தாய் எட்டடி பாய்ந்தால்
குட்டி பதினாறடி பாயும்என்பது ஒரு பழமொழி
அனுபவம் தந்த மொழி
இவன் தந்தை என்னோற்றான்
கொல்லெனுஞ் சொல் என்பது
வந்தது எப்படி எனக் கேட்பின்
அது குறள்வழியாய் கேட்ட மொழி
ராமன் வாழ்ந்ததோ தனிவழி
ஒருவனுக்கு ஒருத்தி என்ற வழி
அவன் தந்தை சென்றிடாத வழி
மந்திரமாக ஏற்க முடியாத வழி
மக்கள் சந்தேகப் பட்டதாலே
சீதையை தீயில் இறங்க வைத்து
மாயமாய் சீதை மறைந்தது எவ்வழி
அது துளசிதாசர் சொன்ன மாயவழி
கைபற்றி சிறை எடுத்ததாக வான்மீகி
பூமியோடு பெயர்த்தெடுத்ததாக கம்பன்
மாயத்தை சிறையெடுத்ததாக துளசிதாசன்
யாரைத்தான் நம்புவதோ பேதை நெஞ்சம்!
-சங்கர சுப்பிரமணியன்.
No comments:
Post a Comment