02 May, 2025 | 09:42 AM
நடிகர்கள் யாரும் நடிக்காமல், தொழில்நுட்ப கலைஞர்களின் பங்களிப்பின்றி, ழுக்க முழுக்க ‘ஏஐ’ தொழில்நுட்பத்தில் உருவாகியுள்ளது உலகின் முதலாவது முழுநீள ‘ஏஐ’ திரைப்படம்.
‘லவ் யூ’ எனும் பெயரில், கன்னட மொழியில் தயாராகியுள்ள இது, படப்பிடிப்பு செலவுகள், கலைஞர்கள் என யாருடைய பங்களிப்பும் இல்லாமல் உருவாகியுள்ளது.
மேலும், நரசிம்ம மூர்த்தி என்பவரால் உருவாக்கப்பட்டுள்ள இத்திரைப்படமானது, 95 நிமிடங்கள் ஓடும் நிலையில், முழுக்க முழுக்க ஏஐ தொழில்நுட்பத்தில் தயாரிக்கப்பட்டுள்ளது. 6 மாதம் ஒரே அறையில் கிராஃபிக்ஸ், ஏஐ உதவியுடன் நூதன் என்பவர் இந்தப் பணிகளை மேற்கொண்டுள்ளார்.
படத்தின் மொத்த செலவுமே, ரூ.10 இலட்சம்தான். அதுவும் கிராஃபிக்ஸ் உள்ளிட்ட பணிகளுக்காக மட்டுமே. ட்ரோன் காட்சிகள் உள்ளிட்டவை உண்மையான படத்தில் இருப்பது போலவே இதிலும் இடம்பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், நாயகன் – நாயகி இடையிலான காதலையும், பிரிவையும் பேசும் விதமாக அமைந்துள்ள இவ் ஏஐ திரைப்படம், விரைவில் வெளியாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது. நன்றி வீரகேசரி
No comments:
Post a Comment