செம்மணி மனிதப் புதைகுழி அகழ்வாய்வுப் பணிகளுக்காகக் கோரப்பட்ட நிதி அங்கீகரிக்கப்படவில்லை! - பணிகள் முடக்கம்
மஹிந்த ராஜபக்ஷவின் பிரதான பாதுகாப்பு அதிகாரி நெவிலுக்கு விளக்கமறியல்!
"யாழ்ப்பாணத்தில் ஆழமான வேர்களைக் கொண்ட சமாதானத்துக்கான மதங்களின் பயணம்"
மட்டு. ராமகிருஷ்ண மிஷன் பள்ளியில் முகாமிட்டிருந்த இராணுவ முகாம் அகற்றம் ; கல்வி செயல்பாட்டிற்கு இடமளிக்கப்பட்டுள்ளது
"புதிதாய் எதுவும் வேண்டாம் பறித்ததை தா" - வவுனியா பல்கலைக்கழகத்தின் முன்பாக ஆர்ப்பாட்டம்
செம்மணி மனிதப் புதைகுழி அகழ்வாய்வுப் பணிகளுக்காகக் கோரப்பட்ட நிதி அங்கீகரிக்கப்படவில்லை! - பணிகள் முடக்கம்
02 Oct, 2025 | 05:26 PM
சிறுவர்களது எலும்புக்கூடுகள் உட்பட 240 மனித எலும்புக்கூடுகள் கண்டறியப்பட்டுள்ள, இலங்கையில் இரண்டாவது பெரிய மனித புதைகுழியில் மேலும் இரண்டு மாதங்களுக்கு அகழ்வாய்வுகளை மேற்கொள்வதற்காக கோரப்பட்ட நிதி அங்கீகரிக்கப்படாததால் பணிகள் முடங்கியுள்ளன.
கோரப்பட்ட நிதி இன்னும் நீதி அமைச்சினால் அங்கீகரிக்கப்படவில்லை என யாழ்ப்பாணம் செம்மணி சித்துப்பாத்தி இந்து மயான மனித புதைகுழி தொடர்பான வழக்கு நேற்றைய தினம் (01) யாழ்ப்பாண நீதவான் செல்வநாயகம் லெனின்குமார் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டதன் பின்னர், பாதிக்கப்பட்டவர்களின் சார்பாக முன்னிலையான சட்டத்தரணி கே. சுபாகர் ஊடகங்களுக்கு இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் கூறுகையில்,
"அகழ்வாய்வு பணிக்கான பாதீடு அமைச்சிற்கு அனுப்பப்பட்டு ஒப்புதல் கோரப்பட்டது. எனினும், பாதீடு இன்னும் அங்கீகரிக்கப்படாமையால் வழக்கு ஒக்டோபர் 13ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டது."
எட்டு வார காலத்திற்கு அகழ்வாய்வுப் பணிக்காக தயாரிக்கப்பட்ட நிதி மதிப்பீடு, யாழ்ப்பாண சட்ட வைத்திய அதிகாரி செல்லையா பிரணவனால் செப்டெம்பர் 18, 2025 அன்று நீதவான் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.
அந்த மதிப்பீட்டில் கோரப்பட்ட நிதியின் அளவு இன்னும் ஊடகங்களுக்கு வெளியிடப்படவில்லை.
தற்போதைய அகழ்வாய்வுப் பகுதிக்கு வெளியே மனித எலும்புகள் இன்னும் இருக்கலாம் என்பதற்கான புவியியல் ஆய்வின் மூலம் சான்றுகள் தெரியவந்துள்ளதால், அகழ்வாய்வுப் பணியைத் தொடர எட்டு வார கால நீட்டிப்பு கோரப்பட்டுள்ளதாக, ஒகஸ்ட் 14ஆம் திகதி யாழ்ப்பாணம் நீதவானிடம் சட்ட வைத்திய அதிகாரி சமர்ப்பித்த அறிக்கையை மேற்கோள் காட்டி, உள்ளூர் ஊடகவியலாளர்கள் குறிப்பிடுகின்றனர்.
சட்ட வைத்திய அதிகாரியின் கோரிக்கை முன்வைக்கப்பட்டு இரண்டு வாரங்களின் பின்னர், செம்மணிப் புதைகுழி தொடர்பான விசாரணைகள் தடைபடாமல் இருக்க நிதி உதவியை வழங்குமாறு இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு அரசாங்கத்திற்கு பரிந்துரைத்திருந்தது.
"நிதி தாமதமின்றி கிடைப்பதை உறுதி செய்வதற்காக, பாதீட்டு கோரிக்கைகளை விரைவாக செயல்படுத்தவும், நிதி ஒதுக்கீடுகள் மற்றும் வழங்கல்களை விரைவாக செயல்படுத்தவும், காணாமல் போனோர் அலுவலகம் உட்பட செம்மணிப் புதைகுழி விசாரணையில் ஈடுபட்டுள்ள அனைத்து அரச அதிகாரிகளுடனும் நெருக்கமாகப் பணியாற்றவும் நீதி அமைச்சின் ஒரு மத்திய அதிகாரி நியமிக்கப்பட வேண்டும்" என ஆணைக்குழு ஒரு அறிக்கையில் கூறியிருந்தது. அந்த பரிந்துரைகள் செயற்படுத்தப்பட்டதா என்பது தெரியவில்லை.
முன்னர் அங்கீகரிக்கப்பட்ட நிதியுடன் 45 நாட்கள் நடத்தப்பட்ட இரண்டாம் கட்ட அகழ்வாய்வு, செப்டெம்பர் 6, 2025 அன்று பிற்பகல் நிறைவடைந்த நேரத்தில், 240 மனித எலும்புக்கூடுகளில் ஒன்றைத் தவிர ஏனைய அனைத்தும் புதைகுழியிலிருந்து அகழ்ந்து எடுக்கப்பட்டிருந்தன.
மனித எலும்புகளுடன், செம்மணி புதைகுழியில் இருந்து இதுவரை மீட்கப்பட்ட பிற பொருட்களில் குழந்தை பால் போத்தல், பொம்மை, சிறுவர் காலணிகள் மற்றும் பாடசாலை பைகள் ஆகியவை உள்ளடங்கும்.
பெப்ரவரி 11, 2025 அன்று மயானத்தில் கட்டுமானப் பணிகளை மேற்கொண்டிருந்தபோது, தற்செயலாக பல மனித எலும்புகள் கண்டெடுக்கப்பட்டன.
எலும்புத் துண்டுகளை பரிசோதிப்பதற்காக யாழ்ப்பாண சட்ட வைத்திய அதிகாரி செல்லையா பிரணவனுடன் வருகைதந்த அப்போதைய நீதிபதி ஏ.ஏ. ஆனந்தராஜா, அவை மனித எச்சங்களா என்பது குறித்து விசாரணை நடத்துவதற்காக சட்ட வைத்திய அதிகாரியிடம் ஒப்படைக்க பெப்ரவரி 20 அன்று பொலிஸாருக்கு உத்தரவிட்டார்.
நீதிமன்ற உத்தரவிற்கு அமைய, தடயவியல் தொல்பொருள் ஆய்வாளர் பேராசிரியர் ராஜ் சோமதேவ மற்றும் யாழ்ப்பாண சட்ட வைத்திய அதிகாரி செல்லையா பிரணவன் ஆகியோரின் வழிகாட்டுதலின் கீழ், மே 15, 2025 அன்று செம்மணி சித்துப்பாத்தி மயானத்தில் அகழ்வாய்வுப் பணிகள் ஆரம்பமாகின. நன்றி வீரகேசரி
மஹிந்த ராஜபக்ஷவின் பிரதான பாதுகாப்பு அதிகாரி நெவிலுக்கு விளக்கமறியல்!
02 Oct, 2025 | 05:15 PM
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பிரதான பாதுகாப்பு அதிகாரி நெவில் வன்னியாராச்சியை எதிர்வரும் 17 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் இன்று வியாழக்கிழமை (02) பிற்பகல் உத்தரவிட்டுள்ளது.
கைதுசெய்யப்பட்ட நெவில் வன்னியாராச்சி கொழும்பு நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
நெவில் வன்னியாராச்சி சட்டவிரோத சொத்து சேர்ப்பு தொடர்பான விசாரணை தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காக இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் இன்று முன்னிலையாகிய போதே இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது. நன்றி வீரகேசரி
"யாழ்ப்பாணத்தில் ஆழமான வேர்களைக் கொண்ட சமாதானத்துக்கான மதங்களின் பயணம்"
01 Oct, 2025 | 03:34 PM
' தேசிய ஒற்றுமையை நோக்கி எம்மை வழிநடத்தும் சமய
விழுமியங்கள்' என்ற தொனிப்பொருளில் எதிர்வரும் சனிக்கிழமை (4/10) காலை யாழ்ப்பாணம் திருவள்ளுவர் கலாசார மண்டபத்தில் யாழ்ப்பாண மாவட்ட சர்வமத பேரவையினால் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும் சர்வமத மகாநாட்டுக்கு வாழ்த்துச் செய்தியை அனுப்பியிருக்கும் தேசிய சமாதானப் பேரவையின் நிறைவேற்றுப் பணிப்பாளர் கலாநிதி ஜெகான் பெரேரா சமாதானத்துக்கான மதங்களின் பயணம் யாழ்ப்பாணத்தில் ஆழமான வேர்களைக் கொண்டது என்று குறிப்பிட்டிருக்கிறார்.
அவர் அந்த செய்தியில் கூறியிருப்பதாவது ;
யாழ்ப்பாணத்தில் சமாதானத்துக்கான மதங்களின் பயணம் ஆழமான வேர்களைக் கொண்டது. போர் முடிவுக்கு வருவதற்கு நீண்டகாலம் முன்னதாகவே பல்வேறு மதங்களையும் சேர்ந்த துணிச்சல்மிகு ஆண்களும் பெண்களும் பிளவுக்கு மேலாக பேச்சுவார்த்தையை விரும்பினார்கள். அந்த இலட்சியத்தில் சமாதானத்துக்கான மதங்களின் உலக மகாநாடு, சேவா லங்கா பவுண்டேசன், சமாதானத்தைக் கட்டியெழுப்புதல் மற்றும் நல்லிணக்கத்துக்கான நிலையம் மற்றும் தேசிய சமாதானப் பேரவை போன்ற அமைப்புகள் ஒன்றிணைந்து நின்றன. போர் இருளுக்குள் ஒரு ஔியாக விளக்கிய அவர்களின் பணிகள் சிதறுப்பட்டுப்போன சமூகங்கள் என்றாவது ஒருநாள் இணக்கத்துடன் வாழும் என்ற நம்பிக்கையையும் எதிர்பார்ப்பையும் உயர்த்துடிப்புடன் வைத்திருந்தன.
இந்த முயற்சிகளின் மையமாக தங்களது சமூகத்தில் தார்மீக அதிகாரத்தைக் கொண்டவர்களாக விளங்கும் மதத் தலைவர்கள் இருந்தார்கள். அவர்கள் மத்தியில் தற்போது மதங்களுக்கு இடையிலான குழுவின் யாழ்ப்பாண மாவட்ட தலைவரான கிருபானந்த குருக்கள் உறுதியான தலைமைத்துவத்தை வழங்கினார்.
சமாதானச் சுடரை வன்முறைகள் அணைத்துவிடும் அச்சுறுத்தல் நிலவியபோது அவர் மற்றையவர்களுடன் சேர்ந்து அதை தொடர்ந்து ஔிரவைத்துக் கொண்டிருந்தார். பயங்கரமான போர் வருடங்களிலும் அதைத் தொடர்ந்துவந்த நம்பிக்கைகள் நிறைவேறாத வருடங்களிலும் அவர்களது முன்மாதிரியான செயற்பாடுகள் சமாதானத்துக்கான பாதை பலவீனமான ஒன்று அல்ல, வலிமையையும் தார்மீகத் துணிச்சலையும் கொண்டதே என்று எமக்கு போதிக்கின்றன.
தேசிய சமாதானப் பேரவை 2010 ஆம் ஆண்டு முதல் மதங்களுக்கு இடையிலான மாவட்டக் குழுக்களை ஆதரிக்கத் தொடங்கியது. இலங்கை பூராவும் இந்த அமைப்புக்கள் பேச்சுவார்த்தைகள் இடம்பெறக்கூடிய, மக்களின் மனக்குறைகைளை கேட்டு அறிகின்ற, இன, மத எல்லைகளுக்கு அப்பால் சமூகங்கள் ஒன்றுசேர்ந்து பணியாற்றக்கூடிய நம்பிக்கைக்குரிய இடங்களாக வளர்ந்திருக்கின்றன.
நம்பிக்கை, சகல தரப்புகளையும் அரவணைக்கும் மனப்பான்மை, நேர்மை மற்றும் மனித கௌரவத்துக்கான மதிப்பு ஆகிய விழுமியங்களை இந்த அமைப்புக்கள் உருவகித்து நிற்கின்றன. நல்லிணக்கம் என்பது போரை முடிவுக்கு கொணடுவருவதை பற்றியது மாத்திரமல்ல, ஒவ்வொரு குடிமகனும் தாங்களை சமத்துவமாக மதிக்கப்படுவதாக உணருகின்ற ஒரு உறவுமுறையை உருவாக்குவதை பற்றியதும் கூட என்பதை இந்த அமைப்புகள் காண்பித்திருக்கின்றன.
இன்றும் கூட போரின் வடுக்கள் குணப்படுத்தப்படாமல் தொடருகின்றன. காணாமல்போன தங்களது அன்புக்குரியவர்களுக்கு என்ன நேர்ந்தது என்பதற்கு குடும்பங்கள் பதிலுக்காக காத்திருக்கின்றன. செம்மணி போன்ற பாரிய மனிதப்புதை குழிகள் கவனிக்கப்படாத வேதனைகளை எமக்கு நினைவூட்டிக் கொண்டிருக்கின்றன. நில உரிமைகள் தொடர்பிலான சர்ச்சைகள் தொடருகின்றன.
மாகாண சுய ஆட்சிமுறை பற்றிய உறுதிமொழி நிறைவேற்றப்படாமல் இருக்கிறது. அவ்வாறு இருந்தாலும், சவால்களுக்கு மத்தியில் மதங்களுக்கு இடையிலான மாவட்டக் குழுக்களும் அவற்றின் தலைவர்களும் நம்பிக்கையின் சின்னமாக விளங்குகிறார்கள். ஒன்றிணைந்து நிற்பதன் மூலம் அவர்கள் பயமின்றி உண்மையைப் பேச முடியும் என்பதையும் வேற்றுமைகளை இல்லாமல் செய்யமுடியும் என்பதையும் பல்வகைமையில் இருந்து ஐக்கியத்தை ஏற்படுத்த முடியும் என்பதையும் எமக்கு அவர்கள் காண்பிக்கிறார்கள்.
அவர்களில் சிலரின் பெயய்களை குறிப்பிட வேண்டியது அவசியமாகும். மதத் தலைவர்கள் மத்தியில் மகாலிங்க சிவக்குருக்கள், வாசுதேவக் குருக்கள், வண. சிறிவிமல தேரர், அசீஸ் மௌலவி, றஹீம் மௌலவி, வணபிதா ஜெயக்குமார், வணபிதா டிக்சன் மற்றும் வணபிதா வின்சென்ற் பட்ரிக் ஆகியோர் தொடர்ச்சியாக தங்களது பங்களிப்பைச் செய்து கொண்டிருக்கிறார்கள். மதத்தலைவர்கள் அல்லாத சாதாரண மக்கள் மத்தியில் ஜயந்த செனவிரத்ன, ஹர்ஷ குமார நவரத்ன, சிரோமி ஸ்றீபன் மற்றும் எஸ். செந்துராஜாஆகியோர் மதங்களுக்கு இடையிலான பணிகளுக்கு வளமூட்டியிருக்கிறார்களன. பல்வேறு வழிகளில் அவர்கள் எல்லோரும் இன்று நிலவுகின்ற மேம்பட்ட சூழ்நிலை உருலாகுவதற்கு பங்களிப்பைச் செய்திருக்கிறார்கள். ஆனால், அந்த பணிகளை மேற்கொண்டு முன்னெடுக்க வேண்டியது அவசியமாகும்.
இந்திய அரசாங்கத்திடமிருந்து கிடைக்கப்பெற்ற ஒரு நட்புறவுக்கொடையான யாழ்ப்பாணம் கலாசார நிலையத்தில் நாம் கூடும்போது எல்லைகளுக்கு அப்பாலும் சமூகங்களுக்கு அப்பாலும் ஒருமைப்பாட்டினால் ஊட்டிவளர்க்கப்படுவதே சமாதானம் என்பது எமக்கு நினைவு படுத்தப்படுகிறது.
தேசிய சமாதானப் பேரவை எங்களது பங்காளியுடன் (SOND ) ஒன்றிணைந்து மதத்தலைவர்களுடனும் யாழ்ப்பாண மக்களுடனும் தொடர்ந்து பணியாற்றுவதற்கு உறுதிபூணுகிறது. நீதி நிலைநாட்டப்படும் தினத்தை, நல்லிணக்கம் நிறைவு செய்யப்படும் தினத்தை, நாங்கள் எல்லோரும் இந்த மண்ணுக்குச் சொந்தமான சமத்துவமான பிள்ளைகள் என்று இலங்கையின் ஒவ்வொரு சமூகத்தவரும் நம்பிக்கையுடன் சொல்லக்கூடிய தினத்தை காண்பதற்கு ஆவலுடன் இருக்கிறோம். நன்றி வீரகேசரி
மட்டு. ராமகிருஷ்ண மிஷன் பள்ளியில் முகாமிட்டிருந்த இராணுவ முகாம் அகற்றம் ; கல்வி செயல்பாட்டிற்கு இடமளிக்கப்பட்டுள்ளது
Published By: Vishnu
30 Sep, 2025 | 10:22 PM
இது தொடர்பான உத்தியோக பூர்வ
நிகழ்வு செவ்வாய்க்கிழமை (30) முறக்கொட்டான்சேனை இராமகிருஷ்ண மிஷன் வித்தியாலய இராணுவ முகாமில் நடைபெற்றது.
இராணுவத்தினரினால் ஏற்பாடு செய்யப்பட்ட குறித்த நிகழ்வில் கைத்தொழில் மற்றும் தொழில் முயற்சியாண்மை அபிவிருத்தி அமைச்சர் சுனில்ஹந்துனித்தி கலந்து கொண்டார்.
இதன்போது இராமகிருஷ்ணமிஷன் வித்தியாலய வளாகமானது அமைச்சர் சுனில்ஹந்துனித்தியினால் அரசாங்க அதிபர் ஜே.எஸ்.அருள்ராஜ் முன்னிலையில் கிரான் பிரதேச செயலாளர் கே.சித்திரவேலிடம் உத்தியோக பூர்வமாக கையளிக்கப்பட்டது.
இதன்போது கிழக்கு மாகாண கட்டளை தளபதி மேஜர் ஜெனரல் ஜனக்க பல்லேகும்ர கிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளர் எஸ்.ஆர்.ஹசந்தி மற்றும் கல்குடா வலய கல்விப்பணிப்பாளர் ரி.அனந்தரூபன் ஆகியோரும் பங்குபற்றியிருந்தனர்.இப்பாடசாலையில் காணப்படும் பல்வேறு குறைபாடுகள் நிவர்த்தி
செய்ததன் பின்னர் கல்வி அமைச்சின் அறிவுறுத்தலின்படி அனுமதி கிடைக்கப்பெற்றதன் பின்னர் பாடசாலை மீண்டும் இயங்குவதற்குரிய நடவடிக்கை எடுக்கப்படும் என குறித்த பாடசாலையின் அதிபர் கருத்து தெரிவித்தார்.
1990 ஆம் அண்டு காலப் பகுதியில் இப்பாடசலை கட்டடத்தில் இராணுவ முகாம் நிலைகொண்டிருந்தமையை தொடர்ந்து அப்பாடசாலையானது வேறு ஒரு இடத்திற்கு மாற்றப்பட்டு இயங்கி கொண்டிருந்தது.இதனால் மாணவர்கள் தங்களது கல்வியை பின் தொடர்வதற்கு போதிய இட வசதியோ விளையாட்டு மைதானமோ இன்றி பெரும் சிரமப்பட்டு வந்தனர்.
வடக்-கிழக்கு மாகாணங்களில் இராணுவ முகாம்களின் எண்ணிக்கையை மடடு:ப்படுத்தும் நோக்கில் அரசாங்கம் எடுத்த அமைச்சரவை தீர்மானத்தின் பிரகாரம் இந்த பாடசாலை கட்டத்தில் நிலை கொண்டிருந்த இராணுவ முகாம் அகற்றப்ப்ட்டதாக கூறப்படுகிறது.இவ் முகாமை அகற்றி பாடசாலை கட்டடத்தை மீள ஒப்படைக்குமாறு கடந்த காலத்தில் பொதுமக்கள் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.
தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களும் குரல் எழப்பி வந்தனர்.இ;ன்றைய நிகழ்வில் கையளிப்பு தொடர்பாக கலந்து கொண்ட அமைச்சர் கருத்து தெரிவிக்கையில் இன்று முதற் கட்டமாக இவ் இராணுவ முகாம் அகற்றப்பட்டுள்ளது என்றும் மட்டக்களப்பு மாவட்டத்தில் நிலை கொண்டுள்ள மேலும் ஒரு சில இராணுவ முகாம்கள் கட்டம் கட்டமாக அகற்றப்படும் என கருத்து தெரிவித்தார். நன்றி வீரகேசரி
"புதிதாய் எதுவும் வேண்டாம் பறித்ததை தா" - வவுனியா பல்கலைக்கழகத்தின் முன்பாக ஆர்ப்பாட்டம்
30 Sep, 2025 | 05:22 PM
வவுனியா பல்கலைக்கழக ஆசிரியர் சம்மேளனத்தினால் பல்கலைக்கழக வாயிலிற்கு முன்பாக ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டிருந்தது.
பல்கலைக்கழக கட்டமைப்பில் உள்ள குறைபாடுகளை நிவர்த்தி செய்ய அரசாங்கம் நடவடிக்கை எடுக்க தவறியுள்ளதாக தெரிவித்து, நாடளாவிய ரீதியில் அரச பல்கலைக்கழகளக ஆசிரியர் சம்மேளனத்தால் முன்னெடுக்கப்பட்டு வரும் அடையாள பணிபகிஸ்கரிப்புக்கு ஆதரவு தெரிவிக்கும் முகமாக குறித்த ஆர்ப்பாட்டமானது முன்னெடுக்கப்பட்டிருந்தது.
இதன்போது மூளை இழப்பு மூலதன இழப்பு, புதிதாய் எதுவும் வேண்டாம் பறித்ததை தா, தேவையான வெற்றிடங்களை நிரப்பு, உயர் கல்வி இன்றேல் உயர்ச்சி இல்லை போன்ற வாசகங்கள் எழுதிய பதாகையை தாங்கியவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். நன்றி வீரகேசரி
No comments:
Post a Comment