நடராஜர் - நாட்டிய கலாநிதி கார்த்திகா கணேசர்

 


ஆர நவமணி மாலைகள் ஆட

ஆடும் அரவம் படம் விரித்தாட

சீரணி கொன்றை மலர்த்தொடை ஆட

சிதம்பரத்தோர் ஆட

பேரணி வேதியர் தில்லை மூவாயிரம் பேர்களும்

பூசித்துக்கொண்டு நின்றாட

காரணி காளி எதிர்த்து நின்றாட

னகசபை தனிலே…

 

என நர்த்தனம் புரியும் நடராஜரை தில்லையம்பதியிலே தரிசிக்க, பலகாலம் ஆசை கொண்டேன். சிறுமியாக ஆடல் கலையை கற்று, அந்த ஆடல்வல்லானையே நித்தம் ஆடல் தெய்வமாவணங்கிப் பயின்ற என் மனதிலே சிதம்பரம் போய் நடராஜரை தரிசிக்க வேண்டும் என்ற ஆவா வளர்ந்தது. மேலும் ஆழமாக ஆடலைக் கற்று ஆய்வுகள் மேற்கொண்ட காலத்திலே, தில்லை சிதம்பரக் கோயில் கோபுர வாசலிலே, நாட்டிய சாஸ்திர நூலிலே வர்ணிக்கப்பட்ட நடன நிலைகள் சிலைகளாக வடிக்கப்பட்டுள்ளதையும் அறிந்தமையால் மேலும் ஆவல் பெருகியது.றுதியாக அந்த நாளும் வந்து. 

 

சிதம்பரம் சென்றேன். என் எண்ணத்திலே பல கற்பனைக் காட்சியாக கண்ட நடன ராஜனையும் தரிசித்தேன். அவரது ஆனந்தத் தாண்டவக் கோலத்தைக் கண்டேன். நடராஜரை வேட்டி சால்வைகளால் அலங்கரித்திருந்தார்கள். எந்த ஒரு கோயிலிலும் சாத்துப்படி என்ற இந்த அலங்காரங்கள் செய்வது வமை. கோயில் புரோகிதர்கள் இதைச் செய்வார்கள். சிலையைச் செதுக்கும் சிற்பிகளோ அல்லது தெய்வ வடிவங்களை உலோகத்தில் வார்க்கும்

ஸ்தபதிகளோ சுவாமியை பூரண அலங்காரங்களுடனேயே வடிக்கிறார்கள். ஆனால் மற்றைய கோயில்கள் போன்றே தில்லை நடராஜரும் சாத்துப்படி அலங்காரத்திலே காட்சி தந்தார்.

 

முகலாய மன்னர் ஆட்சிக் காலத்திலே அன்னியர் படையெடுப்புகளால் பல கோயில்கள் சூறையாடப்பட்டன. 15-ஆம் நூற்றாண்டு கால கட்டத்திலே மாலிக் கபூர் என்ற முஸ்லிம் மன்னன் சிதம்பரம் கோயிலைக் கொள்ளையடிக்க வந்தான். தேவையான பொன் பொருள் கிடைக்கப்பெற்றான். அந்தச் சமயம் அம்சலேகா என்ற கோயில் தேவதாசி, கோயிலில் நடனமாடித் திருப்பணி செய்பவள், தங்கத்தினால் ஆன நடராஜர் திருவுருவைத் தன் வீட்டிற்கு எடுத்துப்போய் மறைத்து வைத்திருந்தாள். தேவதாசி என்பவள் இறைக்கே தன்னை அர்ப்பணிப்பவள், அந்த ஆனந்த நர்த்தன மூர்த்தியையே முறையாக தாலிகட்டி அவனுக்கே தாசி ஆனவள் அல்லவா? ம்சலேகா என்ற அந்த தேவதாசி இல்லாது போனால் அன்று நடராஜ மூர்த்தி திருவுருவத்தையும் அவர்கள் கைப்பற்றி இருப்பார்கள்.

 

நான் சென்னையிலே கே.கே நகரில் வாழ்ந்துகொண்டு இருந்தேன். எமது வீட்டிற்கு அருகிலேயே பிரபல எழுத்தாளர் தொ.மு.சி. இரகுநாதன் வாழ்ந்துகொண்டிருந்தார். வார இறுதி விடுமுறை நாட்களில் அவர் எமது வீட்டிற்கு வருவார். இலக்கியம், அரசியல் என பலவும் பேசுவோம். அவர் மூலம் நாம் பல விஷயங்களையும் கற்றறிந்தோம். இவரே மாக்சிம் கார்க்கியின் பிரபலமான நூலான தாய்என்ற நூலைத் தமிழிலே தந்தவர். பல இலக்கிய ஆளுமைகளும் சந்தித்துப் பேச விரும்பும் ஒருவரே எமது இனிய நண்பருமானார். அவர் தொ.மு. பாஸ்கரத் தொண்டமான் அவர்களின் தம்பியுமாவார். தொ.மு. பாஸ்கரத் தொண்டமான் இந்திய ஆட்சிப்பணி (IAS)- இல் உயர் பதவி வகித்தவர். சிற்பக் கலையில் ஆர்வம் கொண்டவர். தமிழக ஆலயக் கட்டுமானம், ஆலயச் சிற்பங்கள், ஆலய வரலாறு என பல ஆய்வுகள் செய்து கலை அழகையும் அவை இருக்கும் இடங்களையும் அழகிய நூலாக எழுதியவர். தென் இந்திய சிற்பங்கள்என்ற இவரது நூல் சிறப்பானது. இவர் கோயில்களில் பராமரிப்பு இன்றி கிடக்கும் செப்புத் திருமேனிகளை சேகரித்து சரஸ்வதி மகாலில் கலைக்கூடம் அமைத்தவர். இத்தகைய தமையனுக்கு பல வகைகளிலும் உதவிய தம்பியே தொ.மு. சிதம்பர இரகுநாதன். இவரது நட்பால் பல சிற்பங்ள் பற்றி எல்லாம் இரகுநாதன் மூலம் அறிந்தேன். இவரிடம் சிதம்பர நடராஜர் கோயிலிலே எனக்கு நடராஜர் திருமேனியின் முழு அழகையும் காண முடியாது சாத்துப்படியாக அலங்காரம் அமைந்திருந்ததை வெளிப்படுத்தினேன். அப்பொழுது அவர் கூறினார், இரவு 12 மணிக்கு வேறு வகையான வேஷ்டி உடுத்தி அலங்காரப்படுத்துவார்களாம். அந்த நேரத்தில் போனால் திருமேனியின் முழு தரிசனமும் கிடைக்கும் என்றார். இவ்வாறு சிற்பம் கலை அழகு பற்றி எல்லாம் அவருடன் பேசி மகிழும் எனக்கு நடராஜரின் திரு உருவம் ஒன்றையே பரிசாக வழங்கினார். அது இன்றும் என்னுடனே பத்திரமாக இருக்கிறது.

         

 

                       


No comments: