இஸ்ரேல் விமான நிலையத்தின் மீது யெமனில் இருந்து ஏவுகணை தாக்குதல்
இந்தியா - பாக்கிஸ்தானை சூழும் போர் மேகங்கள் : இலங்கையில் வெடித்த இருநாட்டு இராஜதந்திர மோதல்
காசாவுக்கு உதவிப்பொருட்களை ஏற்றிச் சென்ற கப்பல் மீது டிரோன் தாக்குதல்!
அமைதியே எங்கள் முன்னுரிமை; அதை கோழைத்தனம் என கருதக்கூடாது; பதிலடி கொடுக்கும் முழு திறனும் பாகிஸ்தானிடமுள்ளது - இம்ரான் கான்
பாகிஸ்தானுக்கு சொந்தமான அனைத்து விமானங்களும் இந்திய வான் பரப்பிற்குள் நுழையத் தடை !
இஸ்ரேல் விமான நிலையத்தின் மீது யெமனில் இருந்து ஏவுகணை தாக்குதல்
Published By: Digital Desk 3
04 May, 2025 | 02:27 PM
இஸ்ரேல் விமான நிலையத்தின் மீது யெமனில் இருந்து ஏவுகணை தாக்குதல் இடம்பெற்றுள்ளளது.
இந்த சம்பவத்தில் பென் குரியன் விமான நிலையத்தின் வாகன தரிப்பிடத்தில் ஒருவர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இஸ்ரேலின் பாதுகாப்பு படைகள் இந்த ஏவுகணையை தடுக்க பல முயற்சிகள் செய்தும் அது வெற்றி அளிக்கவில்லை.
இந்நிலையில், விமான நிலையம் மூடப்பட்டுள்ளதோடு, பொதுமக்களை அங்கிருந்து விலகி இருக்குமாறு வலியுறுத்தப்பட்டுள்ளனர். நன்றி வீரகேசரி
இந்தியா - பாக்கிஸ்தானை சூழும் போர் மேகங்கள் : இலங்கையில் வெடித்த இருநாட்டு இராஜதந்திர மோதல்
03 May, 2025 | 07:25 PM
(லியோ நிரோஷ தர்ஷன்)
ஜம்மு - காஷ்மீரில் சுற்றுலாப் பயணிகள் மீது மேற்கொள்ளப்பட்ட பயங்கரவாத தாக்குதலை தொடர்ந்து இந்தியாவுக்கும் பாக்கிஸ்தானுக்கும் இடையில் போர் மேகம் சூழ்ந்துள்ளது.
இந்த பதற்றங்களின் எதிரொலியாக இலங்கையிலும் இருநாடுகளுக்கும் இடையில் இராஜதந்திர கருத்து மோதல்கள் மோலோங்கியுள்ளன. இலங்கையை பொறுத்த வரையில் இரு நாடுகளுடனுமே சிறந்த உறவுகளை கொண்டுள்ளது.
ஆனால் இரு நாடுகளுக்கு இடையிலான பதற்றங்களும் ஏற்பட கூடிய ஆயுத ரீதியிலான மோதல்களும், இலங்கைக்கும் பாதிப்பை ஏற்படுத்தும் என்பது புவிசார் அரசியல் ஆய்வாளர்களின் எச்சரிக்கைகளாக உள்ளது.
மறுபுறம் இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையில் மேற்கொள்ளப்பட்டுள்ள பாதுகாப்பு ஒப்பந்தம் குறித்தும் பல்வேறு சர்ச்சைகள் எழுந்துள்ளன.
இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான பாதுகாப்பு ஒத்துழைப்புகளில் கடல் பாதுகாப்பு முக்கியத்துவம் பெறுகிறது. இந்த நிலையிலிருந்து தான் இந்தியா இலங்கையுடன் புதிய பாதுகாப்பு புரிந்துணர்வு ஒப்பந்தத்தை முன்னெடுத்துள்ளது.
ஆனால் சீனா மற்றும் பாக்கிஸ்தான் போன்ற நாடுகளின் முக்கிய போர் கப்பல்கள் இலங்கை கடற்பரப்புக்குள் நுழைவதற்கு இந்த ஒப்பந்தம் தடையாக அமையலாம் என்பது பலரின் நிலைப்பாடாக உள்ளது.
இவ்வாறானதொரு நிலையில், அதாவது இந்திய பிரதமர் நரேந்திர மோடி இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டு, பாதுகாப்பு உள்ளிட்ட முக்கிய துறைகளில் ஒப்பந்தங்களை செய்து, மிக குறுகிய காலத்திற்குள் இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் மோதல்கள் ஏற்பட்டுள்ளன. இந்த மோதல்களின் எதிரொலியாக தற்போது இலங்கையிலும் இரு நாடுகளுக்கு இராஜதந்திர சொற்சமர் ஏற்பட்டுள்ளது.
கொழும்பில் அமைந்துள்ள பாகிஸ்தான் உயர்ஸ்தானிகரகத்திற்கு முன்பாக கடந்த வாரம் ஆர்ப்பாட்டம் ஒன்று இடம்பெற்றது.
இது குறித்து பாகிஸ்தான் உயர்ஸ்தானிகரகம் வெளியிட்ட அறிக்கையில், ஆர்ப்பாட்டத்திற்கு வந்த ப்பாவி மக்களை போராட்டத்தில் பங்கேற்கத் தூண்டியது மற்றும் நிதியுதவி செய்தது யார் என்பது இரகசியமான ஒரு விடயமல்ல என்றும், அங்கு வந்த அப்பாவி மக்களில் பெரும்பாலோருக்கு அவர்கள் எங்கே வந்தார்கள், எதற்காக வந்தார்கள் என்பது கூடத் தெரியாது. இந்த நடவடிக்கைகளைத் திட்டமிட்டு பிளவுகளை உருவாக்கும் சக்திகள், சமூகத்தின் நல்லிணக்கத்தைப் பற்றியோ அல்லது விதிகள் மற்றும் உள்நாட்டு சட்டங்களையோ மதிக்கவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளது.
அத்துடன் எந்தவொரு பொறுப்புள்ள நாட்டையும் போலவே பாகிஸ்தானும் ஏற்கனவே இந்திய சட்டவிரோத ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள பஹல்காமில் நடந்த சம்பவம் குறித்து சுயாதீன விசாரணையை கோரியுள்ள நிலையில், இந்தியாவின் எந்தவொரு தாக்குதலுக்கும் தகுந்த பதிலடி கொடுக்க தயாராக உள்ளதாகவும் கொழும்பில் உள்ள பாகிஸ்தான் உயர்ஸ்தானிகரகம் மேற்படி அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
இவ்வாறானதொரு சூழலிலேயே இலங்கையின் பாதுகாப்பு செயலாளர் எயார் வைஸ் மார்ஷல் சம்பத் தூயகொண்டா பாகிஸ்தானுக்கு விஜயம் மேற்கொண்டுள்ளார்.
ஆனால் இந்த விஜயத்திற்கு முன்பதாக பாகிஸ்தான் - இலங்கை படைகளுக்கு இடையில் முன்னெடுக்கப்படவிருந்த கூட்டு பயிற்சி நடவடிக்கை இந்தியாவின் அழுத்தத்தில் நிறுத்தப்பட்டதாக வெளிவிவகார அமைச்சின் முக்கியஸ்தர் ஒருவர் வீரகேசரிக்கு தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. நன்றி வீரகேசரி
காசாவுக்கு உதவிப்பொருட்களை ஏற்றிச் சென்ற கப்பல் மீது டிரோன் தாக்குதல்!
02 May, 2025 | 05:32 PM
காசாவுக்கு உதவிப்பொருட்களை ஏற்றிச் சென்ற கப்பல் மீது டிரோன் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக மோல்டா அரசு தெரிவித்துள்ளது.
மோல்டா அருகே டிரோன் தாக்குதலுக்குள்ளான இந்த கப்பலில் 12 ஊழியர்கள் மற்றும் நான்கு பொதுமக்கள் பயணித்துள்ளனர்.
அவர்களது உயிருக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லையென மோல்டா அரசு தெரிவித்துள்ளது. ஆனால் தாக்குதலுக்குள்ளான கப்பல் பயணத்தை தொடர முடியாமல் அதே இடத்தில் நிற்பதாகவும், அந்த கப்பல் மூழ்குவதற்கு வாய்ப்புள்ளதாகவும் சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
இதேவேளை, கடந்த 2010ஆம் ஆண்டு இதேபோன்று காசாவுக்கு உதவிப் பொருட்களை கொண்டு சென்ற துருக்கி கப்பல் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 9 பேர் கொல்லப்பட்டனர். இதன் காரணமாக இஸ்ரேல் - துருக்கி இடையிலான உறவில் விரிசல் ஏற்பட்டமை குறிப்பிடத்தக்கது. நன்றி வீரகேசரி
01 May, 2025 | 11:10 AM
இந்தியா 1.5 பில்லியன் மக்கள் வசிக்கும் நாடாக இருப்பதால், குழப்பமடைவதற்குப் பதிலாக பொறுப்புடன் செயல்பட வேண்டும். அமைதியே எங்கள் முன்னுரிமை. ஆனால், அதை கோழைத்தனம் என்று தவறாகக் கருதக்கூடாது. எந்தவொரு இந்திய ஆக்கிரமிப்புக்கும் தகுந்த பதிலடி கொடுக்கும் முழு திறனையும் பாகிஸ்தான் கொண்டுள்ளது என்று பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் தெரிவித்துள்ளார்.
ஊழல் வழக்கில் சிறை தண்டனை அனுபவித்து வரும் இம்ரான் கான் தனது எக்ஸ் பக்கத்தில் பஹல்காம் தாக்குதல் குறித்து வெளியிட்டுள்ள பதிவில் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது:
பஹல்காம் சம்பவத்தில் ஏற்பட்ட உயிரிழப்பு மிகவும் கவலையளிக்கிறது. பாதிக்கப்பட்டவர்களுக்கும் அவர்களது குடும்பத்தினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
புல்வாமா சம்பவம் நடந்தபோது, நாங்கள் இந்தியாவுக்கு சாத்தியமான அனைத்து ஆதரவையும் வழங்கினோம். ஆனால், இந்தியா எந்த உறுதியான ஆதாரத்தையும் வழங்கத் தவறிவிட்டது.
2019இல் நான் கணித்தது போல, பஹல்காம் சம்பவத்துக்குப் பிறகும் அதேதான் நடக்கிறது. சுயபரிசோதனை மற்றும் விசாரணைக்கு பதிலாக, இந்திய அரசாங்கம் மீண்டும் பாகிஸ்தானைக் குறை கூறுகிறது.
நவாஸ் ஷெரீப் மற்றும் ஆசிப் சர்தாரி போன்ற சுயநலவாதிகளிடமிருந்து எந்தவிதமான கடுமையான நிலைப்பாட்டையும் எதிர்பார்ப்பது முட்டாள்தனம். அவர்களின் சட்டவிரோத சொத்து மற்றும் வணிக நலன்கள் வெளிநாட்டில் இருப்பதால் அவர்கள் ஒருபோதும் இந்தியாவுக்கு எதிராகப் பேச மாட்டார்கள்.
1.5 பில்லியன் மக்கள் வசிக்கும் நாடாக இந்தியா இருப்பதால், குழப்பமடைவதற்குப் பதிலாக பொறுப்புடன் செயல்பட வேண்டும். அமைதியே எங்கள் முன்னுரிமை. ஆனால், அதை கோழைத்தனம் என்று தவறாகக் கருதக்கூடாது.
2019ஆம் ஆண்டில், முழு நாட்டின் ஆதரவுடன் எனது அரசாங்கம் செய்தது போல், எந்தவொரு இந்திய ஆக்கிரமிப்புக்கும் தகுந்த பதிலடி கொடுக்கும் முழு திறனையும் பாகிஸ்தான் கொண்டுள்ளது. ஐ.நா. தீர்மானங்களால் உத்தரவாதம் அளிக்கப்பட்டபடி, காஷ்மீரிகளின் சுயநிர்ணய உரிமையின் முக்கியத்துவத்தை நான் எப்போதும் வலியுறுத்தி வருகிறேன்.
ஆர்.எஸ்.எஸ். சித்தாந்தத்தால் இந்தியா இந்த பிராந்தியத்துக்கு மட்டுமல்ல, அதற்கு அப்பாலும் கடுமையான அச்சுறுத்தலாக உள்ளது. சட்டப்பிரிவு 370வது பிரிவு நீக்கப்பட்ட பிறகு, காஷ்மீரில் இந்திய ஒடுக்குமுறை இன்னும் அதிகரித்துள்ளது. இது காஷ்மீர் மக்களின் சுதந்திரத்துக்கான விருப்பத்தை மேலும் அதிகரித்துள்ளது.
இந்திய அரசாங்கத்தின் போர் வெறியையும், பிராந்திய அமைதிக்கு அச்சுறுத்தலாக இருக்கும் ஆபத்தான இலட்சியங்களையும் பாகிஸ்தான் ஒரு நாடாக வன்மையாக கண்டிக்கிறது என்று தெரிவித்துள்ளார். நன்றி வீரகேசரி
பாகிஸ்தானுக்கு சொந்தமான அனைத்து விமானங்களும் இந்திய வான் பரப்பிற்குள் நுழையத் தடை !
01 May, 2025 | 08:46 AM
பாகிஸ்தானுக்கு சொந்தமான மற்றும் பாகிஸ்தான் நிறுவனங்களால் இயக்கப்படும் அனைத்து விமானங்களும் தனது வான் பரப்பிற்குள் நுழைய இந்திய அரசாங்கம் தடை விதித்துள்ளது.
ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் பயங்கரவாதிகள் மேற்கொண்ட தாக்குதலில் 28 பேர் கொல்லப்பட்டனர். இதையடுத்து, பாகிஸ்தானுக்கு எதிராக பல அதிரடி நடவடிக்கைகளை இந்திய மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது.
இந்நிலையில், பாகிஸ்தான் விமானங்கள் இந்திய வான்வெளியை பயன்படுத்த தடை விதித்து இந்திய மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
புதிய நடவடிக்கையாக பாகிஸ்தான் விமான நிறுவனங்களின் விமானங்களுக்கு இந்தியா தனது வான்வழியை மூடியது.
பாகிஸ்தானில் பதிவுசெய்யப்பட்ட விமானங்களுக்கும், பாகிஸ்தான் விமான நிறுவனங்கள் மற்றும் நிறுவனங்களால் இயக்கப்படும், சொந்தமான அல்லது குத்தகைக்கு விடப்பட்ட விமானங்களுக்கும் இந்திய வான்வெளி மூடப்பட்டுள்ளது. இந்தத் தடை பாகிஸ்தான் இராணுவ விமானங்களுக்கும் பொருந்தும்.
இந்தியா - பாகிஸ்தானிடையே நேரடி விமான சேவைகள் இல்லை. சிங்கப்பூர், மலேசியா மற்றும் பிற கிழக்கு ஆசிய நாடுகளுக்கான விமானங்களுக்கு பாகிஸ்தான் விமான நிறுவனங்கள் இந்திய வான்வெளியைப் பயன்படுத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது. நன்றி வீரகேசரி
No comments:
Post a Comment