மேலும் சில பக்கங்கள்

தமிழ் முரசு வாரம் ஒருமுறை திங்கட் கிழமைகளில்

 தமிழ் முரசு வாரம் ஒருமுறை திங்கட் கிழமைகளில் மலரும் என்பதை வாசகர்களுக்கு அறியத்தருகின்றோம். மரண அறிவித்தல்கள், பிறந்தநாள் வாழ்த்துக்கள், விளம்பரங்கள் போன்றவைகளை  அனுப்பி வைத்தால் இலவசமாக பிரசுரிக்கப்படும். ஆசிரியர் குழு

அன்றும் இன்றும் -- ( தொடர்ச்சி)

 


கலாநிதி  பாரதி இளமுருகனார்

   (வாழ்நாள் சாதனையாளர்)






வையகத்தில் உயர்ந்ததொரு நாகரிகந் தன்னை

      வளர்த்ததுடன் வரையறையும் செய்தான் தமிழன்!

ஐயமின்றி நம்பிவாழ்ந்தான்! பயனும் பெற்றான்!

      அவசியமென் றேநல்ல விழுமி யங்கள்        

மெய்யாக வழிவழியாய்த் தெடர வைத்தான்!        

      விரும்பாத சிலரின்று அவற்றை மறந்து

பொய்வாழ்க்கை வாழ்கின்றார்! மனதை மாற்றிப்

     புரியவைத்துப்  புடஞ்செய்ய  எவரால் முடியும்?

 

 

;புலம்பெயர் நாட்டிலே  கூட்டுக் குடும்ப வாழ்க்கையைக் கைவிட்டோர் பலர்! 

 

பண்பாட்டுச் சிறப்புடனே அன்று வாழ்ந்த

   பரந்தமனம் கொண்டுயர்ந்த தமிழன் வாழ்க்கை

கண்பட்டு விட்டதுவோ? காலப் போக்கில்

   கலைந்திட்ட கூடுவிட்ட  தேனீக் கள்போல்

மண்விட்டுப் புலம்பெயர்ந்த ஈழத் தமிழர்

   மாறிவிட்ட கலாசாரக் கலப்பிற் குள்ளே

எண்பட்ட தாற்றானோ கூட்டுக் குடும்பம்

   எப்படியோ அருகிடுதே! அதுவே உண்மை!

ஏதும் அறியாதோரடி எம்பாவாய்!


-சங்கர சுப்பிரமணியன்.





அப்பனே என்னைக் காப்பாற்றென
வேண்டினான் ஒருவன் அக்கறையாய்
கம்பிக் கதவுக்குள்ளே இருந்தவனோ
வேலவன் அண்ணன் வேழமுகத்தான்

பூட்டிய கதவுக்குள் அவனிருக்க
அங்கே வந்தான் மற்றொருவன்
அவரே பூட்டப்பட்டு இருக்கிறாரே
எப்படி காப்பாற்றுவார் என்றான்

ஆற்றங்கரை குளத்தங்கரைகளில்
அரசமரத்தடியில் அமர்ந்திருப்பார்
பூட்டப்படாமல் அங்கு வீற்றிருப்பார்
உதவிடுவார் அங்கு செல் என்றான்

156 ஆவது ஜனனதினமும் காந்தியின் இலங்கை விஜயத்தின் நூற்றாண்டை நெருங்கும் நினைவுகளும் !

 

02 Oct, 2025 | 11:10 AM


தொகுப்பு - வீ. பிரியதர்சன்

இந்திய தேசத்தின் பிதாமகர் மகாத்மா காந்தி இலங்கைக்கு வருகை தந்து, 2027 ஆம் ஆண்டுடன் நூற்றாண்டை நெருங்குகிறது. பிரித்தானிய ஆதிக்கத்திற்கு எதிராக இந்தியாவும் இலங்கையும் தமது கைகளை உயர்த்திக் கொண்டிருந்த ஒரு காலகட்டத்தில், தேசத்தின் விடுதலைக்கும் மக்கள் ஒற்றுமைக்கும் ஊக்கமளிக்கும் ஒரு வரலாற்றுப் பயணமாக அது அமைந்தது.

வரலாற்றுப் பயணம் 

மகாத்மா காந்தியின் வருகை பற்றிய செய்திகள் அவர் வருவதற்கு முன்பே இலங்கையின் பத்திரிகைகளில் வெளியாகி, நாடு முழுவதும் பரவியிருந்தன. 1927 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 12 ஆம் திகதி (சனிக்கிழமை), மோகந்தாஸ் கரம்சந்த் காந்தி எனப்படும் மகாத்மா காந்தி, தனது மனைவி கஸ்தூரிபாயுடனும் தனது செயலாளர்களுடனும் கொழும்பை வந்தடைந்தார்.




இலங்கையின் சுதந்திரப் போராட்ட வீரர்களான சார்லஸ் எட்கர் கொரியா மற்றும் அவரது சகோதரர் விக்டர் கொரியா ஆகியோரின் அழைப்பின் பேரிலேயே காந்தி இந்த வரலாற்றுச் சுற்றுப்பயணத்தை இலங்கைக்கு மேற்கொண்டார். இலங்கையின் சுதந்திரப் போராட்ட வீரர்கள் இந்திய சுதந்திரப் போராட்ட வீரர்களுடன் ஆழமான தொடர்புகளைப் பேணியிருந்தனர். காந்தியுடன், பிற்காலத்தில் இந்தியாவின் கவர்னர் ஜெனரலாகப் பதவி வகித்தவரும், தமிழில் பல நூல்களை எழுதியவருமான ராஜாஜி எனப்படும் சக்கரவர்த்தி ராஜகோபாலாச்சாரி மற்றும் காந்தியின் செயலாளர்களான மஹாதேவ் தேசாய் மற்றும் ப்யாரேலால் ஆகியோரும் வந்திருந்தனர்.

மூன்று வாரங்களில் தரிசனம்

யாரைத்தான் நம்மவதோ பேதை நெஞ்சம்!

தாய் எட்டடி பாய்ந்தால்

குட்டி பதினாறடி பாயும்
என்பது ஒரு பழமொழி
அனுபவம் தந்த மொழி

இவன் தந்தை என்னோற்றான்
கொல்லெனுஞ் சொல் என்பது
வந்தது எப்படி எனக் கேட்பின்
அது குறள்வழியாய் கேட்ட மொழி

ராமன் வாழ்ந்ததோ தனிவழி
ஒருவனுக்கு ஒருத்தி என்ற வழி
அவன் தந்தை சென்றிடாத வழி
மந்திரமாக ஏற்க முடியாத வழி

மக்கள் சந்தேகப் பட்டதாலே
சீதையை தீயில் இறங்க வைத்து
மாயமாய் சீதை மறைந்தது எவ்வழி
அது துளசிதாசர் சொன்ன மாயவழி

‘பரீட்சை’ - சிறுகதை - கே.எஸ்.சுதாகர்

 

விடிந்தால் பரீட்சை.

ஹிட்லர்
போர்க்களம் போவதற்கு முன்னர் என்ன செய்து கொண்டிருந்தான்? 16ஆம் உலூயி மன்னனின் 32வது மனைவி பெயர் என்ன? எலிசபெத் மகாராணியார் தனது 82வது பிறந்ததினக் கொண்டாட்டத்தின்போது என்ன கலர் மூக்குத்தி அணிந்திருந்தார்? – என்பவற்றையெல்லாம் நினைவுபடுத்துவதில் பிரயத்தனப் பட்டுக் கொண்டிருந்தான் சரவணன்.

இந்த நேரம் பார்த்து கோவிந்தர் ஹொஸ்பிட்டலில் போய் படுத்துக் கொண்டுவிட்டார். கோவிந்தர், சரவணனின் அம்மாவின் தம்பி. ‘கோவிந்தராசு’ என்பது அவரது இயற்பெயர். கோவிந்தருக்கு மிஞ்சிமிஞ்சிப் போனால் ஒரு வைரவிழாக் கொண்டாடுகிற வயசுகூட இல்லை. அதுக்குள்ளை அப்படி என்ன தலை தெறிக்கிற அவசரமோ?

இயற்பெயர் என்னவாயிருந்தென்ன! விடிஞ்சா கோவிந்தர் கோவிந்தாதான்என்று எதிர்வீட்டு விதானையார் ஊரெல்லாம் புலம்பித் திரிகின்றார். விதானையார் தனிக்கட்டை. அவருக்கும் சுந்தரம் என்றொரு இயற்பெயர் உண்டு. சுந்தரம் பெயரில்தான் இருந்தது.

கோவிந்தரின் வாழ்க்கை வட்டிக்கு காசு கொடுப்பதும் சீட்டுப் பிடிப்பதுமாகக் கழிகின்றது. கோவிந்தரின் வீட்டுக்கோழி குட்டி போடுகிறதோ இல்லையோ அவரின் காசு பணம் குட்டி போடுகின்றது. குட்டிக்கும் கோவிந்தருக்கும் பல விதங்களில் சம்பந்தமுண்டு. இவற்றில் எல்லாம் இருந்து சரவணனுக்கு பரீட்சைக்கு கேள்விகள் வரலாம் என்று சொல்வதற்கில்லை. கோவிந்தர் ஒருவேளை சுகப்பட்டு தெருவீதிகளில் அலைந்தார் என்றால், நீங்கள் எல்லாரும் தலைதெறிக்க ஓடி தப்புவதற்கு வசதியாக இருக்கும் என்பதற்காகவே இதைச் சொல்லி வைக்கின்றேன்.

சரவணன் புலன்களை ஒன்றுதிரட்டி புத்தகம்மீது திருப்பினான். மீண்டும் வாசல்பக்கம் ‘கோவிந்தா கோவிந்தா’ கேட்டது. விதானையார் இரண்டாவது ரவுண்டில் காலடி எடுத்து வைத்து, இவர்களின் வீடு நோக்கி வந்து கொண்டிருந்தார். வீட்டிற்குள் வருவதற்கு முன்பதாக கதவைத் தாழ் போட்டுக்கொள்ள வேண்டும் என்று விரைந்தான் சரவணன். ஆனால் இந்தமாதிரிச் சந்தர்ப்பங்களில் எல்லாம் விதானையார் வாயு வேகம். வீட்டிற்குள் புகுந்துவிட்டார்.

டயபிட்டீஸ் இருக்கு எண்டு தெரிஞ்சும், இரண்டு கிழமையா பிசுங்கான் வெட்டி நாற நாற வைச்சிருந்திருக்கிறான். நேற்றுக்காலமை கூடச் சந்திச்சனான். அப்பகூடச் சொல்லேல்லை. அவள் பெடிச்சியும் ஒன்பதுமாதக் கர்ப்பிணியாம். அது வேற இழவு...”

அம்மா வீட்டிலை இல்லை மாமா!... பிறகு வாங்கோ...”

மூன்று சக்கர வாகனம் வாங்க நிதியுதவி கோருதல் – சிவன் அருள் குழந்தைகள் இல்லத்திற்காக

 சிவன் அருள் சிறுவர்கள் மற்றும் சிறுமிகள் இல்லம் தற்போது சுமார் 180 குழந்தைகளை பராமரித்து வருகிறது. இங்கு அவர்கள் தங்குவதற்கான இடம், உணவு, உடை மற்றும் கல்வி ஆகியவை வழங்கப்படுகின்றன. கடந்த மாதம், எங்கள் இல்லத்தின் 20-வது ஆண்டு விழாவை கொண்டாடினோம். இது, ஆஸ்திரேலியாவில் இருந்து கிடைக்கும் பெருந்தன்மைமிக்க நிதி மற்றும் ஒட்டுமொத்த ஆதரவினால் தான் சாத்தியமாகியுள்ளது. இந்த ஆதரவு இல்லாமல், இல்லத்தைச் செயல்படுத்த முடியாது என்பதில் எங்களுக்கு சந்தேகமே இல்லை. இதற்காக எங்கள் இதயங்கனிந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறோம்.

தற்போது, எங்கள் இல்லத்திற்கு மிகவும் அவசியமான ஒரு மூன்று சக்கர வாகனம் தேவைப்படுகிறது. இது, குறிப்பாக மருத்துவமனை செல்ல வேண்டிய நேரங்களில் மற்றும் அவசரத்திலான பயணங்களில் குழந்தைகளை பாதுகாப்பாகவும், வேகமாகவும் கொண்டு செல்ல பயன்படும். தற்போது இல்லத்தில் உள்ள ஒரு பிக்கப் வாகனம், தூர பயணங்களுக்கு மட்டுமே உபயோகிக்கப்படுகிறது, மேலும் அருகிலுள்ள இடங்களுக்கு செல்வதற்கு அதன் செலவுகள் மிக உயரமாக இருக்கின்றன. கூடுதலாக, சில பெரிய சிறுமிகள் மாலை நேரத்தில் துணை வகுப்புகளுக்கு செல்வதால், இரவில் தாமதமாக அவர்கள் வீடு திரும்பும் போது, பாதையில் நடந்து செல்லும் அல்லது பொது போக்குவரத்தை பயன்படுத்தும் விஷயத்தில் எங்களுக்கு கவலை உள்ளது. ஒரு மூன்று சக்கர வாகனம் அவர்கள் பாதுகாப்பாக இல்லத்திற்குத் திரும்ப உதவும்.

ஒரு புதிய மூன்று சக்கர வாகனத்தின் செலவு 19.5 லட்சம் ரூபாய் (தொடர்பான ஆஸ்திரேலிய டொலர் மதிப்பு சுமார் AUD 10,000). இந்த அவசரத் தேவையை பூர்த்தி செய்ய நாங்கள் நன்கொடையாளர்களைத் தேடிக்கொண்டு இருக்கிறோம். இந்த நோக்கத்திற்காக வழங்கப்படும் எந்தவொரு நன்கொடையும் எங்களால் மிகுந்த நன்றியுடன் ஏற்கப்படும்.

வங்கிக் கணக்கு விவரங்கள்:

கந்தபுராண யாப்பிலக்கண வகுப்புக்கள் ZOOM வழியாக

 உலக சைவப் பேரவை அவுஸ்திரேலியா வாரம் தோறும் சிவத்தோடு நாம் என்னும் நிகழ்வினையும், மாதந்தோறும் திருமுறை முற்றோதல், கந்தபுராண பாராயணம், சைவ சித்தாந்த வகுப்புகளையும் நடாத்தி வருவது  நீங்கள் அறிந்ததே. திருமுறை முற்றோதலுக்கும், கந்தபுராண படனத்துக்கும் சமய ஆர்வலர்கள் பொருள் சொல்வது நீண்ட காலமாக நடைபெற்று வருகிறது. இவைகள் அனைத்தும் செய்யுள் வடிவில் உள்ளதால், மொழியிலக்கணத்தையும், செய்யுள்களின் அமைப்புகளை புரிந்து  கொள்ள யாப்பு இலக்கணத்தையும் பயில நம்மில் பலர் ஆர்வமாகவுள்ளார்கள்.

 

இதனை கருத்திற்கொண்டு கந்தபுராணத்திற்கு  பல முறை பொருள் சொல்லிவரும் சைவப்புலவர்  முரு. சேமகரன் (கவிஞர் கல்லோடைக் கரன்) அவர்களிடம் மொழியிலக்கணத்தையும், அதனைத் தொடர்ந்து யாப்பு இலக்கணத்தையும் கற்கவுள்ளோம்.

 

ஆரம்பத்தில் எழுத்திலக்கணத்திற்கு அறிமுகமும் (எழுத்து, சொல், பொருள்) தொடர்ந்து எழுத்ததிகாரமும் (நூல்மரபு, மொழிமரபு), பிறப்பிலக்கணம்,  புணர்ச்சியிலக்கணம் போன்றவையும் மேலும் யாப்பிலக்கண வகுப்புக்களும் நடைபெறவுள்ளன.

 

20 முதல் 25 ஒரு மணி நேர வகுப்புக்கள் ZOOM வழியாக நடாத்த உத்தேசித்துள்ளோம்.

முழு வகுப்புக்களுக்கும் $20.00 கட்டணம். வகுப்புக்கள் 22/10/2025 முதல் ஒவ்வொரு புதன்கிழமையும் மாலை 7.30 மணி முதல் 8.30 மணி வரை நடைபெறும்.

 

பங்குபற்ற விரும்பியவர்கள் பின்வருபவர்களைத் தொடர்புகொள்ளுமாறு அன்புடன் வேண்டிக்கொள்கின்றோம். ZOOM விபரங்கள் பின்னர் அறிவிக்கப்படும்.

 

திரு. விஜய் சிங்     Tel: 0478 313 200         திரு. சி. வனதேவா         Tel: 0480 123 656

திரு. க. சபாநாதன்            Tel: 0408 432 680

 

அன்புடன்,

க சபாநாதன்,

செயலாளர் WSCA

நினைத்ததை முடிப்பவன் - பொன் விழா ஆண்டில் இந்த படங்கள் - ச. சுந்தரதாஸ்

 

இலங்கையின் முதலாவது பணக்காரர் என்ற பெருமையை பெற்றவர் அவர். பெரும் தொழிலதிபராக திகழ்ந்த அவருக்கு ஜப்பான் அரசாங்கமே கடன் கொடுக்க முன் வந்தது. அப்பேற்பட்ட திறமையும் , ஞானமும் கொண்ட அவருக்கு எம் ஜி ஆர் நடிப்பில் ஒரு படம் தயாரிக்கும் ஆவல் ஏனோ ஏற்பட்டு விட்டது. தமிழகத்தில் சினிமா விநியோகத்துறையில் ஈடுபட்டுக்கொண்டிருந்த தன் சகோதரர் மகன் தேவராஜ் குணசேகரனிடம் படத்தை தயாரிக்கும் பொறுப்பை ஒப்படைத்தார். ஹிந்தியில் ராஜேஷ் கண்ணா இரட்டை வேடத்தில் நடித்து ஹிட்டான சச்சா ஜூட்டா படத்தின் கதையை தமிழில் படமாக்க எம் ஜி ஆர் ஏற்கனவே வாங்கி வைத்திருந்தார். அதையே படமாக்குவதென முடிவானது. எம் ஜி ஆரின் இமேஜுக்கு ஏற்றாற் போல் படத்துக்கு நினைத்ததை முடிப்பவன் என்று பெயரிடப் பட்டது. ஆனால் படத்தின் தயாரிப்பாளருக்கு நினைத்தை முடிப்பவன் என்ற பேர் நினைத்த விதத்தில் கிடைத்து விடவில்லை . 1971ம் ஆண்டு படத்துக்கு பூஜை போடப்பட்டு ஆறே மாதத்துக்குள் தயாராகி விடும் என்று எதிர்பார்க்கப்பட்ட படம் நான்காண்டுகள் கழித்தே திரைக்கு வந்தது! 


கிராமத்தில் கால் ஊனமுற்ற தங்கை சீதாவுடன் வாழ்ந்து வரும்

வாத்தியக் கலைஞனான சுந்தரம் அவளின் கல்யாணத்துக்காக பொருளீட்ட நகரத்துக்கு வருகிறான். அங்கு அவனைப் போன்று தோற்றம் கொண்ட கொள்ளைகாரன் ரஞ்சித்தின் பார்வையில் அவன் படுகிறான். சுந்தரத்திடம் சாமர்த்தியமாக பேசும் ரஞ்சித் தனக்கு உடல் நிலை சரியில்லை என்பதால் சில காலம் தன்னைப் போலவே நடித்து உதவும் படி கேட்கிறான் . பதிலுக்கு சாரதாவின் கல்யாணத்துக்கு வேண்டிய பணத்தை தருவதாக வாக்களிக்கவே சுந்தரம் ஒப்புக் கொள்கிறான். இதனிடையே போலீசார் ரஞ்சித்தை பிடிக வலை வீசுகிறார்கள். ஆனால் சுந்தரத்தை ரஞ்சித் என்று எண்ணி அவனை மடக்க பார்க்கிறார்கள். இந்த முயற்சியில் ஈடுபடும் போலீஸ் அதிகாரி லீலாவுக்கும், சுந்தரத்துக்கு இடையில் காதல் மலர்கிறது. அதே சமயம் சுந்தரத்தை தேடி நகருக்கு வரும் சீதாவை கொடியவர்களிடம் இருந்து போலீஸ் அதிகாரி மோகன் காப்பாற்றுகிறான். ரஞ்சித்தோ சுந்தரத்தை தன் கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ள சீதாவை கடத்தி வருகிறான். சுந்தரம், ரஞ்சித் இடையே மோதல் வலுக்கிறது. யார் உண்மையான ரஞ்சித் என்பதை கண்டுபிடிக்க முடியாமல் போலீசும் , நீதிமன்றமும் திணறுகிறது. இதுதான் படத்தின் கதை. 

செம்மணி மனிதப் புதைகுழி விவகாரம் : காணாமல் ஆக்கப்பட்டோர் பற்றிய தொடர் கேள்விகள்

 

02 Oct, 2025 | 06:19 PM

அ. அச்சுதன்  

உலகிலேயே மிக அழகான தீவுகளின் 2025ஆம் ஆண்டுக்கான பட்டியலில் இலங்கை முதலிடத்தைப் பிடித்துள்ள நிலையில், அதே இலங்கையின் வட பகுதியில் உள்ள செம்மணியில் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்டு வரும் அகழ்வாராய்ச்சியில் இதுவரை குழந்தைகள் உட்பட 235க்கும் மேற்பட்டவர்களின் மனித எலும்புக்கூடுகள் தோண்டி எடுக்கப்பட்டுள்ளன. இது, அழகிய இலங்கைத் தீவின் பின்னால் மறைந்துள்ள மனிதாபிமானமற்ற கடந்த கால கொடூரங்களை வெளிக்கொணர்வதாக உள்ளன.  செம்மணி மனிதப் புதைகுழியில் கண்டெடுக்கப்பட்ட மனித எலும்புக்கூடுகளின் ஆழத்தைக் கருத்தில் கொள்ளும்போது, அங்கு சட்டவிரோதப் படுகொலைகள் நடைபெற்று, அந்த உடல்கள் இரகசியமாகப் புதைக்கப்பட்டிருக்கலாம் என இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. 

யாழ்ப்பாணம் செம்மணி சிந்துபாத்தில் கண்டறியப்பட்ட இந்த மனிதப் புதைகுழியில், கட்டம் கட்டமாக அகழ்வுப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் ஆணையாளர்களான பேராசிரியர் தையமுத்து தனராஜ், பேராசிரியர் பர்ஸானா ஹனீபா, கலாநிதி கெஹான் குணதிலக்க ஆகியோர் கடந்த ஆகஸ்ட் 3 மற்றும் 4ஆம் திகதிகளில் அகழ்வுப் பணிகளை நேரில் பார்வையிட்டனர்.   

அதன் பின்னர், ஆணைக்குழு வெளியிட்ட அறிக்கையில் இந்த அவதானிப்புகளும் பரிந்துரைகளும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளன.  

செம்மணி மனிதப் புதைகுழியில் திட்டமிட்ட வகையில் படுகொலைகள் நடந்திருப்பது தற்போது நிரூபணமாகி வரும் நிலையில், இது ஒரு சர்வதேச விசாரணைக்கு உட்படுத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கை வலுப்பெற்று வருகிறது. 1995 - -1996 காலப்பகுதியில் யாழ்ப்பாணக் குடாநாடு இராணுவத்தினரின் கட்டுப்பாட்டில் இருந்தபோது இத்தகைய படுகொலைகள் அரங்கேறியிருக்கலாம் எனக் கருதப்படுகிறது. 

கிருசாந்தி குமாரசுவாமி கொலை வழக்கின் முக்கிய குற்றவாளியான இராணுவ லான்ஸ் கோப்ரல் சோமரத்ன ராஜபக்ச, செம்மணி பகுதியில் 300 முதல் 400 பேர் வரை படுகொலை செய்யப்பட்டுப் புதைக்கப்பட்டதாக முன்னர் சாட்சியம் அளித்திருந்தார்.  

அநுரவின் 12 மாதகால ஆட்சி

 Published By: Vishnu

29 Sep, 2025 | 09:43 PM

  ஆர்.ராம்  ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் ஆட்சியானது

தனது முதலாவது வருடத்தை நிறைவு செய்துள்ளது. இந்த முதலாவது ஆண்டானது, அரசாங்கத்தின் முயற்சிகள், எச்சரிக்கையான செயற்பாடுகள், முக்கிய பொருளாதார விடயங்களை இயல்பு நிலைக்குக் கொண்டுவருவதற்கான வியூகங்கள் என்று பல்வேறு விடயங்களையும் உள்ளடக்கியதொரு காலகட்டமாகும்.  

இவ்வாறான நிலையில், ஜனாதிபதி அநுரகுமாரவின் முதலாவது ஆட்சிக்காலத்தினை நோக்கும்போது அரசியல் ரீதியாக அதன் அடைவுமட்டங்களை பார்ப்பதிலும், பொருளாதார ரீதியான அடைவுமட்டங்களில் கவனம் செலுத்துவது தான் பொருத்தமானதாக இருக்கும்.    ஏனென்றால் அரசாங்கம், அரசியல் ரீதியான விடயங்களை விடவும், சமூக, பொருளாதார ரீதியான விடயங்களுக்கே தாங்கள் முக்கியத்துவம் அளிப்பாக ஆட்சியைப் பொறுப்பெடுத்த முதல்நாளில் இருந்தே தெரிவித்து வந்திருந்தது.  பணவீக்கம், மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி, சுற்றுலா, ஏற்றுமதிகள், தொழிலாளர் பணப்பரிமாற்றங்கள் மற்றும் கையிருப்பு ஆகியவற்றுடன் சில காய்கறிகள், பழங்கள் மற்றும் மளிகைப் பொருட்களின் விலைகள் ஆகியவற்றில் கவனம் செலுத்துகிறது.   

அந்தவகையில், முதலாவதாக, பணவீக்க விடயத்தினைப்

பார்க்கின்றபோது, பணவீக்கம் என்பது சாதாரணமாக குடும்பம் மிக விரைவாக உணரக்கூடியதான விடயமாகும்.  அந்தவகையில், 2024ஆம் ஆண்டு நெருக்கடியான கலகட்டத்தில்  ஜூலையில் 2.4சதவீதமாக இருந்தது. அக்காலப்பகுதியுடன் ஒப்பீடும்போது, உணவுப் பொருட்களின் விலைகள் 0.8சதவீதம் உயர்வடைந்துள்ளன. உணவு அல்லாத பொருட்களின் விலைகள் 0.4சதவீதம் உயர்வடைந்துள்ளன.   

மாதாந்த அடிப்படையில், பார்க்கின்றபோது 1.85சதவீதம் குறைவாக காணப்படுகின்ற அதேசமயம் பணவீக்கம் 4.4சதவீதத்திலிருந்து 3.6சதவீதமாகக் குறைந்ததுள்ளது. இலங்கை மத்திய வங்கியின் கூற்றுப்படி, நாட்டின் பணவீக்கமான குறுகிய காலத்தில் 5சதவீதத்திற்கும் குறைவாக இருக்கும் என்றும் பின்னர் இலக்கை நோக்கி படிப்படியாக நகரும் என்றும் எதிர்பார்த்தது.  எனினும் நாட்டின் பணவீக்கத்தின் போக்கானது கடந்த ஓகஸ்ட் மாதத்தில் மாறியிருக்கின்றது. 

ஒருவருட இடைவெளி காணப்படுகின்றபோதும் பணவீக்கம் 1.2சதவீதமாக நேர்மறையாக மாறியுள்ளது. இதனால், ஜூலையில் இருந்த விலைகளில் 0.3சதவீத அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது.   

அதுமட்டுமன்றி, உணவுப்பொருட்களின் விலைகள் 2சதவீதமாக உயர்ந்ததுள்ளதோடு உணவு அல்லாத உணவுப் பொருட்கள் அல்லாதவற்றின் விலைகள் 0.8சதவீதமாக நேர்மறையாக மாறியது. மாதாமாதம் குறியீடு சற்று குறைந்தாலும், உணவு அல்லாத பொருட்கள் சிறிய உயர்வைச் சந்தித்தன.   முக்கிய பணவீக்கம் 2சதவீதமாக அதிகரித்தது. இதனடிப்படையில், 2024 இல் வீழ்ச்சியடைந்த விலைகள் 2025 இல் மீண்டும் மிதமான அளவில் உயரத் தொடங்கியுள்ளன. ஆகவே பணவீக்கத்தின் அடிப்படையில் குடும்பங்கள் மகிழ்ச்சியான மாற்றத்தினைக் காணவில்லை.   

இலங்கைச் செய்திகள்

செம்மணி மனிதப் புதைகுழி அகழ்வாய்வுப் பணிகளுக்காகக் கோரப்பட்ட நிதி அங்கீகரிக்கப்படவில்லை! - பணிகள் முடக்கம்

மஹிந்த ராஜபக்ஷவின் பிரதான பாதுகாப்பு அதிகாரி நெவிலுக்கு விளக்கமறியல்!

 "யாழ்ப்பாணத்தில் ஆழமான வேர்களைக் கொண்ட சமாதானத்துக்கான மதங்களின் பயணம்"

மட்டு. ராமகிருஷ்ண மிஷன் பள்ளியில் முகாமிட்டிருந்த இராணுவ முகாம் அகற்றம் ; கல்வி செயல்பாட்டிற்கு இடமளிக்கப்பட்டுள்ளது

"புதிதாய் எதுவும் வேண்டாம் பறித்ததை தா" - வவுனியா பல்கலைக்கழகத்தின் முன்பாக ஆர்ப்பாட்டம்


செம்மணி மனிதப் புதைகுழி அகழ்வாய்வுப் பணிகளுக்காகக் கோரப்பட்ட நிதி அங்கீகரிக்கப்படவில்லை! - பணிகள் முடக்கம்

02 Oct, 2025 | 05:26 PM

சிறுவர்களது எலும்புக்கூடுகள் உட்பட 240 மனித எலும்புக்கூடுகள் கண்டறியப்பட்டுள்ள, இலங்கையில் இரண்டாவது பெரிய மனித புதைகுழியில் மேலும் இரண்டு மாதங்களுக்கு அகழ்வாய்வுகளை மேற்கொள்வதற்காக கோரப்பட்ட நிதி அங்கீகரிக்கப்படாததால் பணிகள் முடங்கியுள்ளன.

கோரப்பட்ட நிதி இன்னும் நீதி அமைச்சினால் அங்கீகரிக்கப்படவில்லை என யாழ்ப்பாணம் செம்மணி சித்துப்பாத்தி இந்து மயான மனித புதைகுழி தொடர்பான வழக்கு நேற்றைய தினம் (01) யாழ்ப்பாண நீதவான் செல்வநாயகம் லெனின்குமார் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டதன் பின்னர்,  பாதிக்கப்பட்டவர்களின் சார்பாக முன்னிலையான சட்டத்தரணி கே. சுபாகர் ஊடகங்களுக்கு இவ்வாறு தெரிவித்தார். 

உலகச் செய்திகள்

காசா போர் : டிரம்ப் - நெதன்யாகு சந்திப்பு ; அமைதிக்கு அமெரிக்கா தீவிர அழுத்தம் - சீனா, பாகிஸ்தான் உள்ளிட்ட 8 நாடுகள் வரவேற்பு!

 ‘பாலஸ்தீனத்தை தனிநாடாக அங்கீகரிக்க மாட்டேன்’ - டிரம்புடனான பேச்சுவார்த்தையின் பின் நெதன்யாகு ஆவேசம்

முடங்கியது அமெரிக்க அரச நிர்வாகம் : இலட்சக்கணக்கானோர் பாதிப்பு!

கரூர் சம்பவம் ; உயிரிழந்தோரின் எண்ணிக்கை 40 ஆக அதிகரிப்பு

ரஷ்யப் போரை நிறுத்தாவிடில் பேரழிவு தரும் ஆயுதப் போட்டி ஏற்படும் : ஐ.நா.வில் உக்ரைன் ஜனாதிபதி ஜெலென்ஸ்கி எச்சரிக்கை  



காசா போர் : டிரம்ப் - நெதன்யாகு சந்திப்பு ; அமைதிக்கு அமெரிக்கா தீவிர அழுத்தம் - சீனா, பாகிஸ்தான் உள்ளிட்ட 8 நாடுகள் வரவேற்பு! 

01 Oct, 2025 | 01:16 PM

(இணையத்தள செய்திப் பிரிவு)

காசா மோதலை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான டிரம்ப் அறிவித்த 20 நிபந்தனைகள் கொண்ட விரிவான திட்டத்தை சீனா, பாகிஸ்தான் உள்ளிட்ட 8 நாடுகள் வரவேற்றுள்ளன.

கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு மேலாக இஸ்ரேல் மேற்கொண்டுவரும் காசா தாக்குதலில், பெண்கள் மற்றும் குழந்தைகள் உட்பட 65 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளனர். இந்தப் போரை முடிவுக்குக் கொண்டு வர அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தலைமையில் மத்தியஸ்தம் செய்யும் முயற்சிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.