தமிழ்ப் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

சித்திரைத் தாயே வருக. 
நெத்தி வியர்வையில்
நித்திலம் நனைய
முத்திரை பதிக்கும்
கத்தரி வெயிலில் பிறக்கும்
புத்தாண்டே  இனிதே வருக. 
பங்குனி வரை நல்ல 
பலன்களைத் தருக.

விஸ்வாவசு எனும் கந்தர்வன் பெயரால்
விஸ்வம் முழுவதும் வசு பெருக்கவரும் 
விஸ்வாவசு ஆண்டே உன்மேல்
விஸ்வாசத்துடன் வரவேற்கிறோம்.
வியர்வை சிந்தி உழைக்கும் , விவசாயி , தொழிலாளிகளுக்கும் 
விசஷுக்கனி கண்டு சித்திரை 
விஷுவெனக் கொண்டாடுவோர்க் கும்,
விருப்பங்கள் நிறைவேறி , விசனங்கள் தீர்ந்து
விரைவில் வளம் பெருகச் செய்ய
விஸ்வாவசுவே வருக. 

சித்திரை முதலாய் பங்குனி வரையில் 
இத்தரணி எங்கும் , இவ்வாண்டு முழுவதும்
அத்தனை இடர்களும்  நீங்கி
ஆனந்த் வாழ்வு பெற்று 
சித்தம் மகிழவைக்க வரும்

சித்திரைத் தாயே வருக. 
கொளுத்தும் வெயில் குறைய
கோடை மழை பொழிந்து
குவலயம் குளிரட்டும்,
குடிமக்கள் மகிழட்டும். 

வெள்ளமும் பெருகாது,
வறட்சியும் இல்லாது, 
வெள்ளாமைக்கு பாதிப்பின்றி
விவசாயம் தழைக்கட்டும்.
விளைபொருள் விற்பனையால் 
விவசாயி மகிழட்டும். 

விலைவாசி குறையட்டும்.
செலவுகள் குறைவதால்
சேமிப்பு பெருகட்டும். 
வீடும் வளம் கண்டு 
நாடும் வளம் காணட்டும்.

தமிழ்ப் புத்தாண்டு - இந்த
தரணியெல்லாம் கொண்டாடி
தமிழினம் மகிழட்டும்.
தமிழன் புகழ் ஓங்கட்டும்.
தமிழின் புகழ் பரவட்டும் .

அன்புடன்,
சிலேடை சித்தர் சேது சுப்பிரமணியம்.


No comments: