உண்பதும் உடுப்பதும் உயர்வழி
மண்ணில்
நம்மின மாண்பே,
கண்ணின்
மணிபோல் காத்திடுவோம்,
எண்ணம்
தூய்மையில் இருத்தியே! (1)
ஒருவனுக்
கொருத்தியாம் உயர்ந்தயிப்
பெருமை
இங்கே பெற்றிடும்
அருமை
என்றும் அழியாமல்
பெருவாழ்
வுதனைப் பேணுவோம்! (2)
அன்பெனும்
அருவியில் ஆழ்ந்திட
என்றுமே விரும்புவர் யாவரும்!
அன்பினைப் பொழிந்தே ஆள்வீரே
இன்பமாய் அவர்மனம் ஏற்கவே!
(3)
No comments:
Post a Comment