அவுஸ்திரேலிய தேர்தலில் ட்ரம்ப் எதிர்ப்பலை ; ட்ரம்புக்கு பதிலடி கொடுத்த கனடா!!

 Published By: Digital Desk 2

04 May, 2025 | 10:10 AM
image

- ஐங்கரன் விக்கினேஸ்வரா

உல­க­ளா­விய ரீதியில் டொனால்ட் ட்ரம்ப் அர­சாங்­கத்தின் வர்த்­தக வரிச் சுமை­களால் பாதிப்­புக்­குள்­ளான நாடு­களில் தற்­போது தேர்­தல்கள் தொடர்ந்து நடை­பெற்று வரு­கின்­றன. குறிப்­பாக, கன­டாவில் நடந்த தேர்தல் முடி­வுகள் அமெ­ரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்பின் அடா­வ­டித்­த­னத்­துக்கு எதி­ரான பலத்த அடி­யாக கணிப்­பி­டப்­ப­டு­கி­றது.

அவுஸ்­தி­ரே­லி­யாவில் நேற்று சனிக்­கி­ழமை (3) பொதுத் தேர்தல் நடை­பெற்­றது. பிர­தமர் அந்­தோணி அல்­பானீஸ் தேர்­தலை அறி­வித்த பின்னர் கடந்த ஐந்து வாரங்­க­ளாக தீவிர பிர­சாரம் நடை­பெற்று வந்­தது.

இந்த இரு நாட்டு தேர்­தல்­களில் ஆளும் கட்­சி­க­ளுக்­கான ஆத­ரவே அதி­க­ரித்து வந்­துள்­ளது. கனே­டிய தேர்­தலும், அர­வுஸ்­தி­ரே­லிய தேர்­தலும் ட்ரம்ப் அர­சாங்­கத்தின் வரிச்­சுமை கார­ண­மாக பாதிக்­கப்­பட்ட நாடு­களின் எதிர்ப்புக் குர­லா­கவே கருத இட­முண்டு.

ஆஸியில் ஆளும் கட்சி ஆத­ரவு

2022ஆம் ஆண்டு நடை­பெற்ற தேர்­தலில் தொழி­லாளர் கட்சி (அவுஸ்­தி­ரே­லி­யாவில் பெரும்­பான்மை பெற்று ஆட்சி அமைத்­தது. தற்­போ­தைய நில­வ­ரப்­படி அந்தக் கட்­சியின் செல்­வாக்கு சில­காலம் சரிந்­தி­ருந்­தாலும், மீண்டும் முன்­னி­லையில் இருந்­தது.

கொவிட் தொற்றுக் காலத்தின் பின்னர் அவுஸ்­தி­ரே­லி­யாவில் வாழ்க்கைச் செலவு அழுத்­தங்கள், அதிக பண­வீக்கம் மற்றும் அதிக வட்டி விகி­தங்கள் மற்றும் வீட்­டு­வ­சதி மற்றும் வாடகை போன்ற கார­ணங்­களில் மக்கள் விரக்­தி­ய­டைந்­துள்ள சூழலில் இந்த பொதுத் தேர்தல் நடை­பெற்­றது.

இரண்­டா­வது தட­வை­யாக மூன்று ஆண்டு பதவிக் காலத்தை எதிர்­பார்க்கும் அவுஸ்­தி­ரே­லிய பிர­தமர் அந்­தோணி அல்­பா­னீஸின் தொழி­லாளர் கட்சி, தற்­போது பிர­தி­நி­திகள் சபையில் உள்ள 151 இடங்­களில் 77 இடங்­களைக் கொண்­டி­ருந்­தது.

அதே­வேளை பெரும்­பான்­மை­யான வாக்­கா­ளர்கள் எதிர்க்­கட்சித் தலைவர் பீட்டர் டட்டன் மீது சந்­தேகம் கொண்­டி­ருப்­ப­தாக கருத்துக் கணிப்­புகள் வெளிப்­ப­டுத்­தின.

எதிர்க்­கட்சி செல்­வாக்கு வீழ்ச்சி

அவுஸ்­தி­ரே­லிய எதிர்க்­கட்­சி­யான லிபரல் கட்­சியின் தலைவர் பீட்டர் டட்­டனின் சில திட்­டங்கள், அமெ­ரிக்க அதிபர் ட்ரம்ப்­நிர்­வா­கத்தில் இடம்­பெற்­றி­ருக்கும் இலோன் மஸ்க்கின் அர­சாங்க திறன் துறையின் செயல்­பா­டு­க­ளோடு ஒத்துப் போவது போன்று இருப்­ப­தாக மக்­க­ளி­டையே எதிர்ப்பு கிளம்­பி­யது. இதனால் இத் தேர்­தலில் அவ­ருக்­கான ஆத­ரவு குறைந்­துள்­ளது என்று கருத்துக் கணிப்­புகள் வெளிப்­ப­டுத்­தின.

அரசு ஊழி­யர்கள் முழு நேர வேலைக்கு அலு­வ­ல­கத்­துக்கு திரும்ப வேண்டும். பொதுத்­துறை ஊழி­யர்கள் 10 ஆயிரம் பேர் வேலை­யி­ழக்கும் திட்டம் ஆகி­யவை கடும் விமர்­ச­னங்­க­ளுக்கு உள்­ளாக்­கப்­பட்­டதால், அதனை டட்டன் கைவிடும் நிலைக்கு தள்­ளப்­பட்டார்.

ட்ரம்ப் நிர்­வா­கத்தின் அடா­வ­டித்­த­ன­மான வர்த்­தக வரிச் சுமை­களை எதிர்த்து போராட கட்­சிகள் முன்­வர வேண்­டு­மெ­னவும் பொது மக்கள் எதிர்­பார்க்­கின்­றனர்.

மார்க் கார்னி ஆவேசம்

கனே­டிய தேர்­தலில் வெற்றி பெற்ற பிறகு பிர­தமர் மார்க் கார்னி, கனடா மக்­க­ளுக்கு நன்றி தெரி­வித்­த­தோடு, அமெ­ரிக்­கா­வையும் கடு­மை­யாக சாடி­யுள்ளார். ‘கன­டாவை சொந்­த­மாக்கும் நோக்­கத்­துடன் நம்மை உடைக்க ட்ரம்ப் முயற்­சிக்­கிறார். அது ஒரு­போதும் நடக்­காது’ என்று கார­சா­ர­மாக பேசி­யுள்ளார்.

கன­டாவில் பிர­த­ம­ருக்­கான போட்­டியில் லிப்ரல் கட்­சியைச் சேர்ந்த மார்க் கார்னி, கன்­சர்­வேட்டிவ் கட்­சியைச் சேர்ந்த பியர் பொய்­லிவ்ரே ஆகியோர் இடையே கடும் போட்டி நில­வி­யது. ஆனால், துவக்கம் முதலே மார்க் கார்னி கட்சி முன்­னிலை வகித்­தது.

கன­டாவில் ஆட்­சியைப் பிடிக்க மொத்­த­முள்ள 343 இடங்­களில் 172 இடங்­களைப் பெற வேண்டும். ஆனால், ஆளும் லிபரல் கட்சி 169 இடங்­களில் முன்­ன­ணியில் இருக்கும் நிலையில், கன்­சர்­வேடிவ் கட்­சி­யினர் 144 இடங்­களில் வென்­றுள்­ளனர்.

கடும் போட்­டிக்கு இடையே, தோல்­வியை கன்­சர்­வேட்டிவ் கட்சி ஒப்­புக்­கொண்­டுள்­ளது. இதன்­படி கனடா பிர­த­ம­ராக மார்க் கார்னி மீண்டும் பத­வி­யேற்­பது உறு­தி­யா­கி­யுள்­ளது. கனடா பிர­தமர் தனது வெற்­றியை அடுத்து நிகழ்த்­திய உரையில், கன­டா­விற்கு சவா­லான நாட்கள் காத்­தி­ருப்­ப­தாக கூறினார்.

“நாம் சில தியா­கங்­களை செய்ய வேண்­டி­யி­ருக்கும். அதே­வே­ளையில், நமது தொழி­லா­ளர்கள் மற்றும் வணி­கங்­களை ஆத­ரிப்­பதன் மூலம் இந்த தியா­கங்­களை நம் பகிர்ந்து கொள்வோம். அமெ­ரிக்கா செய்த துரோ­கத்தின் பாடங்­களை ஒரு­போதும் கனடா மறக்க கூடாது. இந்த வர்த்­தக போரில் நாம் வெற்றி பெறுவோம்” என்றும் அவர் தெரி­வித்தார்.

ஈழத் தமிழர் வெற்றி

இத் தேர்­தலில் ஈழத் தமி­ழர்கள் கெரி ஆனந்­த­சங்­கரி, யுவ­னிதா நாதன்

வெற்றி பெற்­றுள்­ளனர். அதேபோல், சென்­னையை பூர்­வீ­க­மாகக் கொண்ட அனிதா ஆனந்த் வெற்றி பெற்­றுள்ளார்.

நடந்து முடிந்த தேர்­தலில் 6 தமி­ழர்கள் போட்­டி­யிட்ட நிலையில், 3 பேர் வெற்றி பெற்­றுள்­ளனர். தற்­போது வெற்றி பெற்­றுள்ள அனிதா ஆனந்த் கன­டாவின் ஒக்வில் கிழக்கு தொகு­தி­யிலும், கேரி ஆனந்­த­சங்­கரி ஸ்கார்­பரவ்ப் பார்க் தொகு­தி­யிலும், பிக்­கெர்லின் புருக்லிவ் தொகு­தியில் யுவ­னிதா ஆகியோர் போட்­டி­யிட்டு வென்­றுள்­ளனர்.

அதிக தொகு­தி­களில் வெற்றி பெற்று லிபரல் கட்சி ஆட்சி அமைய உள்ள நிலையில், அனிதா ஆனந்த், கெரி ஆனந்­த­சங்­கரி ஆகி­யோ­ருக்கு அமைச்சர் பத­விகள் வழங்­கப்­படும் என எதிர்­பார்க்­கப்­ப­டு­கி­றது.

ட்ரம்­பிற்கு எதி­ராக உலகம்

இதே­வேளை  டொனால்ட் ட்ரம்­பிற்கு எதி­ராக உல­க­மெங்கும் பல்­வேறு கால­கட்­டங்­களில் பல நாடு­களில் போராட்­டங்கள் நடை­பெற்­றுள்­ளன. அமெ­ரிக்க ஜனா­தி­ப­தி­யாக டொனால்ட் ட்ரம்ப் பத­வி­யேற்ற நாளில் இருந்து அமெ­ரிக்கா உட்­பட பல்­வேறு நாடு­க­ளிலும் அவ­ருக்கு எதி­ராக பல்­வேறு கண்­டன போராட்­டங்கள் நடை­பெற்று வரு­கின்­றன.

ட்ரம்ப் நிர்­வாகம் புலம் பெயர்ந்­தோரை கையாள மிகப்­பெ­ரிய நாடு கடத்தல் திட்­டத்தை தொடங்­கி­யது. இது அமெ­ரிக்­காவில் மட்­டு­மன்றி, உலகின் பல்­வேறு நாடு­க­ளிலும் பெரும் அதிர்ச்­சியை ஏற்­ப­டுத்­தி­யுள்­ளது.

ஐரோப்­பிய நாடு­களில் எதிர்ப்­பலை

ட்ரம்பின் நிலைப்­பாட்டை எதிர்த்து ஐரோப்­பிய நாடு­க­ளிலும் மக்கள் பதா­கை­க­ளுடன் பேரணி நடத்­தினர். ட்ரம்பின் குடி­யேற்ற கொள்­கை­களை எதிர்த்து பாரிஸில் பதா­கை­க­ளுடன் பேரணி நடத்­தினர்.

அத்­துடன் பாரிஸ் கால­நிலை ஒப்­பந்­தத்தில் இருந்து அமெ­ரிக்கா வெளி­யேறும் உத்­த­ரவில் ட்ரம்ப்­கை­யெ­ழுத்­திட்­ட­தற்கு இங்­கி­லாந்து தலை­நகர் லண்­டனில் ஏரா­ள­மானோர் போராட்­டத்தில் ஈடு­பட்­டனர். குடி­யேற்று வாசிகள், பிறப்­பு­ரிமை, குடி­யு­ரிமை போன்­ற­வற்றின் ட்ரம்பின் கொள்­கை­க­ளுக்கு எதி­ராக முழக்­கங்­களை எழுப்­பினர்.

மெக்­ஸிக்­கோவில் டொனால்ட் ட்ரம்பின் குடி­யேற்று நட­வ­டிக்­கைக்கு எதி­ராக எல்லை வெளியில் பாரிய ஆர்ப்­பாட்டம் நடை­பெற்­றது. இதன் போது மெக்­ஸிக்கோ வளை­கு­டாவின் பெயரை அமெ­ரிக்க வளை­குடா என்று ேரணி நடத்­தினர்.

அத்­துடன் பாரிஸ் கால­நிலை ஒப்­பந்­தத்தில் இருந்து அமெரிக்கா வெளியேறும் உத்தரவில் ட்ரம்ப்கையெழுத்திட்டதற்கு இங்கிலாந்து தலைநகர் லண்டனில் ஏராளமானோர் போராட்டத்தில் ஈடுபட்டனர். குடியேற்று வாசிகள், பிறப்புரிமை, குடியுரிமை போன்றவற்றின் ட்ரம்பின் கொள்கைகளுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர்.

மெக்ஸிக்கோவில் டொனால்ட் ட்ரம்பின் குடியேற்று நடவடிக்கைக்கு எதிராக எல்லை வெளியில் பாரிய ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதன் போது மெக்ஸிக்கோ வளைகுடாவின் பெயரை அமெரிக்க வளைகுடா என்று மாற்றியதற்கு அவர்கள் கடும் கண்டனம் தெரிவித்தனர்.   நன்றி வீரகேசரி 

No comments: