பெருமையுடன் நிமிர்ந்து நட – அன்பு ஜெயா (பா வகை: வஞ்சி மண்டிலம்)

 

உன்றன் பெருமையை உயர்வென

என்றும் எண்ணியே இருந்திடு,

தன்னை நம்புவோர் தரைதனில்

என்றும் பெறுவது ஏற்றமே!  (1)

 

நன்றாய் நல்வழி நடந்துமே

என்றும் பீடுடன் இருந்திடு,

நன்றே பெரியவர் நயமுடன்

அன்றே உரைத்தனர் அறிந்திடு!   (2)

 

உன்னை நாளுமே உயர்த்திட

என்றும் உழைத்திடின் ஏற்றமே!

இன்றே உறுதியும் எடுத்திடு

நன்றே வாழ்ந்திடு நாளுமே!   (3)

 

நயன்மை காத்துநீ நாட்டினில்

உயர்ந்தே நின்றிடில் ஊருமே

வியந்தே போற்றிடும் வென்றிடு

நயன்மை உயர்ந்ததே நாட்டினில்!   (4)

 

(நயன்மை – நீதி)

No comments: