தொலைநோக்குப் பார்வை வேண்டும் – அன்பு ஜெயா (கழி நெடிலடி ஆசிரியப் பன்னிரு சீர் மண்டிலம்.)

 

பட்டமும் பறக்க நல்லதோர் திட்டம்

      பயன்தான் அளித்திடுமே!

    பட்டறி வளித்தப் பாடமும் அதுவே,

      பகுத்தே அறிந்திடுவீர்!

திட்டமும் தீட்டும் முன்னரே நமக்கோர்

      தெளிந்த பார்வைவேண்டும்!

    தீரவே ஆய்ந்துத் தொடங்கியத் திட்டம்

      திறமாய் நிறைவுறுமே!

திட்டமும் ஐந்தைந் தாண்டென அன்று

      திறமாய் நடந்ததுதான்;

    திரும்பியே பார்த்தால் அதுவுமே கரைந்தும்,

      தேய்ந்தும் போனதன்றோ?

சட்டமும் இயற்றும் ஆள்பவர் இன்றும்

      சற்றே சிந்தித்தால்

    சார்பிலாத் தன்மை நிறைந்தவோர் சிறப்பாம்

      சட்டம் பிறந்திடுமே!

 

No comments: