸ் தேர்தலை அறிவித்த பின்னர் கடந்த ஐந்து வாரங்களாக தீவிர பிரசாரம் நடைபெற்று வந்தது.
இந்த இரு நாட்டு தேர்தல்களில் ஆளும் கட்சிகளுக்கான ஆதரவே அதிகரித்து வந்துள்ளது. கனேடிய தேர்தலும், அரவுஸ்திரேலிய தேர்தலும் ட்ரம்ப் அரசாங்கத்தின் வரிச்சுமை காரணமாக பாதிக்கப்பட்ட நாடுகளின் எதிர்ப்புக் குரலாகவே கருத இடமுண்டு.
ஆஸியில் ஆளும் கட்சி ஆதரவு
2022ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் தொழிலாளர் கட்சி (அவுஸ்திரேலியாவில் பெரும்பான்மை பெற்று ஆட்சி அமைத்தது. தற்போதைய நிலவரப்படி அந்தக் கட்சியின் செல்வாக்கு சிலகாலம் சரிந்திருந்தாலும், மீண்டும் முன்னிலையில் இருந்தது.
கொவிட் தொற்றுக் காலத்தின் பின்னர் அவுஸ்திரேலியாவில் வாழ்க்கைச் செலவு அழுத்தங்கள், அதிக பணவீக்கம் மற்றும் அதிக வட்டி விகிதங்கள் மற்றும் வீட்டுவசதி மற்றும் வாடகை போன்ற காரணங்களில் மக்கள் விரக்தியடைந்துள்ள சூழலில் இந்த பொதுத் தேர்தல் நடைபெற்றது.
இரண்டாவது தடவையாக மூன்று ஆண்டு பதவிக் காலத்தை எதிர்பார்க்கும் அவுஸ்திரேலிய பிரதமர் அந்தோணி அல்பானீஸின் தொழிலாளர் கட்சி, தற்போது பிரதிநிதிகள் சபையில் உள்ள 151 இடங்களில் 77 இடங்களைக் கொண்டிருந்தது.
அதேவேளை பெரும்பான்மையான வாக்காளர்கள் எதிர்க்கட்சித் தலைவர் பீட்டர் டட்டன் மீது சந்தேகம் கொண்டிருப்பதாக கருத்துக் கணிப்புகள் வெளிப்படுத்தின.
விரைவில் வெளியாகவிருக்கும் உலகின் முதலாவது முழுநீள ‘ஏஐ’ திரைப்படம்
02 May, 2025 | 09:42 AM

நடிகர்கள் யாரும் நடிக்காமல், தொழில்நுட்ப கலைஞர்களின் பங்களிப்பின்றி, ழுக்க முழுக்க ‘ஏஐ’ தொழில்நுட்பத்தில் உருவாகியுள்ளது உலகின் முதலாவது முழுநீள ‘ஏஐ’ திரைப்படம்.
‘லவ் யூ’ எனும் பெயரில், கன்னட மொழியில் தயாராகியுள்ள இது, படப்பிடிப்பு செலவுகள், கலைஞர்கள் என யாருடைய பங்களிப்பும் இல்லாமல் உருவாகியுள்ளது.
மேலும், நரசிம்ம மூர்த்தி என்பவரால் உருவாக்கப்பட்டுள்ள இத்திரைப்படமானது, 95 நிமிடங்கள் ஓடும் நிலையில், முழுக்க முழுக்க ஏஐ தொழில்நுட்பத்தில் தயாரிக்கப்பட்டுள்ளது. 6 மாதம் ஒரே அறையில் கிராஃபிக்ஸ், ஏஐ உதவியுடன் நூதன் என்பவர் இந்தப் பணிகளை மேற்கொண்டுள்ளார்.
படத்தின் மொத்த செலவுமே, ரூ.10 இலட்சம்தான். அதுவும் கிராஃபிக்ஸ் உள்ளிட்ட பணிகளுக்காக மட்டுமே. ட்ரோன் காட்சிகள் உள்ளிட்டவை உண்மையான படத்தில் இருப்பது போலவே இதிலும் இடம்பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், நாயகன் – நாயகி இடையிலான காதலையும், பிரிவையும் பேசும் விதமாக அமைந்துள்ள இவ் ஏஐ திரைப்படம், விரைவில் வெளியாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது. நன்றி வீரகேசரி
தாழம்பூ - ஸ்வீட் சிக்ஸ்டி - ச. சுந்தரதாஸ்
தமிழ் திரையில் எம் ஜி ஆர் , சரோஜாதேவி ஜோடி வெற்றிகரமாக
ரசிகர்களை கவர்ந்து கொண்டிருந்த கால கட்டத்தில் அதற்கு ஆப்பு வைக்கும் விதத்தில் சின்னப்பா தேவர் தன் படங்களில் சரோஜாதேவியை தவிர்க்கத் தொடங்கினார். அதே சமயம் சரோஜாதேவியும் பிஸி நடிகையாக வலம் வந்து கொண்டிருந்ததால் அவருக்கு மாற்றாக எம் ஜி ஆருக்கு ஜோடியாக நடிக்க மற்றுமோர் நடிகை தேவைப்பட்டார். அந்த நேரத்தில் வசமாக வந்து சேர்ந்தவர் தான் கே . ஆர் . விஜயா. எம் ஜி ஆருடன் இவர் இணைந்து நடித்த முதல் படம் தான் தாழம்பூ. ஆனாலும் இந்தப் படம் அவர்கள் நடித்த மூன்றாவது படமாகவே வெளிவந்தது. அதற்கு முன்னதாகவே தொழிலாளி, பணம் படைத்தவன் படங்கள் திரைக்கு வந்து விட்டன.
இருந்தவர் என் .எஸ் . ராமதாஸ். கலைவாணர் மறைவதற்கு சில காலம் முன்பாக இவர் அவரிடம் இருந்து விலகி எம் ஜி ஆரிடம் வந்து சேர்ந்து விட்டார். வந்த கையோடு எம் ஜி ஆரின் விக்ரமாதித்தன் படத்தை டீ .ஆர் . ரகுநாத்தோடு இணைந்து இயக்கும் வாய்ப்பு ராமதாசுக்கு கிடைத்தது. ஆனால் இந்தப் படம் ஐந்தாண்டு கால திட்டம் போல் தயாரிப்பில் இழுபட்டு இறுதியில் வெளி வந்து தோல்வி கண்டது. ஆனாலும் ராமசந்திரன் ராமதாஸை கை விடவில்லை. மற்றுமொரு படத்தை இயக்கும் சந்தர்ப்பத்தை வழங்கினார். அந்தப் படம்தான் தாழம்பூ.
செந்தமிழ்ப் பூக்கள் சிறுவர் பாடல்கள் பகுதி 1 & பகுதி 2 விரைவிலே வெளிவர உள்ளது.
இயற்றியவர்: பல் வைத்திய கலாநிதி பாரதி இளமுருகனார்
சிந்தைக்கும் செவிக்கும் இனிய சிறுவர் பாடல்கள் அறிஞர் ஒளவை நடராசன் அவர்கள் தந்த அணிந்துரை! (வேந்தர் - பாரத் பல்கலைக் கழகம் )
சிட்னி / மெல்பேர்ன் / கன்பரா / பிரிஸ்பேனில் நடைபெறும் நிகழ்ச்சிகள் 2025
.
உங்கள் நிகழ்ச்சிகளை இலவசமாக பிரசுரிக்க tamilmurasu1@gmail.com or paskiho@hotmail.com , murasuau@gmail.com என்ற முகவரியில் தொடர்பு கொள்ளவும்
சிட்னியில் நடைபெறும் நிகழ்வுகள்
24-05- 2025 Sat: தமிழ் வளர்த்த சான்றோர் விழா - அருள்மிகு சிட்னி முருகன் கோயில் கலாசார மண்டபம் - மாலை 4.45 மணி
25-05- 2025 Sun: திருக்குறள் மனனப் போட்டி – சிட்னி துர்க்கை அம்மன் கோயில் - தமிழர் மண்டபம் - முற்பகல் 9.00 மணி
25-05- 2025 Sun: சமய அறிவுத் திறன் போட்டியும், திருமுறை ஒப்புவித்தல் போட்டியும் -சிட்னி துர்க்கை அம்மன் கோயில் - தமிழர் மண்டபம் - முற்பகல் 11.00 மணி
07-06- 2025 Sat: சிட்னி இசை விழா - Riverside Theatre, Paramatta
08-06- 2025 Sun: சிட்னி இசை விழா - Riverside Theatre, Paramatta
15-06- 2025 Sun : சைவமன்றம் வழங்கும் இசை நடன நிகழ்வு
25-06- 2025 Sat: ETA presents Charity Night 2025 - Dinner Dance - Roselea Community Centre, Carlingford
27-09- 2025 Sat: சிட்னி சிலோன் லயன்ஸ் கிளப் வழங்கும் நடன, இசை நிகழ்ச்சி at The Bryan Brown Hall, Bankstown 6pm.:'
இலங்கைச் செய்திகள்
யாழ். தெல்லிப்பளை உயர் பாதுகாப்பு வலயத்தில் விடுவிக்கப்பட்ட பிரதேசங்களுக்கு அரசாங்க அதிபர் நேரடி விஜயம்
நல்லை ஆதீனத்தின் திருவுடல் தீயில் சங்கமமானது
தமிழர் இருப்பை வலுப்படுத்தி, தமிழ் தேசிய அடையாளத்தை நிலைநிறுத்தும் பொறுப்பு தமிழ் மக்களிடமே உள்ளது - கிழக்கு மாகாண வலிந்துகாணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் சங்கம்
ஏப்ரல் மாதத்தில் ஒரு இலட்சத்துக்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்கு வருகை
இந்தியாவின் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் காசிநாத் செந்தில் மன்னாருக்கு விஜயம்!
யாழ். தெல்லிப்பளை உயர் பாதுகாப்பு வலயத்தில் விடுவிக்கப்பட்ட பிரதேசங்களுக்கு அரசாங்க அதிபர் நேரடி விஜயம்
Published By: Digital Desk 2
03 May, 2025 | 07:26 PM
யாழ்ப்பாணம், தெல்லிப்பளை மற்றும் பருத்தித்துறை பிரதேசத்தின் உயர் பாதுகாப்பு வலயத்திலுள்ள 40.7 ஏக்கர் காணியானது வியாழக்கிழமை (01) விடுவிக்கப்பட்டதற்கமைய, தெல்லிப்பளை பிரதேசத்திற்கு அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் சனிக்கிழமை (03) மு.ப. 11.30 மணிக்கு நேரடியாக விஜயம் செய்தார்.
அந்த வகையில் வசாவிளான் கிழக்கு கிராம அலுவலர் பிரிவில் அமைந்துள்ள ஒட்டகப்புலம் புனித அமலோற்பவ மாதா தேவாலயத்தில் பங்குத்தந்தை ஜே. ஏ. அருள்தாஸ் அடிகளார் தலைமையில் நடைபெற்ற பிராத்தனையில் பங்குகொண்டு, அங்கு கூடியிருந்த மக்களுடன் கலந்துரையாடினார்.
அதனைத் தொடர்ந்து விடுவிக்கப்பட்ட 20 ஏக்கர் காணியினை பொதுமக்களுடன் சென்று பார்வையிட்டார்.
இதன் போது அப் பிரதேசத்தில் கண்ணிவெடி தொடர்பான பரிசீலனையில் ஈடுபட்டு வரும் Hallo Trust நிறுவனத்துடன் கலந்துரையாடிய அரசாங்க அதிபர்,
உலகச் செய்திகள்
இஸ்ரேல் விமான நிலையத்தின் மீது யெமனில் இருந்து ஏவுகணை தாக்குதல்
இந்தியா - பாக்கிஸ்தானை சூழும் போர் மேகங்கள் : இலங்கையில் வெடித்த இருநாட்டு இராஜதந்திர மோதல்
காசாவுக்கு உதவிப்பொருட்களை ஏற்றிச் சென்ற கப்பல் மீது டிரோன் தாக்குதல்!
அமைதியே எங்கள் முன்னுரிமை; அதை கோழைத்தனம் என கருதக்கூடாது; பதிலடி கொடுக்கும் முழு திறனும் பாகிஸ்தானிடமுள்ளது - இம்ரான் கான்
பாகிஸ்தானுக்கு சொந்தமான அனைத்து விமானங்களும் இந்திய வான் பரப்பிற்குள் நுழையத் தடை !
இஸ்ரேல் விமான நிலையத்தின் மீது யெமனில் இருந்து ஏவுகணை தாக்குதல்
Published By: Digital Desk 3
04 May, 2025 | 02:27 PM
இஸ்ரேல் விமான நிலையத்தின் மீது யெமனில் இருந்து ஏவுகணை தாக்குதல் இடம்பெற்றுள்ளளது.
இந்த சம்பவத்தில் பென் குரியன் விமான நிலையத்தின் வாகன தரிப்பிடத்தில் ஒருவர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இஸ்ரேலின் பாதுகாப்பு படைகள் இந்த ஏவுகணையை தடுக்க பல முயற்சிகள் செய்தும் அது வெற்றி அளிக்கவில்லை.
இந்நிலையில், விமான நிலையம் மூடப்பட்டுள்ளதோடு, பொதுமக்களை அங்கிருந்து விலகி இருக்குமாறு வலியுறுத்தப்பட்டுள்ளனர். நன்றி வீரகேசரி
திருக்குறள் மனனப் போட்டி – 25/05/2025
சிட்னி தமிழ் இலக்கிய கலை மன்றம் பெருமையுடன் நடாத்தும் வருடாந்த திருக்குறள் மனனப் போட்டிகள் மே மாதம் 25ம் திகதி ஞாயிற்றுக்கிழமை சிட்னி துர்க்கை அம்மன் கோயில் வளாகத்தில் அமைந்துள்ள தமிழர் மண்டபத்தில் முற்பகல் 9.00 மணியிலிருந்து நடைபெறவுள்ளது.
போட்டி நடாத்தப்படும் பிரிவுகளும் வயது வரம்பும்
பிரிவுகள் |
பிறந்த திகதி விபரம் |
பாலர் ஆரம்ப பிரிவு |
01.08.2020 இலும் அதன் பின்னரும் பிறந்தவர்கள் |
பாலர் பிரிவு |
01.08.2018 க்கும் 31.07.2020 க்கும் இடையில் பிறந்தவர்கள் |
கீழ்ப்பிரிவு |
01.08.2016 க்கும் 31.07.2018 க்கும் இடையில் பிறந்தவர்கள் |
மத்தியபிரிவு |
01.08.2013 க்கும் 31.07.2016 க்கும் இடையில் பிறந்தவர்கள் |
மேற்பிரிவு |
01.08.2010 க்கும் 31.07.2013 க்கும் இடையில் பிறந்தவர்கள் |
அதிமேற்பிரிவு |
01.08.2006 க்கும் 31.07.2010 க்கும் இடையில் பிறந்தவர்கள் |
பங்குபற்றுவர்களின் முழுப்பெயர் மற்றும் பிறந்த திகதி ஆகிய விபரங்களை மின்னஞ்சல் மூலமாக
மே மாதம் 24ம் திகதிக்கு முன்பாக கிடைக்கக் கூடியதாக tikmsydney@gmail.com என்ற முகவரிக்கு அனுப்பி வைக்கப்பட வேண்டும் போட்டிக்கான விதிமுறைகள், புள்ளிகள் வழங்கும் முறை பற்றிய குறிப்புகள் என்பனவற்றை மின்னஞ்சல் மூலமாக பெற்றுக்கொள்ளலாம்
சிட்னி ஸ்ரீ துர்க்காதேவி தேவஸ்தான சமய அறிவுத் திறன் போட்டியும், திருமுறை ஒப்புவித்தல் போட்டியும் - 25/05/2025
சிட்னி ஸ்ரீ துர்க்காதேவி தேவஸ்தானம் பெருமையுடன் நடாத்தும் வருடாந்த சமய அறிவுத் திறன்
போட்டிககளும், திருமுறை ஒப்புவித்தல் போட்டிகளும் மே மாதம் 25ம் திகதி ஞாயிற்றுக்கிழமை சிட்னி துர்க்கை அம்மன் கோவிலில் முற்பகல் 11 மணியிலிருந்து நடைபெறவுள்ளது.
வர்ணம் தீட்டுதல் (பாலர் ஆரம்ப பிரிவுக்கும் பாலர் பிரிவுக்கும் மட்டும்), சமய அறிவுப் போட்டி, திருமுறை ஒப்புவித்தல் போட்டி என மூன்று போட்டிகள் நடைபெறும். (அறிவுப்போட்டிக்கான மாதிரி வினாக்களும் வழங்கப்படும்)
இப்போட்டிகளில் பங்குபற்றுபவர்களுக்கு பரிசில்கள் முதற் பிரிவு, இரண்டாம் பிரிவு, மூன்றாம் பிரிவென மூன்று வகையாக வழங்கப்படவுள்ளது. ஓவ்வொரு பிரிவிலும் ஓன்றுக்கு மேற்பட்ட திறமையானவர்களுக்கு பரிசில்கள் கிடைக்கவேண்டும் என்பதற்காக இப்படி வகுக்கப்பட்டடுள்ளது.
போட்டி நடாத்தப்படும் பிரிவுகளும் போட்டிகளும்
பிரிவுகள் |
பிறந்த திகதி விபரம் |
போட்டிகள் |
பாலர் ஆரம்ப பிரிவு |
01.08.2020 இலும் அதன் பின்னரும் பிறந்தவர்கள் |
சமய அறிவுப் போட்டி வர்ணம் தீட்டும் போட்டி |
பாலர் பிரிவு |
01.08.2018 க்கும் 31.07.2020 க்கும் இடையில் பிறந்தவர்கள் |
சமய அறிவுப் போட்டி வர்ணம் தீட்டும் போட்டி |
கீழ்ப்பிரிவு |
01.08.2016 க்கும் 31.07.2018 க்கும் இடையில் பிறந்தவர்கள் |
சமய அறிவுப் போட்டி திருமுறை ஒப்புவித்தல் போட்டி |
மத்தியபிரிவு |
01.08.2013 க்கும் 31.07.2016 க்கும் இடையில் பிறந்தவர்கள் |
சமய அறிவுப் போட்டி திருமுறை ஒப்புவித்தல் போட்டி |
மேற்பிரிவு |
01.08.2010
க்கும் 31.07.2013 க்கும் இடையில் பிறந்தவர்கள் |
சமய அறிவுப் போட்டி திருமுறை ஒப்புவித்தல் போட்டி |
அதிமேற்பிரிவு |
01.08.2006
க்கும் 31.07.2010 க்கும் இடையில் பிறந்தவர்கள் |
சமய அறிவுப் போட்டி திருமுறை ஒப்புவித்தல் போட்டி |
பங்குபற்றுவர்களின் முழுப்பெயர், பிறந்த திகதி மற்றும் பங்குபற்றும் போட்டிகள் ஆகிய விபரங்களை மின்னஞ்சல் மூலமாக மே மாதம் 24ம் திகதிக்கு முன்பாக கிடைக்கக் கூடியதாக durgacompetition@gmail.com என்ற முகவரிக்கு அனுப்பி வைக்கப்பட வேண்டும் போட்டிக்கான விதிமுறைகள், புள்ளிகள் வழங்கும் முறை பற்றிய குறிப்புகள், சமயஅறிவுப்போட்டிகளுக்கான மாதிரி கேள்வி பதில்கள் என்பனவற்றை மின்னஞ்சல் மூலமாக பெற்றுக்கொள்ளலாம்.